Saturday, May 11, 2013

தேவையா 11ம் வகுப்பு?

12 வகுப்பு ரிசல்ட் வந்த பிறகு பொதுவாக எழும் விமர்சனம். 11ம் வகுப்பு பாடம் சொல்லித் தராமல் நேரடியாக் 12ம் வகுப்பு பாடங்களைச் சொல்லித் தருவதாக எல்லோரும் விமர்சித்து வருகிறார்கள். நாங்கள் படிக்கும்போதும் இதே போன்று சொல்லுவார்கள். என்னோட சந்தேகம் என்னன்னா   11ம் வகுப்பு பாடம் சொல்லித் தராமல் நேரடியாக 12ம் வகுப்பு பாடம் எடுக்க முடியும் அதுவும் மாணவர்களுக்கு புரியும் அப்படின்னா அந்த 11ம் வகுப்பு பாடம் எதற்காக? 

அப்படி சில பாடங்களை எதற்காக கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டுப் பாடமும் அடுத்த ஆண்டிற்காக பாடத்திற்கு அடிப்படையாக இருந்தால்தானே அந்த பாடத்திற்கு ஒரு மரியாதை இருக்கும்? அதை விடுத்துவிட்டு  அங்க 12ம் வகுப்புப் பாடம் சொல்லியே தருவதில்லை என்று புலம்புவதோ அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யச் சொல்லி போராட்டம் நடத்துவதோ வெட்டி வேலை.

===========================================
உடுமலைப் பேட்டைக்கு அருகே உள்ள ஒரு பள்ளியின் விளம்பரம் ஒன்று இன்றைய தினந்தந்தியில் வந்திருந்தது. மாணவர்கள் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதம், பன்னிரெண்டாம் வகுப்பில் அவரது மதிப்பெண் சதவீதம் ஆகியவை பட்டியலிட்டு இருந்தார்கள். நூறுசதவீதம் தேர்ச்சி தரும் பள்ளி அது. பத்தாம் வகுப்பில் 60% கீழே எடுத்த பல மாணவர்களும்  12ல் 80%க்கும் மேல் எடுத்ததாக விளம்பரப் படுத்தி இருந்தார்கள். வாழ்க அந்தப் பள்ளி


தங்கள் பள்ளியில் இத்த்னை பேர் 1150க்கு மேல் எடுத்ததாக தம்பட்டம் அடிக்கும் பள்ளிக்ள் அதே மாணவர்கள் பத்தாம் வகுப்பில் எத்தனை சதவீதம் எடுத்தனர். தங்கள் பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை விளம்பரம்படுத்தி மாணவர்களை எந்த அளவு முன்னேறி இருக்கிறோம் என்று காட்டுவார்களா? அந்த தைரியம், நேர்மை அந்தப் பள்ளிகளுக்கு இருக்கிறதா?

No comments:

Post a Comment

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails