அலுவலகத்தில் மிக அசதி,
வெளியே அழைந்து திரிந்து வருகிறோம். மிகக் கடுமையான சோர்வு. பிரதான அலுவலகம். மிக முக்கிய கோப்புகள் மேசையின் மீது இருக்கின்றன. மேசையின் மீது கால்வைத்து உங்களால் ஓய்வெடுக்க மனம் வருமா? அது ஓய்வறையில் உள்ள மேசை அல்ல உங்களது பிரதான அலுவலக மேசை. கண்டிப்பாக பெரும்பாலனோருக்கு அப்படி ஓய்வெடுக்க மனம் வராது. அதுவும் தேசியக் கொடி வைத்திருக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகம் மேசையில் தேசியக் கொடி இருக்கிறது. அப்படியென்றால் அந்த அலுவலகத்தில் அமருவதற்கும் அந்த நாற்காலியின் மரியாதையைக் காக்கவுமே நமக்கு ஒரு உள்ளூர பயம் இருக்க வேண்டும்.
அதிலுமே தேசியக் கொடி அருகில் காலை வைத்து அதுவும் புகைப் படங்களாக வரும் அளவு கவனக் குறைவாக இருந்தவர்தான். சானியா மிர்சா. அந்த படத்தை நான் இந்த தளத்தில் வெளியிட விரும்பவில்லை. தேவைப் படுபவர்கள் ஆங்கிலத்தில் சானியா மிர்சா என்றடித்து கூகிளாண்டவரைக் கேளுங்கள் தருவார்.
சானியாவின் உடைகளுக்காகவே டென்னிஸ் பார்ப்பவர்கள் உண்டு. ஸ்டெபி கிராஃப் அளவிற்கு ரசிகர்கள் படைத்தவர் அல்லர். மேல் நாட்டுப் பெண்கள் போல ஆடைகள் அணிய ஆசைப்பட்டு ஆனால் அந்த ஆடைகளை நம்ம ஊர் திரைப்பட கவர்ச்சி நடிகைகள் போல அணிந்து ஆடிவருபவர் சானியா. வில்லியம் சகோதரிகளோ, அன்னா கோர்ன்னிகாவோ அணியும் காற்றோட்டமான உடைகள் இவ்வாறு அழகு கொந்தளிக்க இருந்ததில்லை. இந்த அழகைச் சுட்டிக் காட்ட பேச்சு எழுந்த போது பர்தா போட்டுக் கொண்டா விளையாட முடியும் என்பது போன்ற பேச்சுக்கள் வந்து விவாதங்கள் திசை மாறிப் போயின.
தங்க மங்கை பி.டி.உஷா கூட ஒரு முறை சானியாவின் புகழுக்கு டென்னிஸ் விளையாட்டு மட்டும் காரணம் அல்ல என்று மனம் நொந்து சொல்லி இருக்கிறார்.
திருமணம் பற்றிய பேச்சுக்களில் கூட பலா அதிரடிகள் செய்து வருபவர் நமது மிர்சா,
இன்றைய செய்திகளில் மாலிக்கின் பணம் பல கோடி சானியாவிடம் கொடுத்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அதுவும் சூதாட்டப் பணமாம். பணத்தையெல்லாம் வாங்கி பத்திரப் படுத்திக் கொள்ள இவர் என்ன வங்கி நடத்திவருகிறாரா என்ன?
பேசாமல் இவருக்கு சீக்கிரம் நடத்திக் கொடுத்து ஏதாவது நாட்டின் குடியுரிமையும் வாங்கிக் கொடுத்து வழியனுப்பி விட்டால் இந்தியாவின் மானம் காப்பாற்றப் படும். அதைவிடுத்து அவர் இந்தியரா? இதயம் இந்தியாவுக்குத் துடிக்குமா? என்றெல்லாம் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தால் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும்தான் அசிங்கம்.
எனவே சானியாவின் உணர்வுகளை மதிப்போம். அவரது உரிமைக்கு குரல்கொடுப்போம். ஊருக்கு அனுப்பி வைப்போம்.
:-)))
ReplyDeleteஏன் சானியா மேல இந்த கொலவெறி :)
ReplyDeleteசரியான பார்வை...
ReplyDeleteமூணு மணி நேரத்துக்கு ஒரு சட்டை மாத்துவீங்க போல இருக்கே தல... நமக்குன்னு ஒரு trademark சட்டையை உருவாக்க வேண்டாமா...
ReplyDeleteஅவர்களிருவரிடையே இருப்பது உண்மையான காதல் என்றால் கூட, வதந்திகள் கிளம்பத்தான் செய்கின்றன. பிரபலமாக இருப்பதற்குக் கொடுக்கும் விலை!!
ReplyDelete:-))))
ReplyDeleteஏன் தல ஃபீலிங்.
ReplyDeleteபுதிய பார்வை...
ReplyDelete// T.V.ராதாகிருஷ்ணன் said...
ReplyDelete:-)))//
வாங்க தல..,
// பரிதி நிலவன் said...
ReplyDeleteஏன் சானியா மேல இந்த கொலவெறி :)//
உங்களுக்கு குலை குலையா முத்திரிக்கா பாட்டுத் தெரியுமா தல
// அஹமது இர்ஷாத் said...
ReplyDeleteசரியான பார்வை...//
:))
// philosophy prabhakaran said...
ReplyDeleteமூணு மணி நேரத்துக்கு ஒரு சட்டை மாத்துவீங்க போல இருக்கே தல... நமக்குன்னு ஒரு trademark சட்டையை உருவாக்க வேண்டாமா...//
மேக்கப் ஏறலாம், கெட்டப் மாறலாம். ஆனாலும் உள்ள செட்டப் அப்படியேதான் தல இருக்கும்
// ஹுஸைனம்மா said...
ReplyDeleteஅவர்களிருவரிடையே இருப்பது உண்மையான காதல் என்றால் கூட, வதந்திகள் கிளம்பத்தான் செய்கின்றன. பிரபலமாக இருப்பதற்குக் கொடுக்கும் விலை!!//
உண்மையான காதல்தான் தல, அதனால்தான் அவரின் பணத்திற்கு இவர் காவல் காக்கிறார்
// முகிலன் said...
ReplyDelete:-))))//
:)
// அக்பர் said...
ReplyDeleteஏன் தல ஃபீலிங்.//
மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா எல்லாம் சாயா
// ஸ்ரீராம். said...
ReplyDeleteபுதிய பார்வை...//
ஏற்கனவே பேசப் பட்ட கோணம்தான் தல..,