பண மாலை போடுவதில் சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பண மாலை போடுவதற்கு சில கட்சிகள் (மட்டும்) எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. எதிர்ப்பு தெரிவிக்காத கட்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளும் உதவும் வகையில் சில யோசனைகள்.
1. பத்திர மாலை: -
அந்த ஊரில் உள்ள முக்கிய இடங்களின் பத்திரங்களை கட்சித் தலைமையின் பெயருக்கு இடம் மாற்றம் செய்து மாலையாக அணிவிக்கலாம்,. நல்ல மதிப்பு பெறும் மாலையாக அமையும்.
2. கார்ச்சாவி மாலை: -
தேர்தல் நேரத்தில் கட்சித் தொண்டர்களின் பயண நேரத்தைச் சுருக்க கார்ச்சாவிகளால் ஆன மாலையை கட்சித் தலைமைக்கு அளிக்கலாம். கட்சித் தலைமைக்கு ஓ.கே. என்றால் கார் மாலையே கூட அணிவிக்கலாம்.
3.கணினி மாலை:-
தொழிற்நுட்ப ரீதியாக நாட்டை முன்னேற்றியே தீருவேன் என்று அடம்பிடிப்பவர்களுக்கு மடிக் கணினியால் கோர்க்கப் பட்ட மாலையை அணிவிக்கலாம். விருப்பப் பட்டால் மேசைக்கணினி மாலை கூட அணிவிக்கலாம்.
4. ஹேக்கர்ஸ் மாலை:-
எந்த ஒரு தளத்தையும் ஹேக் செய்யும் வல்லமை வாய்ந்த சிலரின் கையைக் காலைக் கட்டி மாலையாகச் செய்து மாலை அணிவித்துவிடலாம்.இவர்கள் ஓட்டுப் பதிவின் போது பதிவர்களின் ஓட்டுப் பதிவு எந்திரத்தை ஹேக் செய்வார்கள் என்றால் தலைமை மிகவும் மகிழ்ச்சி அடையும்
5.பாஸ்போர்ட் மாலை:-
ப்ளான்க் செக் கொடுப்பது போல பிளான்க் பாஸ் போர்ட் மாலை அணிவித்தால் நினைத்த நேரத்தில் வெளிநாடு செல்லவும், நண்பர்களை வெளிநாடு அணுப்பவும் சுலபமாக இருக்கும்.
பின்குறிப்பு:- இது போன்ற மாலை அணிவிப்பதில் எந்த தடையும் இதுவரை இல்லாத காரணத்தால் பின்பற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை.
பின்குறிப்பு:- நாட்டு மக்களின் நலன் கருதி மேற்கண்ட ஐடியாக்களுக்கு காப்புரிமை பதிவு செய்யப் படவில்லை. யார் வேண்டுமானாலும் இவற்றை உபயோகித்துக் கொள்ளலாம்.
வணக்கம் டாக்டர்... டெம்பிளேட் நல்லாயிருக்கு இன்னும் மெருகூட்டலாம் என்று நினைக்கின்றேன்.
ReplyDelete//பின்குறிப்பு:- இது போன்ற மாலை அணிவிப்பதில் எந்த தடையும் இதுவரை இல்லாத காரணத்தால் பின்பற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை.//
ReplyDeleteநடக்கட்டும் நடக்கட்டும்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல
ReplyDeleteதல அடுத்த மீட்டிங்க்ல செயல்படுத்திட வேண்டியதுதான்.
ReplyDeleteவாங்க தல..,
ReplyDelete