Wednesday, December 16, 2009

உலர்ந்த உணர்வுகள்

தெரியவில்லை

மீண்டும்

உன்னைப் பார்த்தபோது

உள்ளுக்குள் வந்த

உணர்வுகளின் தன்மை..,

கல்லூரி தேவதையாய்  நீ

உலவிய போது கூட

ரசிகனாய் கூட

இருந்த நினைவு இல்லை

நட்பாய் பழகிய

நாட்களில் கூட

நண்பனாய்  இருந்த

நினைவு இல்லை.

ஒரு பெண்ணாய்

உன்னைப் பார்த்த

நினைவு

இல்லவே இல்லை,


ஆனால்

இன்று

இப்படி ஒரு பெண்

என்னோடு

பல காலம்

பழகியிருக்கிறாள்

என்பதாக

தோன்றும்போது

காரணம்

புரியவில்லை,

எப்போது

என் கண்களுக்கு

பெண்ணானாய்?

ஒன்றும்

புரியவில்லை





உன்முகத்தின்

ஜொலிப்பு


நகைப்பின் தகைப்பு


பேச்சோடு அசையும்

கைவிரல்கள்

காற்றோடு

உலாவும்

முடிக் கற்றைகள்

உடலோடு இணைந்த

உடைகள்

நாம் பழகிய

நாட்களிலும்

இப்படித்தான்

இருந்தாயா?


ஏனோ தெரியவில்லை

உன்னைப்

பார்த்தபின்

உன்னை

மறந்து விட்டேன்.

புதிய

உணர்வை

உணர்ந்துகொண்டேன்

உணர்வின்

உணர்வு

உணர முடிந்தால்

நீயும் உணர்ந்திருப்பாய்

இல்லை

உணர்வில்

உலர்ந்திருப்பாய்

உணர்வுகள்

உலர்ந்திருந்தால்

உன்னைக்

கண்டிருக்கலாம்

உன்னைக்

கண்டதால்

உணர்வுகள்

உணர்த்தியிருக்கலாம்,

உண்மையைச்

சொன்னால்

உன்னை நான்

கண்டிருக்கவே கூடாது..,

24 comments:

  1. என்ன அநியாயம் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை.., அப்பட்டியென்றால் இதை கதையாக மாற்றிவிட வேண்டியதுதான்.

    ReplyDelete
  2. புரியவில்லை,

    எப்போது

    என் கண்களுக்கு

    பெண்ணானாய்?]]

    அருமை ’தல’

    ReplyDelete
  3. கதைக்கும்
    க(வி)தைக்கும் என்ன பெரிய வித்தியாசம் ‘தல’

    உங்கள் உணர்வுகள் விளங்கிற்று அதுவே வெற்றி ...

    ReplyDelete
  4. என்ன
    தல
    நீங்களும்
    என்டர்
    பட்டனை
    உடைக்க
    ஆரம்பிச்சிட்டிங்களா....

    ReplyDelete
  5. அருமையான கவிதை தல நல்லாருக்கு ...

    ReplyDelete
  6. //என்ன அநியாயம் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை.., அப்பட்டியென்றால் இதை கதையாக மாற்றிவிட வேண்டியதுதான்.//

    இது நல்ல ஐடியா.

    ReplyDelete
  7. //நகைச்சுவையான பின்னூட்டங்கள் வரவேற்கப் படுகின்றன்//

    அப்போ எங்க கதி.

    ReplyDelete
  8. //கதைக்கும்
    க(வி)தைக்கும் என்ன பெரிய வித்தியாசம் ‘தல’//

    'வி'தை தான் ஜமால்

    ReplyDelete
  9. //என்ன
    தல
    நீங்களும்
    என்டர்
    பட்டனை
    உடைக்க
    ஆரம்பிச்சிட்டிங்களா....//

    வொண்டரா எழுதின 'தல'யை பார்த்து என்டர் தட்டினார்னு சொல்லுறீங்களே.

    ReplyDelete
  10. தல கவிதை உங்கள் உணர்வுகளை பிரதிபலிக்குது. மனதை வருடுகிறது.

    ReplyDelete
  11. முன்பு
    வந்தபோது
    பின்னூட்டத்துக்கு
    ஏகப் பட்ட
    கண்டிஷன்
    இப்போ சோதனை
    செய்கிறேன்
    கமெண்ட்
    ஏறுமா,
    ஏறாதா...?

    ReplyDelete
  12. அட,
    ஏறிவிட்டதே...
    தடை
    நீங்கிவிட்டதா?
    அப்போ
    சரி...
    கவிதை
    நல்லா.
    இருக்கு



    டாக்டர்..

    ReplyDelete
  13. //எப்போது

    என் கண்களுக்கு

    பெண்ணானாய்?

    ஒன்றும்

    புரியவில்லை//

    நட்பு காதலாகப் பரிணமிக்கிற டிரான்சிஷனை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  14. @நட்புடன் ஜமால்
    @ஜெட்லி
    @Starjan ( ஸ்டார்ஜன் )
    @அக்பர்
    @ஸ்ரீராம்.
    @Jawahar
    @நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  15. கவிதை மிக அழகாக இருக்கிறது...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. // கமலேஷ் said...

    கவிதை மிக அழகாக இருக்கிறது...

    வாழ்த்துக்கள்..//

    நன்றி தல..,

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. miga nanru... miga miga nanru.... oru doubt... yarantha devadai.... yaar antha davadai.....?

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. அட்டகாசம்

    அழகு

    வெற்றிபெற வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  21. வெற்றிபெற வாழ்த்துகள்..!

    ReplyDelete
  22. // mahe said...

    miga nanru... miga miga nanru.... oru doubt... yarantha devadai.... yaar antha davadai.....?//

    ஹி ஹி..,

    ReplyDelete
  23. @அதி பிரதாபன்
    @சக்தியின் மனம்
    @விஜய்
    @S.A. நவாஸுதீன்

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails