Sunday, May 5, 2013

அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியும் சி.எஸ்.கேவும்

இந்த அரியாசனத்துக்குத் தேவை நான் சொன்னதைக் கேட்டு நடமாடும் ஒரு பொம்மை - ராஜகுரு பி.எஸ்.வீரப்பா

உலகச் சரித்திரத்திற்கும் கிரிக்கெட் சரித்திரத்திற்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு. மிக மிகப் பெரியஅ அணிகள் என்று பேசப் பட்ட அணிகள் எல்லாம் குறிப்பிட்ட காலம் வரை ஒவ்வொரு வீரர்களாக மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அணிவீரர்கள் நிரந்தர இடம் பிடித்துவிடுவார்கள். குறிப்பாக கேப்டன்.. அப்படி நீண்டகாலம் ஒருவரே கேப்டனாக இருந்துவிட்டால் அவர்களுக்குப் பின் அந்த அணிக்கு வரும் தடுமாற்றம் மிக மோசமாக இருந்திருக்கிறது. லாயிட்ஸ்,  இம்ரான்கான்,  ரணதுங்க, குரோன்யே, சமீபத்தில் ரிக்கி பாண்டிங்.  இந்த நீண்ட கால கேப்டன் நிரந்தரக் கேப்டன் போன்றவர்க்ள் மிக அதிக வெற்றிகளை குவித்து இருந்தாலும். அணியின் அடுத்த தலை ததிகிணத்தாம் போடும் சூழல்தான் இருக்கிறது.

 சாம்ராஜ்யங்களில் விக்டோரியா ராணியின் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறையாமல் இருந்தது. ஆனால் அதற்கடுத்த கட்டங்களில்  ஐரோப்ப்பாவின் ஒரு ஓரத்துக்கே சென்றுவிட்டது. ஔரங்கசீப்பிற்குப் பின் முகலாய சாம்ராஜ்யமே  அம்பேல் ஆனது.  நீண்ட நாளைக்குப் பின் மன்னரான ராஜராஜரின் வம்சம் கூட ராஜேந்திரருக்குப் பின் சில ஆண்டுகளில் அடியோடு அழிந்து போனது.  சோழநாட்டை ஆள ஆள் வேண்டுமென்று ராஜராஜரின் மகளின் வாரிசை (சாளுக்கிய தேசக் காரர்) கூப்பிட்டுவிட்டிருந்துக்கிறார்கள். இப்போது சோழவாரிசு என்று சொல்பவர்கள் எப்படி என்று தெரியவில்லை.


இதையெல்லாம் கண்டுதானோ என்னவோ  அமெரிக்காவில் யாரும் இருமுறைக்கு மேல் அதிபராகக் கூடாது என்று சட்டம் போட்டிருக்கிறார்கள். ஆனாலும் கூட புஷ் மகன் புஷ் என்று ஒரு குடும்பத்தின் கீழ் 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததன் பலன்  பெரிய பொருளாதார ஆட்டம். 

இவ்வளவு முன்னோடிகள் இருந்தும்  சி எஸ் கே அணியில்  கேப்டன் உட்பட பலரும்  நிரந்தர இடம் பிடித்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  சுதாரித்துக் கொண்டால் நல்லது.

4 comments:

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails