Monday, May 27, 2013

ஐபிஎல் இறுதிப் போட்டி உணர்த்தும் உண்மைகள்

  1. இறுதிப் போட்டியில் தோற்றதன் மூலம் லீக் ஆட்டங்களில் தோற்றது சூத்தாட்டத்தினால் அல்ல. தங்கள் திறமையால்தான் என சூப்பர் கிங்ஸ் நிரூபித்து உள்ளது.
  2. சூப்பர் கிங்ஸ்க்கு போடப் பட்ட கடைசிப் பந்து வைடு ஆக ஆனதால் இதற்கு முன் சில ஆட்டங்களில் போடப் பட்ட கடைசி நோ பாலும் இதே போல் ஏதேச்சையாக நிகழ்ந்த நிகழ்வுதான் என நிரூபிக்கப் பட்டுள்ளது.
  3. விக்கெட் வரிசையாக விழும்போது பத்ரிநாத் ப்ராவோவைக் களம் இறக்கியதன் மூலம் வீரர்களுக்கு போட்டிகளின் முக்கியத் தருணங்களில் வாய்ப்பு தரும் மகா மனிதர் டோனி என்பது மீண்டும் நீருபிக்கப் பட்டுள்ளது,
  4. மும்பை வாலாக்கள் களத்தில் இறங்கினால்  அனைத்தும் சட்ட ரீதியாகத்தான் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
  5. இடியே விழுந்தாலும் கலங்காமல் இருக்கும் மிஸ்டர் கூல் என்பதை டோனி உலகத்துக்கும் அவரது மனைவிக்கும் ஒரு முறை நிரூபித்துக் காட்டி விட்டார்.
  6. இந்த போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டதால் இளைஞர்களுக்கு வழிவிடுபவர் என்பதை டெண்டுல்கரும் நிரூபித்துவிட்டார்.
  7. வெளிநாட்டு கேப்டனை விட உள்நாட்டு கேப்டன் தான் ஐபிஎல் அணிகளுக்கு சரிப் பட்டு வருவார்கள் என்பதை ரோஹித் சர்மா நிரூபித்து விட்டார். 
  8. இதையெல்லாம் விட ஒரு சிறப்புப் படம் ஒன்று ஃபேஸ் புக்கில் பட்டது. அது டோனியின் பக்தியை மெச்சுவதாக உள்ளது அந்தப் படம்.https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc1/391666_10151668132389134_489713509_n.jpg 
  9. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பெண்களுக்கு எதிரான பழமொழியை மாமனார் மருமகனுக்கு மாற்றி எழுதிய பெருமையும் இந்த ஐபிஎல்லையே சாரும். மருமகன் உள்ளே மாமனார் வெளியே .
  10. தங்கள் அணியை வெற்றிப் பெற செய்ய அணி உரிமையாளர் ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருப்பார் என்பதும் இந்த ஐபிஎல்லில் நிரூபணம் ஆகியுள்ளது.    படித்துவிட்டீர்களா? 
  11. IPL இறுதிப் போட்டி -  இறுதிச் சடங்கு?
  12.  IPL மகாபாரத யுத்த விளக்கம்
  13. டிஸ்கி:- மஞ்சள் சீருடை ஒருவேளை பச்சைச் சீருடையாக மாறினால் முக்தி கிடைக்குமோ என்னமோ?

4 comments:

  1. என்னென்னமோ நடக்கிறது

    ReplyDelete
    Replies
    1. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது., எது நடக்கப் போகிறதோ அது நன்றாகவே நடக்கும்.

      Delete
  2. //தங்கள் அணியை வெற்றிப் பெற செய்ய அணி உரிமையாளர் ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருப்பார் என்பதும் இந்த ஐபிஎல்லில் நிரூபணம் ஆகியுள்ளது.//
    தங்கள் அணி வெற்றி பெற யாராவது செலவு செய்வார்களா? வெற்றி பெற்றால் பணம் அள்ளலாம் என்றால் கண்டிப்பாக செய்வார்கள். இது வெறும் பண விளையாட்டு. Who cares who wins or who loses other than the (insane) cricket viewers!

    ReplyDelete
    Replies
    1. அதில வெற்றிகள் அதிக வருமானம். வெற்றிக்காக செய்யும் செலவு முதலீடாக கருதப் படும்

      Delete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails