Thursday, March 12, 2009
அவ்மானப் பட்ட ஆஸ்திரேலிய அணி.
கிரிக்கெட் உலகில் ஒரு கேவலமான நாள் ஒன்று உண்டு. பந்து வீச்சாளர்களையும், மட்டை பிடிப்பவர்களையும் இதற்கு மேல் அவமானப் படுத்த முடியுமா.. என்று தெரியவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சு உலகத்தில் இருக்கும் அனைத்து வகைக் கிரிக்கெட் (எல்.கே.ஜி. அணியைவிட) அணிகளைவிட கேவலமாக இருந்த நாள். அந்த அணியின் களத்தடுப்பு கூட அப்படித்தான். அவர்கள் களத்தடுப்பு செய்ததற்குப் பதில் பேசாமல் நட்சத்திர ஓட்டலில் குப்புறப் படுத்து தூங்கி இருக்கலாம். அந்த ஆட்டத்தின் முழு வர்ணனையும் ஒரு பதிவர் பதிவிட்டு இருக்கிறார். இங்கே பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
அறிமுகத்திற்கு நன்றி சுரேஷ்.. அருமையான புதியதொரு முயற்சி அந்த பதிவு..
ReplyDeleteவணக்கம் சுரேஷ்,
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும் வருகைக்கும். எனது பதிவை உங்கள் வலைப்பூவில் இணைத்துள்ளமைக்கு மனப்பூர்வமான நன்றிகள்.
நிச்சயமாக அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு மோசமாக இருந்ததுதான். ஆனால் தென்னாபிரிக்காவும் மனச்சோர்வின்றி தக்க பதிலடி கொடுத்தது.
இ-ரெப்ஃரரில் உள்ள பிரச்சினையை சரி பார்க்கிறேன். நன்றி சுரேஷ்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நர்சிம்,கதியால்
ReplyDeleteஅந்தப் பதிவும் எழுத்து நடையும் மிகவும் சுவாரசியமாக இருந்தது.
உண்மையில் கதியால் அவர்கள் அதை சொன்ன விதம் நல்ல திரைக்கதையுடன் கூடிய படத்தைப் பார்ப்பதாக இருந்தது.
ஆனால் அந்த ஆட்டம் சாதனை அல்ல. வேதனை. ஒரு ஆட்டத்தில் நடுவர்களைத்தவிர அனைவரும் விளையாட வேண்டும். ஆஸ்திரேலியாவில் நடுவர்கள்கூட விளையாடுவார்கள்.
அந்த ஆட்டத்தில் மட்டை பிடிப்பவர்கள் மட்டுமே விளையாடினார்கள். மற்றவர்கள் ஏனோ பல ந்நள் பட்டினி கிடந்தவர்கள் போலவே தென்பட்டனர்.
ஆஸ்திரேலிய மட்டை அடியின் போதே தென்னாப்பிரிக்க வீரர்கள் அப்படித்தான் இருந்தனர். பின்னர் ஆஸ்திரேலிய களவீரர்கள் அவர்களைவிட கேவலமாக இருந்தனர்.
உங்கள் வலைப்பதிவை இங்கே பதிந்து விடவும் http://www.tamil10.com/topsites/
ReplyDelete