Monday, April 25, 2011

யார் சொல்லும் தேர்தல் கணிப்பு பொய்த்துப் போகும்?

இன்று நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தபோது தேர்தல் பற்றிப் பேச்சு வந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துச் சொல்லிக் கொண்டு இருந்தோம். அப்போது வயதில் மூத்த நண்பர் ஒருவர் போப்பா.., ஒவ்வொருத்தனும் ஒவ்வொண்ணச் சொல்றான். ஊழல் ஆரம்பிச்சு, மின்சாரம் வந்து, சாலை போடுவது, டாஸ்மாக் திறந்தது, ராஜா பக்‌ஷே விவகாரம் எல்லாம் பேசுறாங்க. நம்மால் ஒண்ணும் கணிக்க முடியலயே அப்படின்னு ரொம்ப ஃபீல் பண்ண ஆரம்பித்தார்.  இன்னொரு நண்பர், அண்ணே அது ரொம்ப சுலபம்ண்ணே நான் சொல்ற வகை ஆட்கள் சொல்றத அப்படியே எதிர்மறையா எடுத்துக்குங்க. அப்புறம் கணக்குப் பாருங்க எல்லாம் சரியா வரும் என்றார்.

அவர் சொன்ன ஆட்கள்:-

1.ரஜினி படம் பார்த்து விட்டு நல்லாவே இல்லை என்று சொல்பவர்கள்.

2.கமலஹாசன் படம் பார்க்காமலே சூப்பர் என்று சொல்பவர்கள்

3.சச்சின் டெண்டுல்கரை சுத்தி சுத்தி திட்டிவிட்டு சச்சின் அவுட் ஆனதும் டிவியை விட்டு நடையைக் கட்டுபவர்கள்

4.எம்.எல்.எம் சோப்புப் போட்டால்தான் சிவப்பானதாகச் சொல்பவர்கள்

5.அலுவலகத்திற்கு தினமும் ஹிண்டு வாங்கி வந்து முதல் கடைசி பக்கம் மட்டும் படிப்பவர்கள்

6.இருமல், சளி என்றால்கூட கோயமுத்தூர் போகும் புள்ளிகள்

7.பகுத்தறிவு கொள்கையில் பிஹெச்டி வாங்கி விட்டு மனைவி சொன்னதற்காக கையில் வண்ணமயமாக கயிறுகள் கட்டிக் கொண்டு சுற்றுபவர்கள்.


நண்பரிடம் இது என்ன கணக்கு என்று கேட்டபோது, இந்த ஆட்கள் அவர்களின் தெரிவை வெளியே சொல்ல தயங்குவார்கள். ரஜினி படம் என்றால் நன்றாக இருக்காது, சச்சின் சதம் அடித்தால் தோற்கும் என்று பேசினால்தான் மற்றவர்கள் மதிப்பார்கள் என்று நினைப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்தால் கூட வெளியே சொன்னால் ஒரு மாதிரி பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் அந்தப் பகுதியில் என்ன பேசிக் கொள்கிறார்களோ அதையே சொல்லுவார்கள்.


உங்களுக்கு என்ன தோன்றுகிறது?


14 comments:

  1. கோயமுத்தூர் போறவங்க ?!

    ReplyDelete
  2. அவர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்தால் கூட வெளியே சொன்னால் ஒரு மாதிரி பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் அந்தப் பகுதியில் என்ன பேசிக் கொள்கிறார்களோ அதையே சொல்லுவார்கள்./// அதாவது பச்சோந்தி என்கிறீர்கள் ))))

    ReplyDelete
  3. //புருனோ Bruno said...

    ஹி ஹி ஹி//


    yes

    ReplyDelete
  4. //ஆகாயமனிதன்.. said...

    கோயமுத்தூர் போறவங்க ?!//

    அவங்க சில நேரங்கள்ல சென்னைக்குக்கூட போவாங்க.., அதுதான் பெருமை

    ReplyDelete
  5. //கந்தசாமி. said...

    அதாவது பச்சோந்தி என்கிறீர்கள் )))) //

    செய்யறது ஒண்ணு சொல்றது ஒண்ணு

    ReplyDelete
  6. //ரஜினி படம் என்றால் நன்றாக இருக்காது, சச்சின் சதம் அடித்தால் தோற்கும் என்று பேசினால்தான் மற்றவர்கள் மதிப்பார்கள் என்று நினைப்பார்கள்//

    Well Said!

    ReplyDelete
  7. ஹா.. ஹா...ஹாஹஹா...!

    நச்!

    ReplyDelete
  8. அது என்ன கமல் படத்தை பார்க்காமல் நன்றாக இருக்கிறது என்றூ சொ

    ReplyDelete
  9. சத்தியமான உண்மைகள்!

    ReplyDelete
  10. //பெசொவி said...

    //ரஜினி படம் என்றால் நன்றாக இருக்காது, சச்சின் சதம் அடித்தால் தோற்கும் என்று பேசினால்தான் மற்றவர்கள் மதிப்பார்கள் என்று நினைப்பார்கள்//

    Well Said!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழ!

    ReplyDelete
  11. //கொக்கரகோ... said...

    ஹா.. ஹா...ஹாஹஹா...!

    நச்!//

    நன்றி நண்ப!

    ReplyDelete
  12. //M.Sathishkumar said...

    அது என்ன கமல் படத்தை பார்க்காமல் நன்றாக இருக்கிறது என்றூ சொ//

    அவர் படம் மட்டுமல்ல, மனிரத்னம் படத்தைக்கூட பார்க்காமலேயே சூப்பர் என்று சொல்லிக்கொண்டு ஒரு கும்பல் சுற்றும்.

    சில நேரங்களில் இவர்கள் ஒரு முறை பார்த்திருந்தால் சில கமல் படங்கள் இன்னும் சிலநாட்கள் ஓடியிருக்கும் என்று நினைப்பதுண்டு.

    ReplyDelete
  13. //அபி அப்பா said...

    சத்தியமான உண்மைகள்!//

    நன்றி தல

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails