பல பதிவுகளில் தங்கள் பிந்தொடர்பவர்களைக் காணவில்லை என்று இடுகைகளைப் பார்த்திருக்கிறோம்.
சிலர் முகப்புக் களத்தில் இருக்கும்போது மட்டும் பிந்தொடர்பவர்களாக இருப்பதாகவும் முகப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டால் அவர்களும் ஒதுங்கிக் கொள்வதாகவும் கூட ஒரு பேச்சு அடிபடுகிறது.
இப்படிப்பட்ட பேச்சுக்கள் அடிப்பட்ட காலத்திலேயே பின்னூட்டப் பெயர்களின் மூலமாக நண்பர்களின் இடுகைக்குச் செல்லும்போது அவர்களின் /profile/ ல் நமது பெயர் இருக்கிறதா என்று பார்ப்பது உண்டு. பிந்தொடர்பவர்கள் பற்றி பிரச்சனை ஆரம்பித்த காலத்திலேயே எனது வலைப்பூவிற்கு தொடர்வருகையாளர் ஒருவரின் /profile/ ல் பிந்தொடரும் வலைப்பூக்களில் என்வலைப்பூவின் பெயர் இல்லை. எனது பிந்தொடர்பவர் பட்டியலிலும் அவர்பெயர் இல்லை. ஆனால் இன்றுவரை எனது இடுகைகளைத் தொடர்ச்சியாக படித்து பின்னூட்டம் இட்டுக் கொண்டு இருக்கிறார்.
கண்டிப்பாக அவர் பிந்தொடர்பவர்கள் பட்டியலிருந்து தனது பெயரை துண்டித்திருக்க மாட்டார். அவர் மட்டுமல்ல யாருமே பெயரை துண்டிக்கும் அளவுக்கு மெனக் கெட மாட்டார்கள் என்பது எனது கருத்து. விருப்பம் இல்லையென்றால் இடுகையைப் படிக்க மாட்டார்கள் அவ்வளவுதான்.
எனது சச்சின், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்பதிவர்களுடன் ந...
இடுகையின்போது கூட நட்புடன் ஜமால் மற்றும் லோகு ஆகியோர் தங்கள் பெயரை நான் விட்டுவிட்டதாக உரிமையுடன் சுட்டிக் காட்டினர்.
அப்படியென்றால் ஒரு முடிவுக்குத்தான் வரமுடிகிறது. பிந்தொடர்பவர் பட்டியல் தொழில்நுட்பத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாகவே தோன்றுகிறது. எனது கருத்தினை நான் சொல்லிவிட்டேன். தொழில்நுட்பப்பதிவர்கள் வழிகாட்டுவார்கள் என்று நம்புவோம்.
பின்குறிப்பு:- இன்று எனது பிந்தொடர்பவர்கள் பட்டியலில் எண்ணிக்கை குறைந்துவிட்டது அதனால்தான் இப்படி ஒரு இடுகை.
அண்ணே அது அப்படித்தான். ஏறிது, இறங்குது... மலேரியா ஜுரம் வந்த மாதிரி 4 ஏறி 4 இறங்குது.
ReplyDeleteஒன்னுமே புரிவதில்லை அதனால அதைப் பற்றி கவலைப் படுவதையே விட்டு விட்டேன்.
Google Friend உபயோகியுங்கள்.
ReplyDeleteமேலும் விபரம் தேவையெனில்
இங்கே பாருங்கள்.
தலைவரே, தொடர்ச்சியாகப் பின்னூட்டம் இடணும்னா பின் தொடர்பவராக இருக்கணும்னு அவசியம் இல்லையே. வருவதும் போவதும் நடப்பதாகச் சிலரின் வலைப்பூக்களில் நானும் படித்ததுண்டு.
ReplyDelete// இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஅண்ணே அது அப்படித்தான். ஏறிது, இறங்குது... மலேரியா ஜுரம் வந்த மாதிரி 4 ஏறி 4 இறங்குது.
ஒன்னுமே புரிவதில்லை அதனால அதைப் பற்றி கவலைப் படுவதையே விட்டு விட்டேன்.//
எனக்கும் அதுதான் சரி என்று படுகிறது...,
// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteGoogle Friend உபயோகியுங்கள்.
மேலும் விபரம் தேவையெனில்
இங்கே பாருங்கள்.//
இப்போது உபயோகிப்பதும் அவர்கள் கொடுப்பதுதானே தல
// ஷங்கி said...
ReplyDeleteதலைவரே, தொடர்ச்சியாகப் பின்னூட்டம் இடணும்னா பின் தொடர்பவராக இருக்கணும்னு அவசியம் இல்லையே. வருவதும் போவதும் நடப்பதாகச் சிலரின் வலைப்பூக்களில் நானும் படித்ததுண்டு.//
பிந்தொடர்பவர்கள் பட்டியல் இடம்பெறுவது இடுகையை சுலபமாக கண்டறிந்து வருவதற்கான ஒரு வழி.., நமது பிளாக்கர் கணக்கின் டாஷ் போர்டிலேயே இடுகைகள் வந்துவிட ஒரு வழி..,
அங்கு இடுகைகள் வரமாலேயே திரட்டிகள் அல்லது தொடுப்புகள் மூலம் தேடிப்பிடித்து வந்து படிக்கும் வாசகர்கள் ஒருவகையில் மேலானாவர்களே..,
நான் வந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஐயா...! படித்தால் வாக்களிக்காமல், பின்னூட்டமிடாமல் போவதும் இல்லை.
ReplyDeleteஆமா தல சரியா சொன்னீங்க.
ReplyDeleteசில சமயம். மொத்த கமெண்ட்டுகளின் எண்ணிக்கையும் தப்பா காட்டுது.
நல்லா கவனிக்க வேண்டியது
ReplyDelete// ஸ்ரீராம். said...
ReplyDeleteநான் வந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஐயா...! படித்தால் வாக்களிக்காமல், பின்னூட்டமிடாமல் போவதும் இல்லை.//
நன்றி தல..,
// அக்பர் said...
ReplyDeleteஆமா தல சரியா சொன்னீங்க.
சில சமயம். மொத்த கமெண்ட்டுகளின் எண்ணிக்கையும் தப்பா காட்டுது.//
ஓ..., அது வேறயா..,
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteநல்லா கவனிக்க வேண்டியது//
ஆமா தல..,
இதுவரை எனது வலைப்பூவின் பின் தொடர்பவர்களாக இருந்த நான்கு பிரபல...மீண்டும் சொல்கிறேன்..பிரபல பதிவர்கள் முகப்பில் அவர்கள் புகைப்படம் நீங்கிய உடனேயே நீங்கிவிட்டனர்.நாகரிகம் கருதி அவர்கள் பெயரை வெளியிட நான் விரும்பவில்லை.மேலும் அவர்கள் பிரபலமாய் இருந்ததால் தான் கண்டுபிடிக்க முடிந்தது.இல்லையேல் கஷ்டம்
ReplyDeleteவாங்க T.V.Radhakrishnan ஐயா..,
ReplyDeleteஉங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை..,
எனது பூவை தொடர்ச்சியாக வாசித்துவரும் ஒருவர் பெயர் எனது பின் தொடர்பவர் பட்டியலில் இல்லை. கண்டிப்பாக அவர் unfollow பொத்தானை அழுத்தியிருக்க மாட்டார். இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இதுவரை அவருடம் எனக்கு மின்னஞ்சல் பழக்கம்கூடகிடையாது. ஆனால் அவர் பெயர் காணவில்லை. அதனால்தான் gadgetல் பிரச்சனை என்கிறேன்..,
இப்போது உபயோகிப்பதும் அவர்கள் கொடுப்பதுதானே தல]]
ReplyDeleteஇரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
நான் அதுதான் பாவிக்கிறேன்.
எனக்கும் அப்படி இருந்தது..... சரி விலகி விட்டார்கள் என விட்டு விட்டேன்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க.
@நட்புடன் ஜமால்
ReplyDelete@சி. கருணாகரசு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,