Friday, January 8, 2010

அருளும் பொருளும் கூட்டிய பின்னூட்டம்

பஞ்சவன் மாதேவி பற்றி கேள்வி எழுப்பி நான் கொடுத்த இடுகைக்கு (இடுகை தழுவல்தான்) மறுமொழி கொடுத்த
சங்கர் ,சிங்கக்குட்டி,Starjan ( ஸ்டார்ஜன் ),ஸ்ரீராம்,dondu(#11168674346665545885) s,அக்பர், கடைக்குட்டி,  seemangani உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி
=====================================================================


அறிவன்#11802717200764379909 said...

உடையார் பா.கு.னின் அப்பட்டமான தழுவல்.
பொ.செ.மாதிரி ஒரு வரலாற்றுப் புதினம் எழுதிப் பெரும்புகழ் வேண்டும் என்ற வேட்கையில் எழுதப்பட்டது உடையார்.அதற்காக வேறொரு களம் அமைத்துக் கொண்டு எழுதினால் கூட சாதாரண வாசகன் இரண்டையும் எளிதாக ஒப்பு நோக்க மாட்டான்;அதற்கு கடும் உழைப்பும் வரலாற்று ஆய்வும் தேவை.ஆனால் களம் முதல் பாத்திரங்கள் முதல் அனைத்தும் அப்பட்டமான பொ.செ.னின் தழுவலாக எழுந்தது உடையார்.

ஆனால் துரதிருஷ்ட வசமாக பொ.செ.னின் நிழலாகக் கூட வர உடையாரால் முடியவில்லை;ஒரவேளை வேறொரு வரலாற்றுச் சூழலை மையமாக எடுத்துக் கொண்டு எழுதி இருந்தால் கூட உடையார் இன்னும் நன்றாக வந்திருக்கக் கூடும் !

பாத்திரப்படைப்புகளைப் பொறுத்த வரை,கல்கி நந்தினியை கற்பனையாகப் படைத்தாலும் வரலாற்று நிகழ்ச்சிகளின் இடையில் நூலிழைப் பாவு போல அழகாகக் கோர்த்து ஒருவேளை நந்தினி இருந்திருப்பாளோ என்று சந்தேகம் தோன்றும் அளவிற்கு அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டி விட்டார்.

பொ.செ.ல் வானதி பாத்திரத்தை சிறிது தட்டிக் கொட்டி பஞ்சவன் மாதேவியைப் படைத்து உலவ விட்டிருக்கிறார் பா.கு.அநாவசியமாக அப்பாத்தரத்தை தேவரடியாராக்கி இல்லாத வேலைகளைச் செய்தும் அப்பாத்திரம் வானதி போல மனதில் பதியவில்லை.

உண்மையில் ராஜராஜனின் பட்டத்து ராணியாக அமர்ந்தவள் வானவன் மாதேவி;அவள் கல்கி சித்தரித்த வானதி அல்ல.

வானதி என்று கல்கி குறிப்பிட்ட பாத்தரத்துக்கு பிறந்தவனே ராஜேந்திரன்;அவனை வளர்க்கும் பொறுப்பையும் குந்தவையே ஏற்றுக கொண்டிருக்கலாம் என்று வரலாறு சுட்டுகிறது.

உடையாரைப் பொறுத்த வரை அது ஒரு இலக்கியத் தரம் மிக்க கதையின் மாதநாவல் காப்பி என்றுதான் சொல்ல வேண்டும்.அநியாயமாக அதற்கு 6 பாகங்கள் வேறு.முழுக்கப் படிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது.

ஆனால் பொ.செ.அப்படி அல்ல.ஏன் கல்கி இப்படி தடாலடியாக நிறுத்தி விட்டார் என்று தொடர் வந்து கொண்டிருந்த சமயத்தில் வாசகர்களைத் துக்கப்பட வைத்த விதத்தில் அதை முடித்தார் கல்கி.

இன்னும் என்னால் பொ.செ.னை மறு வாசிப்பு செய்ய முடிகிறது,சுமார் 50 முறை வாசித்த பிறகும் கூட..

===================================================================

ஒரு இடுகையைவிட அதில் வரும் பின்னூட்டங்கள் இடுகையை எவ்வளவு தூரம் உயர்த்தும் என்பதற்கு இந்தப்பின்னூட்டமே ஒரு அழகிய உதாரணம். நண்பர்க்கு நன்றியை உரித்தாக்கிக் கொள்வோம்.

பின்னூட்டம் பற்றிய நமது பகிர்தல்கள் சில..,

----------------------------------------------------------------------------------------------

// அறிவன்#11802717200764379909 said...

உடையார் பா.கு.னின் அப்பட்டமான தழுவல்.
பொ.செ.மாதிரி ஒரு வரலாற்றுப் புதினம் எழுதிப் பெரும்புகழ் வேண்டும் என்ற வேட்கையில் எழுதப்பட்டது உடையார்.//

தங்களின் வருகைக்கும் கூடுதல் தகவல்களுடன் கூடிய பின்னூட்டத்திற்கும் நன்றி

பொ.செ.வின் தொடர்ச்சியாக எழுதப்பட்டதாக பேசிக் கொள்கிறார்கள்

----------------------------------------------------------------------------

//அதற்காக வேறொரு களம் அமைத்துக் கொண்டு எழுதினால் கூட சாதாரண வாசகன் இரண்டையும் எளிதாக ஒப்பு நோக்க மாட்டான்;அதற்கு கடும் உழைப்பும் வரலாற்று ஆய்வும் தேவை.//

உண்மைதான் ஐயா, அதுவும் பொ.செ. போன்ற செம்மை இலக்கியங்களை அவற்றைப் படைத்தவர்களால் கூட பிந்தொடர்ந்து எழுத முடியுமா என்பது கேள்விக் குறியே

------------------------------------------------------------------------------------
//கல்கி நந்தினியை கற்பனையாகப் படைத்தாலும் வரலாற்று நிகழ்ச்சிகளின் இடையில் நூலிழைப் பாவு போல அழகாகக் கோர்த்து ஒருவேளை நந்தினி இருந்திருப்பாளோ என்று சந்தேகம் தோன்றும் அளவிற்கு அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டி விட்டார்.//

நான் நந்தினியைக் கற்பனை பாத்திரமாகப் பார்க்கவில்லை. பொ.செ.வில் சரித்திர ஆதாரத்துடன் கூடிய ஒரு உண்மைப் பாத்திரத்தின் சில குணாதிசயங்களை மட்டும் எடுத்து தனி பாத்திரமாக உலவவிட்டதாகவே கருதுகிறேன்.

இதைப் படித்துவிட்டீர்களா



------------------------------------------------------------------------------------

//பொ.செ.ல் வானதி பாத்திரத்தை சிறிது தட்டிக் கொட்டி பஞ்சவன் மாதேவியைப் படைத்து உலவ விட்டிருக்கிறார் //

கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

//அநாவசியமாக அப்பாத்தரத்தை தேவரடியாராக்கி இல்லாத வேலைகளைச் செய்தும் அப்பாத்திரம் வானதி போல மனதில் பதியவில்லை.//

அதற்காகத்தான் அவ்வாறு செய்து விட்டாரோ என்னமோ

--------------------------------------------------------------------------------------------------

//ஆனால் பொ.செ.அப்படி அல்ல.ஏன் கல்கி இப்படி தடாலடியாக நிறுத்தி விட்டார் என்று தொடர் வந்து கொண்டிருந்த சமயத்தில் வாசகர்களைத் துக்கப்பட வைத்த விதத்தில் அதை முடித்தார் கல்கி.//

எனக்கென்னவோ சில அதிர்ச்சிகரமான உண்மைகளுக்கான ஆதாரங்கள் கல்கிக்கு கிடைத்திருக்கக்கூடும். அதை வெளியிட்டுவிடக் கூடாது என்ற உறுதியை மேற்கொண்டு கல்கி முடித்திருப்பார் என்று தோன்றுகிறது

-----------------------------------------------------------------------------------------------------
//இன்னும் என்னால் பொ.செ.னை மறு வாசிப்பு செய்ய முடிகிறது,சுமார் 50 முறை வாசித்த பிறகும் கூட..//

முதல்முறை படிக்கும்போதே ஒரே மூச்சில் படிக்கத்தூண்டும் வெறி ஊட்டும் கதை அது

-----------------------------------------------------------------------------------------------------

இது பற்றி பலரும் பல இடுகைகளில் பகிர்ந்து கொண்டிருந்தாலும் மீண்டும் ஒரு பகிர்ந்து கொள்ளும்போது மகிழ்வாகவே இருக்கிறது.

14 comments:

  1. {நான் நந்தினியைக் கற்பனை பாத்திரமாகப் பார்க்கவில்லை. பொ.செ.வில் சரித்திர ஆதாரத்துடன் கூடிய ஒரு உண்மைப் பாத்திரத்தின் சில குணாதிசயங்களை மட்டும் எடுத்து தனி பாத்திரமாக உலவவிட்டதாகவே கருதுகிறேன்.

    இதைப் படித்துவிட்டீர்களா
    }

    படித்தேன்..அதற்கு இளைய பல்லவன் எழுப்பிய வினாக்களும்,அவர் இடுகை மூலம் சொன்ன பதிலும் எனக்கு ஏற்புடையதாயிருக்கிறது.

    மற்றபடி உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

    உங்கள் பாராட்டுகளைப் படிக்கும் அதே நேரத்தில் பா.கு.னை விமர்சித்ததற்காக சில 'ரசிகமணி'களால் நான் கடுமையாக நிந்திக்கப்பட்டதும் நடந்தது.
    :((
    ஆயினும் என் கருத்தில் இன்றளவும் மாற்றமில்லை.
    :))

    ReplyDelete
  2. இந்த பதிவும் பின்னூட்டமும் சுவை.

    ReplyDelete
  3. சுவையான புத்தகம் பற்றி சுகமான பதிவு

    ReplyDelete
  4. எத்தனை ஆராய்ந்தாலும் பஞ்சவன் மாதேவி யார் என்று இன்னும் யாரும் ஆதாரங்களுடன் சொல்லக் காணோமே!!!

    அவளும் நந்தினி போல கற்பனை பாத்திரம் என்பதை அத்தனை எளிதாக ஒப்புக் கொள்ள இயலவில்லை.

    வானவன் மாதேவியும் வானதியும் வேறு வேறு என்பது பொ.செ கூறப்பட்டுள்ளதே. வானதி கொடுங்காளூர் வம்சத்துப் பெண் ஆனால் நிஜமான பாத்திரப் படைப்பு தான்.ராஜேந்திரனின் தாயும் அவளே என்பதிலும் ஐயமில்லை.

    வானவன் மாதேவி ராஜராஜனின் அம்மா வழித் தாத்தா மலையமான் குடும்பத்துப் பெண்ணாய் இருக்கக் கூடுமோ என்னவோ? எங்கேயோ வாசித்த நினைவு.

    ReplyDelete
  5. தல நல்லா இருக்கீங்களா? உங்க வலைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு. படிச்சிட்டு அப்புறம் கிறுக்கிட்டு போறேன் ;)

    ReplyDelete
  6. போன பதிவில் சொன்ன அதே பின்நூட்டத்தை திரும்ப எப்படி இங்கும் சொல்வது... அவ்வ்வ்வவ்வ்வ் :-)

    ReplyDelete
  7. இங்கேயும் சிங்ககுட்டியை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  8. @அறிவன்#11802717200764379909
    @D.R.Ashok
    @ஸ்ரீராம்.
    @Mrs.Dev
    @எட்வின்
    @சிங்கக்குட்டி
    @அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  9. பல இடங்களில் சரித்திரங்கள் புனையப் பட்டுத்தான் உள்ளன..,

    ReplyDelete
  10. தல,

    அருமையான டிஸ்கஷன். தொடருங்கள்.

    ReplyDelete
  11. தல,


    பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு நாம் இல்லை என்றாலும் கூட, இதோ ரிலேடட் ஆக ஒரு மொக்கை கமெண்ட்: எனக்கு தெரிந்த ஒரு நந்தினி, கிரைம் நாவலின் முதல் கதை - நந்தினி 440 வாட்ஸ்.

    ReplyDelete
  12. அப்டேட் ஆன் மொக்கை கமெண்ட்: இதே கதை மறுபடியும் ரீபிரின்ட் செய்யப்பட்டது - கிரைம் நாவல் தீபாவளி ஸ்பெஷலில்.

    ReplyDelete
  13. // King Viswa said...

    தல,

    அருமையான டிஸ்கஷன். தொடருங்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails