Sunday, May 1, 2011

விஜயகாந்தின் மே டே வந்திருந்தால்....,

தமிழக வரலாற்றில் பாதியில் நின்றுபோன பல திரைப்படங்கள் உண்டு. பூஜை மட்டும் போடப் பட்டு நின்றுபோன திரைப் படங்கள் உண்டு. சில படங்கள் வந்ததால் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில பல மாற்றங்கள் நடந்திருக்கக் கூடும்.  எம்ஜியார், சிவாஜி எடுக்க நினைத்த பொன்னியின் செல்வன், கமலஹாசன் எடுக்க நினைத்த பொன்னியின் செல்வன், மருதநாயகம்  போல  விஜயகாந்த் எடுக்க நினைத்த மே டே என்ற ஆங்கிலப் படமும் ஒன்று.  நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் அந்த படம்  வரப் போகிறது வரப் போகிறது என்று காத்து கிடந்தோம்.  ஒரு முறை அந்தப் படம் வந்து விட்டது.  ஆங்கிலப் படத்திற்கு நம்மை விட மாட்டார்கள். இருந்தாலும் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று நகரத்திற்குச் சென்று ஏமாந்து வந்த கதை கூட ஒரு முறை நடந்தது.

அந்தப் படம் வந்திருந்தால் என்னென்ன நிகழ்வுகள் நடந்திருக்கும் என்று நினைத்தபோது

1. கேப்டன் என்பவர் கர்னலாக மாறி இருப்பார்.

2.அகில உலக நடிகர் சங்க தலைவர் ஆகி இருப்பார். அவருக்கு இணையாக ஷரன் ஸ்டோன், சோஃபியா லாரண்ஸ் வந்திருப்பார்கள். குஷ்பு ஒரு மூலையில் இருந்திருப்பார்.

3.அவ்ரது படத்தில் பாகிஸ்தான் வில்லனுக்குப் பதிலாக செவ்வாய் தோஷ வில்லன் இருப்பார். பாகிஸ்தான் வில்லனை வைத்தால் பாகிஸ்தானில் படம் ஓடுவது சிரமம் அல்லவா..,

4. உலகத்தொழிலாளர்கள் அனைவரும் இவரது கையால் அடிவாங்க தயாராக காத்து இருப்பார்கள் . ஏனென்றால் இவரிடம் அடிவாங்கினால் மகாராஜா ஆகிவிட்லாம்.

5 வடிவேலுவின் மதுரை மணம் வீசும் ஆங்கிலம் உலகம் முழுவதும் பாவி இருக்கும்.  அமரிக்கன் இங்கிலீஷ், ஃப்ரென்ச் இங்கிலீத் போல் மேஜூரா இங்கிலீஷ் நமக்கு ஒரு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கும்.

6.வைகை ஆற்றைப் பார்க்கவும், உலக அதிசயமாம் நிரம்பி வழியும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை பார்க்கவும் வெளிநாடுகளில் இருந்தெல்லாம்  மக்கள் குவிந்து கொண்டிருப்பார்கள். கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி போன்ற படங்களுக்கெல்லாம் உலக அளவில் மார்க்கெட் கிடைத்திருக்கும்.

7. இங்கிலாந்து இளவரசர் திருமணத்திற்கு அழைப்பு வந்திருக்கும். அவரது பயணத்திட்டம் முன்கூட்டியே திட்டமிடப் பட்டிருப்பதால் கலந்து கொண்டிருக்க மாட்டார்.  பத்தோடு பதினைந்தாக நேரிட்டிருக்கும் என்று எதிர் அணியினரால் பிரச்சாரம் செய்யப் பட்டிருப்பார்.


8.இந்தப் பாட்டு வந்திருக்காது




9. ஆனா இவ்வளவு நல்லா செயல் பட்டு சென்னையை காப்பாற்றுப்வர் வாஷிங்டனைக் காப்பாற்ற போயிருப்பார்.



10.இந்தக் காட்சிகளை உலகமே ரசித்து இருக்கும்.

5 comments:

  1. விஜயகாந்த்துக்குத்தான்,அரசியல் மேடை கிடைச்சுடுச்சே,பின்ன எப்படி மேடே வரும்.

    ReplyDelete
  2. காமெடி கேப்டன் ...ஹிஹிஹி

    ReplyDelete
  3. //பொ.முருகன் said...

    விஜயகாந்த்துக்குத்தான்,அரசியல் மேடை கிடைச்சுடுச்சே,பின்ன எப்படி மேடே வரும்.//

    நல்ல வசனகர்த்தா கிடைக்கவில்லை என்று பேசிக் கொண்டார்கள்

    ReplyDelete
  4. //கந்தசாமி. said...

    காமெடி கேப்டன் ...ஹிஹிஹி//

    கொஞ்சம் சீரியஸ்

    ReplyDelete
  5. நமக்கு நாமே திட்டத்தின்படி

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails