Wednesday, February 24, 2010

சாளுக்கிய நாட்டு ராஜகுமாரிக்கு ராஜ தந்திரம் தெரியாதா? என்ன?

சென்ற இடுகையில் சில வசனங்களைக் கொடுத்து படங்களைக் கேட்டிருந்தேன். பெரும்பாலான படங்களை நண்பர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால்



நான் லீகலுக்கு லீகல் இல்லீகலுக்கு இல்லீகல்


கொக்கு பறக்கும்: குருவி பறக்கும்: புறா பறக்கும்  பாருங்கள் வீரர்களே புலி பறக்கிறது இங்கே.., புலி பறக்கிறது இங்கே..,




ஆகிய இரு வசனங்கள் மட்டும் மக்கள் கண்டுபிடிப்பதில் சிரமப் படுகிறார்கள் அவர்களுக்கான சில க்ளூக்கள்.



லீகலுக்கு லீகல் இல்லீகலுக்கு இல்லீகல் வசனம் யாருக்குமே நினைவுக்கு வரவில்லையா..,

அடிக்கு அடி,  உதைக்கு உதை

இது நான் படிக்கும் காலத்தில் எல்லா மாணவர்களாலும் உபயோகப் படுத்தப் பட்ட வசனம். பத்திரிக்கையாளர் சந்திப்பில்  ஒரு ஐ.எஃப், எஸ் ஆபிசர் பேசுவாருங்க...,

பச்ச புள்ள நிலாவ புடிக்க ஆசப்பட்ட மாதிரி அந்த ஐ.,எஃப்,எஸ் ஆபிசருக்கு இப்படி ஒரு ஆசை


========================================================================

சாளுக்கிய தேசத்துக்கும், சோழ தேசத்துக்கும் நடைபெறும் யுத்தம், அந்த யுத்தத்தில் சாளுக்கிய தேசம் தோல்வி அடைகிறது. சோழர்களின் க்கொடி ஏற்றப் படுகிறது. சாளுக்கிய மன்னரும் இளவரசியும் கைது செய்யப் படுகிறார்கள். கொடி ஏற்றப் பட்ட உடன் துணைத் தளபதி ஆற்றும் உறையின் ஒரு பகுதிதான் 3ம் எண் வசனம்.

வழக்கின்போது சாளுக்கிய இளவரசியின் வாதத் திறமையால் நெகிழ்ச்சியடைந்த சோழப் பேரரசர் இருவரையும் விடுதலை செய்து நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறார். துணைத்தளபதிகள் இருவர் சாளுக்கிய அரசியை திருமணம் செய்ய ஆசைப் படுவதால் வாள்போர் எடுக்கிறார். அப்போது துணைத் தளபதி கருணாகரன் எடுக்கும் சபதம் மிகப் பிரபலமானது. போரில் கருணாகரன் வெற்றி பெற சாளுக்கிய இளவரசி தானே வாளினை எடுத்துக் களம் புகுகிறாள்.

பொம்பள சண்டை போட போறா, வெக்கமா இல்ல, போய் சேலையை வாங்கிக் கட்டிக்க என்று சொல்லி தளபதி வல்லபனை தூண்டி விடுகிறார். சோழ இளவரசர். இளவரசர் மிகவும் சிறுவர் பி.யூ.சின்னப்பாவின் புதல்வர் ராஜாபகதூர் நடித்திருப்பார்...,

போரில் வல்லபர் வெல்ல துணைத்தளபதி கருணாகரன் தனது சபதத்தை நிறைவேற்ற துடிக்க.., சாளுக்கிய தேச ராஜ குமாரியை தளபதி வல்லபருக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

தளபதி கருணாகரன் சாளுக்கிய இளவரசியை கடத்த முயற்சி செய்யும் போது சோழ மன்னரின் வளர்ப்பு மகள் மங்கம்மா அதில் சிக்கிக் கொள்வார்.

மங்கம்மாளிடம் ப்சப்பு வார்த்தைகள் பேச அதை மங்கம்மா, வல்லபர் மட்டுமல்லாமல் சோழப் பேரரசரும் நம்பி விடுகிறார்கள். வல்லபர் சாளுக்கிய இளவரசி திருமணத்துடன் கருணாகரன் - மங்கம்மா திருமணமும் நடைபெறுகிறது.


அடுத்த் ஆண்டு இரண்டு தம்பதியினருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. சோழப் பேரரசர், இளவரசர் சுந்தரருக்கு பட்டம் சூட்டி ஆட்சி அதிகாரத்தை தளபதி வல்லபருக்கு கொடுத்துவிட்டு புனிதச் சுற்றுப் பயணம் செல்கிறார்,  எல்லையில் வனவிலங்குகள் தொல்லை அதிகம் இருப்பதாக தகவல் வர அவைகளை அடக்க வல்லபர் செல்கிறார்.

 சதிவேலைகள் அரங்கேறுகின்றன. விளையாட்டாக மகுடி எடுத்து சுந்தர இளவரசர் ஊத நிறுத்தியவுடன் அவரைக் கொத்துகிறது. அதற்கு முன்னர் சாளுக்கிய இளவரசி சுந்தரனுக்கு பால்சோறு ஊட்டுகிறார்.

இளவரசர் மயக்கமடைந்த உடன் ஏற்படும் குழப்பத்தில் பாலில் விஷம் கலக்கப் படுகிறது. அரண்மனை வைத்தியர் பாம்பு கடித்த காயத்தை உறுதிப் படுத்துகிறார். அதே நேரத்தில் பாலில் விஷத்தையும் உறுதி படுத்துகிறார்.

பாலிலே விஷம், பாம்பு கடித்தது போன்ற காயம்.

 அரண்மனைக்குள்ளே அத்தனை காவலையும் மீறி அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை விட்டிவிட்டு இளவரசரை மட்டும் பாம்பு கடித்தது என்பதை ஏற்க இளைய தளபதி  கருணாகரன் ஏற்க மறுக்கிறார்.

ஊசிமுனையால் குத்திவைத்துவிட்டு ஊராரே நம்புங்கள் என்றால் யார் நம்புவாகள் என்று எள்ளி நகையாடுகிறார்.

சாளுக்கிய நாட்டு ராஜ குமார்ரி தந்திரமாக இளவரசனைக் கொன்றுவிட்டதாகச் சொல்லி அவரை கைது செய்கிறார்.

எல்லைக்குச் சென்ற வல்லபர் அது போலிப் புகார் என்பதை அறிந்து உடனேதிரும்புகிறார், அங்கே அவரை கொல்ல முயற்சி நடக்கிறது, ஆனால் தப்பி விடுகிறார். அரண்மனை திரும்பிய உடன் நிலையை அறிகிறார், இளைய தளபதி கருணாகரனுக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட இளவரசரின் பிணத்துடன் தப்பி விடுகிறார். மற்றொரு வைத்தியரிடம் பரிசோதனை செய்கிறார்கள். அவர் உயிர் ஊசல் ஆடுவதாகவும் சொல்கிறார்கள் . முட்டை, பால் போன்றவை வைத்து ம்குடி ஊதப் படுகிறது ஊரில் உள்ள பாம்புகள் வந்து முட்டை பால் ஆகியவற்றை குடித்துச் செல்ல இளவரசரைக் கடித்த பாம்பு பொழுதுசாயும்வரை வராமல் இருக்கிறது.  வல்லபர் மகுடி ஊத இளவரசரைக் கடித்த பாம்பு வந்து விஷத்தை உறிஞ்சுகிறது. இளவரசர் பிழைத்துக் கொள்கிறார்.


நாட்டுக்குள் வரும் வல்லபரை கைது செய்து விடுகிறார்கள். அவரது கண்கள் குறுடாக்கப் படுகிறார். மீண்டும் வல்லபர் தப்பி விடுகிறார்.  மக்களோடு சேர்ந்து தாயத்து விற்று ஆதரவு திரட்டுகிறார்.

சிறையில் இருக்கும் சாளுக்கிய இளவரசிக்கு கடும் துன்பங்களைக் கொடுத்து தனது ஆசைக்கு இணங்க வைக்க முயற்சிக்கிறார். இளைய தளபதி. அதிகாரத்தைக் கைப்பற்றி தன்னைச் சோழ மன்னராக அறிவித்துக் கொள்கிறார்.  சாளுக்கிய இளவரசி ஆசைக்கு இணங்காவிட்டால் மறுநாள் அவளது குழந்தையை கொண்டுவிடுவதாக அறிவிக்கிறார்.

இதுவரை சாளுக்கிய இளவரசி மீது சந்தேகக் கண் கொண்டு பார்த்துவந்த மங்கம்மாவுக்கு தன் கணவன் மேல் சந்தேகம் வருகிறது, புர்கா அணிந்து வேலைக்கு வரும் வசந்தாவைப் போன்று அவரும் புர்கா அணிந்து சிறைச்சாலைக்குச் செல்கிறார். தனது குழந்தையை , சாளுக்கிய இளவரசியின் குழந்தைக்க்கு மாற்றாக வைக்க மங்கம்மா-கருணாகரனின் குழந்தை , துணைத் தள்பதி கருணாகரனால் கொல்லப் படுகிறது.

தாயத்து விற்றுக் கொண்டுஇருக்கும் குருட்டு வல்லபர் மீண்டும் சிறைப்பிடிக்கப் படுகிறார்.  வல்லபர் சாளுக்கிய இளவரசி இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப் படுகிறது. பக்கம் பக்கமாக வசனங்கள் சாளுக்கிய இளவரசியால் பேசப் படுகிறது.

குருட்டு வல்லபரும் சாளுக்கிய இளவரசியும் தட்டுத்த்டுமாறி சந்திக்கும் காட்சியை ஏளனம் செய்கிறார் கருணாகரன்.

பாருங்கள் வீரர்களே பாருங்கள். கூட்டுப் புலியும், காட்டுக்கிளியும் கொஞ்சி மகிழ்வதை பாருங்கள் வீரர்களே பாருங்கள் என எள்ளி நகையாடுகிறார்.

குழந்தையைக் கொன்றுவிட்டதை பெருமையோடு சொல்ல வல்லபர் பொங்கி எழுகிறார். அவர் குருடர் இல்லை என்பதையும் எப்படித் தப்பித்தோம் என்பதையும் சொல்லிக் கொண்டே அனைவரையும் அடித்து வீழ்த்துகிறார்.

சண்டையின் முடிவில் சோழப் பேரரசரும் தகவல் கிடைத்து மீண்டும் நாடு திரும்புகிறார்,. கருணாகரன் திருந்தி விட்டதாகக் கூறி மன்னிப்புக் கேட்கிறார், ஆனால் அவரது சபதத்தை நிறைவேற்றிக் கொள்கிறார். மங்கம்மாவுக்கு சிலை வடிக்கிறார்கள்.

இறுதியில் படம் சுபம்


ஒரே படத்தில் அனல் பறக்கும் வசனங்களும்  ஆவேசமான சண்டைக்காட்சிகளும் நிறைந்த படம் இது, படத்தின் பெயர் மற்றும் கருணாகரனின் சபதத்தை கண்டுபிடியுங்களேன்,

14 comments:

  1. //ஒரே படத்தில் அனல் பறக்கும் வசனங்களும் ஆவேசமான சண்டைக்காட்சிகளும் நிறைந்த படம் இது, படத்தின் பெயர் மற்றும் கருணாகரனின் சபதத்தை கண்டுபிடியுங்களேன்,//
    மகாதேவி
    மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. //dondu(#11168674346665545885) said...

    //ஒரே படத்தில் அனல் பறக்கும் வசனங்களும் ஆவேசமான சண்டைக்காட்சிகளும் நிறைந்த படம் இது, படத்தின் பெயர் மற்றும் கருணாகரனின் சபதத்தை கண்டுபிடியுங்களேன்,//
    மகாதேவி
    மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    வணக்கம் ஐயா, வருகைக்கும் நினைவூட்டியதற்கும் நன்றி..,

    ReplyDelete
  3. // கயல்விழி நடனம் said...

    கேப்டன் பிரபாகரன்//

    வாங்க தல.., நீங்களும் எங்க காலத்து ஆளுதானா?

    ReplyDelete
  4. படம் அரசிளங்குமரியா தல...

    ReplyDelete
  5. ஓஹோ ... படம் மகாதேவி
    மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவியா... சரியாப்போச்சு

    ReplyDelete
  6. நான் மங்கம்மா சபதம்னு நினைச்சேன் சுரேஷ் அது வேற படமா

    ReplyDelete
  7. கண்டுபிடிச்சிட்டாங்களா ரொம்ப சந்தோசம்.

    தல அடுத்து என்ன பண்ண போறீங்க.

    ReplyDelete
  8. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    ஓஹோ ... படம் மகாதேவி
    மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவியா... சரியாப்போச்சு//

    படத்தைப் பார்த்துவிடுங்கள் தல..,

    ReplyDelete
  9. // thenammailakshmanan said...

    நான் மங்கம்மா சபதம்னு நினைச்சேன் சுரேஷ் அது வேற படமா//

    வசுந்தாரா தேவி நடித்த மங்கம்மா சபதம் விமர்சனம் எழுதும் அளவு நினைவில் இல்லை, ஆனால் கதை நினைவில் உள்ளது, சில காட்சிகள் நன்றாக நினைவில் உள்ளது, மீண்டும்பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தால் கண்டிப்பாக எழுதி விடுகிறேன்

    ReplyDelete
  10. // அக்பர் said...

    கண்டுபிடிச்சிட்டாங்களா ரொம்ப சந்தோசம்.

    தல அடுத்து என்ன பண்ண போறீங்க.//



    :))

    ReplyDelete
  11. Suresh: I am not sure whether you are a cricket fan? please check this http://timeforsomelove.blogspot.com/2010/02/blog-post_24.html
    out and participate if you can. Thanks. Sorry for the trouble!

    ReplyDelete
  12. //வருண் said...

    Suresh: I am not sure whether you are a cricket fan? please check this http://timeforsomelove.blogspot.com/2010/02/blog-post_24.html
    out and participate if you can. Thanks. Sorry for the trouble!//

    அழைப்பிற்கு நன்றி..,

    ReplyDelete
  13. //Bogy.in said...

    புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://www.bogy.in//


    நன்றி..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails