1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
பெயரிலேயே முழுவிவரங்களும் அடங்கி யிருக்கிறது என்று நினைக்கிறேன். SURE +ஷ் சேரும்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் சேர்ந்தார்போல் ஒரு உணர்வு.
நிறைய சுரேஷ் எழுதிக் கொண்டிருந்த காரணத்தால் நமது இன்னொரு அடையாளமான ஊரையும் சேர்த்துக் கொண்டுவிட்டேன்.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
சாமிக்கு விட்டுவிடுகிறேன்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கண்டிப்பாக.. அதை வெச்சுத்தானே தல பிழைப்பு ஓடுது
4.பிடித்த மதிய உணவு என்ன?
பிடிக்காத உணவு என்று எதுவும் கிடையாது. பாகுபாடு இல்லாமல் புகுந்து விளையாடுவோம் தல..
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
வேறு யாருடனாவது என்று கேட்கிறீர்களே தல
ஏதாவது உள்குத்து இருக்குமோ
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
நல்ல ரசனையான கேள்வி. பிறவிப் பெருங்கடலில் வாழ்க்கை அருவியில் மகிழ்ச்சியாக குளிக்க எப்போதுமே ஆசைதான்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
உடல்மொழி. நம்மிடம் எப்படி அணுகிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டிவிடும். நாற்காலியில் அமர்ந்ததும் மேசையில் கையூன்றிப் பேசுபவர்களையும், காலில் விழுவதுபோல் பேசுபவர்களையும் என்றுமே நான் நம்புவதில்லை. சுயமரியாதை இல்லாதவன் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடும்.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிக்காத விசயங்களை உடனே கலைந்துவிடுவது பிடித்த விசயம். அப்படிப்பட்ட விசயங்கள் தினமும் கண்டுபிடிக்கப் படும் அளவு நிறைந்து இருப்பது பிடிக்காத விசயம்தான் என்றாலும் ஒரு வகையில் பிடித்த விசயந்தான்.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
அடுத்த வேளை சாப்பாட்டினைக் கருத்தில் கொண்டு இந்த கேள்வியையும் சாய்ஸில் விட்டுவிடுகிறேன்.
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
கடவுள்
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெண்ணிற வேட்டியோடு கூடிய வீட்டில் அணியும் ஆடைத் தொகுப்பு
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கணினியைப் பார்த்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வர்ணங்கள் தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை. தனக்குப் பிடித்த வர்ணமாக மாற நமது வர்ணாசிரமம் அணுமதிக்காது தல. அது பேனாவுக்கும் பொருந்தும். பெருமாளுக்கும் பொருந்தும்
14.பிடித்த மணம்?
தமிழ் மணம் அப்படின்னு சொல்லிருவோம் தல,
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அவர்களின் படைப்புகள் முழுவதையும் நீங்கள் முழுவதும் படிக்க வேண்டும். என்பதே..
1.இவர் ஒரு பிரபல நடிகர் என்பது என் எண்ணம்http://kadaikutti.blogspot.com/
2.இவர் ஓர் இலக்கிய கணக்கர் காஞ்சித் தலைவன்
3 இவர் ஒரு பலசாலிhttp://tucklasssu.blogspot.com
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
ஒரு கொசுவின் கதை
17. பிடித்த விளையாட்டு?
வார்த்தை விளையாட்டு
18.கண்ணாடி அணிபவரா?
ரஜினி மாதிரி தோன்ற வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் அணிந்ததுண்டு, இப்போது அப்படியொரு எண்ணம் தோன்றுவதே இல்லை. அதனால் அணிவதும் இல்லை
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நாடோடிமன்னன் மாதியான படங்கள்
20.கடைசியாகப் பார்த்த படம்?
அருந்ததி
21.பிடித்த பருவ காலம் எது?
மாணவப் பருவம்தான்
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
நல்ல கேள்வி. உண்மையில் பதில் இல்லை.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியா.., வலைப்பூவின் வார்ப்புருவையே அடிக்கடி மாற்றுபவன்
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருப்பதால் எல்லாச் சப்தங்களும் எனக்குப் பிடித்தவையே
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சுற்றுலாக்களை விட்டுவிட்டுப் பார்த்தால் சிங்காரச் சென்னைதான் நான் சென்ற அதிக பட்ச தூரம்.
நம்பினால் நம்புங்கள். நான் கல்லூரி படிப்புக்காக மட்டுமே வெளியூரில் சில காலம் தங்கியிருக்கிறேன். மற்றபடி பிறந்தது வளர்ந்தது, படித்தது, வேலை அமைந்தது, பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பது எல்லாம் இதே கிராமத்தைச் சுற்றியே..
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தனித்திறமை. இந்த வலைப்பூ பூராவும் அள்ளித்தெளித்து இருக்கிறேனே தல..,
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
விதண்டாவாதம் என்று தெரிந்தபின்னரும் தொடர்ச்சியாக செய்யப் படும் வாதங்கள்.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கடவுள் என்று சொல்லப் படும் அனைத்து உருவகங்கள் தொடர்புடைய கதைகளிலேயே பல முரண்கள் இருக்கும் போது நமக்குள் இருக்காதா தல..
அதனால் சாத்தான் என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் கடவுள்தன்மைதான்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
எங்கள் கல்லூரியில் இருக்கும் டென்னிஸ் மைதானம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. அவ்வளவு ஃப்ரஷ்
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
செய்து கொண்டிருக்கும் ஒரு காரியம் வலைப்பூ எழுதுவது
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
தவிர்க்க முடியாத தருணங்களையும் அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள் தல..
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்களே அப்படி..
=========================================================
மீண்டும் அழைத்துள்ள முரளிக்கண்ணன் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்
தல,வணக்கம்.
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட்டு.
//29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
எங்கள் கல்லூரியில் இருக்கும் டென்னிஸ் மைதானம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. அவ்வளவு ஃப்ரஷ்//
தல இதுல உல் அர்த்தம் எதுவும் இருக்கா? நான் வேற ஒரு அர்த்தத்துல புரிந்து கொண்டேன். நீங்களும் அதே அர்த்தத்தில் தான் எழுதினார்களா?
நல்லா இருக்கு
ReplyDeleteவாங்க தல..,
ReplyDeleteஏறக்குறைய நீங்கள் நினைக்கும் பொருள்தான். ஆனால் அங்கே டென்னிஸ் விளையாடுவதில்லை
//ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteநல்லா இருக்கு
//
நன்றி சார்
பக்கா... பக்கா...
ReplyDelete1 நாள் ஆகியிருக்குமே?
பதில் எழுத... பொருமையா
பதில் எழுதியதற்க்கு வாழ்த்துக்கள்!!
//கலையரசன் said...
ReplyDeleteபக்கா... பக்கா...
1 நாள் ஆகியிருக்குமே?
பதில் எழுத... பொருமையா
பதில் எழுதியதற்க்கு வாழ்த்துக்கள்!!
//
நன்றி தல..,
மிகவும் இரசனையான பதில்கள்
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteமிகவும் இரசனையான பதில்கள்
//
நீண்ட இடைவெளிக்குப் பின் வருகை தந்ததற்கும் கருத்துக்கும் நன்றி தல,,,,
துவக்கமே அருமை பதிலில்
ReplyDelete7: பதில் - தங்களை அழகாக படம் பிடித்து காட்டுகின்றது, உங்களின் திறமையை
14: குறும்பு
17: அருமை பதில்
21: இது தான் என் பதிலும்
23: இரசனையான ஆள்
30: அப்படியே நடக்க நமது பிரார்த்தனைகளும்
உங்களோட நிறைய பதில்கள் எனக்கும் பொருந்துகிறது டாக்டர்..
ReplyDeleteமீண்டும் நன்றிகள் தல..,
ReplyDelete//லோகு said...
ReplyDeleteஉங்களோட நிறைய பதில்கள் எனக்கும் பொருந்துகிறது டாக்டர்..
//
வாங்க தல.., உங்களையும் தொடர்பதிவுக்கு அழைக்கிறேன். பதிவிடுங்கள்
6 - வித்தியாசமான பதில்.. ரசித்தேன்.
ReplyDelete30 - அப்படியே நடக்க வாழ்த்துக்கள்
//SURE +ஷ் சேரும்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் சேர்ந்தார்போல் ஒரு உணர்வு.//
ReplyDeleteயாருக்கு ??? சத்தியமா எனக்கு தோணல...
//
ReplyDelete1.இவர் ஒரு பிரபல நடிகர் என்பது என் எண்ணம்http://kadaikutti.blogspot.com///
தல என்ன என்னைக் கூப்புட்டுட்டீங்க??? போங்க தல... தல 32 கேள்விக்குமே பதில் சொல்லனுமா??? அய்யகோ!!!
//மணிநரேன் said...
ReplyDelete6 - வித்தியாசமான பதில்.. ரசித்தேன்.
30 - அப்படியே நடக்க வாழ்த்துக்கள்
//
நன்றி தல..,
அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி
ReplyDelete//3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கண்டிப்பாக.. அதை வெச்சுத்தானே தல பிழைப்பு ஓடுது//
பிடிக்கும் சரி புரியுமா?
//கடைக்குட்டி said...
ReplyDelete//SURE +ஷ் சேரும்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் சேர்ந்தார்போல் ஒரு உணர்வு.//
யாருக்கு ??? சத்தியமா எனக்கு தோணல...
//
ஷ் அமைதிக்காக கொடுக்கப்பட்டது. கண்ணியம், கட்டுப் பாடு ஆகியவற்றின் அடையாள்ம்.
SURE கடமை, கட்டுப்பாடு
தல.. நாங்க கண்டபடி அர்த்தம் சொல்வமுல்ல...
//கடைக்குட்டி said...
ReplyDeleteதல 32 கேள்விக்குமே பதில் சொல்லனுமா??? அய்யகோ!!!
//
கேள்வித்தாள் தயாரித்தவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் தல..
//பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteபிடிக்கும் சரி புரியுமா?//
,
சொற்குற்றம் கண்டுபிடிக்க முடியாத வகையில்
பொருட்குற்றம் இல்லாமல் எழுதுவோம் தல..
//29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ReplyDeleteஎங்கள் கல்லூரியில் இருக்கும் டென்னிஸ் மைதானம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. அவ்வளவு ஃப்ரஷ்//
மனித உடல்ன்னு சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்
//SUREஷ் said...
ReplyDelete//பிரியமுடன்.........வசந்த் said...
பிடிக்கும் சரி புரியுமா?//
,
சொற்குற்றம் கண்டுபிடிக்க முடியாத வகையில்
பொருட்குற்றம் இல்லாமல் எழுதுவோம் தல..//
நான் சொன்னது மருந்துசீட்டு கையெழுத்தைபத்தி ஹய்யோ ஹய்யோ
//பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteநான் சொன்னது மருந்துசீட்டு கையெழுத்தைபத்தி ஹய்யோ ஹய்யோ//
நானும் மருந்துச் சீட்டினைத்தான் சொன்னேன் தல..
//பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDelete//29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
எங்கள் கல்லூரியில் இருக்கும் டென்னிஸ் மைதானம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. அவ்வளவு ஃப்ரஷ்//
மனித உடல்ன்னு சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்
//
மனித உடல் எங்களுக்கு அறிமுகம் எப்படி என்பதை எனது கல்லூரி அனுபவங்களில் கொஞ்சம் கொஞ்சமாக விளக்கியுள்ளேன்.
குறிப்பாக இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
//.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
ReplyDeleteகடவுள்//
உங்கள் எழுத்தே கடவுள். உங்க கூடவே வச்சிட்டே வருந்துரீங்களே.,
//தேனீ - சுந்தர் said...
ReplyDeleteஉங்கள் எழுத்தே கடவுள். உங்க கூடவே வச்சிட்டே வருந்துரீங்களே.,//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல...
இருந்தாலும் பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்க வேண்டும் அல்லவா
ok..i will try.
ReplyDelete//டக்ளஸ்....... said...
ReplyDeleteok..i will try.
//
எதிர்பார்த்திருக்கிறேன்.
இன்னுமா இந்த தொடர் முடிவுக்கு வரலே... சிந்துபாத்தை மிஞ்சிடும்னு நினைக்கிறேன்
ReplyDeleteஅனைத்து பதில்களும் எதார்தம் அருமை ஓரளவேனும் அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி
//எங்கள் கல்லூரியில் இருக்கும் டென்னிஸ் மைதானம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. அவ்வளவு ஃப்ரஷ்//
இதுலேர்ந்து தெரியுது யாருமே அதை பயன்படுத்துவதில்லையென்று..
//அபுஅஃப்ஸர் said.
ReplyDeleteஇதுலேர்ந்து தெரியுது யாருமே அதை பயன்படுத்துவதில்லையென்று..//
நான் எழுதி வரும் தற்போதைய தொடரைப் படியுங்கள் தல.., கதை கற்பனையாய் இருந்தாலும் அதில் வரும் டென்னிஸ் மைதானம் எங்கள் கல்லூரி மைதானம் தான்..,