Monday, January 12, 2009

பொங்கல் கொண்டாடும் வீரம்மிக்க தமிழ் இளைஞர்களே..

தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன். தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களுக்கும் உணவு வழங்கிக் கொண்டிருக்கிற பஞ்ச பூதங்களுக்கும் நன்றி சொல்லத் தொடங்கிவிட்டனர். தமிழனின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுகளும் நடத்தப் படப் போகின்றன்.

தமிழன் மறந்துபோன தமிழனின் வீர விளையாட்டு ஒன்று இருக்கிறது. அதுதான் இளவட்டக் கல் தூக்குவது. நினைவு படுத்துவதற்கு சில உதாரணங்கள்.
1. முதல்மரியாதை படத்தில் சிவாஜி தூக்குவார். நினைவுபடுத்திப் பாருங்கள். அதற்கு சிறப்பு தீம் மியூசிக் கூட சேர்த்திருப்பார்கள்.
2.விரும்புகிறேன் படத்தில் பிரசாந்த் தூக்குவார்.

இதையும் மீறி ஞாபகம் வராதவற்களுக்கு சிறிய விளக்கம்.. ஊரின் ஒரு முக்கிய இடத்தில் ஒரு பெரிய கல் இருக்கும். அந்தக் கல்லை தூக்கும் சக்திபடைத்தவனுக்கு மட்டுமே திருமணம் செய்யும் தகுதி இருப்பதாக நினைத்தார்கள். எடைக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

இன்று கூட கிராமம்தோறும் அந்தக் கல்லை நிறுவலாம். அதில் சிலநிலைகளைக் கூட கொண்டுவரலாம். கொஞ்சம் கொஞ்சமாக எடைகளை அதிகரிக்கலாம். அதைத்தூக்கும் இளைஞர்களுக்கு ஒரு கவுரவம் கூட கிடைக்கும். மற்ற விளையாட்டுகளைவிட ஆபத்து குறைவு. அதே நேரத்தில் வலிமையை நிரூபிக்கும் வாய்ப்பும் அதிகம். செலவும் குறைவு.

இதனால் யாருக்கும் எந்தவிதமான உடல் உயிர் பாதிப்புகளும் கிடையாது. கவுரவமும் கிடைக்கும்.

எனவே தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழனின் மானம் காக்கவும் தனது வலிமையை நிரூபிக்கவும், மறைந்துவரும் நமது வீரவிளையாட்டாம் இளவட்டக் கல் தூக்குவதை ஊருக்கு ஊர் தெருவுக்கும் தெரு நிறுவ வேண்டும்.

5 comments:

  1. :))

    //
    பொங்கள்
    //
    பொங்கல்

    ReplyDelete
  2. SUREஷ்,நீங்கள் நினைப்பது இக்கால கட்டத்தில் சாத்தியப்படுமா? சாத்தியப்பட்டால் நல்லதே!மனம் நிறைந்த இனிய தமிழ் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாங்க ஹேமா...

    ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் நம்மால், ஜல்லிக்கட்டு வீரர்களை தயார் செய்யும் நம்மால், இளவட்ட கல்லையும் அதற்கான வீரர்களையும் கண்டிப்பாக தயார் செய்யமுடியும்..

    ReplyDelete
  4. இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails