கர்நாடக சட்ட சபை ரிசல்ட் வந்த சூட்டோடு ப்ளஸ் 2 ரிசல்ட் வந்துவிட்டது. கர்நாட்க ரிசல்ட் வந்த உடனே பல இடுகைகள் வந்து கொண்டிருக்கின்றன. நாமும் இடுகை போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்த போது ப்ளஸ் 2 ரிசல்ட்டும் வந்து விட்டது. சரி இதற்காவது ஏதாவது எழுதியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது ஒரு வடிவம் கிடைத்தது. இரண்டையும் எழுதிவிடுவோம் என்று யோசித்துப் பார்த்தால் கடைசியில் பல் ஒற்றுமைகள் இரண்டிலும் இருக்கின்றன.
- ஒண்ணுமே பண்ணாட்டியும் அன்னை சொன்னதக் கேட்டால் ஜெயிக்கலாம்.
- பூ பின்னாடி சுத்தற விட கையை நம்பலாம்.
- இன்னைக்கு ஜெயிச்சவங்க அடுத்த அஞ்சுவருஷம் ஆடலாம். ஆனா அதுக்கு அப்புறம் அப்படிங்கறத இந்த அஞ்சு வருஷத்தில கரெக்ட் பண்ணி வச்சுக்கணும்.
- பப்ளிக்கா @#*% படம் பார்த்தா கண்டிப்பா ஆப்புதான்.
- தோத்ததுக்காக கவலைப் பட வேண்டியதே இல்ல.
- ஊருக்கே புடிக்காத காலேஜ், கோர்ஸ், கட்சி உங்க வீட்டுக்கு பிடிச்சு போகலாம்.
- நாமே நம்ம ஆள செலக்ட் பண்ணி வெச்சிருந்தா கூட ஜெயிச்சோட்டோமும் நாமே சொல்லிட கூடாது. அத அன்னை வாயால சொல்லச் சொல்லணும் அப்பத்தான் மரியாதை.
- பவர் கட் ஒரு மேட்டரான்னே தெரியவில்லை.
ஆனாலும் சில விஷயங்களில் ப்ளஸ் டூ மாணவர்களைப் பார்த்து அரசியல் வாதிகள் பொறாமை படும் விஷ்யங்களும் இருக்கின்றன.
- ப்ளஸ் டூ தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடியாக சிறப்புத் தேர்வு வைப்பது போல தேர்தலில் தோற்றவர்களுக்கும் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
- அட்லீஸ்ட் மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதாவது சுலபமாக இருந்தால் பரவாயில்லை.
- எந்த எந்த தொகுதியில் தோத்தமோ அந்த தொகுதிக்கு மட்டும் சிறப்புத் தேர்தல் வைத்தால் சந்தோஷப் படுவார்கள்.
No comments:
Post a Comment