நண்பர் முருகவேல் அவர்கள் சமீபத்தில் பழனிக்கு வருகை தந்திருந்தார். அவருடைய வீட்டில் ஒரு வேண்டுதல் செய்திருந்திருக்கிறார்கள். குழந்தை ஆரோக்கியமாக பிறந்தால் பழனி மலைக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு வருவதாக வேண்டியிருக்கிறார்கள். குழந்தையை தூக்கிக் கொண்டே மலை நடந்தே ஏறி வருவதாக வேண்டுதலாம்.
அவரை சந்திக்க நான் சென்றிருந்தேன். சற்று குண்டாக இருந்தார். அவரே காரணத்தையும் சொன்னார். தினமும் இரவு சாப்பாடு குழந்தையுடந்தானாம். இரண்டுவயது குழந்தைக்கு தட்டில் உணவை போட்டுவிட்டு இவரும் தட்டில் உணவை எடுத்துக் கொண்டு இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்களாம். அவரது குழந்தை இப்போது அவராகவே உணவு உண்ணும் பழக்கத்தை கொண்டிருக்கிறாராம். குழந்தை சாப்பிடும் நேரம் முழுவதும் அவரும் சாப்பிட வேண்டி வருவதால் அவர் சற்று கூடுதலாகவே சாப்பிட்டு விடுகிறாராம். தவிர குழந்தை மிச்சம் வைப்பதையும் சேர்ந்தே சாப்பிடுவதால் கொஞ்சம்(?) எடை போட்டுவிட்டதாக சொன்னார்.
உங்கள் குழந்தையும் நன்றாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா.. நண்பரின் வழியைக் கொஞ்சம் பின்பற்றிப் பாருங்களேன்.
குழந்தைக்கு நல்லது தான்
ReplyDeleteஹும் ...
வாங்க தலை...
ReplyDeleteநானும் அதைதான் பின்பற்றுகிறேன் ஹி ஹி
ReplyDeleteதானாக குழந்தை உண்ணும் அழகை பார்த்தாலே நமக்கு ஆட்டோமெட்டிக்கா பசிபறந்துபோய்டும்
நண்பர் சற்று slow வாகச் சாப்பிட வேண்டியதுதானே.
ReplyDeleteவாங்க
ReplyDeleteஅபுஅஃப்ஸர்
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
குழந்தை சாப்பிடும் நேரம் முழுவதும் அவரும் சாப்பிட வேண்டி வருவதால் அவர் சற்று கூடுதலாகவே சாப்பிட்டு விடுகிறாராம். தவிர குழந்தை மிச்சம் வைப்பதையும் சேர்ந்தே சாப்பிடுவதால் கொஞ்சம்(?) எடை போட்டுவிட்டதாக சொன்னார்.////
ReplyDeleteஅம்மாக்கள் குண்டாகிவிடுவதன் காரணமும்(குழந்தை சோனிதான்!!) இதுதான்!!
அப்பாக்களையும் குண்டாக்கப்பார்க்கிறீங்களா?
உண்மைதான் தேவன்மயம்சார்..
ReplyDeleteஉங்கள் பார்வை சரியான பார்வைதான்
கரக்ட்டான வழி குழந்தையை சாப்பிட வைப்பதற்கு.. அப்பா தான் பாவம்...அவதிகுள்ளாகிவிட்டார் போலும்...
ReplyDelete//சிறகுகள் June 19, 2009 9:43 AM
ReplyDeleteகரக்ட்டான வழி குழந்தையை சாப்பிட வைப்பதற்கு.. அப்பா தான் பாவம்...அவதிகுள்ளாகிவிட்டார் போலும்...
//
ஆமாம் தல
!!!!!
ReplyDelete:-))