Sunday, April 18, 2010

வெள்ளையர்கள் Vs அமெரிக்க அதிபர்

டிஸ்கி: இது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஆதரவான இடுகை.


பல நேரங்களில் பல உணர்வுகள் பாதிக்க பட்ட பிறகுதான் உணர்ந்து கொள்ள முடியும். குறைந்த பட்சம் நமக்கு மிகவும் வேண்டியவர்களாவது பாதிக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா அரசியல் வாதி  ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியை குரங்கு என்று குறிப்பிட்டதாக செய்தி கூறுகிறது.


ஹர்பஜன் சிங், சிமன்ஸ் சர்ச்சையில் கூட பலருக்கும் ஆச்சரியம் அளித்திருக்கக் கூடும். அந்த நாட்டு மக்கள்  தாயின் வாழ்க்கைமுறையை விமர்சிப்பதைவிட  குரங்கு என்று சொல்வது மோசமானதாக இருக்குமா? என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள் என்று கேட்கத் தோன்றியிருக்கும்.


நிற வெறி என்பதையும் அதன் ஆழமான வரலாற்றையும் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அதாவது  கருப்பராக பிறந்த ஒரே காரணத்துக்காக அந்த சமுதாயத்தை அசிங்கப் படுத்துவது அது.    ஒட்டு மொத்த சமுதாயத்தையும் அதாவது பரம்பரையையே கேவலப் படுத்தும் விஷயம் அது.  




இந்தக் காணொளியில் வரும் கெட்ட வார்த்தைகளை எல்லாம் ஒன்றாய் எடுத்து சுருக்கமாய் சொல்வதானால் உலக அளவில் குரங்கு என்று சொல்லி விடலாம்,

நம் நாட்டில் குறிப்பாக தமிழக மக்கள் நிறவெறியால் பாதிக்கப் பட்டிருப்பார்களா? என்று தெரியவில்லை.  நெறவெறியின் கொடுமையின் பாதிப்பு தமிழகத்தில் இருந்திருக்குமேயானால் கண்டிப்பாக ஜாதி வெறி என்பதும்,  ஜாதியின் காரணமாக ஒருவரை குறிப்பிட்ட வரையறை தாண்டி விட மறுக்கும் கொடுமைகளும் நடந்தே இருக்காது.  அதுவும் தமிழகத்தில் வெள்ளையரின் பிரதிநிதிகளாய் சிலர் இருந்து கொண்டு  நிறவெறியையே  தீண்டாமையாக வளர்த்த கதையும் நடந்தது போலவும் தெரிகிறது.

இன்னும் சிலர்  ஒவ்வொருவரும் தங்கள் ஜாதிப் பெயரை பெருமையாக சேர்த்துக் கொண்டால் என்ன தவறு என்று கூட கேட்கிறார்கள்.  அவர்களை எல்லாம் இந்த நிறவெறி நாடுகளில் கொண்டு போய் சில நாட்கள் விட்டால்தான் நிலமை புரியும்.


உலகப் போலிஸ் காரரின் தலைமை பீடத்தில் இருப்பவருக்கே இந்தக் கொடுமைகள் அரங்கேறினால், சாமானியர் நிலை என்னவாக இருக்க முடியும்.

ஹர்பஜன் குரங்கு என்று திட்டியதாக குற்றம் சாட்டப் பட்டபோது கூட அதனால்தான் ஒட்டு மொத்த ஊடகங்களும்  ஹர்பஜனுக்கு எதிராக திரண்டன.

உலக ஊடங்கள் ஹர்பஜன் என்ற பழுப்பு நிறத்தவர்   ( மீனுக்கு தலை,  பாம்புக்கு வால் காட்டும் பிராணிகள் பற்றி உங்களுக்கு தெரியும் அல்லவா)   சாதாரணமாக உபயோகப் படுத்தும் வார்த்தை என்பதாக உலக அளவில் பதிவு செய்யும் முயற்சியாக இதைக் கையாளப் பார்த்தன.

நல்ல வேளையாக குரங்கு தவறான வார்த்தை என்பதாகவே அந்த வழக்கினைமுடித்தனர்.  இருந்தாலும் கூட ஆஸ்திரேலியர்  அமைச்சர் கிளப்பி உள்ள இந்தப் பிரச்சனை எப்படிப் போகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


அமெரிக்கர்கள் இதனை தங்கள் தலைவனுக்கு ஏற்பட்ட பிரச்ச்னையாக எடுத்துக்கொண்டு கையாளுவார்களா? அல்லது வெள்ளையரின் பெருமையை கட்டி காத்து அதிபரின் மானத்தை காற்றில் பறக்க விடுவார்களா? பார்ப்போம்

21 comments:

  1. இது மொக்கையா சீரியஸான்னே தெரியலையே?? நீங்க கொடுத்த சுட்டி தப்பா? இல்ல வம்புக்குன்னே அப்பிடி குடுத்துருக்கீங்களா?

    ReplyDelete
  2. O.k, செய்தியைப் படித்து விட்டேன்..

    முதலில், ட்வீட்டியவர் ஆஸ்திரேலிய அமைச்சர் இல்லை. அவர் ஒரு கட்சியில் உறுப்பினர் மட்டுமே..

    இரண்டாவது, இதை சீரியசாக்க மாட்டார்கள். ஹர்பஜன் சிங் விஷயம் தீவிரமாக்கப் பட்டதற்குக் காரணம் அந்த டெஸ்ட் போட்டியின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மற்ற நிகழ்வுகளை இருட்டடிப்புச் செய்யவே...அதோடு ஹர்பஜன், சிமண்ட்ஸை சொல்வது போலாகாது ஆஸ்திரேலிய அரசியல்வாதி ஒபாமாவைச் சொல்வது.

    இதுவே ஆஸ்திரேலியப் பிரதமர் சொல்லியிருந்தால், அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு பெரிய பிரச்சனையாகி இருக்கும்.

    உண்மையிலேயே, குரங்கு என்றழைப்பது நம் கலாச்சாரத்தில் தவறில்லையே? குரங்கையே வணங்குபவர்கள் அல்லவா நாம்? நம் பண்பாட்டைப் பொறுத்த வரை பாஸ்டர்ட் என்ற வார்த்தையை விடவா குரங்கு என்பது தவறான வார்த்தை?

    ReplyDelete
  3. கட்சித்தலைவர் சொன்னதைப் படித்தீர்களா? - "Australia is a free country, people can make comments. But it is up to other members of our party to determine how they believe members within our party should behave.

    Then why the hell the australian media made it a big issue when Bajji commented Symonds?

    ReplyDelete
  4. தல,

    என்ன திடீர்னு? இருந்தாலும் சமூக பொறுப்புள்ள மருத்துவர் பெரிய ஐயா மாதிரி தான் இருக்கு உங்கள் கமெண்ட்டு. (நீங்க பெரிய ஐயா, டாக்டர் செவன் சின்ன ஐய்யா-எப்புடி?)

    ReplyDelete
  5. //நம் பண்பாட்டைப் பொறுத்த வரை பாஸ்டர்ட் என்ற வார்த்தையை விடவா குரங்கு என்பது தவறான வார்த்தை?//

    காலேஜ் முதலாம் ஆண்டு ஆங்கில கவிதை தொகுப்பில் இந்த வார்த்தை வருகிறது. அதற்க்கு சூட்டியான ஒரு பயல் என்றும்கூட அர்த்தமாம்.

    ReplyDelete
  6. //டிஸ்கி: இது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஆதரவான இடுகை.//

    நீங்கள் ஒபாமா மற்றும் கேப்டன் ஆதரவுடன் அடுத்த ஆட்சியை பிடிக்க திட்டமிடுவது தெரிகிறது. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அண்ணன் சுரேஷ் வாழ்க.

    ReplyDelete
  7. //நீங்க கொடுத்த சுட்டி தப்பா? இல்ல வம்புக்குன்னே அப்பிடி குடுத்துருக்கீங்களா?//

    நான் முதலில் படித்த செய்தியினைத்தான் தொடுப்பில் கொடுத்தேன். அந்தச் செய்தி எஸ்கேப், அந்த லின்க் எஸ்கேப். அதற்குப் பதிலாக இப்போது வேறு தொடுப்பு கொடுத்துள்ளேன்,

    ReplyDelete
  8. //முதலில், ட்வீட்டியவர் ஆஸ்திரேலிய அமைச்சர் இல்லை. அவர் ஒரு கட்சியில் உறுப்பினர் மட்டுமே..//

    அமைச்சர் என்று நினைத்துத்தான் இடுகை போட்டேன். சராசரி மனிதன் என்றால் இதுபோன்ற வக்கிரப் பேச்சுக்களை ஒதுக்கித் தள்ளுவதுதான் சரி

    ReplyDelete
  9. //உண்மையிலேயே, குரங்கு என்றழைப்பது நம் கலாச்சாரத்தில் தவறில்லையே? //



    கர்ணன் திரைப்படத்தில் ஒரு வசனம்

    கர்ணன்: என்னைத் தேரோட்டியின் மகன் என்று பெருமையுடன் சொல்லுகிறாய். ஆனால் மற்றவர்கள் என்னை இழித்துச் சொல்லுவதே அந்த வார்த்தையால்தான்

    ReplyDelete
  10. //நம் பண்பாட்டைப் பொறுத்த வரை பாஸ்டர்ட் என்ற வார்த்தையை விடவா குரங்கு என்பது தவறான வார்த்தை?//


    ஒருவர் பிறப்பை மட்டும் இகழ்வது, அவர் பிறந்த பரம்பரையையே இகழ்வது இரண்டுக்கும் வித்தியாசம் அவ்வளவுதான்

    ReplyDelete
  11. //Then why the hell the australian media made it a big issue when Bajji commented Symonds?//


    குரங்கு என்று சொல்வது சாதாரண விஷயம் என்பதாக மாற்றி அந்த வார்த்தையை அடிக்கடி பிரயோகிக்க வெள்ளை நிறவெறி ஊடகங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி அது

    ReplyDelete
  12. //காலேஜ் முதலாம் ஆண்டு ஆங்கில கவிதை தொகுப்பில் இந்த வார்த்தை வருகிறது. அதற்க்கு சூட்டியான ஒரு பயல் என்றும்கூட அர்த்தமாம்.//

    இருக்கும் இருக்கும்..,

    ReplyDelete
  13. அமெரிக்காவுக்கும்,ஒபாமாவுக்கும் இது தூசி தட்டிவிட்டுப் போகும் பிரச்சினை.

    எங்க வீட்டு அம்மணி கூட என்னை குரங்கு மாதிரி உட்கார்ந்திருக்கறதப் பாரேன்னு சொல்லுவாங்க:)அதுக்கெல்லாம் கோவிச்சக்கவா முடியும்?

    ReplyDelete
  14. //எங்க வீட்டு அம்மணி கூட என்னை குரங்கு மாதிரி உட்கார்ந்திருக்கறதப் பாரேன்னு சொல்லுவாங்க:)அதுக்கெல்லாம் கோவிச்சக்கவா முடியும்?//

    இதற்கும் கர்ணனின் பதிலையே பதிலாக கொள்ளலாம் தல..,

    ReplyDelete
  15. பேர் வாங்கனும்னா இப்படி பெரிய மனுஷங்கள ஏதாவது சொல்லித்தான ஆகனும்!

    ReplyDelete
  16. //என் நடை பாதையில்(ராம்) said...

    பேர் வாங்கனும்னா இப்படி பெரிய மனுஷங்கள ஏதாவது சொல்லித்தான ஆகனும்!
    //

    :))

    ReplyDelete
  17. //டிஸ்கி: இது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஆதரவான இடுகை.//
    ரைட்டு ஒரு மார்கமாதே அலைறீங்க....

    ReplyDelete
  18. புரிந்ததும் புரியாததும்....

    வணக்கம் டாக்டர்

    ReplyDelete
  19. //seemangani said...

    //டிஸ்கி: இது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஆதரவான இடுகை.//
    ரைட்டு ஒரு மார்கமாதே அலைறீங்க....
    //


    ஹி.., ஹி..,

    ReplyDelete
  20. //ஆ.ஞானசேகரன் said...

    புரிந்ததும் புரியாததும்....

    வணக்கம் டாக்டர்
    //


    வணக்கம் ஐயா..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails