Monday, March 23, 2009

இந்தியாவிலேயே ஐபில் போட்டி நடத்த ஒரு ஆக்கபூர்வமான யோசனை

ஐ.பி.எல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு பாதுகாப்பு காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஏற்கன்வே வங்கதேசமும் வெளிநாடுகளில் போட்டி நடத்தபோவதாகச் சொல்லியுள்ளது.

பிசிசிஐ இந்தியாவின் மிகப் பெரிய ஒரு அமைப்பு. அதற்கு இந்தியாவின் மூளை முடுக்கெல்லாம் அதற்கு ஆதரவுகள் உள்ளன. பிசிசிஐயில் கிரிக்கெட் ரசிக்க மட்டும் தெரிந்தவர்கள் கூட பெரிய பொறுப்புகளில் வரமுடியும். அவர்களுக்கு கிரிக்கெட் விளையாட தெரிந்தவர்கள்தான் பொறுப்புகளுக்கு வரமுடியும் என்றெல்லாம் கட்டாயம் இல்லை. அந்த அளவு ஜனநாயகம் நிலவும் அமைப்பு பிசிசிஐ.

பல முண்ணனி கிரிக்கெட் வீரர்கள் பலரும் பல்வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்து மக்கள் சேவை செய்து வருகின்றனர். அசாருதீன், சித்து போன்றவர்கள் சேவை செய்ய தயாராக இருக்கின்றனர். அனைத்து மாநிலங்களிலும் மக்களுக்கு நன்கு தெரிந்த முகங்கள் நிறைய உள்ளன. இன்றைய சூழலில் இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை இல்லை.

பேசாமல் பிசிசிஐ ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து விடலாம். ஜனநாயகம், பணபலம், ஆள்பலம் போன்ற அனைத்தும் இருக்கும் பிசிசிஐ தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடித்து விட்டால் எந்த இடத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கிரிக்கெட் போட்டியை நடத்திக் கொள்ளலாம். பாதுகாப்புக்காக தனி படையையே அமைத்துக் கொள்ளலாம்

பாதுகாப்புக்காக வெளிநாடு செல்வதாகக் கூறி அவமானப் பட்டுக் கொள்வதைவிட மக்களுக்காக சேவை செய்வதால் நாட்டுக்கும் பலன். சங்கத்துக்கும் பலன்.

செய்வார்களா.......

16 comments:

  1. \\மக்களுக்காக சேவை செய்வதால் நாட்டுக்கும் பலன். சங்கத்துக்கும் பலன்.\\

    ஹூம்

    பெருமூச்சு தான் வருகிறது

    ReplyDelete
  2. அப்பொழுது வேறு கட்சி ஆட்சிக்கு வந்தா இப்ப இருக்கற வாரியத்த கலச்சுடுவாங்க.. என்ன பண்ணுவீங்க..

    ReplyDelete
  3. வாருங்கள்

    நட்புடன் ஜமால்

    புருனோ Bruno

    லோகு அவர்களே

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. //லோகு said...

    அப்பொழுது வேறு கட்சி ஆட்சிக்கு வந்தா இப்ப இருக்கற வாரியத்த கலச்சுடுவாங்க.. என்ன பண்ணுவீங்க..
    //

    கிரிக்கெட் வாரியம் ரொம்ப பெரிசுங்க. ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் பெரிய பொறுப்புக்கு வரமுடியும்.

    ReplyDelete
  5. பேசாமல் பிசிசிஐ ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து விடலாம். ஜனநாயகம், பணபலம், ஆள்பலம் போன்ற அனைத்தும் இருக்கும் பிசிசிஐ தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடித்து விட்டால் எந்த இடத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கிரிக்கெட் போட்டியை நடத்திக் கொள்ளலாம். பாதுகாப்புக்காக தனி படையையே அமைத்துக் கொள்ளலாம்///

    நல்ல யோசனை!
    அருமை!

    ReplyDelete
  6. எல்லோரும் ஒன்று சேர வெண்ண்டும்!

    ReplyDelete
  7. வாங்க thevanmayam அவர்களே

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. இது கூட நல்லா இருக்கே... யோசனைய தான் சொல்றேன் :)

    ReplyDelete
  9. கிரிக்கெட்டுல இவங்களுக்கு அரசியல் பண்ண தெரிஞ்சிருக்கலாம். ஆனா அரசியல்ல அரசியல் எந்த அளவுக்கு பண்ணமுடியும்னு பொருந்திருந்தா தான் பார்க்க முடியும். இப்ப தான் அசார்,மதன்லால் எல்லாம் வந்திருக்காங்க. பாக்கலாம்.

    ReplyDelete
  10. வாங்க எட்வின், சுரேஷ்

    வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி

    ReplyDelete
  11. //எட்வின் said...

    கிரிக்கெட்டுல இவங்களுக்கு அரசியல் பண்ண தெரிஞ்சிருக்கலாம்.//

    எல்லாம் திறமையா விளையாடுவாங்க தல..

    ReplyDelete
  12. //Suresh said...

    அருமையாய இருந்தது உங்க பதிவு,
    இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
    வோட்டும் போட்டாச்சு :-)
    http://sureshstories.blogspot.com/
    நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
    படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)
    //


    உங்க பேர் மாதிரியே பதிவுகளும் சூப்பர்

    ReplyDelete
  13. வாங்க வாங்க சுரேஷ் :-)
    உங்களை நெறய பெரிய பதிவாளர்கள் பின்னோட்டத்தில் பார்த்து இருகிறேன் நீங்க வந்தது என்னக்கு ரொம்ப சந்தோசம்

    அட இப்போ மட்டும் என்ன வயசகிய போச்சு :-)
    காதலுக்கு கண்ணும் இல்லை வயசும் இல்லை ஹி ஹி
    சோ நம்மக்கு கொண்டாட்டம் தான்

    அடிக்கடி கடைக்கு வந்து போங்க :-)

    ReplyDelete
  14. //Suresh said...

    namma peru mathiri nu solunga :-)
    //

    ஹி.. ஹி...

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails