
இப்படியும் ஒரு கோயில்
ஆயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட வீர நாராயண புரத்தில் உள்ள சிவன் கோயில்தான் இது.
கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது போன்ற கோவில்களை,
புராதாணக் காலக் கட்டிடங்களைக் காக்க வேண்டியது நம் கடமை.
http://www.thehindu.com/news/national/tamil-nadu/1000yearold-cholaera-temple-facing-threat-of-demolition/article4718623.ece#comments செய்தியின் படி இந்தக் கோவில் ராஜராஜ சோழன் தன் மனைவியரோடு வந்து வணங்கியது., தஞ்சாவூர் விக்கரவாண்டி நாற்கரச் சாலையின் காரணமாக இந்தக் கோவில் அழிக்கப் படலாம் என்ற எண்ணம் இப்போது தோன்றியுள்ளது. அந்த ஊர் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்திருக்கிறார்கள்.
இப்போதைய கும்ப கோணத்திற்கு அருகில் உள்ள மாணம்பாடி கிராமத்தில் உள்ள
இந்தக் கோயில் கடந்த 30 ஆண்டுகளாக மாநிலத்தின் தொல்பொருள் துறையின்
கண்காணிப்பில் உள்ளதாம்.
முதல்வர் மாதிரி பெரிய பதவியில் இருப்பவர்கள் யாராவது இதில் தலையிட்டு ஏதாவது செய்தால் இந்தக் கோவில் தப்ப வாய்ப்பு இருக்கிறது.
தொட்டால் பொல பொல வென உதிர்ந்துவிடும் போலிருக்கே !
ReplyDeleteகங்கை கொண்ட சோழபுரக் கோவிலின் சுற்றுச் சுவர், கல்வெட்டுக்கள் காணாமல் போனதற்கு ஒரு கதை உண்டு நண்பரே.., ஆனால் அதற்கும் இதற்கும் தொடர்புண்டா என்று தெரியவில்லை
Deleteகூட்டங்கூட்டமாப் நேத்து வந்த ஐயப்பனை கேரளாவுக்குப் போயி கொட்டி, கட்டி அழறானுக. நம்ம கோயிலை புதுப்பிச்சு கோழியடிச்சு, ஆடுவெட்டி சாமி கும்பிட்டா இந்தக் கோயிலுக்கு நல்லது.
ReplyDeleteஇது சிவன் கோவில், சக்திக்குத்தான் ஆடு கோழி எல்லாம்..,
Deleteசேர தேஷத்து நம்பூதிரிகளின் செயலோ.., என்னவோ...,
Deleteஇக் கோவில் பற்றிய மேலதிக தகவல்கள்
ReplyDeletehttp://thanjavur14.blogspot.com/2013/05/blog-post_19.html
சிறப்பாக இருக்கிறது
Deleteஇங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாம்
Delete//இப்போதைய கும்ப கோணத்திற்கு அருகில் உள்ள மாணம்பாடி கிராமத்தில் உள்ள இந்தக் கோயில் கடந்த 30 ஆண்டுகளாக மாநிலத்தின் தொல்பொருள் துறையின் கண்காணிப்பில் உள்ளதாம்.///
ReplyDeleteநீங்கள் சொல்லவே வேண்டாம்....பார்த்தாலே தெரியுது இவ்வளவு அழகா பராமரிப்பதிலிருந்து இந்த கோயில் தொல்பொருள் துறையின் கையில் தான் உள்ளது என்று!
ஹி ஹி
Delete