இன்றைய தினம் 42ஆவது டெஸ்ட் சென்சூரியை அடித்துவிட்டார். இது டான் பிராட் மேனைவிட அதிகம்.
12000 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார். அப்படி எடுத்த முதல் நபர்.
குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களீல்(195)களில் 10000ரன்கள் எடுத்தவர்களில் இவரும் ஒருவர்.(மற்றவர் லாரா).
ஒருநாள் ஆட்டங்களில் அதிக ரன்கள் எடுத்தவர் இவர்தான். முதல் 10000 இவர்தான் அதிலிருந்து ஒவ்வோரு ஆயிரமும் இவருக்குத்தான்.
42 சதம் அடித்தவரும் இவர்தான்.
57 முறை ஆட்டநாயகன் விருதும் 14முறை ஆட்டத்தொடர் நாயகன் விருதும் பெற்றிருக்கிறார்.
பந்துவீச்சிலும் பலவகைகளை உபயோகப் படுத்தி நூறுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.
இது இல்லாமல் கேட்ச், ரன் அவுட் என்றெல்லாம் சாதனைப் பட்டியல் போடுகீறார்கள்
...........................................................................................
சச்சினின் சாதனைகளைப் பார்த்தால் அவருக்கு அருகில் இருப்பவர்கள் எல்லாம் டான் பிராட்மேன்,ஆலன் பார்டர், சுனில் காவஸ்கர், ஸ்டீவ் வாக், கேரி கிரிஸ்டன், பிரைன் லாரா, கங்கூலி போன்றவர்களே. விளையாடிக் கொண்டிருப்பவர்களில் பாண்டிங் மட்டுமே இருக்கிறார்.
இந்த நிலையில் சாசின் முதலிடம் பிடித்தார். அதிக சதங்கள் வரிசையில் முதலிடம் பிடித்தவர் என்றெல்லாம் போடுவது. கொஞ்சம் கூட சரியாக படவில்லை. அவருக்கு போட்டியாள்ரே இல்லாத சூழலில் அவர் எப்படி முதலிட்ம் பெற்றவராக இருக்கமுடியும்?
ஐசிசி ரேங்கிங்கில் கடைசி ஆறு மாதம் காலம் மட்டுமே எடுத்துக் கொள்ளப் படுவதால் அதில் எல்லோரையும் ஒப்பீடு செய்ய முடியும். ஆனால் மற்ற சாதனைகளை எடுத்துக் கொண்டால் அவரது நீண்ட நெடிய வரலாறுகளும் சேர்ந்து வருகின்றன. அவரை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வது என்பது மற்ற வீரர்களுக்கு இளைக்கப் படும் அநீதியாக கருத வேண்டும்.
அவர் போன்றவர்களை அவுட்ஸ்டேண்டிங் எண்று பெயரிட்டு தனியே பட்டியலிட்டு விட்டால் இந்த மொத்த சத, ஓட்ட வகையராக்களில் போட்டி என்பதற்கு சரியான போட்டி இருக்கும். அது இல்லாமல் ஒட்டு மொத்தமாக கணக்கிட்டு வந்தால் அவரின் சாதனைகள் , சாதனையாக அல்லாமல் வெறும் கணக்கீட்டு கருவியின் எண்களாகவே பதியப் படும். என்வே இது போன்ற கண்க்குகளிலிருந்து சச்சினை நீக்க வேண்டும். அப்போதுதான் சுவாரசியம் கூடும். கிரிக்கெட் என்பதே சுவாரசியத்திற்காகத்தானே..
படிக்கிறவங்க, அதை மனசுல வெச்சிட்டு, மிச்சத்தைக் கருத்தில் கொள்ளட்டும். இஃகிஃகி!
ReplyDeleteமற்றவங்களால ஆட்டத்துல எதோ ஒரு காரணத்தால தொடர்ந்து இருக்க முடியலை. நம்மாள் இன்னும் இருக்காரு...அதுக்காக, அவரும் பட்டியல்ல இருந்துட்டுப் போகட்டும். இஃகிஃகி!!
வாங்க பழமைபேசி அண்ணாச்சி
ReplyDelete:-)
ReplyDeleteஇது மாதுரி எதிர் மறையாக எழுதினால் நிறைய ஹிட் கிடைக்கும் என்ற நோக்கில் எழுதுறீங்களோ?
ReplyDeleteஅவராக விடை பெறுவது தான் cricket ரசிகனான எனது விருப்பம்.தவிர சச்சின் நீக்கப்பட வேண்டியவர் அல்ல.
நீங்க சிந்திக்க முயல்பவர்னா வேறேதாவது சிந்திங்க ஐயா....
சச்சின் இந்த தொடரில் பிரகாசிக்கிறார். ஆனால் பல சமயங்களில் பழைய சாதனைகளை சொல்லியே இடம் அளிப்பது சற்று ஏமாற்றத்தை தருகிறது சுரேஷ். புதியவர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். சமீபத்திய சிக்சர் கணக்குகளை பாருங்கள். யுவராஜ், சுரேஷ் ரெய்னா, ஷேவக் பின்னி எடுத்திருக்கிறார்கள். சச்சின் அவர்கள் பக்கம் கூட இல்லை. சச்சின் பெரும் சாதனையாளர் தான். மிகச் சிறந்த வீரர் தான். ஆனால் அவரால் 10ல் ஒரு போட்டியில் மட்டுமே ஜொலிக்க முடிகிறது. மற்ற 9 போட்டிகளில் இடைத்தை அடைத்துக் கொள்கிறார்.
ReplyDeleteவாருங்கள் இயற்கை,
ReplyDeleteTAமிழன் ,
Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ அவர்களே...
//TAமிழன் சொன்னது…
ReplyDeleteஅவராக விடை பெறுவது தான் cricket ரசிகனான எனது விருப்பம்.தவிர சச்சின் நீக்கப்பட வேண்டியவர் அல்ல.//
முழுவதும் படித்துவிட்டு பின்னர் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
தலைப்பைப் படித்தவுடன் கருத்துரையிடுவதும் பலரால் செய்யக்கூடியதுதான் என்றாலும் முழுவதும் படித்தபின்னும் நீங்கள் கருத்துரையிடுவது வரவேற்கத்தக்கது.
இது முழுக்க முழுக்க சச்சின் ஆதரவு இடுகைதான்.
சச்சினை எங்கிருந்து நீக்க வேண்டும் என்பதை தெளிவாகக் கூறியிருக்கிறேன். அணியிலிருந்து நீக்குமாறு பேச்சு எழவே இல்லை.
//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ சொன்னது…
ReplyDeleteபுதியவர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.//
கண்டிப்பாக தல..
விளையாடும் பதினொரு பேரைத தவிர பதிலி ஆட்டக்காரர்களும் வலுவாக இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பினை கண்டிப்பாக தர வேண்டும். அதற்கு சச்சின் ஒருவர் மட்டுமல்ல. அனைவரும் வழிவிட வேண்டும்.
ஜெய சூர்யா இன்னும் விளையாடிட்டு தா இருக்குறாரு தல..
ReplyDeleteநீங்கள் சொல்வது நடைமுறைக்கு ஒத்து வராதுன்னு நெனைக்கற.. சச்சினை மட்டும் நீக்கி விட முடியாது.. அப்பொழுது பாண்டிங், காலிஸ், திராவிட் போன்றவர்கள் முன்னிலையில் இருப்பார்கள்.. மற்றவர்களோடு ஒப்பிடும் போது அவர்கள் அதிக போட்டிகள் விளையாடி இருப்பார்கள்.. பின் அவர்களையும் நீக்க வேண்டும் என நீங்கள் பதிவு போட நேரிடும்..
வாங்க லோகு...
ReplyDeleteஅவுட்ஸ்டாண்டிங் என்று போடும்போது டிராவிட்டை அந்த லிஸ்ட் கொண்டு போக வேண்டிய அவசியமில்லையே தல, அவர் சிறந்த திறமையாளாராக இருக்கிறார். வெகுசில சாதனைகளுக்கு ஜெயசூர்யாவும், வெகுசில சாதனைகளுக்கு பாண்டிங் ஆகியோர் மட்டுமே போட்டி.
மற்றபடி அவருக்கு போட்டி எல்லாம் டான் பிராட் மேன், லாரா, பார்டர், போன்றோர்தானே..
கோழி கிழடானுலும் வாய்க்கு ருசிங்கிற மாதிரி அப்ப அப்ப சொதப்பினாலும் நேத்தைக்கு மாதிரி சதம் போட்டும் தன்னை தக்க வைத்துக் கொள்கிறார்.
ReplyDeleteசரி அது கிடக்கட்டும்.முகப்புல சீன் கானரி,ரோஜர் மூர்,பிரான்சன் மூணு பேரு தெரியுது.மத்த பய புள்ளைக பேரு என்ன? இப்ப ஃவாண்டம் ஆஃப் சோலஸ்ல டேனியல் கிரெக் 007 ஆகிட்டாரு.
இத்தனை வருடங்கள் விளையாடினாலும், பலரைபோல் விளையாட்டில் அரசியலோ சூதாட்டமோ செய்யாமல் தன் வேலையை மட்டும் ஒழுங்காக செய்வதால்தான் இன்னும் தாக்கு பிடிக்கிறார்.எத்தனையோ ஆண்டுகளுக்கு பின் அறிமுகமான தோனியின் தலைமையில் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் விளையாடுவதே இதற்கு சாட்சி.
ReplyDeleteலெஜண்ட்டுக்கும் சாதாரண வீரர்களுக்கும் உள்ள வித்தியாசமே சாதனை புள்ளி விவரங்கள். இந்த புள்ளி விவரங்கள்தான் மற்றவர்களை லெஜண்ட் ஆக மாற உத்வேகம் கொடுக்கும்.
//ஆனால் அவரால் 10ல் ஒரு போட்டியில் மட்டுமே ஜொலிக்க முடிகிறது. மற்ற 9 போட்டிகளில் இடைத்தை அடைத்துக் கொள்கிறார்.//
ReplyDeleteஆதாரமில்லாத முழு பொய். வலைபதிவு மற்றும் இணைய வசதியுடன் ஒரு கணினி இருக்கிறது என்பதற்காக பொய்களை கொஞ்சம் கூட கூச்சமோ வெட்கமோ இல்லாமல் எழுதும் போக்கு என்று தான் நிற்குமோ தெரியவில்லை
கடந்த பத்து போட்டிகளில் சச்சின் எத்தனை போட்டிகளில் பிராசித்துள்ளார் என்று கூற முடியுமா
அல்லது மொத்த போட்டிகளை பார்த்தால்
சச்சின் இது வரை எத்தனை டெஸ்ட்களில் விளையாடி உள்ளார் என்று பாருங்கள்
எத்தனை போட்டிகளில் 70 ஓட்டங்களுக்கு மேல்
எடுத்துள்ளார் என்று பாருங்கள்
சந்தேகம் இருந்தால் பிற வீரர்களுக்கும் இதே போல் பாருங்கள்
நீங்கள் கூறிய 1/10 கணக்கு எவ்வளவு முட்டாள்தனமாதனு என்று உங்களுக்கே தெரியும்.
பின் குறிப்பு : கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 3ல் சச்சின் சதம்
இந்த ஒரு நாள் போட்டிகளில் 3ம் ஒன்றில் சதம்
இதில் 1/10 எப்படி வருகிறது.
//சச்சினை எங்கிருந்து நீக்க வேண்டும் என்பதை தெளிவாகக் கூறியிருக்கிறேன். அணியிலிருந்து நீக்குமாறு பேச்சு எழவே இல்லை.//
ReplyDeleteஉண்மைதான்
கல்லூரிகளுக்கு இடையிலான பாட்டு போட்டியில் உன்னிகிருஷ்னனோ நித்யஸ்ரீயோ கலந்து கொள்வது போல் தான் இருக்கிறது சாதனை பட்டியலில் சச்ச்னின் பெயர்
அப்படித்தானே !!
//விளையாட்டுத்துறை திறமையான வீரர்களை உருவாக்க வேண்டும், திறமையான வீரர்களை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது, அதே போன்று சச்சின் போன்ற சாதனையாளர்கள் சாதனை சாதனை என்று சோதிக்காமல் விலகி இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும் என்று தெரிவித்திருந்தேன்.//
ReplyDeleteஉண்மை. ஆனால் அதற்கு அணியின் ஐந்தாவது சிறந்த மட்டையாளர் தான் வழிவிடவேண்டுமே தவிர அணியின் சிறந்த மட்டையாளர் வழிவிட வேண்டியதல்ல என்பது எனது தாழ்மையான கருத்து
1:55 AM, March 10, 2009
இந்திய அணியின் ஆறு சிறந்த ஆட்டக்காரர்களின் வரிசையில் சச்சினுக்கு இடமிருந்தால் அவர் விளையாடலாம்
ReplyDeleteஅவரை விட ஆறு பேர் சிறப்பாக ஆடினால் அவருக்கு அணியில் இடம் கிடையாது
இது தான் கணக்கு
நான் கூறுவது இது தான்
ReplyDeleteசச்சின் ஓய்வு பெறும் நாளை நிர்ணயிக்க பயன்படுத்த வேண்டிய கேள்வி இதுதான்
இன்றைய தினம் இந்தியாவின் ஆறு சிறந்த மட்டையாளர்கள் யார்.
அதில் சச்சின் இருக்கிறாரா
ஆம் என்றால் அவர் அணியில் இருக்க வேண்டும்
இல்லை என்றால் அவருக்கு அணியில் இடம் இல்லை
மற்றபடி வயதை மட்டும் வைத்து ஒருவரை ஓய்வு பெற சொல்வதோ அல்லது ஆட சொல்வதோ என்னை பொருத்த வரையில் ஏற்புடையதல்ல
(வயது மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்றால் இந்தியாவின் விக்கெட் கீப்பராக பார்தீவ் படேல் தான் இருக்க வேண்டுமே தவிர டோனி அல்ல - இதிலிருந்தே வயதை ஒரு காரணகர்த்தாவாக நான் ஏன் நிராகரித்தேன் என்று புரிந்து கொள்ளலாம்)
//ராஜ நடராஜன் சொன்னது…
ReplyDeleteமுகப்புல சீன் கானரி,ரோஜர் மூர்,பிரான்சன் மூணு பேரு தெரியுது.மத்த பய புள்ளைக பேரு என்ன? //
ஜார்ஜ் லேஜன்பை, திமோதி டாலடன் அப்புறம் நீங்க சொன்ன தலைகள்
//அறிவிலி சொன்னது…
ReplyDeleteஇத்தனை வருடங்கள் விளையாடினாலும், பலரைபோல் விளையாட்டில் அரசியலோ சூதாட்டமோ செய்யாமல் தன் வேலையை மட்டும் ஒழுங்காக செய்வதால்தான் இன்னும் தாக்கு பிடிக்கிறார்.//
முக்கியமான விஷயம்தான் அறிவிலி அவர்களே
//புருனோ Bruno சொன்னது…
ReplyDeleteகல்லூரிகளுக்கு இடையிலான பாட்டு போட்டியில் உன்னிகிருஷ்னனோ நித்யஸ்ரீயோ கலந்து கொள்வது போல் தான் இருக்கிறது சாதனை பட்டியலில் சச்ச்னின் பெயர்
அப்படித்தானே////
ஆமாம் ஐயா... அதைத்தான் முழு இடுகையிலும் தெரிவித்து இருக்கிறேன்
சுரேஷ் அவரகளே..
ReplyDeleteமுன்னாடி ஓடிகிட்டு இருக்கிறவன எல்லாரையும் வெளிய அனுப்பினா ஒட்ட பந்தையதுல எல்லாம் நாம தான் முதல் இடம்..
இப்படி நேனைகுறது நமக்கு நல்ல தான் இருக்கும், ஆனா நாயம்நு ஒன்னு இருக்குல ?
ப்ருநோவின் கருத்துக்களை வழிமொழிகிறேன்.
ReplyDeleteவாங்க vaaalpaiyan அவர்களே
ReplyDelete//vaaalpaiyan சொன்னது…
சுரேஷ் அவரகளே..
முன்னாடி ஓடிகிட்டு இருக்கிறவன எல்லாரையும் வெளிய அனுப்பினா ஒட்ட பந்தையதுல எல்லாம் நாம தான் முதல் இடம்.. //
சச்சினுடன் போட்டியிட சரியான போட்டியாளர் இல்லை என்பதே இந்த இடுகையின் சாரம்
//மணிகண்டன் சொன்னது…
ReplyDeleteப்ருநோவின் கருத்துக்களை வழிமொழிகிறேன்.//
வாங்க மணிகண்டன் அவர்களே
நானும் வழிமொழிகிறேன்.
சச்சின் ஒரு சிறந்த வீரர் என்பது மட்டுமில்லை, நல்ல மனிதர் என்பதும் பல இடங்களில் நிரூபணமாயிருக்கிறது. 20-20 போட்டிகள் ஆரம்பித்தவுடன், அதில் நான ஆடவில்லை என்று ஒதுங்கிக் கொண்டது, ஈகோ இல்லாமல், இது வரை ஸ்ரீகாந்த் தலைமையில் ஆரம்பித்து தோனி வரை ஆடி வருவது. இந்த 36 வது வயதிலும், இன்னும் உடலில் பிரச்னைகள் இருந்தாலும் அடித்தாட முயற்சிப்பது என்று பல விஷயங்களில் முன்னணியில் தானிருக்கிறார்.
ReplyDeleteசுரேஷ் சொல்வது போல் அவரை இந்த ஆட்டக்காரர்களோடு சேர்க்காமல் outstanding என்று தனிமைப் படுத்தவேண்டும்
deesuresh said..
ReplyDelete//இந்த 36 வது வயதிலும்,//
வாங்க பாஸ்..
நிறைய பேருக்கு துவக்க ஆட்டமே இந்த வயதில் அமைவதுண்டு...