Tuesday, May 10, 2011

+2 வெற்றி, மாயை அல்லது பிரமை

பனிரெண்டு முடித்தவர்களுக்கான தேர்வு முடிவு வந்து விட்டது, மதிப்பெண் தரவரிசை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். முதல் இடம் பிடித்த மாணவர்களை தலையில் தூக்கிவைத்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஊக்கப் படுத்துவது அவசியம்தான்,. அதற்காக கிரிக்கெட் அணிக்கு வரவேற்பு கொடுப்பதுப்போல விளம்பரம் அவசியம்தானா!

10ல் நல்ல மதிப்பெண் வாங்கி 12ல் தடுமாறிப் போனவர்கள் கதி என்ன?

12ல் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களில் பெரும்பாலோனோர் மருத்துவம் எடுக்கிறார்கள்.  ஒரு சிலர் மட்டுமே லட்சியமாக பொறியியல் எடுக்கிறார்கள். மற்றவர்கள் மருத்துவம் கிடைக்காததால் பொறியியல் எடுக்கிறார்கள். ஆனால் இந்த ஓட்டப் பந்தயத்தில் முன்னிலை பெற்றவர்கள் நிலை. படிப்பு முடிக்கவே ஆறு ஆண்டுகள்.  சற்று பின் தங்கியவர்கள் நான்கு ஆண்டுகளில் நல்ல வேலைக்குப் போய் விடுகிறார்கள்.  பலர் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் 6 ஆண்டுகளில் மருத்துவம் படித்தவர்களில் சில முண்ணனி கல்லூரிகளில் முதுகலை படிக்கவில்லை என்றால் எதிர்காலமே இல்லை என்ற அளவில் தன்னம்பிக்கையை வளர்த்துவைத்து மேலும் மேலும்  போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வதிலேயே காலம் தள்ள வைக்கிறார்கள். சிலர் வெற்றி பெறுகிறார்கள்.


பொறியியல் சேர்ந்தவர்களில்கூட அனைவரும் லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. பலரும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். சிலபல ஆண்டுகள் லட்சங்களில் புரண்டவர்கள் கூட அதன்பின் கல்லூரி ஆசிரியர்களாக சொற்ப சம்பளத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவம், பொறியியல் கிடைக்காதவர்கள் அத்தோடு அழிந்து போய்விட்டார்களா? என்றால் அப்படி இல்லை. ஆசிரியர் பள்ளிகளில் சேர்ந்தவர்கள். அரசுப் பள்ளி, கல்லூரிகளின் பணிக்கான போட்டித் தேர்வுகளில் வென்று பணியில் சேர்ந்தவர்கள் மிகச் சிறிய வயதிலேயே மேற்கண்ட பிரிவு மாணவர்களைவிட அதிகமாக வெகுகாலம் சம்பாதிக்கும் நிலைக்கு வந்து இருக்கிறார்கள்.

பொறியியல், மருத்துவம், ஆசிரியர் பணி வாய்ப்புக்கள் கிடைக்காமல் கலை அறிவியல பட்டப் படிப்பு போய் பின்னர், நிர்வாகப் படிப்போ, இந்திய ஆட்சிப் பணிக்கோ போனவர்களும் அதிகம்.

இது எதற்கும் வழி இல்லாமல் போன அளவு மதிப்பெண் எடுத்தவர்களின் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டதா என்றால் அதுவும் கிடையாது.  அவர்களும் தங்கள் பிழைப்பை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.பலர் மிக நல்ல நிலையிலேயே இருக்கிறார்கள்.

என்னொடு ஒன்பதாம் வகுப்புப் படித்த நண்பர் ஒருவர், மூன்றுமுறை ஒன்பதாம் வகுப்பில் தோல்வி. நகரில் உள்ள முண்ணனி கடை ஒன்றில் அன்றாடக் கூலிக்கு வேலைக்குச் சேர்ந்தார். அவரிடம் எந்த சொத்தும் கிடையாது.  முதலாளிக்கு விசுவாசமாக இருந்தார். சில ஆண்டுகள் கூலித் தொழியாளியாக காலந்தள்ளியவர் பின்னர் அங்கேயே ஓட்டுநராக மாறினார், யார் அவரது வண்டியில் ஏறினாலும் மிகவும் பணிவுடன் விருப்பத்திற்கேற்ப ஓட்டுவார். மணம் கோணாமல் பார்த்துக் கொள்வார். இன்று அவருக்குச் சொந்தமாக ஏழு வண்டிகள் உள்ளன. ஒவ்வொரு வண்டியும் வங்கிக் கடன் மூலம் வாங்கியது. சிபாரிசு மற்றும் கியாரண்டிக் கையெழுத்துக்கள் அவரது விசுவாதத்தின் மூலம் சம்பாதித்த மனிதர்கள் போட்டதுதான். கடனை வெகுவிரைவில் அடைத்துவிடுவார். இப்போது ஓட்டுநர்களும் இவரிடம் பணிக்கு உள்ளனர். இவர் இன்னும் பழைய முதலாளியிடம் மாதச் சம்பளத்தில்தான் பணிக்கு இருக்கிறார்.



மதிப்பெண்களாக குவித்து லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வேலைக்குச் சென்றவர்கள் வென்றவர்களாக கருதமுடியுமா? என்றால் அதுவும் இல்லை. வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. சமுதாயக் கட்டமைப்பில் வாழும் நம்மால் நம் சந்ததிகளை உருப்படியாக உருவாக்கும் லடமை இருக்கிறது. இல்லையென்றால் அவர்கள் வெறும் உருப்படிக்களாக போய்விடும் ஆபத்தும் இருக்கிறது,  அதில் தோல்வி கண்டால் அவர்கள் பெற்ற வெற்றிகளையெல்லாம் அவர்களின் குழந்தைகள் குழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள்.

அப்படியென்றால் என்ன செய்வது? வாழ்க்கையில் படிப்பு முக்கியமில்லையா?  மதிப்பெண்கள் அவசியமில்லையா? முதல் மதிப்பெண்க்கள் பெற்றவர்களைப் பாராட்ட வேண்டாமா?

பாராட்டுங்கள். வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியைப்போல பாராட்டு மழையில் மூழ்கடிக்கடித்துவிடாதீர்கள். அவர்கள் போக வெண்டிய பாதைகள் நிறைய உள்ளன. இந்த வெற்றியை அடித்தளமாக பயன்படுத்தி சாதிக்க வேண்டிய விஷய்ங்கள் நிறைய உள்ளன.  அதில் கவனம் செலுத்த்ச் சொல்லுங்கள்.

தோல்வி அடைந்தவர்கள் ( இந்தப் பாராட்டுக் கொண்டாட்டங்கள் இரண்டாம், மூன்றாம் நிலைபெற்றவர்களை தோற்றவர்கள் போல சித்தரிக்கின்றன)  மனம் வெம்பும் அளவிற்கு கொண்டாட்டங்கள் தேவையே இல்லை.

வாழ்க்கையில் ஒரு நிலை அவ்வளவுதான். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்குவதுபோல . அதை மட்டும் வைத்துக் கொண்டு  அடகுவைக்கக்கூட முடியாது.

சென்ற ஆண்டு போட்டதுதான். மீள்பதிவு

3 comments:

  1. ரொம்ப பீல் பண்ண வச்சுடீங்க தல.

    நீங்கள் சொன்ன பல விஷயங்கள் என்னுடைய நண்பர்கள் வாழ்வில் நடந்துள்ளது.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails