இந்திய தண்டனைச் சட்டத்தில் கற்பழிப்பு என்பதை பிரிவுகள்375, 376 ஆகியவை வரையறை செய்கின்றன. மற்றும் தண்டனையை தெரிவிக்கின்றன,
தற்போது அந்தப் பிரிவுகளில் தற்போது சில திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஒரு ஆணின் உடலில் ஒருபகுதி அல்லது ஒரு பொருள் முழுமையாகவோ அல்லது லேசாகவோ ஒரு பெண்ணின் உடலில் எந்த வடிவத்தில் நுழைய முற்பட்டாலும் இனி அந்த நிகழ்வு கற்பழிப்பாகவே கருதப் படும். ஆணுறுப்பை வைத்துத்தான் முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை.
=======================================================
உடலுறவிற்கு சம்மதம் கொடுக்கும் வயதினையும் சற்று உயர்த்தியிருக்கிறார்கள். தற்போதைய திருத்தத்தின் படி ஒருவனின் மனைவியே ஆனாலும் அவளது சம்மதத்துடன் உடலறவு கொள்ளும் பட்சத்தில் அவளது 18 வய்துக்கு கீழே இருந்தால் அது கற்பழிப்பாக கருதப் படும். ஏற்கனவே 15வய்துக்கு மேற்பட்ட மனைவியின் சம்மதத்துடன் கொள்ளும் உடலுறவு கற்பழிப்பாக கருதப் பட மாட்டாது. இப்போது அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது உடலுறவு என்பது எந்த ஒரு பாலியல் நடவடிக்கையும் குறிக்கும்.
===================================================
இது தொடர்பான குற்றங்களை சரியாக விசாரிக்காத காவலர்களுக்கு தண்டனை அளிக்கவும் இந்தச் சட்டத் திருத்தத்தில் இடம் கொடுக்கப் பட்டுள்ளது.
=================================================
பிரிவு 376 C (1) குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் இருந்து இருபால் குழந்தைகளையும் பாதுகாக்கிறது.
=================================================
நான் படிக்கும் காலத்தில் எனது பேராசியர் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது. இது அவரது காலத்தில் நடந்தும் இருக்கலாம். அல்லது அவரது பேராசிரியர் அவருக்கு சொன்னதாகக் கூட இருக்கலாம்.
ஒரு கற்பழிப்பு . அதில் புண்ர்ச்சி நடந்து முடியும் போது மற்றவர்கள் பார்த்துவிடுகிறார்கள். பார்த்தவர்களில் காவல்துறை ஆய்வாளரும் அடக்கம். அவர்கள் குற்றவாளியைத் துறத்துகிறார்கள். குற்றவாளி அருகில் உள்ள ஆற்றில் விழுந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். ஆனால் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்டோர் அவரைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
ஆனால் குற்றவாளி அதாவது குற்றம் சாட்டப் பட்டவர் விடுதலையாகிவிடுகிறார்.
காரணம் இதுதான்.
வழக்குப் பதிவு செய்யும்போது குற்றம் நடைபெற்ற இடத்திலேயே நேரிடையாக பார்த்து கைது செய்ததாக வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்,
மருத்துவ பரிசோதனையின் போது அவரது ஆண்குறியில் விந்து இருப்பதான அறிகுறி இல்லை. ஆற்றில் விழுந்து நீந்தும் போது கழுவப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் பாதிக்கப் பட்டவரின் உடலில் விந்து இருந்திருக்கிறது. இது போன்ற நிலை அதுவும் அந்த இடத்திலேயே கைது செய்யப் பட்டிருப்பின் நிகழ வாய்ப்பில்லை என்றும். இது உள்நோக்கத்தோடு பதிவு செய்யப் பட்ட வழக்கு என்றும் கூறி விடுதலை செய்யப் பட்டுவிட்டாராம்.
ஆற்றில் குதித்த நிகழ்வு பதிவு செய்யப் படவில்லை. பிற்சேர்க்கையாகச் சொல்லும்போது உள்நோக்கத்தோடு பதிவு செய்யப் பட்ட வழக்கு என்ற வாதம் மேலும் வலுப் பெற்று விட்டதாம்.
வழக்குகளில் நிகழ்வுகள்ன் வரிசைக்கும், நடந்ததை அப்படியே தெரிவிக்க பதிவு செய்ய வேண்டியதின் அவசியத்தையும் எங்களுக்கு புரிய வைக்க எங்கள் பேராசியர் சொன்ன நிகழ்வு இது.
அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு....
ReplyDeleteநல்லது...அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் இல்லை. இந்திய தண்டனைச் சட்டம்!
ReplyDeleteதல,
ReplyDelete//ஒரு ஆணின் உடலில் ஒருபகுதி அல்லது ஒரு பொருள் முழுமையாகவோ அல்லது லேசாகவோ ஒரு பெண்ணின் உடலில் எந்த வடிவத்தில் நுழைய முற்பட்டாலும் இனி அந்த நிகழ்வு கற்பழிப்பாகவே கருதப் படும். ஆணுறுப்பை வைத்துத்தான் முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை.//சமீபத்தில் வேட்டைக்காரன் படத்தில் நம்ம இளைய மருத்துவர் விஜய் உங்க ஹீரோஇன் அனுஷ்காவோடைய வாயில வெரலை வைத்து விசில் அடிப்பார். அதுவும் இப்போ தப்புதானே? அப்போ அவர் மேல கேஸ் போடலாமா?
// Sangkavi said...
ReplyDeleteஅனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு....//
நன்றி தல.,
// Prabhu Rajadurai said...
ReplyDeleteநல்லது...அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் இல்லை. இந்திய தண்டனைச் சட்டம்!//
திருத்திவிட்டேன் தல..,
//King Viswa said...
ReplyDeleteசமீபத்தில் வேட்டைக்காரன் படத்தில் நம்ம இளைய மருத்துவர் விஜய் உங்க ஹீரோஇன் அனுஷ்காவோடைய வாயில வெரலை வைத்து விசில் அடிப்பார். அதுவும் இப்போ தப்புதானே? அப்போ அவர் மேல கேஸ் போடலாமா?//
அவரது சம்மதம் இல்லாமல் நடந்திருந்தால் அது குற்றம் என்றே நினைக்கிறேன்
அனுஷ்காவின் வயது 18க்கும் கீழ் இருந்தால் அவரது சம்மதத்துடன் நடந்திருந்தாலும் குற்றம் குற்றமே..,
ReplyDeleteதல,
ReplyDeleteஉங்களுக்கே இன்னும் பதினெட்டு வயது வரவில்லை என்னும்போது அனுஷ்கா அண்ணிக்கு எப்படி பதினெட்டு வயது?
பார்த்துங்க தல
ReplyDeleteஎஸ். ஏ. சி காதுல விழுந்துட போகுது. அவர் சட்டத்தை தானே கையில் எடுத்துவிடுவார். இல்லையென்றால் பழைய விஜயகாந்தைக் கூப்பிட்டு எடுக்கச் சொல்லிவிடுவார்.
வழக்கறிஞர் பிரபு ராஜதுரையின் பதிவை நினைத்துக்கொண்டே இதனை திறந்தேன். அவரது பின்னூட்டமும் ஒரு திருத்தம் செய்திருக்கிறது..
ReplyDeleteநல்ல பதிவுக்கு நன்றி.
//ஒரு ஆணின் உடலில் ஒருபகுதி அல்லது ஒரு பொருள் முழுமையாகவோ அல்லது லேசாகவோ ஒரு பெண்ணின் உடலில் எந்த வடிவத்தில் நுழைய முற்பட்டாலும் இனி அந்த நிகழ்வு கற்பழிப்பாகவே கருதப் படும். ஆணுறுப்பை வைத்துத்தான் முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை.//
ReplyDeleteஇதன்படி சில்மிசங்கள் கூட கற்பழிப்பில் சேர்த்தி ஆகும். பிரம்ம ராட்சதர்களுக்கு தண்டனை கிடைத்தால் நன்றாக இருக்கும்.
@செந்தழல் ரவி
ReplyDelete@குலவுசனப்பிரியன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே,
நல்ல தகவல் தல
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதெரிந்துக்கொள்ள வேண்டியது, குழந்தைகளுக்கான வன்முறைகளிலிருந்து பாதுக்காக்கும் சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுக்காப்பு அதிகப்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் மட்டும் இல்லை....
ReplyDeleteஅட பார்ர்ர்ரா.....நானும் தெரிந்து கொண்டேன் அண்ணே...
ReplyDelete//அக்பர் said...
ReplyDeleteநல்ல தகவல் தல
//
வாங்க தல
//ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteகுழந்தைகளுக்கான வன்முறைகளிலிருந்து பாதுக்காக்கும் சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். //
மனநலக் கல்வி சிறு வய்திலேயே துவக்க வேண்டும் தல
//seemangani said...
ReplyDeleteஅட பார்ர்ர்ரா.....நானும் தெரிந்து கொண்டேன் அண்ணே...
//
கண்டிப்பாக வாலிபர்கள் தெரிந்து கொண்டே தீர வேண்டும்
நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாருங்க...
ReplyDeleteஉங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் கருத்துகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
Informative
ReplyDelete//punitha said...
ReplyDeleteநாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாருங்க...//
அதனால்தான் தல சட்டம் போடறாங்க திருத்தறாங்க
//ஸ்ரீராம். said...
ReplyDeleteInformative
//
வாங்க தல.,