Thursday, February 25, 2010

சச்சினின் கடைசி ஐந்து ஓட்டங்கள்

சச்சின் தனது இரட்டைச் சதத்தின்  கடைசி ஐந்து ஓட்டங்கள் எடுக்க ஐந்து ஓவர்கள் எடுத்துக்கொண்டார். அது பற்றிய கணக்கு

45.4 வது ஓவரில் 196 ரன்கள் எடுத்தார்.

46.1 ஓவரில் ஸ்டைன் பந்தில், ஒருரன் எடுத்த சச்சின் 197ஐ எட்டுகிறார்

.46.3ல் ரன் எதுவும் இல்லை

46.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க, 198 ஆகிறது.

47.3 ஓவரில் லாங்கிவெல்ட்டின் பந்தில் ரன் இல்லை

47.4 ஓவரில் ஒரு ரன் எடுத்த சச்சின் 199ஐ எட்டினார்.

கடைசியில் 49.3 ஓவரில் லாங்வெல்ட்டின் பந்தை எதிர்கொண்டார் சச்சின். இதில் ஒரு ரன் எடுத்த சச்சின், 200 ரன்கள் கடந்து சாதித்தார்.

31 comments:

  1. அந்த ...திக் ...திக் ரன்களை பற்றி இன்னும் கொஞ்சம் விவரித்து இருக்கலாம் ;;)

    ReplyDelete
  2. அவருக்கு இன்னும் ஒரு பத்து பந்துகள் அதிகம் கிடைத்து இருபது ரன்கள் அதிகம் அடித்து இருந்தால்.. இனி உலகம் இருக்கும் வரை அதுவே ரெக்கார்டாக இருக்கும்.. :)

    ReplyDelete
  3. கடைசி ஓவர் ஆரம்பிப்பதற்கு முன் சச்சின் 200 அடிக்கும் முன் டோனி 100 அடித்துவிடுவாரோ என்று தோன்றியது. முதல் பந்தை எதிர்க் கொள்ளும்போதுதான் அது கடைசி ஓவர் என்பதும் சச்சின் 199 என்பதும் தெரிந்தது. கடைசி ஓவரின் முதல் பந்து எல்லைக் க்கோட்டைத் தாண்டியது. இரண்டாவது பந்தையும் டோனி முரட்டுத் தனமாகத்தான் அடித்தார். அந்தப் பந்து எல்லைக் கோடு அருகில் தடுக்கப் பட்டது. களத்தடுப்பாளர் கொஞ்சம் அசிரத்தையாக இருந்திருந்தாலும் அது 4தான். ஆனால் ஒரு ரன்னாக மாறி சச்சின் வசம் மட்டை வந்தது, அதில் ஒரு ரன் எடுத்து சச்சின் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

    ReplyDelete
  4. //ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

    அந்த ...திக் ...திக் ரன்களை பற்றி இன்னும் கொஞ்சம் விவரித்து இருக்கலாம் ;;)//

    உண்மைதான் தல.., அதுவும் நான் பார்த்த நிகழ்வு இன்னும் திக் திக் நிறைந்தது. 45ம் ஓவரிலிருந்து மின் தடை மூன்று முறை ஏற்பட்டது. வீட்டில் யூ.பி.எஸ் இருந்தாலும் கேபிள் தடைப் பட்டுக் கொண்டே இருந்தது. மின் தடை ஏற்பட்ட உடன் கணினியைத் திறந்து யாகூ கமெண்ட்ரி பார்த்தவண்ணம் இருந்தேன்.

    அது சில நேரங்களில் ரீஃப்ரெஷ் ஆகி 43ம் ஓவரை காட்டுவதும் நிகழ்ந்து கொண்டு இருந்தது,

    கடைசி ஓவர் முழுவதும் தொலைக்காட்சியில் பார்க்கும் வண்ணம் மின் தொடர்பு உதவி செய்தது..,

    ReplyDelete
  5. //PPattian : புபட்டியன் said...

    அவருக்கு இன்னும் ஒரு பத்து பந்துகள் அதிகம் கிடைத்து இருபது ரன்கள் அதிகம் அடித்து இருந்தால்.. இனி உலகம் இருக்கும் வரை அதுவே ரெக்கார்டாக இருக்கும்.. :)//

    இருக்கலாம்.

    இரண்டுவிதமாக யோசிக்கலாம்.

    20-20 போல மைதானம் சிறிதானால் யாரோ ஒருவர் இதை முறியடிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை,


    90 மேல் ஏற்படும் ஒரு அழுத்தம் இல்லாமல் இருக்க இது போன்ற நான் ஸ்ட்ரைக்க்ர் நிலை உதவி இருக்கலாம்.

    ஏற்கனவே இது போன்று கூடுதல் பந்துகள் வாய்ப்பு ஏற்கனவேஒருமுறை சச்சினுக்கும், ஜெயசூர்யாவுக்கும் கிடைத்திருக்கின்றது

    ReplyDelete
  6. சுரேஷ் நீங்க கிரிக்கெட் விசிறியா சச்சின் விசிறியா

    ReplyDelete
  7. Hi. I love Your post. I love Sachin the Master.
    Have a look @ here too.

    Anjali Tendulkar Rare Photos

    ReplyDelete
  8. 5 ஓட்டங்களுக்கு 5 ஓவர்கள் சற்றே அதிகம் தான். என்றாலும் அப்போது சச்சின் சற்றே களைத்தவராக காணப்பட்டார். அதனால் அதிகம் Strike ஐ தோனி எடுத்ததில் தவறில்லை.

    இப்படி ஒரு பதிவிடும்படி உங்களுக்கு தோன்றியதற்கே உங்களை பாராட்டலாம்.

    ReplyDelete
  9. நல்ல வேளை! அப்போது தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் சச்சின் சாதனை அவ்ளோ தான்....!

    ReplyDelete
  10. // மின் தடை ஏற்பட்ட உடன் கணினியைத் திறந்து யாகூ கமெண்ட்ரி பார்த்தவண்ணம் இருந்தேன்.

    அது சில நேரங்களில் ரீஃப்ரெஷ் ஆகி 43ம் ஓவரை காட்டுவதும் நிகழ்ந்து கொண்டு இருந்தது,//

    நீங்கள் CRICINFO பயன்படுத்தலாமே?!! இதுவரையில் இது போல் எந்த ஒரு பிரச்சனையுமில்லை!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  11. // thenammailakshmanan said...

    சுரேஷ் நீங்க கிரிக்கெட் விசிறியா சச்சின் விசிறியா//

    கிரிக்கெட் ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த இரண்டாவது விளையாட்டு.

    ஒரு துறையில் பலருக்கும் நாம் விசிறியாக இருக்க முடியும் என்றால் நான் சச்சினுக்கும் விசிறிதான்.

    ReplyDelete
  12. // TechShankar said...

    Hi. I love Your post. I love Sachin the Master.
    Have a look @ here too.//


    :))

    ReplyDelete
  13. // எட்வின் said...

    5 ஓட்டங்களுக்கு 5 ஓவர்கள் சற்றே அதிகம் தான். என்றாலும் அப்போது சச்சின் சற்றே களைத்தவராக காணப்பட்டார். அதனால் அதிகம் Strike ஐ தோனி எடுத்ததில் தவறில்லை.//


    பந்துகள் அளவில் என்று பார்த்தால் வேகம்தான்.., டோனி செய்தது தவறில்லை என்பது அழகாக வார்த்தை. சரி சொல்ல உங்களுக்கு மனம் வருகிறதா..,

    ReplyDelete
  14. //இப்படி ஒரு பதிவிடும்படி உங்களுக்கு தோன்றியதற்கே உங்களை பாராட்டலாம்.//

    உண்மையில் வலைப்பதிவர்கள் அதிகம் படிக்காத ஒரு நாளிதழில் வந்திருந்த வரிகள் இவைகள்..,

    ReplyDelete
  15. // என் நடை பாதையில்(ராம்) said...

    நல்ல வேளை! அப்போது தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் சச்சின் சாதனை அவ்ளோ தான்....!//

    தெரியவில்லை, 100 என்பதும் 200 என்பது வேறுவேறு என்பது தினேஷிற்கு தெரிந்திருக்கும்.

    தவிரவும் அன்றைய தினத்தில் சச்சின் பெருந்தன்மையாக வெற்றிதான் முக்கியம். எனது சதத்தினைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிருக்க வாய்ப்புண்டு.

    இருக்கும் ஓவர்களை மனதில் வைத்திருந்து தினேஷ் கார்த்திக்தான் வெற்றி சில பந்துகள் தள்ளிப் போனாலும் கவலை இல்லை என்று முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால் பாவம் அவர் மிகவும் வெகுளியானவர் போல..,

    டோனி சச்சின் டெண்டுல்கரால் உருவாக்கப் பட்டு சிம்மாசனத்தில் உட்கார வைக்கப் பட்டவர் என்பதை மனதில் கொள்க..,

    சச்சின் தலைவராகும்போது அவருக்கு வழிகாட்ட நல்ல அனுபவஸ்தர் இல்லை. அதனால் அவர் இழந்தது அதிகம். அந்த நிலை டோனிக்கு வராமல் தடுக்கும் ஒரு நல்ல மனிதராக சச்சின் திகழ்கிறார் என்பதே என் எண்ணம். டோனியும் கூட மற்றவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர் போலவேதென் படுகிறார்.

    மற்ற யாராவது ஆட்டக்காரராக இருந்திருந்தால் நம் 3 அல்லது துவக்க இடத்தில்தான் களம் இறங்குவேன் என்று அடம்பிடித்துக் கொண்டு இருப்பார்கள். பின்வரிசையில் களம் இறங்குவது கூட ஒரு பெருந்தன்மைதான்.

    ReplyDelete
  16. // பயங்கரவாதி டாக்டர் செவன் said...

    // மின் தடை ஏற்பட்ட உடன் கணினியைத் திறந்து யாகூ கமெண்ட்ரி பார்த்தவண்ணம் இருந்தேன்.

    அது சில நேரங்களில் ரீஃப்ரெஷ் ஆகி 43ம் ஓவரை காட்டுவதும் நிகழ்ந்து கொண்டு இருந்தது,//

    நீங்கள் CRICINFO பயன்படுத்தலாமே?!! இதுவரையில் இது போல் எந்த ஒரு பிரச்சனையுமில்லை!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.//


    பயன்படுத்திப் பார்த்துவிடலாம்

    ReplyDelete
  17. தோனிமீது கோபமே வந்தது சச்சினுக்கு சான்ஸ் கொடுக்கமல் இருந்ததால்,

    திக் திக் திக்.. மறக்கமுடியாத தருணம், இருந்தாலும் இந்த தடவை சச்சின்முகத்தில் அந்த பதற்றமில்லை..

    ReplyDelete
  18. //கடைசி ஓவர் ஆரம்பிப்பதற்கு முன் சச்சின் 200 அடிக்கும் முன் டோனி 100 அடித்துவிடுவாரோ என்று தோன்றியது.//

    எனக்கும்தான்.

    ReplyDelete
  19. டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இணையத்தில் தான் ஸ்கோர் பார்க்க முடிந்தது.
    அந்த கடைசி நிமிட பதட்டம் புரிகிறது.

    ReplyDelete
  20. @D.R.Ashok
    @அபுஅஃப்ஸர்
    @அக்பர்
    @T.V.ராதாகிருஷ்ணன்
    @ஜீவன்சிவம்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  21. // வெத்து வேட்டு said...

    in 5 overs he only faced 7 bowls to score 5?//

    ஆக்ரோஷமான ஆட்டத்தின் காரணமாக ஏற்படும் சோர்வு ஒரு காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  22. மறக்க முடியாத கணங்கள்... ஆனால் தோனி - சச்சின் பார்ட்னர்ஷிப் பந்து விவரம், ரன் விவரம், சச்சினுக்குத் தரப்பட்ட வாய்ப்பு விவரக் கணக்கீடு பார்த்தால் தோனி இவருக்கு வாய்ப்பைக் குறைத்து ஆதிக்கம் செலுத்தியது தெரிந்திருக்கும்.

    ReplyDelete
  23. //ஸ்ரீராம். said...

    மறக்க முடியாத கணங்கள்... ஆனால் தோனி - சச்சின் பார்ட்னர்ஷிப் பந்து விவரம், ரன் விவரம், சச்சினுக்குத் தரப்பட்ட வாய்ப்பு விவரக் கணக்கீடு பார்த்தால் தோனி இவருக்கு வாய்ப்பைக் குறைத்து ஆதிக்கம் செலுத்தியது தெரிந்திருக்கும்.//

    ஒருவர் சோர்வுடன் இருக்கும்போது அவருக்கு ஓய்வு கொடுக்கும் முகத்தான் இன்னொருவர் முழுபாரத்தையும் ஏற்றுக் கொள்வது தவறல்லவே...,

    சச்சின் 200 வாய்ப்பினை ஓவருக்கு ஒரு ரன் என்ற வீதத்தில் வழங்கிவிட்டு அவர் ஆடியிருக்கிறார். துல்லியமான திட்டம் என்றால் பாராட்டத்தக்கதே..,

    ஏற்கனவே இதேபோல் வாய்ப்பு அமைந்த போது ஜெயசூர்யா அவுட் ஆனதும், சச்சின் தடவிக் கொண்டு நின்றதும் இதே சோர்வில்தானே,

    கங்குலி, அன்வர் போன்றோர் 200 அடிக்காமல் போனதற்கு பந்துகள் பற்றாக்குறை காரணம். கங்கூலி183 அடித்தபோது 2 பந்துகள் இருந்தன, இரண்டையும் சிக்ஸ் அடித்தால் 195 போகும் நிலை,

    ReplyDelete
  24. .திக் .திக் .திக்
    நல்லாருக்கு

    ReplyDelete
  25. // தியாவின் பேனா said...

    .திக் .திக் .திக்
    நல்லாருக்கு//

    வாங்க தல..,

    ReplyDelete
  26. தல,
    நானும் கூட கிரிக்கின்போ ரசிகன்தான். பல விளையாட்டு இணையதளங்களை கண்டவன் என்ற முறையில் சொல்கிறேன் - கிரிக்கின்போ தான் பெஸ்ட்.

    என்னை மாதிரி ட்ராவல் அதிகம் செய்யும் நபர்களுக்கு முதலில் ஹட்ச் போனில் (இப்போ வோடபோன்) துருவா இண்டராக்டிவ் என்ற நிறுவனம் கிரிக்கின்போ ஜீனி என்ற செல்போன் சாப்ட்வேரை அறிமுகம் செய்தார்கள். அதின் சிறப்பு அம்சம் என்னவெனில் மேட்ச் லைவ் ஆக நடக்கும்போது அதனை அப்படியே ஒரு ஓவர் defer செய்து அனிமேஷன் வடிவத்தில் பார்க்கலாம், கூடவே ஸ்கோர் அப்டேட்டும் உண்டு. ஒவ்வொரு பந்து வீசப்பட்டவுடன் ஸ்கோரும், அப்போதைய ரன்ரேட், ஈகுவேஷன் போன்ற பல விஷயங்கள் வரும்.

    இதன் மூலம் நான் பிரயாணம் செய்யும்போதெல்லாம் கிரிக்கெட் மேட்சை மிஸ் செய்ததே கிடையாது. ஆனால் அந்த நிறுவனம் இப்போது இல்லை என்பதால் லேப்டாப்பை கையிலேயே கொண்டு செல்லவேண்டி உள்ளது. என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
  27. இந்த பந்தயம் நடக்கும்போது நான் கேரளாவில் இருந்தேன். கேரளா சென்றுக்கொண்டு இருந்தேன். அப்போது சக பதிவராகிய நண்பர் பயங்கரவாதி டாக்டர் செவனுடன் உரையாடிக் கொண்டு இருந்தபோது என்னுடைய தந்தை மற்றுமொரு போனில் கால் செய்து சச்சின் ஒரு ரன் அடித்தால் இரட்டை சதம் என்று சொல்ல, உடனே நான் அவரை போனை டிவி அருகே வைக்க சொல்லி கேட்டேன். இரண்டு ஓவர் முழுவது போன் மூலம் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

    நொந்து போன நண்பர் டாக்டர் செவன் உடனே (அப்போது அவர் வீட்டிலும் கூட ஆற்காட்டார் விஜயம் - கரண்ட் கட்) உடனே தன்னுடைய வீட்டிற்கு போன் செய்து அவரும் அப்டேட் செய்துக் கொண்டார். நான் கேரளா சென்றடைந்த பொது ஆம்லா அவுட் ஆகி சென்றுக்கொண்டு இருந்தார். அன்று இரவு வெயட் செய்து ஹைலைட்ஸ் பார்க்கலாம் என்று நினைத்தேன். பிரயாணக் களைப்பால் காண இயலவில்லை. மறுநாள் காலை தான் பார்க்க முடிந்தது.

    ReplyDelete
  28. //ஒரு ரன் அடித்தால் இரட்டை சதம் என்று சொல்ல, உடனே நான் அவரை போனை டிவி அருகே வைக்க சொல்லி கேட்டேன். இரண்டு ஓவர் முழுவது போன் மூலம் கேட்டுக் கொண்டே இருந்தேன்.//

    ஒரு ரன்னுக்கு இரண்டு ஓவர் கொஞ்சம் ஓவராத் தெரியல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails