Wednesday, December 23, 2009

அண்ணா, எம்.ஜி.யார், விஜய்விஜய் அவர்களின் புதிய படமாக உரிமைக்குரல் வரப்போவதாக கில்லிகளின் வலைப்பூவில் செய்தி வெளியாகி உள்ளது. உடனடியாக உரிமைக்குரல் பழைய படத்தினை நினைவு படுத்திய போது தென்பட்ட பாடல்தான் இது. அதன் வரி வடிவம் இதோ

ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
(ஒரு தாய் )

சோலை மலர்க் கூட்டம் சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுதே
மாலை பனி மூட்டம் மலர்கள் இலை தோறும்
சிரித்து விளையாடுதே
இங்கு நான் அங்கு நீ, என்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்
(ஒரு தாய் )


உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட
இருளில் பிரிகின்றது
வெளிச்சம் வரும் போது உடலை நிழல்தேடி
இணைய வருகின்றது
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேளை
வந்து என்னை சேரலாம்
(ஒரு தாய் )

கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
(ஒரு தாய் )


எத்தனையோ பாடல்களை மறுவடிவம் கொடுக்கிறார்கள். இதுபோன்ற பாடல்களுக்கு மறுவடிவம் கொடுத்தால் மக்களிடம் சென்றடையுமே என்ற ஒரு ஆசை தோன்றியது. அதே நேரத்தில் இன்பமே பாடல் எங்கோ ஒலிப்பதும் கேட்டது. நல்ல பாடல்களை, நல்ல பாடல்களாகவே மக்களிடம் மறுவடிவம் கொடுத்து சேர்க்கமுடியவே முடியாதா?

பின்குறிப்பு:- விஜய்க்கும் பிடித்த வார்த்தை, ண்ணா. எல்லாப் படங்களிலும் இந்த வார்த்தையை பலமுறை உச்சரிக்கிறார். இந்தப் பாடலிலும் ண்ணா வருவதால் இந்த பாடலை அவர் உபயோகப் படுத்திக் கொள்வார் என நம்பலாம்.

2.இது ஒரு மீள்பதிவு

3. அண்ணா நூற்றாண்டுவிழாவில் நமது பங்களிப்புகளை இந்த இடுகைகள் மூலம் படித்துக் கொள்ளுங்கள்.
அண்ணா வரைந்த ஓவியங்கள் சில 14.9.09

சமீபத்திய கேள்விகளுக்கு பதில்கள் 12.9.09

அண்ணா - சில கேள்விகள் 12.9.09

அண்ணா 11.9.09

17 comments:

 1. பழைய பாட்டுகளை ரீ மிக்ஸ் என் பெயரில் இருந்து இவர்கள் கொல்லாமல் இருந்தாலே போதுமே சுரெஷு... :).... 5 க்கு 3 முயற்சிகள் கேவலமாக தான் வெளிவருகிறது.

  இதற்கு பழைய பாடல்களை கேட்பது எவ்வளவோ மேல்... :)

  ÇómícólógÝ

  ReplyDelete
 2. Suresh,

  கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/05/2.html

  You are also There.

  லெட் த கும்மி ஸ்டார்ட்.

  --
  பூங்காவனம்,
  எப்போதும் பத்தினி.

  ReplyDelete
 3. ரீ மிக்ஸ்ங்கிற பேரில் நோகாம கொல்லுறாங்கப்பு!!!

  ReplyDelete
 4. ஓட்டுகள் போட்டாச்சு!!

  ReplyDelete
 5. நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்

  ReplyDelete
 6. //Rafiq Raja said...

  பழைய பாட்டுகளை ரீ மிக்ஸ் என் பெயரில் இருந்து இவர்கள் கொல்லாமல் இருந்தாலே போதுமே சுரெஷு... :).... 5 க்கு 3 முயற்சிகள் கேவலமாக தான் வெளிவருகிறது.

  இதற்கு பழைய பாடல்களை கேட்பது எவ்வளவோ மேல்... :)//

  வாருங்கள் தல..,

  மிக மென்மையான மாறுதல்களுடன் அப்படியே உபயோகப் படுத்தலாம் தல..

  தொட்டால் பூ மலரும் பாட்டு மட்டுமே ஓரளவு கேட்கும் படியாக இருந்தது என்பது என் கருத்து

  ReplyDelete
 7. //--
  பூங்காவனம்,
  எப்போதும் பத்தினி.//

  வருகைக்கும் செய்திக்கும் நன்றி தெய்வமே

  ReplyDelete
 8. //thevanmayam said...

  ஓட்டுகள் போட்டாச்சு!!
  //


  நன்றி சார்

  ReplyDelete
 9. //பிரியமுடன்.........வசந்த் said...

  நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
  //

  வருகைக்கும் கருத்துக்களை புரிந்து கொண்டு ரசிப்பதற்கும் நன்றி தல

  ReplyDelete
 10. n tamil code எங்க இருந்தாலும் தூக்குங்க.... நேத்து முழுவதும் என்னால் உங்கள் வலையினுள் நுழைய முடியவில்லை தல...

  ReplyDelete
 11. //நல்ல பாடல்களாகவே மக்களிடம் மறுவடிவம் கொடுத்து சேர்க்கமுடியவே முடியாதா//

  ஏக்கமே..... (தல இன்பமே பாடல ஏன் நியாபகப் படுத்துனீங்க???)

  ReplyDelete
 12. சரி செய்துவிட்டேன் தல,,,

  ReplyDelete
 13. நல்லா அவருடைய பாணியிலேயே சொல்லியிருக்கீங்க! பலே!!

  ReplyDelete
 14. ஏன் இந்த கொலைவெறி :)
  வாத்தியார் பாட்டை கொலை பண்ணனுமா?

  ReplyDelete
 15. @இசக்கிமுத்து
  @ஜோ/Joe
  @T.V.Radhakrishnan

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

  ReplyDelete
 16. அண்ணா நாமம் வாழ்க !
  புரட்சித் தலைவர் நாமம் வாழ்க !

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails