மாணவர் விடுதியை விட்டு வெளியே செல்லும்போது பேருந்து நிறுத்தத்தில் மினியைப் பார்த்தான். மினி அவனோடு படிப்பவள்தான். இருவரும் மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தனர். வெகுநாட்களாகவே மினியின் மீது ஜீவாவுக்கு ஒரு இது. தகுந்த நேரம்வரும்போது மினியிடம் தன்னை வெளிப்படுத்தி இதுவை அதுவாக மாற்றம் செய்ய எண்ணியிருந்தான். அதற்கான நேரமும் துணிச்சலும் அவனுக்கு வந்தபாடில்லை. மூன்றாம் ஆண்டிருந்து ஏட்டுக்கல்வியுடன் அனுபவக் கல்வியும் துவங்கியிருந்தது. உள்ளுறை நோயாளிகள் பிரிவுக்கு பல குழுக்களாகப் பிரித்து எல்லோருக்கும் பாடம் ஆரம்பித்துவிட்டனர். ஜீவாவின் குழுவில் அவன் மற்றும் மினியோடு சேர்ந்து அறுவர். அவர்களுக்கு வகுப்பு எடுக்க முதுகலை மாணவர்களும் இரு உதவிப் பேராசிரியர்களும் இரு விரிவுரையாளர்களும் ஒரு பேராசிரியரும் இருந்தனர்.
இருவருமே சராசரிக்கும் கூடுதலான திறமை வாய்ந்த மாணவர்கள்தான்.
அந்த மினியைத்தான் அவன் பேருந்து நிறுத்தத்தில் பார்த்தான். பச்சைக்கலர் புடவையில் ஏதோ திருமணத்திற்குச் செல்லுவதுபோல் நின்று கொண்டிருந்தாள்.கையில் கல்லூரிக்கு(மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு) செல்லும்போது கொண்டு செல்லும் பாடப் புத்தகங்களும் கருவிகளும் இருந்தன. முகம் சற்று சோர்வாகத்தென்பட்டாலும் மஞ்சள் அதிகமாகவே தென்பட்டது. ஜீவா பேசாமல் கல்லூரிக்குக்கே சென்று விடலாம் என்றமுடிவுக்கு வந்தான். இருந்தாலும் முக்கிய திருமணம் என்பதால் திருமண மண்டபத்தைநோக்கி தனது இருசக்கர வாகனத்தைச் செலுத்தினான்.
கோயமுத்தூர் வந்து மூன்று ஆண்டுகள் அகியும் இவள்கள் திருந்தவே மாட்டார்களா.. சுத்த பட்டிக்காடு மாதிரி இவ்வளவு மஞ்சள் பூசி குளித்துவிட்டு வகுப்புக்குச் செல்கிறார்கள். ஒட்டு மொத்த பெண்களையும் திட்டிக்கொண்டே திருமணத்திற்குச் சென்றான். நல்ல சிவப்பாய் இருந்தால் கூட பரவாயில்லை. இவள் மாநிறம்தான். இதில் இவ்வளவு மஞ்சள் பூசிக் குளித்துக் கொண்டு.... என்ன ரசனையோ.. லேசாக தென்பட்ட இடுப்பில் கூட மஞ்சள் கலந்திருப்பது போல்த்தோன்றியது.
திருமணத்திற்குச் சென்ற அவனது மனம் முழுக்க முழுக்க மினியைச் சுற்றியே வந்தது. இன்று எப்படியும் அவளிடம் இது பற்றி பேசிவிட வேண்டும்.. எத்தனை நாள்தான் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது. அப்புறம் நம் கதையைக் கூட கல்லூரி ஆண்டுவிழாவில் நாடகமாய் போட்டு மானத்தை வாங்கிவிடுவார்கள். பல்வேறு நினைவுகள் அவனுக்குள் சுற்றிக் கொண்டே இருந்தது.
திருமணம் முடிந்தவுடன் நேரே மருத்துவமனைக்குச் சென்றான். அவனது வார்டுக்குச் சென்றான். வாசலிலேயே அவன் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கல்லூரி முதல்வருடன் பேசிக் கொண்டிருந்தனர். போச்சு.. திரும்பவும் ஏதாவது வேலை நிறுத்தம் செய்ய போகிறார்களா? இவர்களோடு சிக்கினால் இன்று இரவு வரைக்கும் கூட இங்கிருந்து தப்ப முடியாது. முதலில் மினியிடம் பேச வேண்டும் பின்னர்தான் மற்ற விஷ்யங்கள்.
நேராக மாணவர் விடுதிக்கு வந்து சேர்ந்தான். முதலில் அவனது ஊரினைச்சேர்ந்த மூத்த மாண்வர் ரங்கு தென்பட்டார். அவர் ஜீவாவிற்கு நன்கு நெருக்கமான நண்பர். அவருக்குஜீவாவுக்கு ஓரளவு மினியிடம் ஒரு இது என்பது தெரியும். இவனைப் பார்த்ததும் அருகில் வந்தார். ஏதோ தயங்கியது போல் தென்பட்டது. இருந்தாலும் ஜீவா அதிபயங்கர துதூகலதுடன் சொல்ல ஆரம்பித்தான்.
ஊர்ஸ் இன்னைக்கு சொல்லிறலாம்னு இருக்கேன். காலையிலமினியைப் பார்த்தேன்.
கோயமுத்தூர் வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இவள்கள் திருந்தவே மாட்டார்களா.. சுத்த பட்டிக்காடு மாதிரி இவ்வளவு மஞ்சள் பூசி குளித்துவிட்டு வகுப்புக்குச் செல்கிறார்கள். ஒட்டு மொத்த பெண்களையும் திட்டிக்கொண்டே திருமணத்திற்குச் சென்றான். நல்ல சிவப்பாய் இருந்தால் கூட பரவாயில்லை. இவள் மாநி றம்தான். இதி இவ்வளவு மஞ்சள் பூசிக் குளித்துக் கொண்டு.... என்ன ரசனையோ.. லேசாக தென்பட்ட இடுப்பில் கூட மஞ்சள் கலந்திருப்பது போல்த்தோன்றியது.
பச்சை சேலை வேர ... தாங்கல
இன்னைக்கு எப்படியும் அவளிடம் இதைப் பற்றி பேசிவிடுவது என்று முடிவு செய்துவிட்டேன். ஆசிர்வாதம் பண்ணுங்க ஊர்ஸ்..
காதல் மயக்கத்தில் உளறிக்கோண்டே இருந்தான்.
இது ஒன்றும் புதிதல்ல. முதல் வருடம் கல்விச் சுற்றுலா சென்று வந்ததிலிருந்து வாரம் ஒருமுறையாவது மினியைப் பற்றி ஏதாவது உளறிக் கொண்டே இருப்பான்.
ஊர்ஸ் ரங்கு அமைதியாகச் சொன்னார். இனிமேல் இதைப்பத்தி யார் கிட்டயும் பேசாதே.. பேசினால் உனக்குத்தான் பிரச்சனை.
மினி குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் சாப்பிட்டு செத்து போயிட்டா.. நீ காலையில பார்த்தப்பவே விஷம் அவ உடம்பு பூரா பரவித்தான் இருந்திருக்கு. அமைதியா ரூம்ல உட்காரு. உன் வகுப்புத் தோழர்களெல்லாம் பிணவறை பக்கத்தில்தான் இருக்கிறார்கள். கல்லூரிமுதல்வர் கூட அங்குதான் இருக்கிறார்.
ஜீவா சிலையாய் மாறி நின்றான். கண்களில் மட்டும் நீர் ஆறாய் பெருக்கெடுத்தது. (அவன் பார்த்த மஞ்சள் விஷத்தின் முழு வெளிப்பாடு)
இது ஒரு மீள்பதிவு
For Sangamam Contest?
ReplyDelete:-(((((( !!!! never exected
ReplyDeleteதல
ReplyDeleteவார்ப்புரு சூப்பர் :) :)
வாழ்த்துக்கள்
//. எத்தனை நாள்தான் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது. அப்புறம் நம் கதையைக் கூட கல்லூரி ஆண்டுவிழாவில் நாடகமாய் போட்டு மானத்தை வாங்கிவிடுவார்கள். //
ReplyDeleteசூப்பர்ப் :) :)
இப்பலாம் ஒரு பய கூட ஸ்கிட் போடுவதில்லை. வெறும் டான்ஸும் லைட் மியூசிக்கும் தான்
கல்லூரி விழாக்கள் போர் அடிக்கிறது
நர்சிம் முரளிக்கணணன் வரிசையில் வலையுலகிலிருந்து அடுத்த வெகுஜன எழுத்தாளர் நீங்கள் தான்
ReplyDeleteவாழ்த்துக்கள் !!
இன்னாப்பா நீங்கெல்லாம் டாக்டரு.ஒரு உசுர காப்பாத்த முடியல
ReplyDeleteகதை சரி தான். இனிமேலாவது இந்த மருத்துவக் கல்லூரி, இஞ்சுனியர் என்று பாத்திரம் படைக்காதீர்கள். அது தான் விசய், வேலு எண்டு பட்டியல் நீண்டிட்டுதே..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி
ReplyDeleteபுருனோ Bruno
குடுகுடுப்பை
pukalini அவர்களே...
//குடுகுடுப்பை சொன்னது…
ReplyDeleteஇன்னாப்பா நீங்கெல்லாம் டாக்டரு.ஒரு உசுர காப்பாத்த முடியல
//
சொல்ல வருத்தமாய்த்தான் இருக்கிறது. டாக்டர்களும் மனிதர்கள்தான்.
இறைவனின் அவதாரக் கதைகளில்கூட எத்தனையோ சம்பவங்கள் தடுக்கமுடியாமலும் எத்தனையோ உயிர்கள் மீட்க முடியாமல் போயிருக்கின்றன.
பரசுராமன் அவதாரம், மனோகரன் மனிதன் வசனம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா. இங்கே டாக்டர்களும் மனிதர்கள்தான்
//pukalini சொன்னது…
ReplyDeleteகதை சரி தான். இனிமேலாவது இந்த மருத்துவக் கல்லூரி, இஞ்சுனியர் என்று பாத்திரம் படைக்காதீர்கள். அது தான் விசய், வேலு எண்டு பட்டியல் நீண்டிட்டுதே..
//
இருக்கலாம், ஆனால் எனக்கு இவர்களின் வாழ்க்கைமுறைதான் நன்றாகத்தெரியும். மற்றவர்களைப் பற்றி எழுதினால் சொதப்பலாக அமையும் வாய்ப்பு அதிகம்.
தவிரவும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை மற்ற கல்லூரி வாழ்க்கையிலிருந்து மாறுபட்டது.அவர்கள் மாணவர்களைப் போலவே விளையாட்டுத்தனமாக இருந்தாலும் பல நேரங்களிலும் மருத்துவர்போல பொறுப்புடனும் நடந்துகொள்ளவேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள்.
அதனை ஏதோ என்னால் முடிந்தவரை பதிவிடவும் முயற்சித்து வருகிறேன்.
பாஸ், ஏன் இந்த கொலைவெறி.. முடிவு கொஞ்சம் அமெச்சூரா இருக்கு.. சாரி..
ReplyDeleteTemplate super!
ReplyDeleteவாங்க கணேஷ்
ReplyDeleteசில முடிவுகளை மாற்றுவது நம்கையில் இல்லையே..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
எனது கல்லூரி நினைவுகள் பலவற்றைத் தொகுத்து எழுதியிருக்கிறேன். சுட்டியும் அருகில் கொடுக்கப் பட்டுள்ளது. அல்லது லேபிள்களுக்குள் கல்லூரி என்பதை க்ளிக் செய்தாலும் நீங்கள் படிக்கலாம்.
ReplyDeleteலேசாக இனிப்போ காரமோ தடவி கொடுக்க முடியும் அடிப்படையையே மாற்றச் சொன்னால் எப்படி கணேஷ் சார்...
என்னா பாஸ் இப்படி எல்லாரும் கொலையிலேயே முடிக்கிறீங்க..
ReplyDeleteவெண்ணிலா கபாடி குழு பாத்துட்டும் அதே பீலிங் தான்..
அது சரி.. சுக ராகம் சோகம் தானே :)))
வாருங்கள் ஆளவந்தான் அவர்களே..
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..
Template super:-)
ReplyDeleteஊர்ஸ் ரங்கு அமைதியாகச் சொன்னார். இனிமேல் இதைப்பத்தி யார் கிட்டயும் பேசாதே.. பேசினால் உனக்குத்தான் பிரச்சனை.
ReplyDeleteமினி குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் சாப்பிட்டு செத்து போயிட்டா.. நீ காலையில பார்த்தப்பவே விஷம் அவ உடம்பு பூரா பரவித்தான் இருந்திருக்கு. அமைதியா ரூம்ல உட்காரு. உன் வகுப்புத் தோழர்களெல்லாம் பிணவறை பக்கத்தில்தான் இருக்கிறார்கள். கல்லூரிமுதல்வர் கூட அங்குதான் இருக்கிறார்.///
”ஊர்ஸ் “
போன்ற வார்த்தைகளை மறுபடியும் படிக்கும்போது பழைய ஞாபகங்கள் வருகின்றன!!
//pukalini சொன்னது…
ReplyDeleteகதை சரி தான். இனிமேலாவது இந்த மருத்துவக் கல்லூரி, இஞ்சுனியர் என்று பாத்திரம் படைக்காதீர்கள். அது தான் விசய், வேலு எண்டு பட்டியல் நீண்டிட்டுதே..
//
இருக்கலாம், ஆனால் எனக்கு இவர்களின் வாழ்க்கைமுறைதான் நன்றாகத்தெரியும். மற்றவர்களைப் பற்றி எழுதினால் சொதப்பலாக அமையும் வாய்ப்பு அதிகம்.
தவிரவும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை மற்ற கல்லூரி வாழ்க்கையிலிருந்து மாறுபட்டது.அவர்கள் மாணவர்களைப் போலவே விளையாட்டுத்தனமாக இருந்தாலும் பல நேரங்களிலும் மருத்துவர்போல பொறுப்புடனும் நடந்துகொள்ளவேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள்.
அதனை ஏதோ என்னால் முடிந்தவரை பதிவிடவும் முயற்சித்து வருகிறேன்.///
சுரேஷ் சொல்வது சரிதான்!!! அவருக்கு தெரிந்ததை எழுதுவது சரிதான்!! மற்றபடி பொதுவாக எழுத எல்லோரும் இருக்கிறோம்!!!
மருத்துவ வாழ்க்கை பதிவுகள் வெகு அரிது!!
ReplyDeleteஅதை அனைவரும் ரசிக்க வேண்டும்!இதை
சுரேஷ்!!!
ReplyDeleteடெம்ப்லேட் கொள்ளை அழகு!!!
பின்பற்றுவோர் எங்கே?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஇயற்கை,
விஜி,
தேவன்மயம் அவர்களே..
//thevanmayam சொன்னது…
ReplyDeleteசுரேஷ்!!!
டெம்ப்லேட் கொள்ளை அழகு!!!
பின்பற்றுவோர் எங்கே?
//
நன்றி ஐயா,
பின்பற்றுவோர் பகுதி இந்த வார்ப்புருக்கானது பரிசோதனையில் உள்ளதாம்
பின்னிட்டீங்க.. சூப்பர்..பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்..
ReplyDelete//லோகு சொன்னது…
ReplyDeleteபின்னிட்டீங்க.. சூப்பர்..பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்..
//
நன்றி லோகு அவர்களே
உங்களது சங்கமம் போட்டி கதை குறித்த எனது எளிய கருத்துக்களை இங்கே உரைத்திருக்கிறேன். ஒரு முறை வாசித்து பாருங்களேன்.
ReplyDeletehttp://paathasaari.blogspot.com/2009/04/blog-post_01.html
நன்றி வெங்கி ராஜா, படித்துவிட்டோம்
ReplyDeleteஅருமையான கதை சார்.
ReplyDeleteஅழகா எழுதி இருக்கீங்க.
முடிவு எதிர்பாரதது..
//vinoth gowtham said...
ReplyDeleteஅருமையான கதை சார்.
அழகா எழுதி இருக்கீங்க.
முடிவு எதிர்பாரதது..
//
நன்றி பாஸ்..
அண்ணா எப்படி இப்புடி!
ReplyDeleteநறுக்குன்னு நாலு வார்த்தை மாதரி நறுக்குன்னு ஒரு கதை
முடிவு தான் கொஞ்சம் .......?
இன்னும் இதை போல நிறைய உங்களிடம் எதிர் பார்க்கும் உங்கள் அன்பு தம்பி
நல்ல நடை.
ReplyDelete