Wednesday, April 14, 2010

திருமணத்திற்கு முன் கழட்டிவிடுவது எப்படி?

மன்னா! ஏன் இப்படிக் கவலையில் மூழ்கி இருக்கிறீர்கள்?

அமைச்சரே இந்த தங்கவியாபாரி பொன்னம்மாளின் தொந்தரவு தாங்க முடியவில்லை. 

மன்னா!  தாங்களும் நகையரசி பொன்னம்மாள் அம்மையாரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே

அவளேதான் அமைச்சரே!

மனைவி என்று வந்துவிட்டாளே தொல்லை கொடுப்பவர்தானே மன்னா,


அவளே ஒரு கருத்தைச் சொல்லுவாள். அதை அவளே அதை தவறு என்பாள். அதற்கு காரணம் கணவனாகிய நீங்களே என்று சொல்லுவாள். அதுதானே மன்னா மனைவிக்கான அடையாளம். 

ஜப்பான், கொரிய, ஆப்ரிக்க, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து பிரான்சு அனைத்து நாட்டு மனைவிகளும் அப்படித்தானே மன்னா! உலகம் முழுவதும் சுற்றியவரும் அனைத்து நாடுகளிலும் நண்பர்கள் படைத்த உங்களுக்கா இது தெரியாது மன்னா,


அமைச்சரே வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டாம்.  நகைக்கடை பொன்னம்மாவை மணந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை

அவரை உங்களுக்கு பிடிக்கவில்லையா மன்னா?

நிறையப் பிடித்திருக்கிறது. அதற்காக திருமணம் செய்து கொள்ளமுடியுமா?

மன்னா அவரை கழட்டிவிட வேண்டும் அவ்வளவுதானே? நாட்டின் மன்னர் நீங்கள் முடியாது என்று சொல்லிவிடுங்கள்.

இல்லை அமைச்சரே, நாட்டின் பொருளாதார சூழலில் பொன்னம்மாளின் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  நேரடியாக அவ்வாறு சொன்னால் நமது நிலமை பரிதாப கரமாகிவிடும்.

ஓ.கே மன்னா! ஒரு யோசனை சொல்லுகிறென், முயற்சித்துப் பாருங்கள்

==================================================================

நாட்டு மக்களுக்கோர் அறிவிப்பு. நமது நாட்டில் இருக்கும் கொச்சியாற்று ஓரம் இருக்கும் பூங்காக்களை வேடிக்கை பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப் பட உள்ளது.  ஏற்கனவே  இது போல எட்டு இடங்களில் இருப்பது போல இதுவும் அமையும். விருப்பம் உள்ளவர்கள் டெண்டர் அனுப்பலாம்.

====================================================================

பொன்னம்மாவின் நிறுவனம்:

நிறுவன இயக்குநர்களின் கூட்டம் நடைபெறுகிறது.  இந்த ஒப்பந்தம் மட்டும் நமக்கு கிடைத்துவிட்டால் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நமது நிறுவனம் மிகப் பெரியதாகி விடும்.

அதில் பெரிய வருமானம் ஒன்றும் இல்லையே. ஏற்கனவே மற்ற பூங்காக்களை டெண்டர் எடுத்தவர்கள் விற்கும் சூழலில் இருக்கிறார்களாமே

பூங்காவிலிருந்து வருமானம் வருகிறதோ இல்லையோ, பூங்காவிலுள்ள பூக்களின் மூலம் நமது நிறுவனங்களுக்கு மிக நல்ல விளம்பரம் பெற இயலும்.

சரி பெற்றுவிடலாம். தாங்கள் நேரடியாக மன்னரை அனுகலாமே,

இல்லை இதை நான் நேரடியாக கேட்டால் எதிர்கட்சியினர் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திவிடுவார்கள். ஆனால் நான் பேசி விடுகிறேன்.. நமது சகோதர நிறுவனத்தின் மூலம் அதைப் பெற்றுவிடுங்கள். அந்த நிறுவனத்தில் எனக்குள்ள பங்கு பற்றி யாரும் பேச வேண்டாம்.

=====================================================================

அமைச்சரே போன்னம்மாவின் நிறுவனத்திற்கே அந்த உரிமம் கொடுத்தாகிவிட்டது. இருந்தாலும் பிரச்சனை ஓயக் காணோமே,

மன்னா, உரிமம எடுத்தது அவரது சகோதர நிறுவனம், அதில் அவருக்க்குள்ள தொடர்பு மிக ரகசியமானது.

அப்படியென்றால் எனக்கு விடுதலையே கிடையாதா?

கவலைப் படாதீர்கள் மன்னா! நமது தோழர்கள் எதிரிகளிடமும் இருக்கிறார்கள், அவர்களின் உதவியை நாடுவோம்.

என்ன! நீ எதிரியின் ஆளா?

அரசிய;ல்ல இதெல்லாம் சகஜம் மன்னா....,

============================================================

உரிமம் கொடுக்கும் துறையின் தலைவர் தனக்குத் தெரிந்த தகவல்களை கசியவிட்டு விடுகிறார்.

பொன்னம்மாளின் நிறுவனங்கள் கொதித்தெழுந்து ரகசியம் காக்க வேண்டிய செய்திகளை வெளியிட்டு விட்டதாக குற்றம் சாட்டுகின்றன.

இது போன்ற செய்திகளை வெளியிடுவது சகஜம்தான் என்ன உ. கொ. து தலைவர் சொல்லிவிடுகிறார்.

=====================================================

தனது காதலிக்காக மன்னர் நாட்டின் வளங்களை தாரைவார்த்து தந்துவிட்டதாக எதிர்கட்சிகள் கும்முகின்றன; குதறுகின்றன

=============================================================
அமைச்சரே என்ன கொடுமை இது! நீர் எதிர்கட்சி ஆள் என்பதைநிரூபித்துவிட்டீர். நாட்டு மக்கள் என்மீது மிகவும் கோபமாக இருக்கிறார்கள். நான் என்ன செய்வது

=========================================
                                                நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பு:
நம் நாட்டின் மிக முக்கிய நகைக் கடை அதிபர் பொன்னம்மாள் நமது மன்னருக்கு மிக வேண்டியவர் அவ்வளவுதான். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் அவருக்கு வேண்டியவர்களே. அவர் பொன்னம்மாளை எக்காரணம் கொண்டும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்.  தவிரவும் மக்களின் எதிர்ப்பு மிக அதிகமாக இருப்பதால் இப்போது கொடுக்கப் பட்ட உரிமம் முடிந்த பின்னர் பொன்னம்மாளின் நிறுவனங்களுக்கு உரிமம வழங்கப் படாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படிக்கு அமைச்சர்  23ம் இம்சைவாசி

==============================================
டிஸ்கி:  இது முழுக்க முழுக்க கற்பனைக்கதை

16 comments:

  1. hahaha panrathalam pannitu karpanai kathaya . namba mudiyala

    ReplyDelete
  2. நிஜம் கற்பனையாக்கப் பட்ட மாதிரி தெரிகின்றது... அது என்ன நிஜம் என்றுதான் கண்டுபிடிக்க முடியவில்லை.

    ஐபிஎல் சுடும்...

    ReplyDelete
  3. தல,

    இதற்கும் கொச்சி விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரியும்போது நீங்கள் டிஸ்கி எல்லாம் போட தேவை இல்லை.

    ReplyDelete
  4. அண்ணனுக்கும், அண்ணனின் கோடானுகோடி வாசகர்களுக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு / விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பதிவுப் பக்கத்திலேயே கமென்ட் இடும் பெட்டியை போட்ட அண்ணன் வாழ்க.

    ReplyDelete
  6. //அஹமது இர்ஷாத் said...

    :)
    //

    வாங்க தல சிரித்து விளையாடுவோம்

    ReplyDelete
  7. //LK said...

    hahaha panrathalam pannitu karpanai kathaya . namba mudiyala
    //

    நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் தல

    ReplyDelete
  8. //இராகவன் நைஜிரியா said...

    ஐபிஎல் சுடும்...//

    கொஞ்சம் குளிர்ச்சி கலந்து வெதுவெதுப்பாக்கப் பட்டுள்ளது

    ReplyDelete
  9. //King Viswa said...

    தல,

    இதற்கும் கொச்சி விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரியும்போது நீங்கள் டிஸ்கி எல்லாம் போட தேவை இல்லை.
    //


    இருந்தாலும் சமுதாயப் பொறுப்புணர்ச்சி என்று ஒன்று உள்ளதல்லவா.., தல

    ReplyDelete
  10. //King Viswa said...

    அண்ணனுக்கும், அண்ணனின் கோடானுகோடி வாசகர்களுக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு / விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்.
    //


    நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் ராசாதிராசா கிங் விஸ்வா பிறந்தநாள் கொண்டாங்களில் கலந்து கொண்டிருக்கும் அனைவரும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. தல இதுல பெட்டிங் எதுவும் இல்லையே.

    ReplyDelete
  12. //அக்பர் said...

    தல இதுல பெட்டிங் எதுவும் இல்லையே.
    //


    டேட்டிங் தான் முடிந்திருக்கிறது தல

    ReplyDelete
  13. //தாராபுரத்தான் said...

    கலக்கல் சார்..
    //

    நன்றி சார்

    ReplyDelete
  14. ஆமா அப்போ தசி சரூர், புனந்தா சுஷ்கரை கழட்டி விட்டுடறா?

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails