தெரியவில்லை
மீண்டும்
உன்னைப் பார்த்தபோது
உள்ளுக்குள் வந்த
உணர்வுகளின் தன்மை..,
கல்லூரி தேவதையாய் நீ
உலவிய போது கூட
ரசிகனாய் கூட
இருந்த நினைவு இல்லை
நட்பாய் பழகிய
நாட்களில் கூட
நண்பனாய் இருந்த
நினைவு இல்லை.
ஒரு பெண்ணாய்
உன்னைப் பார்த்த
நினைவு
இல்லவே இல்லை,
ஆனால்
இன்று
இப்படி ஒரு பெண்
என்னோடு
பல காலம்
பழகியிருக்கிறாள்
என்பதாக
தோன்றும்போது
காரணம்
புரியவில்லை,
எப்போது
என் கண்களுக்கு
பெண்ணானாய்?
ஒன்றும்
புரியவில்லை
உன்முகத்தின்
ஜொலிப்பு
நகைப்பின் தகைப்பு
பேச்சோடு அசையும்
கைவிரல்கள்
காற்றோடு
உலாவும்
முடிக் கற்றைகள்
உடலோடு இணைந்த
உடைகள்
நாம் பழகிய
நாட்களிலும்
இப்படித்தான்
இருந்தாயா?
ஏனோ தெரியவில்லை
உன்னைப்
பார்த்தபின்
உன்னை
மறந்து விட்டேன்.
புதிய
உணர்வை
உணர்ந்துகொண்டேன்
உணர்வின்
உணர்வு
உணர முடிந்தால்
நீயும் உணர்ந்திருப்பாய்
இல்லை
உணர்வில்
உலர்ந்திருப்பாய்
உணர்வுகள்
உலர்ந்திருந்தால்
உன்னைக்
கண்டிருக்கலாம்
உன்னைக்
கண்டதால்
உணர்வுகள்
உணர்த்தியிருக்கலாம்,
உண்மையைச்
சொன்னால்
உன்னை நான்
கண்டிருக்கவே கூடாது..,
என்ன அநியாயம் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை.., அப்பட்டியென்றால் இதை கதையாக மாற்றிவிட வேண்டியதுதான்.
ReplyDeleteபுரியவில்லை,
ReplyDeleteஎப்போது
என் கண்களுக்கு
பெண்ணானாய்?]]
அருமை ’தல’
கதைக்கும்
ReplyDeleteக(வி)தைக்கும் என்ன பெரிய வித்தியாசம் ‘தல’
உங்கள் உணர்வுகள் விளங்கிற்று அதுவே வெற்றி ...
என்ன
ReplyDeleteதல
நீங்களும்
என்டர்
பட்டனை
உடைக்க
ஆரம்பிச்சிட்டிங்களா....
அருமையான கவிதை தல நல்லாருக்கு ...
ReplyDelete//என்ன அநியாயம் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை.., அப்பட்டியென்றால் இதை கதையாக மாற்றிவிட வேண்டியதுதான்.//
ReplyDeleteஇது நல்ல ஐடியா.
//நகைச்சுவையான பின்னூட்டங்கள் வரவேற்கப் படுகின்றன்//
ReplyDeleteஅப்போ எங்க கதி.
//கதைக்கும்
ReplyDeleteக(வி)தைக்கும் என்ன பெரிய வித்தியாசம் ‘தல’//
'வி'தை தான் ஜமால்
//என்ன
ReplyDeleteதல
நீங்களும்
என்டர்
பட்டனை
உடைக்க
ஆரம்பிச்சிட்டிங்களா....//
வொண்டரா எழுதின 'தல'யை பார்த்து என்டர் தட்டினார்னு சொல்லுறீங்களே.
தல கவிதை உங்கள் உணர்வுகளை பிரதிபலிக்குது. மனதை வருடுகிறது.
ReplyDeleteமுன்பு
ReplyDeleteவந்தபோது
பின்னூட்டத்துக்கு
ஏகப் பட்ட
கண்டிஷன்
இப்போ சோதனை
செய்கிறேன்
கமெண்ட்
ஏறுமா,
ஏறாதா...?
அட,
ReplyDeleteஏறிவிட்டதே...
தடை
நீங்கிவிட்டதா?
அப்போ
சரி...
கவிதை
நல்லா.
இருக்கு
டாக்டர்..
//எப்போது
ReplyDeleteஎன் கண்களுக்கு
பெண்ணானாய்?
ஒன்றும்
புரியவில்லை//
நட்பு காதலாகப் பரிணமிக்கிற டிரான்சிஷனை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
http://kgjawarlal.wordpress.com
நல்லா இருக்குங்க!
ReplyDelete@நட்புடன் ஜமால்
ReplyDelete@ஜெட்லி
@Starjan ( ஸ்டார்ஜன் )
@அக்பர்
@ஸ்ரீராம்.
@Jawahar
@நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
கவிதை மிக அழகாக இருக்கிறது...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
// கமலேஷ் said...
ReplyDeleteகவிதை மிக அழகாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..//
நன்றி தல..,
This comment has been removed by the author.
ReplyDeletemiga nanru... miga miga nanru.... oru doubt... yarantha devadai.... yaar antha davadai.....?
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஅட்டகாசம்
ReplyDeleteஅழகு
வெற்றிபெற வாழ்த்துக்கள்
விஜய்
வெற்றிபெற வாழ்த்துகள்..!
ReplyDelete// mahe said...
ReplyDeletemiga nanru... miga miga nanru.... oru doubt... yarantha devadai.... yaar antha davadai.....?//
ஹி ஹி..,
@அதி பிரதாபன்
ReplyDelete@சக்தியின் மனம்
@விஜய்
@S.A. நவாஸுதீன்
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..,