முதலில் ரசிகன் என்பவன் யார் என்பதை கவனியுங்கள்
தன்னால் எழுத முடியாத பாடலைப் பாடும் புலவனுக்கு பாராட்டுகளையும் பரிசுகளையும் கொடுத்து ரசிகனாக மாறுகிறான்.
பாடல்களை தனக்குப் பிடித்தது போல் கற்பனைகள் செய்து கொண்டு ரசனையை வளர்த்துக் கொள்கிறான். ( திருவிளையாடல் பாடலில் கூந்தலுக்கு மணம் இருக்கிறதா வாக்குவாதத்தில் இறையானரின் கூந்தலுக்கும் மணமில்லை என்று வாதம் வந்த போது எப்படி ஆராய்ச்சி நடந்து முடிவு அறியப்பட்டது என்பது பற்றி பலசுவாரசியமான வாதங்கள் வந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்)
இல்லையெனில் நர்சிம் அவர்களின் படைப்புகளைப் பாருங்கள். எவ்வளவு ரசித்து எழுதுகிறார் என்பது புரியும்.
தன்னால் படைக்க முடியாத சிலையை சிற்பி படைக்கும் போது சிலைக்கு ரசிகனாக மாறுகிறான்.
சிலைகளைப் பார்த்து கதைகளை உணர்ந்தது ஒரு காலகட்டம்.
பாடல்களாக வந்த கதைகளை பாடல்களாகவும், கதைகளாகவும் ரசித்துவந்தான். சிலைகளைப் பார்த்து சிலைகளையும் பாடல்களையும் ரசித்துவந்தான். அடுத்த கால கட்டங்களில் நாடகங்களாக வந்த போது சிலையே உருவெடுத்து வந்ததாக கருதி ரசித்தனர். அந்த காலகட்டங்களில் நாடகங்கள் நடிப்பதற்கும் பக்தி நாடகங்கள் பார்ப்பதற்குமே விரதம் இருந்தனர்.
வெறும் அறிவு போதனை மத போதனை கதைகளுக்கு அடுத்து சாகஸ பக்தி இலக்கியங்களை ரசிக்க ஆரம்பித்தான். அப்போதெல்லாம் சாகஸ்ங்கள் செய்யும் கடவுளின் பிம்பங்களாக வழித்தோன்றலாக தன்னை நினைத்துக் கொண்டு இலக்கியங்களை ரசிக்க ஆரம்பித்தான்.
(பொன்னியின் செல்வன் படித்துப் பாருங்கள் -கடவுளின் சாகஸங்களில் ஒரு பகுதி மக்கள் எவ்வளவு மயங்கி கிடந்தனர் என்றும் மற்றபகுதியினர் அதை எவ்வளவு மொக்கை என்று கூறினார்கள் என்றும் கல்கிஅழகாக விளக்கியிருப்பார்.) அடுத்த சாகஸ சமூகக் கதைகள் வந்த போது நாயகனின் வழித்தோன்றலாக நினைத்து வந்தவன் தனது பிம்பமாகவே கருத ஆரம்பித்துவிட்டான்.
பரத்துக்கு பால் அபிஷேகம் செய்பவன் தன்னை கோயில் த்ர்மகர்த்தாவாகவும் முதல் மரியாதை பெருபவனாக தன்னை சமுதாயத்தில் மாற்றிக் கொள்கிறான். தனக்கு அவ்வளவு மரியாதை பெற்று தரும் தன் தலைவனை நாம் திட்டினால் அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. அவ்வாறு சொல்பவனை கண்டபடி கோபப்படுகிறான்.
தன்காலத்தில் இருப்பவர்கள்தான் சிறந்தவர்கள் என்ற எண்ணமும் நிறையப் பேருக்கு உண்டு. சரோஜாதேவி மாதிரி இன்னைக்கு யார் இருக்கா? என்று சொல்பவர்கள் நிறைய உண்டு. அதே போல் நந்திதா தாஸ் கூட அறிவு ஜீவியாகப் பேசப் பட்டிருக்கிறார். ஆனால் எல்லோரும் அவரவர் காலத்தவர்களை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தனது பிம்பத்தை உயர்த்துவது தனக்குத்தானே பெருமை.
(இந்த காலத்துக்கு பசங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை என்று நூறு வருடங்களில் வந்த படங்களிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது)..............................................................................................
பிரச்சனைகளில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், மனம்விட்டு அழ நினைப்பவர்கள், பிறரின் பரிதாபத்தை எதிர்பார்ப்பவர்கள் சிவாஜியின் ரசிகர்களாக மாறுவார்கள்.
பிரச்சனைகளை கண்டு பொங்கி எழ நினைப்பவர்களும், தன்னைக் காப்பாற்ற இன்னொரு கடவுள் வருவார் என்று நினைப்பவர்களும் எம்ஜியார், ரஜினி ரசிகர்களாக மாறுகிறார்கள்.
உருவத்தில் பேச்சில் நிறத்தில் தன்னைப் போல் இருக்கும் நாயகனுக்கு ரசிகன் மானசீக அடிமையாக மாறும்போது அந்த நடிகனை திட்டுப் போது கண்டிப்பாக அந்த ரசிகணுக்கு கோபம் வரத்தானே செய்யும்.
...............................................................................................................
தன் பசிக்காக குளத்தில் இருக்கும் அழுக்குகளை தின்று சுத்தப்படுத்தும் மீன் போல தனது படத்தின் ஓட்டத்துக்காக என்றாலும் நல்ல கருத்துள்ள பாடல்களை சிறந்த கவிஞர்களிடமிருந்து வாங்கி நல்ல இசையமைப்புடன் கொடுத்து கல்வியறிவு இல்லாத ரசிகனுக்கு கொடுத்த ந்ல்ல இதயமுள்ள நடிகர்களும் உண்டு. (அப்பா..... எம்ஜியாரையும் கலைஞ்ரையும் பேலன்ஸ் பண்ணியாச்சு)
...................................................................................................................
இன்றெல்லாம் ரசிகன் தனது இதய தெய்வங்களீன் மனைவியரை அரைகுறை ஆடையுடன் பார்ப்பதை மிகவும் விரும்புகிறானே... ஏன்?
பின்குறிப்பு:- இந்த இடுகை வெளியானபோது விகடன் குட் பிளாக் பகுதியில் இடம்பெற்றிருந்தது