physical balance-1969 திரைப்படச் சுருக்கம்
முன்னுரை:-இதய பலகீனம் உள்ளவர்கள் இந்த திரைப்படத்தைப் பார்க்க வேண்டாம்.பார்க்க முயற்சி கூட எடுக்க வேண்டாம்.
ஒரு பெரிய பணக்காரர், அவருக்கு ஒரு வக்கீல் நண்பர். பணக்காரருக்காக ஒரு வழக்கில் வக்கீல் நண்பரே வாதாடுகிறார். கொஞ்சம் ஏமாற்றம், கொஞ்சம் ஏமாற்றல். நடக்கிறது. பணக்காரர். ஏழையாகிறார்.
பணக்காரர் மகள் ஒருவனைக் காதலித்து வருகிறார். வக்கீல் மகள் வக்கீலுக்கு படிக்கிறார்.
சொத்து போனதால் காதல் போகிறது. பழைய வேலைக்காரன் பணக்காரர் மகளுக்கு அடைக்களம் கொடுக்கிறான். பின்னர் அவனையே திருமணம் செய்து கொண்டு குழந்தைகளும் பெற்றுக் கொள்கிறாள்.
பண்க்காரர் மகளின் ஏழைக் கணவனுக்கு மில்லில் வேலை போகிறது. போராட்டம் வெடிக்கிறது.அரசாங்கம் தொழிற்சாலையை எடுத்துக் கொள்கிறது. முதலாளி நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறுகிறார். பட்டினியின் கொடுமை அழகாகப் பதியப் பட்டிருக்கும். படம் வெளிவந்த 1969ல் நாடு முழுவதுமே பரபரப்பாகப் பேசப் பட்டது. முதலாளிகளின் கையாட்களால் பணக்காரர் மகளின் கணவன் கொலை செய்யப் படுகிறான்.
வறுமையில் உலவும் நாயகி தனது குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முயல்கிறாள். காவல்துறையால் கைதுசெய்யப் பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப் படுகிறாள்.
வழக்கில் முன்னாள்தோழி இன்னாள் வக்கீல் வாதாடுகிறாள். பணக்காரரின் மகளுக்கு தூக்குதண்டனை கிடைத்ததா.. வாதங்கள் எவ்வாறு இருக்கின்றன. என பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சியுடன் அமைந்த படம் இது.
பின்குறிப்பு:-தமிழ், மலையாளத்தில் வெளிவந்த துலாபாரம் திரைப் படத்தின் கதைச்சுருக்கம்தான் இது. இப்படத்தின் நாயகி சாரதா ஊர்வசி விருது பெற்றார். இப்படத்துக்காக.. துலாபாரம்=physical balance
nalla vimarsanam :-) vottum pottachu
ReplyDeleteவாங்க தல...
ReplyDeleteஅருமை கதையை வித்தியாசமாக சொன்ன விதம்
ReplyDeleteநன்றி மு.க. அவர்களே..
ReplyDeleteஏன்???
ReplyDeleteவாங்க இளைய பல்லவன்
ReplyDeleteஆங்கிலத்தில் படப்பெயர் போட்டு விமர்சனம் போட்டு ஹிட்ஸ் எண்ணிக்கையைக் கூட்டத்தான்.
தவிர அந்தப் படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்பது நீண்ட கால எண்ணம். நேரடியாக எழுதினால் வழக்கமாய் வருபவர்கள் மட்டுமே வருவார்கள். மற்றவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே இப்படி...
வாங்க இளைய பல்லவன்
ReplyDeleteஆங்கிலத்தில் படப்பெயர் போட்டு விமர்சனம் போட்டு ஹிட்ஸ் எண்ணிக்கையைக் கூட்டத்தான்.
தவிர அந்தப் படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்பது நீண்ட கால எண்ணம். நேரடியாக எழுதினால் வழக்கமாய் வருபவர்கள் மட்டுமே வருவார்கள். மற்றவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே இப்படி...///
இரண்டிலும் ஓட்டும் போட்டாச்சு!!
நன்றிதேவன்மயம் சார்
ReplyDeleteஎல்லோரும் 1960ல துவங்கி 1990 வரைக்குமே பிலிம் காட்டினா சின்னப் பசங்க நாங்க புதுப்படம் எப்படி பார்க்கிறது?
ReplyDeleteஎன்னவோ நினைச்சு வந்தேன்.
ReplyDeleteஆனாலும் சொன்ன விதம் அருமை.
வாழ்த்துகள்.
// ராஜ நடராஜன் said...
ReplyDeleteஎல்லோரும் 1960ல துவங்கி 1990 வரைக்குமே பிலிம் காட்டினா சின்னப் பசங்க நாங்க புதுப்படம் எப்படி பார்க்கிறது?//
1941ல் வந்த அசோக் குமார் படத்துக்கும் விமர்சனம் போட்டுவிட்டேன்.., படித்துவிட்டீர்களா..,
// butterfly Surya said...
ReplyDeleteஎன்னவோ நினைச்சு வந்தேன்.
ஆனாலும் சொன்ன விதம் அருமை.
வாழ்த்துகள்.//
நன்றி தல..,