நாயக் நஹீ.., கல்நாயக் ஹூன் மே
டிஸ்கி;- இதெல்லாம் படிக்கற பசங்களுக்கு நல்லதா? , நாயக் என்ற இந்தி திரைப்படத்தைப் பார்த்து செய்திருக்கலாம். இல்லை முதல்வன் என்ற மூலப் படத்தைப் பார்த்தும் செய்திருக்கலாம்.
//மத்திய பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள்
எடுத்து முதலிடம் பிடித்த மாணவி, ஒருநாள் கவுரவ மேயர் பதவி அளித்து
கவுரவிக்கப்பட உள்ளார்.//
//மாணவியை கவுரவிக்கவும், மாணவ, மாணவிகளை கல்வியின் மேல் ஆர்வம் கொள்ளச்
செய்யும் வகையில் அவருக்கு ஒரு நாள் மேயர் பதவி வழங்க முடிவு
செய்யப்பட்டுள்ளதாக நகரின் மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார். வருகிற 28
ஆம் தேதியன்று மாணவி சுனந்தா மேயர் பொறுப்பு ஏற்கிறார்.
அன்று காலை முதல் மாலை வரை மேயர் இருக்கையில் அமர்ந்து மேயர் பணிகளை
கவனிப்பார். இதற்கான சட்ட நடைமுறைகளை செய்து, அரசிடம் முறைப்படி அனுமதி
பெற்றுள்ளார் மேயர் ஷோபா யாதவ்.
28 ஆம் தேதியன்று மேயர் பதவியில் அமரும் மாணவி சுனந்தா, அன்றைய தினம்
நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.40 லட்சம் செலவில் சாலை அமைக்கும்
திட்டத்தில் கையெழுத்திடுகிறார்//
http://kalvi.vikatan.com/index.php?aid=1655#cmt241
செய்தி மேலே உள்ள சுட்டியில் வந்துள்ளது,. அங்கே போனால் முழுச் செய்தியையும் படித்துக் கொள்ளலாம்.
============================================================
முதல்வன் படத்தைப் பார்த்து இது போன்ற ஐடியாக்கள் தோன்றி இருக்கலாம். ஆனால் எல்லா ஊர்களிலும் மேயர் பதவி இல்லையே என்ன செய்யலாம் என்று மக்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கலாம். எப்படியாவது விளம்பரம் பெற்றே ஆக வேண்டிய நிலையில் யாராவது யோசித்துக் கொண்டிருக்கலாம். பதவி ஏற்ற பின் அவர்கள் ஏதாவது எக்குத்தப்பாக முடிவெடுத்து ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் கூட இருக்கலாம். அந்த சிறுவர்கள் கூட முதல்வன் படம் பார்த்து இருக்கலாம் அல்லவா?
அவர்களுக்கு மேயர் , சேர்மன் பதவிதான் கொடுக்க வேண்டும் என்றில்லை. ஷெரிஃப், நாட்டாமை போன்ற வழக்கொழிந்த பதவிகளைக் கூட கொடுக்கலாம். நாட்டாமை பதவியை வைத்துக் கொண்டு போட்டாவுக்கு போஸ் மட்டுமே கொடுக்கலாம்.
17 வயது மாணவருக்கு அந்தப் பதவிகள் கொடுக்க முடியுமா? கௌரவ பதவியாகக் கொடுத்த பதவியை கொண்டு உத்தரவுகள் போட முடியுமா? என்ற கேள்விகளை நாம் கேட்க வேண்டாம்.
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் அரசியலுக்கு வருவதும் நிர்வாகப் பதவிகளுக்கு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் நல்லதுதான்.
ஆனால் வெறுமனே இது போன்ற ஒரு பதவியில் சிறு குழந்தைகளை தூக்கி வைப்பது தேவையில்லாமல் அவர்களுக்குள் ஒரு அதிர்வினை ஏற்படுத்தி எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது.
ப்ளஸ் டூ படிப்பில் முதல் மதிப்பெண் எடுப்பதால் அடுத்த கட்ட கல்வியில் வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதில் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அவ்வளவுதான். மேற்கொண்டு அவர் பார்க்கவேண்டிய களங்கள் நிறைய உள்ளன. அதற்குள் இதுபோன்ற கிரீடஙக்ள் அவர்களுக்கு முள் கிரீடங்கள் ஆகி விடக் கூடாது.
No comments:
Post a Comment