Wednesday, April 28, 2010

அண்ணாச்சியோட டேலண்ட்

வண்டி சேலத்தின் முக்கிய வீதி (என்று நினைக்கிறேன்)யில் போய் கொண்டு இருந்தபோது நண்பர் கோடைப் பண்பலை போட்டுக் கொண்டிருந்தார். அதில் ஒரு அம்மணி  நேயருடன் கடலைப் போட்டுக் கொண்டிருந்தார்.  படுத்துக் கொண்டு போர்த்திக் கொள்வாரா அல்லது போர்த்திக் கொண்டு படுப்பாரா என்பது பற்றி மிக சீரியஸாக  ஒரு கடலை.  அதை தானைத்தமிழகமே கேட்டு ரசித்துக் கொண்டிருந்தது என்பதை நினைக்கையில் இதயமே புல்லரித்துக் கொண்டிருந்தது.


வழக்கமாக அந்த நேரத்தில்  மகிழ்வுந்தில் இருந்த அனைவருமே  கடமையே கண்ணாக இருக்கும் நேரமானதால் அவர்கள் இது போன்ற கடலைகளையெல்லாம் கேட்டதே இல்லை.  அவ்வப்போது தொலைக்காட்சியில் இது போன்ற கடலைகளை கேட்டிருந்தாலும் பண்பலையில் போட்ட கடலை   பதறவைத்துக் கொண்டிருந்தது.


அந்த மகிழ்வுந்தில் இருந்தவர்கள் யார்? அவர்கள் ஏன்  சேலத்தின் முக்கிய வீதிகளில் சென்றனர்? குறிப்பிட்ட வீதியில் அவர்கள் இறங்க மறுத்தது ஏன் போன்ற விவரங்களை அறிய  இந்தச் சுட்டி உங்களுக்கு உதவும்.

=======================================

இந்த நேரத்தில்  வான வேடிக்கைகள்  விண்ணைப் பிளந்து கொண்டு இருந்தன.  ஏதோ கோவில் திருவிழா போல விஜய் அஜித் ரசிகர்கள் இணைந்து வரவேற்பு வலையங்கள் வைத்திருந்தனர்.  பிரசாந்த்,  அர்ஜுன் போன்றவர்களின் ரசிகர் மன்றங்களைக் கூட காண நேர்ந்தது.

நண்பர்கள் தங்களுக்காகவே வரவேற்பு வாணவேடிக்கைகள் இருப்பதாக மிகவும் மகிழ்ச்சியுடன்  சொல்லிக் கொண்ட்டு ஏறக்குறைய ஒரு மணிநேர டிராஃபிக் ஜாமைப் பொறுத்துக் கொண்டனர்.

இந்த சூழலில் ந்மது இளைய நண்பரின் எம்டியெஸ் அலர ஆரம்பித்தது. அப்போது கோடப் பண்பலையில்  தூங்காதே தம்பி தூங்காதே பாடல் ஒலிப் பரப்பாகிக் கொண்டிருந்தது,.

அந்தப் பாட்டையே இன்னொருவர்


பேசாதே தம்பி பேசாதே என்று பாடிக் கொண்டுவந்தார்.

கடைதனில் பேசியவன் முதல் இழந்தான்.  உயர் கல்வியில் பேசியவன் புகழ் இழந்தான்.  என்று அப்படியே அந்த இடத்திலேயே அந்தப் பாடலை உல்டா அடித்துக் கொண்டே வந்தார்.

ஆனாலும் நமது சிங்கக் குட்டி அந்த டாடா இண்டிகா மகிழ்வுந்தின் ஓர் ஓரத்தில் அமர்ந்து கடலையைச் சார்த்திக் கொண்டு வந்தார்.   இன்னும் சில பாடல்களைப் பாடிய நம்து நண்பர் கொஞ்சம் கடுப்பாகி  அலை பேசியை பிடுங்கி  ஒரு ஓரமாக வீசிவிட்டார்.

வண்டி ஒரு உணவகத்தில் நின்றது. நண்பர் கேட்டார்.

நண்பர் கேட்டார்.
-----------------------------------------------------------------
யார் யாருக்கெல்லாம் கேஸ் ட்ரபுள் இருக்கு

ஏண்ணே..,  ஓட்டல் சரியில்லையா?

இந்த ஓட்டல் சமையல் பூரா கேஸ்ல செய்யராங்களாம். கேஸ் ட்ரபுள் இருக்கறவங்க வேற இடம் பாருங்க.

---------------------------------------------------------------------

ராத்திரி உணவு அமர்க்களமாய் உள்ளே போன பின் பயணத்தைத் தொடர்ந்தோம்.  கொஞ்சம் அப்படி இப்படிச் சென்று கொண்டு இருந்த நேரத்தில் இளஞ்சிங்கம் மீண்டும் தனது அலைப் பேசியில் எம்டியெஸ் கம்பெணியை குழிதோண்டிப் புதைப்பதற்கான வகைகளை ஆராய ஆரம்பித்தது.

டேய், ஃபோனை தூக்கிப் போடல.,  நாங்க உன்னைத்தூக்கி வெளிய போட்டுட்டு போயிடுவோம்.

வேண்டாம்னே அவன் இதுதான் வசதின்னு இங்கியே இறங்கிடுவான்.  பேசாம  வாங்க,

அவன முதல்ல நிறுத்தச் சொல்லு.., அப்புறம் நான் நிறுத்தறேன்.

அண்ணே உங்களுக்கெல்லாம் பொறாமை..,

நீங்க படிக்கும்போது செல் கிடையாது. அப்படியே இருந்தாலும் யாரும் பேசியிருக்க மாட்டாங்க. சின்ன பையன் சந்தோஷமா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலண்ணே..,

ஆமா.., ஆமா..,  இருந்த லேண்ட் லைன்ன கூட இவனுக்கு ஒரு ஃபிகரும்  ஃபோன் பண்ணாது.

டேய்  நாங்கெல்ல்லாம் எப்பவுமே எல்.ஹெச் ல தான் குடியிருப்போம். இங்க வந்தாத்தாண்டா ஃபோனெல்லாம்.  நாங்கதான் டைரக்ட் டீலிங்ஸ் பண்ணுவமே...,

இன்னொருவர்

அண்ணே சும்மா கதை விடாதீங்க.., நீங்க என்ன டீலிங்ஸ் விடுவீங்கண்ணு எங்களுக்குத் தெரியாதா? பத்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வில்ஸ் வாங்கிட்டு ஒரு ஓரமாய் உங்கார்ந்து வர போற ஃபிகர உத்து உத்து பார்ப்பீங்க..,

டேய் எங்க ரேஞ்சே வேற..,

சும்மா கதை விடாதீங்கண்ணே..,  வில்ஸ் வாங்கிக் கொடுத்தது நாணு.

சார் இவர் லவ் மேரேஜ்ன்னு சொன்னாங்க.., மேடம் சூஸைடு அட்டம்ட்டு கூட பண்ணாங்களாமே..,   இளஞ்சிங்கம் ஆர்வமாய் வாய் திறந்தான்.

 ஓ  அதெல்லாம் உனக்கு தெரிஞ்சு போச்சா...!

ஒரு நாள் யாரோ சொன்னாங்க சார்.

அது ஒரு பெரிய கதைடா..,

மாப்பிள்ளை கவர்மெண்ட் வேலை,  தானே சொந்த முயற்சில ஆஸ்பத்திரியெல்லாம் கட்டியிருக்கார், அதுவும் நல்லாப் போயிட்டு இருக்குன்னு தரகர் சொல்லியிருக்கார்.  அவங்க வீட்டலயும் விசாரிச்சுப் பார்த்துட்டு   மாப்பிள்ளை சொக்கத்தங்கம், கடின உழைப்பாளி அப்படின்னு முடிவு கட்டிட்டு  பொண்ணு தர்ரதா ஒத்துக்கிட்டாங்க..,

மேடமும் அப்பா, அம்மா பார்த்து ஓ.கேன்னா சரிதான்னு சொல்லிட்டாங்க.  கடையில் நிச்சயம் பண்ற அன்னைக்கு பார்த்தா மாப்பிள்ளை நம்ம ஆளு..,

மேடம் ஒரே ரகளை,  நான் கல்லை கட்டிட்டி கிணத்துல குதிச்சாலும் குதிப்பேனே தவிர இந்த ஆளக் கட்ட்டிக்க மாட்டேன்னு ஒரே ரகளை, நான் அந்த மாத்திரை முழுங்கிடுவேன் இந்த மாத்திரை முழுங்கிடுவேன்னு ஒரே சீன்.  


அப்புறம் நாங்கெல்லாம் போயி அண்ணன் ரொம்ப நல்லவர்.  காலேஜ்ல கம்ஃப்ளீஷன் வாங்கின அன்னைக்கே வேற ஆளா மாறிட்டார்.  ஊரில் அவர் ஒரு பெரிய புள்ளி, அப்படி இப்படின்னு சொல்லி  ஒரு பில்டப் கொடுத்து மனச மாத்தினோம்.  ஆனா அதயே இவர கல்யாணம் பண்ணிக்கறதுக்காக நடந்ததாச் சொன்னார் பார்த்தியா...,  அங்கதாண்டா இருக்கு அண்ணாச்சியொட டேலண்ட்.

பழச விடுங்கடா..,  இப்ப அவன் எம்டியெஸ ஆஃப் பண்ணுவானா மாட்டானா? அதச் சொல்லச் சொல்லு..

அண்ணே அந்த பாட்டரியும் அவுட்டுண்ணே..,  இனி நம்மளோடதான் அவன் பேசி ஆகணும்.

பேசிக்கொண்டே வண்டி நகர்ந்து கொண்டு இருந்தது.

Monday, April 26, 2010

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறப்பது சரிதானா..,

தமிழக சுகாதார அமைப்பின் சார்பாக ஒரு கருத்தரங்கம் ஏப்ரல் 9, 10ம் தேதிகளில் நடைபெறுகிறது என்ற செய்தியும் அதில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும்  தங்கள் அனுபவங்களை ஆராய்ச்சிகளை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் மார்ச் மாதத்தில் எங்களுக்கு தகவலும் சில தினங்களில் அழைப்பிதழும் கிடைத்தது. 

இந்த அமைப்பு உருவாக்கமே நாட்றாம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலரின் எண்ணத்தில் உருவானதாக விழாவில் பேசியவர்கள் சொன்னார்கள். இதில் கலந்து கொள்வதற்காக சுகாதாரச் செயலர் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் போன்றவர்களையெல்லாம் அழைத்திருந்தனர்.

நடைபெறும் இடம் வேலூர் மாவட்டம் என்றதுமே ஆஹா..,  ஊரைவிட்டு வெகுதூரம் என்பதே ஒரு மகிழ்ச்சியான விஷயமாகப் பட்டது .

அடுத்ததாக கலந்து கொள்வதற்கு, தங்குவதற்கு சாப்பிட எல்லாம் நாமே காசு கொடுக்க வேண்டும். அதுவும் முன்னதாகவே கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள்.  இரண்டுநாள்  டென்சன் இல்லாமல் கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்த பின்னர்  அங்கு ஆராய்ச்சி கட்டுரைகள் வழங்கலாம் என்று முடிவானது.

கல்லூரி காலங்களிலேயே நாமெல்லாம் செமினார் பிரசந்த் செய்வது என்றால் நம்மைவிட மக்கள் மிகவும்மகிழ்ச்சி அடைவார்கள்.  வெகுசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள்  புத்தகத்தில் இருப்பதை அப்படியே பேப்பரில் எழுதிவந்து  over head projector மூலம் காட்டி  அதை வித்தியாசமான ஆங்கிலத்தில் ஒப்பித்து  கைதட்டலும் துறையின் முக்கியஸ்தர்களிடம் நல்ல பெயரும் பெற்றுச் செல்வார்கள். சிலர் சிறப்பாக தயாரித்து  எங்களைப் போன்ற சராசையை எட்ட நினைக்கும் மாணவர்களுக்கும் புரியும் வகையில் எடுப்பார்கள்.அவர்களை பல அறிவு ஜீவுகள் ரஜினி படம் பார்ப்பது போல பார்த்து பாராட்டுவார்கள். 

இந்த இடைவெளியில் நாங்களும் செமினார் எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் கொஞ்சம் நகைச்சுவையாக ( திருவிளையாடலில் தருமி சொல்வாரே " கொஞ்சம் நகைச்சுவையா எழுதறேன். இருந்தாலும் புலவன்னு ஒத்துக்கறாங்க - அந்த மாதிரி) வழங்குவது மக்களுக்கு புத்துணர்ச்சி வழங்குவதாக இருக்கும்.  

அதே போல இந்த கருத்தரங்கிலும் நாம் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து தயார் செய்து சுருக்கத்தை ஆராய்ச்சி குழுவிடம் அனுப்பி ஒப்புதல் வாங்கலாம் என்று முடிவுக்கு வந்தோம். நமது சுருக்கத்தை சக மருத்துவர்களுக்கு அனுப்பினோம்.

டேய். அந்தக் காலத்துல ஸ்டூடண்ட்.  ஸ்டூடண்ட மாதிரி சுத்திட்டு இருந்ததை மக்கள் ஒத்துக்கிட்டாங்க. இன்னிக்கு டாக்டர். டாக்டர் மாதிரி சுத்திட்டு இருந்தா ஒத்துக்க மாட்டாங்க. டாக்டராவே ஏதாவது செய்  அப்படின்னு ஒரு பெரிய முட்டுக் கட்டை போட்டனர்.

சரி என்று யோசித்த போதுதான் அப்போதைய முண்ணனி பத்திரிக்கையில் வந்த ஒரு தவறான செய்தியைப் பற்றி உண்மை நிலவரத்தை கண்டறியும் பணியும் மக்களிடம் ஏற்பட்டிருந்த பதட்டத்தை தணிக்கும் பணியும்  எங்கள் தலையில் அமர்ந்திருந்தது, ஓரளவு அதில் வெற்றியும் கண்டுவிட்டதால்  அதையே கருத்தரங்கில் சம்ர்ப்பிப்பது என்று முடிவு செய்து அதை ஆராய்ச்சிக் குழுவிற்கு அனுப்பி ஒப்புதலும் பெற்றுவிட்டோம். 

இனி எப்படி  ஏலகிரிக்கு போவது என்று முடிவு செய்தோம். நான்கு பேர் எங்கள் பகுதியிலிருந்தே புறப்பட ஆயத்தம் ஆனோம்.  பேருந்தா? புகைவண்டியா என்ற கேள்வி எழுந்தது. அருகில் ஜோலார்பேட்டை இருப்பதால் அங்குவந்துவிட்டால் அங்கிருந்து சுலபமாக சாலைப் போக்குவரத்து இருப்பதாக சொன்னார்கள். ஆனால் ஜோலார்பேட்டை போக கோவை , திருப்பூர், ஈரோடு போன்ற ஏதாவது ஒரு ஊரில் வந்து ரயில் ஏற வேண்டும். அதற்கு மூன்று மணி நேரம் சாலைப் போக்க்குவரத்து.

திண்டுக்கல்லில் இருந்து விழுப்புறம் வந்து அங்கிருந்து செல்லலாம் என்றார்கள்.  அதற்கும் திண்டுக்கல்லுக்கு ஒன்னறை மணீநேரமும். விழுப்புறத்திலிருந்து   மூன்று மணிநேரத்திற்கு மேலும் சாலைப் பயணம் செய்ய் வேண்டியிருக்கும் என்ற சூழல்.  பேருந்தில் வந்தால் ஈரோடு மூன்று மணிநேரம் அங்கிருந்து சேலம் ஒன்றரை மணிநேரம், அங்கிருந்து திருப்பத்தூர் இரண்டு மணிநேரம். அங்கிருந்து  ஜோலார்பேட்டை ஒன்றரை மணிநேரம் அங்கிருந்து  மலைப் பயணமாக முக்கால் மணிநேரம்.  இந்த ஒவ்வொருஇடத்திருக்கும் பேருந்து மாறி மாறி மாறி மாறி மாறி பயணிக்க வேண்டிய சூழல்.   முழுப் பயணத்தையும் சாலைப் பயணமாகவே மேற்கொள்வது என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொண்டோம். நண்பரின் டாடாஇண்டிகா வை  தேர்ந்தெடுத்து ஓட்டுனரையும் ஏற்பாடு செய்து விட்டோம்.  நிகழ்ச்சிக்கு புறப்பட சில நாட்கள் இருக்கும்போது இன்னொரு நண்பர் எங்களை அணுகி தானும் வருவதாகச் சொன்னார்.  இல்லையென்றால் அவர் பேருந்தில்தான் வர வேண்டும் என்றும்  அதற்கு வராமலேயே போய்விடலாம் என்றும் சொன்னதில் அவரையும் அழைத்துச் செல்வது என்று முடிவானது, 

வேறொரு வாகனம் கிடைக்காத சூழலில் ஓட்டுநரை கழட்டிவிட்டுவிட்டு நாங்களே ஓட்டுவது என்று முடிவு செய்தோம். பெரும்பாலோனோர் சொந்தமாக ஓட்டுநர் உரிமம் வைத்து இருப்பவர்கள் இருபது கிமீக்கு மேலே போனார் ஓட்டுநர் வைத்துக் கொள்ப்வர்கள்.  இருந்தாலும் இவ்வளவு தூரத்தையும் நாங்களே ஓட்டுவது என்று முடிவு செய்தொம். 

ஒருவழியாக  முதல்நாள் மாலை  வாகனத்தை கிளப்பினோம். நண்பர் ஓட்ட ஆரம்பித்தார். 
ஓட்ட ஆரம்பித்த சில நிமிடங்களில் நண்பருக்கு அலைப்பேசி அழைப்பு 
சார் நேற்று பார்த்தோம். இன்னிக்கும் பார்க்கணும் . நான் பிஸி இது நண்பர். இதே போன்று அவருக்கு சில அழைப்புகள். 

நீ விலகு நான் ஓட்டுகிறேன். மற்றொரு நண்பர் களம் புகுந்தார், அவருக்கும் அதேபோல அழைப்புகள். 

சில மணிநேரம் இதேபோல நடக்க  அனைத்து அலைப்பேசிகளையும்  மௌனவகையில் போடு ஒருகைப்பையில் வைத்துவிட்டு  பயணத்தைத் தொடர்ந்தோம். 


சில நிமிடங்கள் போயிருக்கும்

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறப்பது சரிதானா..,  என்றொரு அலறல். ஒரு அலை பேசியிலிருந்து.  இருப்பதிலேயே இளைஞனான நண்பருக்கு அவரின் வருங்கால வழிகாட்டியின் அழைப்பு சுருக்கமாக சொன்னால்  போலிஸிடம் இருந்து  மிரட்டல் . நண்பர் தனது அலைப் பேசீயை வைத்து பேசிக் கொண்டெ வந்தார்.  வண்டி  பெருந்துரையை கடந்தபோது சன்னமாக அண்ணே எங்க பேட்டரியைக் கொடுங்கண்ணே என்று மற்றொரு நண்பரின் கெஞ்சிக் கொண்டிருந்தா.  அவரோ சத்தமாக கார் ஓடிட்டி இருக்கும்போதெல்லாம் பேட்டரியக் கொடுக்க முடியாது. தவிர  இன்னும் கொஞ்சம் நேரத்தில் கார் லைட்டெல்லாம் போட வேண்டி இருக்கு,  என்று கூறினார். அண்ணே மொபைல் பேட்டரியை க் கொடுங்கண்ணே.  ஒருவழியாக எம்டியெஸ் வைத்திருக்கும் நபரின்  அலைபேசி மூலம் அவர் தொடர்ந்தார்.  அவரே அருகில் இருக்கும் நபரிடம்

எப்ப சார் நாம் ஏற்காடு போவோம் ?என்றார்.

ஏற்காடா? நாமா? நாம போகப் போவது ஏழகிரிடா.., 

சார் அது வறக்காடு சார். இந்த வெயில்ல போனா  கருவாடா போயிடுவோம்.

அடே..,  நம்ம துறை முன்னோடிகள் என்ன சொல்லியிருக்காங்க.  நாமெல்லாம் கிராமத்த நோக்கி போகனும்டா..,  இந்த மாதிரி வறட்சியான இடங்கள்ல தாண்டா நம்ம வேலை அதிகம்.  அதுனாலதான் இந்த மாநாட்ட கூட ஏழகிரில வச்சிருக்காங்க.


நீங்க ஏற்காடுன்னு சொன்னதுனாலதான் நான் வந்தேன். நாம் இப்படியே போறவழில இறங்கிக்கறேன். நீங்க போய்ட்டு வாங்க.

மகனே உன்பேர்ல டிக்கெட் எடுத்தாச்சு,  ரூம் போட்டாச்சு. நீ வரல ...  இனிமேல் நீ வேலைக்கே வர முடியாது. இன்னொரு நண்பர் விரட்ட ஆரம்பித்தார்.

தெரியும்டி.  உன் ஆளு ஏற்காட்டில் இருக்கான்னுதான் நீ கிளம்பி வந்தேன்னு எங்களுக்கு தெரியும். ஆனா நீ ஏற்காடு போகப் போவதில்லை எங்களோடு  ஏலகிரிக்குத்தான் வரப் போறே..

இல்லண்ணே வந்து

இப்படியே வந்து போயின்னுட்டு இருந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் இன்னும் கொஞ்சம் நேரத்தில் வரும் அதுல புடிச்சு தள்ளிவ்விட்டிருவேன்.

அப்பக்கூட நீ ஏற்காடு போக முடியாது

உன் ஆளுக்குச் சொல்லிடுறா...,

இவ்வாறு சொல்லிக் கொண்டு இருக்கும்போதே வண்டி சேலத்தின் முக்கிய வீதியில் செல்ல ஆரம்பித்தது,

அண்ணே இந்த வீதியில்தான் அவன் படிக்கும்போது தங்கி இருந்தான்.

டே தப்பித்தவறி இங்க இறங்கிடாதடா..,   உலக்த்தின் மோசமான கிருமியெல்லாம் இங்க தங்கி இருந்திருக்கு. இறங்கின அப்படியே  பரலோகம்தான். 

வண்டி சென்று கொண்டே இருந்தது.................,

இத்தோடு தொடர்புடைய இடுகைகள்

தமிழகத்தில் முதன் முறையாக.., 


கருத்தரங்குத் துளிகள்

Sunday, April 25, 2010

சந்தில் பாடப் படும் சிந்து

http://img.photobucket.com/albums/v243/rajinifans/top2.jpg   


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxK1BrvecVbA3oml-LjPhvazE3_3S6XiH_RmvCm2UQCJsTJS4uyyrR_RmwamFS3cKzUxaut3J4QGh_66WSdNzsagbf2I6Uf-3dhLpNFs9VQQsNBd9Lqo7Q6faKrmYARNNpqSYq7IV4tNVn/s400/Vijay-Anushka-Vettaikaran-Movie-still.jpg   


http://thalagroups.weebly.com/uploads/3/2/2/7/3227748/3784056_orig.jpg 


நண்பா

உன்

உணர்வுகள்

உன் கவனிப்புகள்

தமிழ்மணமும்

தமிழிஷும்

திரும்பிப் பார்க்கும்

டோனி மட்டுமல்ல

தோழர்களும் கூட

தேடி வருவார்கள்

================================

இதெல்லாம் என்ன என்று புரியாதவர்கள் இந்த இடுகையை ஒரு எட்டு பார்த்துவரவும்.

============================================================

சந்தில் பாடப் படும் சிந்து :-

டோனி தோற்பதை  சச்சின் விரும்ப மாட்டார்.

சச்சினுக்கு நல்ல பிறந்த நாள்  பரிசு கொடுக்க டோனியும் விரும்புவார். இர்பான் பதான் டோனிக்கு செய்த மரியாதையைவிட நல்ல வகையில் மரியாதை கொடுக்க டோனியும் நினைப்பார்.

Sunday, April 18, 2010

வெள்ளையர்கள் Vs அமெரிக்க அதிபர்

டிஸ்கி: இது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஆதரவான இடுகை.


பல நேரங்களில் பல உணர்வுகள் பாதிக்க பட்ட பிறகுதான் உணர்ந்து கொள்ள முடியும். குறைந்த பட்சம் நமக்கு மிகவும் வேண்டியவர்களாவது பாதிக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா அரசியல் வாதி  ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியை குரங்கு என்று குறிப்பிட்டதாக செய்தி கூறுகிறது.


ஹர்பஜன் சிங், சிமன்ஸ் சர்ச்சையில் கூட பலருக்கும் ஆச்சரியம் அளித்திருக்கக் கூடும். அந்த நாட்டு மக்கள்  தாயின் வாழ்க்கைமுறையை விமர்சிப்பதைவிட  குரங்கு என்று சொல்வது மோசமானதாக இருக்குமா? என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள் என்று கேட்கத் தோன்றியிருக்கும்.


நிற வெறி என்பதையும் அதன் ஆழமான வரலாற்றையும் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அதாவது  கருப்பராக பிறந்த ஒரே காரணத்துக்காக அந்த சமுதாயத்தை அசிங்கப் படுத்துவது அது.    ஒட்டு மொத்த சமுதாயத்தையும் அதாவது பரம்பரையையே கேவலப் படுத்தும் விஷயம் அது.  




இந்தக் காணொளியில் வரும் கெட்ட வார்த்தைகளை எல்லாம் ஒன்றாய் எடுத்து சுருக்கமாய் சொல்வதானால் உலக அளவில் குரங்கு என்று சொல்லி விடலாம்,

நம் நாட்டில் குறிப்பாக தமிழக மக்கள் நிறவெறியால் பாதிக்கப் பட்டிருப்பார்களா? என்று தெரியவில்லை.  நெறவெறியின் கொடுமையின் பாதிப்பு தமிழகத்தில் இருந்திருக்குமேயானால் கண்டிப்பாக ஜாதி வெறி என்பதும்,  ஜாதியின் காரணமாக ஒருவரை குறிப்பிட்ட வரையறை தாண்டி விட மறுக்கும் கொடுமைகளும் நடந்தே இருக்காது.  அதுவும் தமிழகத்தில் வெள்ளையரின் பிரதிநிதிகளாய் சிலர் இருந்து கொண்டு  நிறவெறியையே  தீண்டாமையாக வளர்த்த கதையும் நடந்தது போலவும் தெரிகிறது.

இன்னும் சிலர்  ஒவ்வொருவரும் தங்கள் ஜாதிப் பெயரை பெருமையாக சேர்த்துக் கொண்டால் என்ன தவறு என்று கூட கேட்கிறார்கள்.  அவர்களை எல்லாம் இந்த நிறவெறி நாடுகளில் கொண்டு போய் சில நாட்கள் விட்டால்தான் நிலமை புரியும்.


உலகப் போலிஸ் காரரின் தலைமை பீடத்தில் இருப்பவருக்கே இந்தக் கொடுமைகள் அரங்கேறினால், சாமானியர் நிலை என்னவாக இருக்க முடியும்.

ஹர்பஜன் குரங்கு என்று திட்டியதாக குற்றம் சாட்டப் பட்டபோது கூட அதனால்தான் ஒட்டு மொத்த ஊடகங்களும்  ஹர்பஜனுக்கு எதிராக திரண்டன.

உலக ஊடங்கள் ஹர்பஜன் என்ற பழுப்பு நிறத்தவர்   ( மீனுக்கு தலை,  பாம்புக்கு வால் காட்டும் பிராணிகள் பற்றி உங்களுக்கு தெரியும் அல்லவா)   சாதாரணமாக உபயோகப் படுத்தும் வார்த்தை என்பதாக உலக அளவில் பதிவு செய்யும் முயற்சியாக இதைக் கையாளப் பார்த்தன.

நல்ல வேளையாக குரங்கு தவறான வார்த்தை என்பதாகவே அந்த வழக்கினைமுடித்தனர்.  இருந்தாலும் கூட ஆஸ்திரேலியர்  அமைச்சர் கிளப்பி உள்ள இந்தப் பிரச்சனை எப்படிப் போகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


அமெரிக்கர்கள் இதனை தங்கள் தலைவனுக்கு ஏற்பட்ட பிரச்ச்னையாக எடுத்துக்கொண்டு கையாளுவார்களா? அல்லது வெள்ளையரின் பெருமையை கட்டி காத்து அதிபரின் மானத்தை காற்றில் பறக்க விடுவார்களா? பார்ப்போம்

Wednesday, April 14, 2010

திருமணத்திற்கு முன் கழட்டிவிடுவது எப்படி?

மன்னா! ஏன் இப்படிக் கவலையில் மூழ்கி இருக்கிறீர்கள்?

அமைச்சரே இந்த தங்கவியாபாரி பொன்னம்மாளின் தொந்தரவு தாங்க முடியவில்லை. 

மன்னா!  தாங்களும் நகையரசி பொன்னம்மாள் அம்மையாரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே

அவளேதான் அமைச்சரே!

மனைவி என்று வந்துவிட்டாளே தொல்லை கொடுப்பவர்தானே மன்னா,


அவளே ஒரு கருத்தைச் சொல்லுவாள். அதை அவளே அதை தவறு என்பாள். அதற்கு காரணம் கணவனாகிய நீங்களே என்று சொல்லுவாள். அதுதானே மன்னா மனைவிக்கான அடையாளம். 

ஜப்பான், கொரிய, ஆப்ரிக்க, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து பிரான்சு அனைத்து நாட்டு மனைவிகளும் அப்படித்தானே மன்னா! உலகம் முழுவதும் சுற்றியவரும் அனைத்து நாடுகளிலும் நண்பர்கள் படைத்த உங்களுக்கா இது தெரியாது மன்னா,


அமைச்சரே வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டாம்.  நகைக்கடை பொன்னம்மாவை மணந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை

அவரை உங்களுக்கு பிடிக்கவில்லையா மன்னா?

நிறையப் பிடித்திருக்கிறது. அதற்காக திருமணம் செய்து கொள்ளமுடியுமா?

மன்னா அவரை கழட்டிவிட வேண்டும் அவ்வளவுதானே? நாட்டின் மன்னர் நீங்கள் முடியாது என்று சொல்லிவிடுங்கள்.

இல்லை அமைச்சரே, நாட்டின் பொருளாதார சூழலில் பொன்னம்மாளின் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  நேரடியாக அவ்வாறு சொன்னால் நமது நிலமை பரிதாப கரமாகிவிடும்.

ஓ.கே மன்னா! ஒரு யோசனை சொல்லுகிறென், முயற்சித்துப் பாருங்கள்

==================================================================

நாட்டு மக்களுக்கோர் அறிவிப்பு. நமது நாட்டில் இருக்கும் கொச்சியாற்று ஓரம் இருக்கும் பூங்காக்களை வேடிக்கை பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப் பட உள்ளது.  ஏற்கனவே  இது போல எட்டு இடங்களில் இருப்பது போல இதுவும் அமையும். விருப்பம் உள்ளவர்கள் டெண்டர் அனுப்பலாம்.

====================================================================

பொன்னம்மாவின் நிறுவனம்:

நிறுவன இயக்குநர்களின் கூட்டம் நடைபெறுகிறது.  இந்த ஒப்பந்தம் மட்டும் நமக்கு கிடைத்துவிட்டால் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நமது நிறுவனம் மிகப் பெரியதாகி விடும்.

அதில் பெரிய வருமானம் ஒன்றும் இல்லையே. ஏற்கனவே மற்ற பூங்காக்களை டெண்டர் எடுத்தவர்கள் விற்கும் சூழலில் இருக்கிறார்களாமே

பூங்காவிலிருந்து வருமானம் வருகிறதோ இல்லையோ, பூங்காவிலுள்ள பூக்களின் மூலம் நமது நிறுவனங்களுக்கு மிக நல்ல விளம்பரம் பெற இயலும்.

சரி பெற்றுவிடலாம். தாங்கள் நேரடியாக மன்னரை அனுகலாமே,

இல்லை இதை நான் நேரடியாக கேட்டால் எதிர்கட்சியினர் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திவிடுவார்கள். ஆனால் நான் பேசி விடுகிறேன்.. நமது சகோதர நிறுவனத்தின் மூலம் அதைப் பெற்றுவிடுங்கள். அந்த நிறுவனத்தில் எனக்குள்ள பங்கு பற்றி யாரும் பேச வேண்டாம்.

=====================================================================

அமைச்சரே போன்னம்மாவின் நிறுவனத்திற்கே அந்த உரிமம் கொடுத்தாகிவிட்டது. இருந்தாலும் பிரச்சனை ஓயக் காணோமே,

மன்னா, உரிமம எடுத்தது அவரது சகோதர நிறுவனம், அதில் அவருக்க்குள்ள தொடர்பு மிக ரகசியமானது.

அப்படியென்றால் எனக்கு விடுதலையே கிடையாதா?

கவலைப் படாதீர்கள் மன்னா! நமது தோழர்கள் எதிரிகளிடமும் இருக்கிறார்கள், அவர்களின் உதவியை நாடுவோம்.

என்ன! நீ எதிரியின் ஆளா?

அரசிய;ல்ல இதெல்லாம் சகஜம் மன்னா....,

============================================================

உரிமம் கொடுக்கும் துறையின் தலைவர் தனக்குத் தெரிந்த தகவல்களை கசியவிட்டு விடுகிறார்.

பொன்னம்மாளின் நிறுவனங்கள் கொதித்தெழுந்து ரகசியம் காக்க வேண்டிய செய்திகளை வெளியிட்டு விட்டதாக குற்றம் சாட்டுகின்றன.

இது போன்ற செய்திகளை வெளியிடுவது சகஜம்தான் என்ன உ. கொ. து தலைவர் சொல்லிவிடுகிறார்.

=====================================================

தனது காதலிக்காக மன்னர் நாட்டின் வளங்களை தாரைவார்த்து தந்துவிட்டதாக எதிர்கட்சிகள் கும்முகின்றன; குதறுகின்றன

=============================================================
அமைச்சரே என்ன கொடுமை இது! நீர் எதிர்கட்சி ஆள் என்பதைநிரூபித்துவிட்டீர். நாட்டு மக்கள் என்மீது மிகவும் கோபமாக இருக்கிறார்கள். நான் என்ன செய்வது

=========================================
                                                நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பு:
நம் நாட்டின் மிக முக்கிய நகைக் கடை அதிபர் பொன்னம்மாள் நமது மன்னருக்கு மிக வேண்டியவர் அவ்வளவுதான். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் அவருக்கு வேண்டியவர்களே. அவர் பொன்னம்மாளை எக்காரணம் கொண்டும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்.  தவிரவும் மக்களின் எதிர்ப்பு மிக அதிகமாக இருப்பதால் இப்போது கொடுக்கப் பட்ட உரிமம் முடிந்த பின்னர் பொன்னம்மாளின் நிறுவனங்களுக்கு உரிமம வழங்கப் படாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படிக்கு அமைச்சர்  23ம் இம்சைவாசி

==============================================
டிஸ்கி:  இது முழுக்க முழுக்க கற்பனைக்கதை

Tuesday, April 13, 2010

புருனோ - நான் - சில சந்தேகங்கள்

ஒரு சரித்திரக் கதை என்றால்  பல  நேரங்களில்  வரலாற்று ஆசிரியர்களின் கற்பனைதான் அதில் ஓடும். அதுவும் அந்த ஆசிரியர் கதையில் வரும் பாத்திரங்களில்  ஒருவரிடம் சம்பளம் வாங்கும் நிலையில் இருந்தால் சம்பளம் கொடுப்பவர் பாத்திரம் எம்ஜியார் நடிக்கும் அளவிற்கு மிகத்தூய்மையான பாத்திரமாக வடிவமைக்கப் பட்டுவிடும்.

http://vicky.in/dhandora/wp-content/uploads/2006/07/Imsai_Arasan.jpg
23ம் புலிக் கேசியில் வடிவேலுவின் ஒருவத்திற்கு வேறொரு உருவம் அமைத்து படம் வரைவார்களே அப்படித்தான் பெரும்பாலான கதைகள் அமைகின்றன.  அது போன்ற கதைகளுக்கு பல ஆதார நூல்களை தேடிப் படித்து அதில் நாம் பெரும்பகுதியினர் துளி கூட கேட்டிராத ஒரு காதல் கதை இந்த இடத்தில் உள்ளது.   அதில் எனக்கு பத்து சந்தேகங்கள் உள்ளன. அதைப் படித்துப் பார்த்து உங்களுக்கு ஏதாவது ஆரோக்கியமாகத் தெரிந்தால் அதில் பகிர்ந்து கொள்ளுங்களேன். அப்படியே தமிழ்மணம், தமிழீஷில் ஓட்டும் போட்டு விடுங்கள்.

================================================================
தமிழில் பிரபல எழுத்தாளர். அவர் எழுதிய ஒரு ரீமேக் கதையில்  அவரை ஆதரித்த சடையப்ப வள்ளலை ஆதரித்து 4000 அடிக்கு ஒருமுறை அவரை புகழ்ந்து கொண்டே இருந்து, கிளைமேக்ஸ் காட்சியில் சடையின் முன்னோர்க:ளை மிகவும் மரியாதை செய்திருப்பார். அந்த எழுத்தாளர் யார் என்று தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன். உங்களுக்காக பின்னூட்டம் மட்டறுத்தப் படுகிறது.

Thursday, April 8, 2010

சானியா Vs நயந்தாரா

சானியா VS நயந்தாரா

திரைமணத்தில் சேராததால் இந்தப் பதிவு. இங்கு போய் பாருங்கள்
 

Tuesday, April 6, 2010

சானியா VS நயந்தாரா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvJsBLaUbqzToO9ZK_CaBRN2c7OSeW2W_S9oJAZPnRawhZnLO85HPxE-5tS6PpAXMrBs1nneAJqD_B1Z8ZDxIpyhVWNB8EvD0pi_MtDQD__MlKtiUsIzc5OAeGtOFLgqpg8EKw0Ow9E4K_/s400/Sania_mirza_005.jpg      


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2az-ajcKV2ztnMLievhMS3hM3FlxzecGeS0zp3gTOkot-SLb63QGDbbHE-qXPPjsQPTVhI2w6LOkwmjZAEhPu_lIm5P_pi3vU6lCFuy7rMljCkQmsg1pMrLzYs9IFUzz-hndLzp5pVs-v/s400/nayanthara.jpg          




http://celebrity.beboindia.com/images/saniamirza.jpg         


http://www.thenaali.com/UltimateEditorInclude/UserFiles/images/kollywood/actress/nayanthara-sept-22.jpg  


http://pramanik.in/images/bollywood/BOLLYWOOD%20ACTRESSES%20IN%20SAREES/Tennis_players_in_saree/sania_mirza_saree.jpg         

http://worldcelebrity.files.wordpress.com/2008/01/11.jpg  


http://shaanentertainyou.files.wordpress.com/2009/07/sania-mirza-engagement.jpg 








http://www.indiangossips.com/wp-content/uploads/2009/11/Simbu-and-Nayanthara.jpg





 


http://l.yimg.com/t/images/saniashoiab_0604_30.jpg


http://www.southgossips.com/wp-content/uploads/2009/06/nayanthara-prabhu-deva.jpg 


http://ready2beat.com/files/n/s/8407-current-news-general-news-sania-mirza-engagement-sohrab-mirza-pics.jpg  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkWqrt6okKP9SrwJLXU5Friqdmtp-jyZuIrSy0B10iVkyvRiYpoPro16uPmSVaBMuf-MwqH3EnXmxjpZ0M56BMsy6RKeiywnTqp2Ms7jUOeJKWVk707F6ceoZqaCguHH_FKJgchZaEnac/s400/nayanthara2.jpg




http://www.envazhi.com/wp-content/uploads/2009/09/prabhu_deva_son.jpg 


http://static.ibnlive.com/pix/sitepix/02_2008/0208_shoaib_malik_248.jpg

சானியாவின் உரிமை சிவ சேனாவின் உணர்வு

அலுவலகத்தில் மிக அசதி,

வெளியே அழைந்து திரிந்து வருகிறோம். மிகக் கடுமையான சோர்வு.  பிரதான அலுவலகம். மிக முக்கிய கோப்புகள் மேசையின் மீது இருக்கின்றன. மேசையின் மீது கால்வைத்து  உங்களால் ஓய்வெடுக்க மனம் வருமா? அது ஓய்வறையில் உள்ள மேசை அல்ல உங்களது பிரதான அலுவலக மேசை.  கண்டிப்பாக பெரும்பாலனோருக்கு அப்படி ஓய்வெடுக்க மனம் வராது. அதுவும் தேசியக் கொடி வைத்திருக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகம் மேசையில் தேசியக் கொடி இருக்கிறது. அப்படியென்றால் அந்த அலுவலகத்தில் அமருவதற்கும் அந்த நாற்காலியின் மரியாதையைக் காக்கவுமே நமக்கு ஒரு உள்ளூர பயம் இருக்க வேண்டும்.


அதிலுமே தேசியக் கொடி அருகில் காலை வைத்து அதுவும் புகைப் படங்களாக வரும் அளவு கவனக் குறைவாக இருந்தவர்தான்.  சானியா மிர்சா. அந்த படத்தை நான் இந்த தளத்தில் வெளியிட விரும்பவில்லை. தேவைப் படுபவர்கள் ஆங்கிலத்தில் சானியா மிர்சா என்றடித்து கூகிளாண்டவரைக் கேளுங்கள் தருவார்.

சானியாவின் உடைகளுக்காகவே  டென்னிஸ் பார்ப்பவர்கள் உண்டு.  ஸ்டெபி கிராஃப் அளவிற்கு ரசிகர்கள் படைத்தவர் அல்லர். மேல் நாட்டுப் பெண்கள் போல ஆடைகள் அணிய ஆசைப்பட்டு ஆனால் அந்த ஆடைகளை நம்ம ஊர் திரைப்பட கவர்ச்சி நடிகைகள் போல அணிந்து ஆடிவருபவர் சானியா.  வில்லியம் சகோதரிகளோ, அன்னா கோர்ன்னிகாவோ அணியும் காற்றோட்டமான உடைகள் இவ்வாறு அழகு கொந்தளிக்க இருந்ததில்லை. இந்த அழகைச் சுட்டிக் காட்ட பேச்சு எழுந்த போது பர்தா போட்டுக் கொண்டா விளையாட முடியும் என்பது போன்ற பேச்சுக்கள் வந்து விவாதங்கள் திசை மாறிப் போயின.
http://www.celebs101.com/gallery/Steffi_Graf/109840/steffi_graf_photo_5.jpg

தங்க மங்கை பி.டி.உஷா கூட ஒரு முறை சானியாவின் புகழுக்கு டென்னிஸ் விளையாட்டு மட்டும் காரணம் அல்ல என்று மனம் நொந்து சொல்லி இருக்கிறார்.

திருமணம் பற்றிய பேச்சுக்களில் கூட பலா அதிரடிகள் செய்து வருபவர் நமது மிர்சா,

இன்றைய செய்திகளில் மாலிக்கின் பணம் பல கோடி சானியாவிடம் கொடுத்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அதுவும் சூதாட்டப் பணமாம். பணத்தையெல்லாம் வாங்கி பத்திரப் படுத்திக் கொள்ள இவர் என்ன வங்கி நடத்திவருகிறாரா என்ன?

பேசாமல் இவருக்கு சீக்கிரம் நடத்திக் கொடுத்து ஏதாவது நாட்டின் குடியுரிமையும் வாங்கிக் கொடுத்து வழியனுப்பி விட்டால் இந்தியாவின் மானம் காப்பாற்றப் படும். அதைவிடுத்து அவர் இந்தியரா? இதயம் இந்தியாவுக்குத் துடிக்குமா? என்றெல்லாம் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தால் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும்தான் அசிங்கம்.

எனவே சானியாவின் உணர்வுகளை மதிப்போம். அவரது உரிமைக்கு குரல்கொடுப்போம். ஊருக்கு அனுப்பி வைப்போம்.

Sunday, April 4, 2010

மாயாவதி வழியில் மேலும் ஐந்து மாலைகள் 4.4.10

பண மாலை போடுவதில் சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பண மாலை போடுவதற்கு சில கட்சிகள் (மட்டும்) எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. எதிர்ப்பு தெரிவிக்காத கட்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளும் உதவும் வகையில் சில யோசனைகள்.
[mayawati_3.jpg]1. பத்திர மாலை: -


அந்த ஊரில் உள்ள முக்கிய இடங்களின் பத்திரங்களை கட்சித் தலைமையின் பெயருக்கு இடம் மாற்றம் செய்து மாலையாக அணிவிக்கலாம்,. நல்ல மதிப்பு பெறும் மாலையாக அமையும்.

2. கார்ச்சாவி மாலை: -
தேர்தல் நேரத்தில் கட்சித் தொண்டர்களின் பயண நேரத்தைச் சுருக்க கார்ச்சாவிகளால் ஆன மாலையை  கட்சித் தலைமைக்கு அளிக்கலாம்.  கட்சித் தலைமைக்கு ஓ.கே. என்றால் கார் மாலையே கூட அணிவிக்கலாம்.

3.கணினி மாலை:-

தொழிற்நுட்ப ரீதியாக நாட்டை முன்னேற்றியே தீருவேன் என்று அடம்பிடிப்பவர்களுக்கு மடிக் கணினியால் கோர்க்கப் பட்ட மாலையை அணிவிக்கலாம். விருப்பப் பட்டால் மேசைக்கணினி மாலை கூட அணிவிக்கலாம்.

4. ஹேக்கர்ஸ் மாலை:-

எந்த ஒரு தளத்தையும் ஹேக் செய்யும் வல்லமை வாய்ந்த சிலரின் கையைக் காலைக் கட்டி மாலையாகச் செய்து மாலை அணிவித்துவிடலாம்.இவர்கள் ஓட்டுப் பதிவின் போது பதிவர்களின் ஓட்டுப் பதிவு எந்திரத்தை ஹேக் செய்வார்கள் என்றால் தலைமை மிகவும் மகிழ்ச்சி அடையும்

5.பாஸ்போர்ட் மாலை:-

ப்ளான்க் செக் கொடுப்பது போல பிளான்க் பாஸ் போர்ட் மாலை அணிவித்தால் நினைத்த நேரத்தில் வெளிநாடு செல்லவும், நண்பர்களை வெளிநாடு அணுப்பவும் சுலபமாக இருக்கும்.

பின்குறிப்பு:- இது போன்ற மாலை அணிவிப்பதில் எந்த தடையும் இதுவரை இல்லாத காரணத்தால் பின்பற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை.

பின்குறிப்பு:- நாட்டு மக்களின் நலன் கருதி மேற்கண்ட ஐடியாக்களுக்கு காப்புரிமை பதிவு செய்யப் படவில்லை. யார் வேண்டுமானாலும் இவற்றை உபயோகித்துக்   கொள்ளலாம்.

Friday, April 2, 2010

கற்பழிப்பு என்றால் என்ன? 2.4.10

இந்திய தண்டனைச் சட்டத்தில் கற்பழிப்பு என்பதை பிரிவுகள்375, 376 ஆகியவை வரையறை செய்கின்றன. மற்றும் தண்டனையை தெரிவிக்கின்றன,

தற்போது அந்தப் பிரிவுகளில் தற்போது சில திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஒரு ஆணின் உடலில் ஒருபகுதி அல்லது ஒரு பொருள் முழுமையாகவோ அல்லது லேசாகவோ ஒரு பெண்ணின் உடலில் எந்த வடிவத்தில் நுழைய முற்பட்டாலும் இனி அந்த நிகழ்வு கற்பழிப்பாகவே கருதப் படும். ஆணுறுப்பை வைத்துத்தான் முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை.

=======================================================

உடலுறவிற்கு சம்மதம் கொடுக்கும் வயதினையும் சற்று உயர்த்தியிருக்கிறார்கள். தற்போதைய திருத்தத்தின் படி ஒருவனின் மனைவியே ஆனாலும் அவளது சம்மதத்துடன் உடலறவு கொள்ளும் பட்சத்தில் அவளது 18 வய்துக்கு கீழே இருந்தால் அது கற்பழிப்பாக கருதப் படும்.  ஏற்கனவே 15வய்துக்கு மேற்பட்ட மனைவியின் சம்மதத்துடன் கொள்ளும் உடலுறவு கற்பழிப்பாக கருதப் பட மாட்டாது. இப்போது அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது உடலுறவு என்பது எந்த ஒரு பாலியல் நடவடிக்கையும் குறிக்கும்.

===================================================

இது தொடர்பான குற்றங்களை சரியாக விசாரிக்காத காவலர்களுக்கு தண்டனை அளிக்கவும் இந்தச் சட்டத் திருத்தத்தில் இடம் கொடுக்கப் பட்டுள்ளது.

=================================================

பிரிவு 376 C (1)  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் இருந்து இருபால் குழந்தைகளையும் பாதுகாக்கிறது.

=================================================

நான் படிக்கும் காலத்தில் எனது பேராசியர் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது. இது அவரது காலத்தில் நடந்தும் இருக்கலாம். அல்லது அவரது பேராசிரியர் அவருக்கு சொன்னதாகக் கூட இருக்கலாம்.

ஒரு கற்பழிப்பு . அதில் புண்ர்ச்சி நடந்து முடியும் போது மற்றவர்கள் பார்த்துவிடுகிறார்கள். பார்த்தவர்களில் காவல்துறை ஆய்வாளரும் அடக்கம். அவர்கள் குற்றவாளியைத் துறத்துகிறார்கள். குற்றவாளி அருகில் உள்ள ஆற்றில் விழுந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். ஆனால் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்டோர்   அவரைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.


ஆனால் குற்றவாளி அதாவது குற்றம் சாட்டப் பட்டவர் விடுதலையாகிவிடுகிறார்.

காரணம் இதுதான்.

வழக்குப் பதிவு செய்யும்போது குற்றம் நடைபெற்ற இடத்திலேயே நேரிடையாக பார்த்து கைது செய்ததாக வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்,

மருத்துவ பரிசோதனையின் போது அவரது ஆண்குறியில் விந்து இருப்பதான அறிகுறி இல்லை. ஆற்றில் விழுந்து நீந்தும் போது கழுவப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் பாதிக்கப் பட்டவரின் உடலில் விந்து இருந்திருக்கிறது. இது போன்ற நிலை அதுவும் அந்த இடத்திலேயே கைது செய்யப் பட்டிருப்பின் நிகழ வாய்ப்பில்லை என்றும். இது உள்நோக்கத்தோடு பதிவு செய்யப் பட்ட வழக்கு என்றும் கூறி விடுதலை செய்யப் பட்டுவிட்டாராம்.

ஆற்றில் குதித்த நிகழ்வு பதிவு செய்யப் படவில்லை. பிற்சேர்க்கையாகச் சொல்லும்போது உள்நோக்கத்தோடு பதிவு செய்யப் பட்ட வழக்கு என்ற வாதம் மேலும் வலுப் பெற்று விட்டதாம்.

வழக்குகளில் நிகழ்வுகள்ன் வரிசைக்கும், நடந்ததை அப்படியே தெரிவிக்க பதிவு செய்ய வேண்டியதின் அவசியத்தையும் எங்களுக்கு புரிய வைக்க எங்கள் பேராசியர் சொன்ன நிகழ்வு இது.

Thursday, April 1, 2010

வெளிய வாடா............. 1.4.10

நான் சுமித்ராவப் பார்க்கணும்.

தீபக் குமார் விஜயாவிடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

தீபக் குமாருக்கு சுமித்ராவைப் பார்ப்பதை விட விஜயாவிடம் பேசுவது தான் அப்போதைக்கு முக்கியமாகப் பட்டது. ஆனால் விஜயா நிஜமாகவே சுமித்ராவிடம் பேசத்தான் தீபக் குமார் வந்திருப்பதாக நினைத்தாள். அவர்களுக்கு நேர் மேலே மாடிப் படியின் வளைவுகளில் அமர்ந்து சுமித்ரா, சவீதாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

கடந்த சில நாட்களாகவே  சுமித்ரா, ஆண்களுடன் பேசுவதையே தவிர்த்து வந்தாள். இந்த ஆண்டு முடிந்த உடன் மாணவர் தலைமைப் பதவியை விட்டு விலகி விடவும் முடிவு செய்திருந்தாள்.  கல்லூரிக்கு வந்தாமோ, படித்தோமா, டிகிரி வாங்கினோமா என்றிருப்போம். டரியல் செய்ய நினைத்தால் டரியல் ஆகியல் ஆகிவிடுவோம் என்ற பயம் வந்திருந்தது அவளுக்கு.

அவளுக்கு ஏன் அப்படி அந்த எண்ணம் வந்தது என்று அறியாதவர்கள் இந்தச் சுட்டியை அழுத்துங்கள்.

சுமித்ராவின் ஆரம்ப கால கல்லூரி வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்று அறிய இந்தச் சுட்டி உங்களுக்கு உதவும்.

தீபக் குமாருக்கு மென்மையாகப் பதில் சொல்லி அவனை அனுப்பியிருக்கலாம். ஆனால் விஜயாவுக்கு தீபக் குமாரை சீண்டிப் பார்க்க நல்ல வாய்ப்பாக இருந்ததால் உடனே சொல்லிவிட்டா:ள்.

உன்னை மாதிரி பொறுக்கிப் பசங்களோட எல்லாம் சுமித்ரா பேச மாட்டாள்.

தீபக் குமாருக்கு சுறுசுறுவென கோபம் வந்தது. ஓ.., அதுதான் நீ பேசிட்டு இருக்கியா? சடாரென்று மடக்கினான். தீபக்

அவதான் உன்னவிட்டு விலகிட்டு இருக்கால்ல அப்புறம் ஏன் அவகிட்டயே பேசி ஆகனும்னு பார்க்கற..,  என்னவோ சொல்ல ஆரம்பித்தாள் விஜயா

தீபக் குமார் தனது கொள்கைப் படி எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பேச்சை வளர்த்திக் கொண்டே இருந்தான். இருந்தாலும் கூட நல்ல பசங்க, பொறுக்கிப் பசங்க கான்செப்ட் வந்திருந்ததால் கொஞ்சம் டென்சனாகவே பேச ஆரம்பித்திருந்தான்.

தானே பேசி என்னவென்று கேட்டுவிடலாம் என்று நினைத்தாள் சுமித்ரா.., ஆனால்  மேல் மாடியிலிருந்து கீழ் மாடிக்கு சத்தம் போட்டுப் பேச கூச்சமாக இருந்ததால் நடந்து வர ஆரம்பித்தாள். ஒரு சுற்று சுற்றி படிதாண்டி வருவதற்கு சில நிமிடங்கள் ஆக ஆரம்ப்த்திருந்தது.

ஏன்.., அவ எங்கூட பேச மாட்டாளாமா?  நேத்துவரைக்கு கூடச் சுத்துனா? இன்னிக்கு பத்தினி ஆயிட்டாளா?
 

தீபக்கின் வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்திருந்தன.  அப்படியே சடன் பிரேக் போட்டது போல நின்றாள் சுமித்ரா.  என்ன செய்வது என்றே புரியவில்லை.

போ..,  நீ பண்றதப் பண்ணு சொல்லிவிட்டு எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தாள் விஜயா.  கோபத்துடன் எதிர் திசையில் சென்றான் தீபக்.

=================================================

டே வெளிய வாடா!  சுமனின் வாசல் கதவுகள் துடிக்க ஆரம்பித்தன.யார்ரா இவன் நேரங்கெட்ட நேரத்தில் கதவை உடைக்கிறவன். சுமன் இரியோடு வந்து கதவைத் திறந்தான். வெளியே  தீஃபக்கின் நண்பர்கள்.  கையில் ஸ்டம்ப் , பேட் போன்ற அதிபயங்கர ஆயுதங்களுடன்  வாசலில் நின்று கொண்டிருந்தனர்,


காதல் - ஏப்ரல் ஃபூல் 1.4.10

நாள் முழுக்க

யோசித்து

தாள் முழுக்க

வாசித்து

உள்ளத்தை

உள்ளபடி

உருக்கொடுத்து

உன்னிடம் கொடுக்க

ஆசையில்

பல கனவுகளை

பலவாறு உள்வாங்கி

எண்ணத்தை உள்ளடக்கி

என்னவளாய் ஆக்க

ஆக்கத்தை கொடுத்து

ஆசையை ஆக்க

காதலை

கருக்கொடுத்து

உருக்கொடுத்து

ஒருநாள்

கையில் கடிதம்

கொடுக்க

ஏப்ரல் ஃபூல் விளையாட்டுக்கு

காதல்தான் கிடைத்ததா?

என

கனிவாய்ச் சொல்லி

கலங்கடித்து சென்றாயே

கடிதம்

கள்ளத்தமாய் சிரிக்க

உள்ளம்

உடைந்த மடைபோல்

சிதறியதை அறிவாயா?

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails