Sunday, March 8, 2009

அவளிடம் கேட்டதை அவனிடம் கேட்டால்......

இன்று மதியம் டி.வி.யில் வறுமையின் நிறம் சிகப்பு படம் பார்க்க நேர்ந்தது. கமல் ஸ்ரீதேவியிடம் சொல்லிக் கொண்டிருப்பார்

"எத்தனை நாட்களுக்குத்தான் அடிமையாய் இருப்பிங்க. பிறந்ததும் அப்பாவுக்கு அடிமை,
கல்யாணம் ஆனதும் கணவனுக்கு அடிமை, குழந்தை பிறந்தால் அதற்கு அடிமை. எப்ப
சுதந்திரமாய் வெளிய வருவீங்க"

சாதரண்மாய் பார்த்தால் பெண்விடுதலைக்கான அற்புதமான ராக்கட் வசனமாக தோன்றும்.
ஆனால் கமலின் {வ.நி.சி.யில்} குடும்ப நிலையை சூழ்நிலையைப் பார்த்தால் ஒரு
உண்மை புலப் படும். இதே வசனத்தை ஸ்ரீதேவி, கமலைப் பார்த்தும் பேசலாம் .பேச விட்டுப்
பாருங்கள். வாழ்க்கையின் நிதர்சனம் புரியும்.

பாருங்கள். கமலுக்கும் அதே சூழ்நிலைதான். கமலும் தந்தைக்கு அடிமையாய் நினைக்கிறார். தந்தையும் கமலைஒரு சுமையாகவே நினைக்கிறார். இருவரும் ஒருவரிடம் இருந்து ஒருவர் சுதந்திரம் வாங்க நினைக்கிறார்கள். குடும்பம் சிதைகிறது. கமல் தனது குடும்பத்தின் ஈன நிலையை ஒரு வசனத்தின் மூலம் ஸ்ரீதேவிக்கு கூறுகிறார்.

பெற்றவர்களுக்கு பிள்ளையை நேர்படுத்தும் பொறுப்பு உண்டு. பிள்ளைகளுக்கும் பெற்றவர்களை கவனிக்கும் பொறுப்பு உண்டு, கண்வன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரனையாக (அடிமையாய் கூட இருக்கலாம்) இருந்தால்தான் குடும்பம் குடும்பமாக இருக்க முடியும். இல்லையென்றால் ஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து புரட்சி வாழ்க்கை வாழ முடியுமே தவிர மனித வாழ்க்கை வாழ முடியாது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக விரக்தியில் ஒரு கதாபாத்திரம் எதிர்மறையாய் பேசுவதை விழிப்புணர்வு வசனம் என்று இன்று பள்ளியில் கூட பேச்சுப் போட்டியில் பெண்விடுதலைக்காக இந்த வசனம் உபயோகப் படுத்தப் படுகிறது.

ஸ்ரீதேவி கமலிடம் கூறியிருந்தால் இந்த தாக்கம் ஏற்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் பேசியிருக்க வேண்டும்.


இது ஒரு மீள்பதிவு. மகளிர்தின ஸ்பெஷல்

11 comments:

  1. வித்தியாசமா யோசிக்கிறீங்க... :)

    ReplyDelete
  2. வாங்க தமிழ்பிரியன்....

    வருகைக்கும் கருத்து(பாராட்டு)க்கும் நன்றி

    ReplyDelete
  3. புரபைல் புகைப்படத்தில் உள்ள நபர் மோகமுள், கோலங்கள் அபிஷேக்கா?

    ReplyDelete
  4. //புரபைல் புகைப்படத்தில் உள்ள நபர் மோகமுள், கோலங்கள் அபிஷேக்கா?//நக்கல் தானே

    ReplyDelete
  5. வாங்க முரளிக்கண்ணன்,

    ப்ருனோ அவர்களே...


    அது நான்.. நாந்தான் ஐயா...

    ReplyDelete
  6. வாங்க இயற்கை, பாராட்டுதல்களுக்கு நன்றி

    ReplyDelete
  7. மாத்தி யோசிக்கிறீங்க !

    தல நீங்களும் மீள்பதிவா? கலக்குங்க. இதுலேர்ந்து என்னா தெரியுதுன்னா, நீங்களும் நானும் பெண் விடுதலைக்காகவும், மகளிர் தினத்துக்காகவும் முதல்லயே யோசிச்சிவச்சிட்டோம்னுதானே. என்ன நாஞ்சொல்றது?

    ReplyDelete
  8. வித்தியாசமான சிந்தனை...!

    ReplyDelete
  9. நல்லா சொல்லி இருகீங்க

    ReplyDelete
  10. வாங்க
    இளைய பல்லவன்

    நவநீதன்
    ஆ.ஞானசேகரன்

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails