Saturday, March 28, 2009

சாதீயத்தை உடைத்து என்.டி.ஆர் பேசும் வசனம்.

தெலுங்கு புத்தாண்டு கொண்டாடும் நல்ல நாளில் தெலுங்கு பேசும் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்த்துக்களைக் கூறி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளுவோம். இந்த யூ-ட்யூப் வீடியோவைப் பாருங்களேன்.

இந்தத்திரைப் படம் தமிழிலும் வந்திருக்கிறது. ஆனால் தெலுங்கில் மக்களை அதிகமாக ஈர்க்கும்படியாக எடுத்திருப்பார்கள். சாதிதீயத்தை எதிர்த்தும் நண்பனை ஆதரித்தும் தமிழில் பேசியதைவிட தெலுங்கில் அழகாக எடுத்திருக்கிறார்கள். என்.டி.ஆர் அவர்களின் உடல்மொழியும் குரல்வளமும் தெலுங்கு தெரியாதவர்களையும் ஆர்வத்துடன் பார்க்கவைக்கும்.

தான் பேச நினைக்கும் , பதிய நினைக்கும் கருத்துக்களை திரைப் படத்தில் செருகி காட்சியை வளப் படுத்தி தன் பிம்பத்தையும் வளப்படுத்துவதில்
என்.டி.ஆருக்கு நிகர் அவர்தான். பாருங்கள், ரசியுங்கள்

இந்தக் காணொளியின் தமிழாக்கத்தை 


சித்தூர்.எஸ்.முருகேசன் இந்த இடுகையில் கொடுத்து இருக்கிறார்.





8 comments:

  1. இந்தத்திரைப் படம் தமிழிலும் வந்திருக்கிறது. ஆனால் தெலுங்கில் மக்களை அதிகமாக ஈர்க்கும்படியாக எடுத்திருப்பார்கள். சாதிதீயத்தை எதிர்த்தும் நண்பனை ஆதரித்தும் தமிழில் பேசியதைவிட தெலுங்கில் அழகாக எடுத்திருக்கிறார்கள். என்.டி.ஆர் அவர்களின் உடல்மொழியும் குரல்வளமும் தெலுங்கு தெரியாதவர்களையும் ஆர்வத்துடன் பார்க்கவைக்கும்.
    ////

    தெலுங்கிலும் நல்ல படங்கள் உண்டுதான்!!

    ReplyDelete
  2. தான் பேச நினைக்கும் , பதிய நினைக்கும் கருத்துக்களை திரைப் படத்தில் செருகி காட்சியை வளப் படுத்தி தன் பிம்பத்தையும் வளப்படுத்துவதில்
    என்.டி.ஆருக்கு நிகர் அவர்தான். பாருங்கள், ரசியுங்கள்////

    உகாதி வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. வாங்க தேவன்மயம் சார், வருகைக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  4. இந்தப் படத்தோட பேரு தான வீர சூர கர்ணா. இந்தப் படத்தப் பொருத்த வரைக்கும் பலப்பல சாதனைகள் உண்டு. மூனே மாசத்துல மொத்தப்படத்தையும் முடிச்சி ரிலீசுக்கு வந்துருச்சாம். அதுவுமில்லாம படமும் ரொம்ப நீளம்ம்ம்ம்ம்ம். அதே மாதிரி... படத்தோட வெற்றியும் பெருவெற்றி. இந்தப் படத்த இப்ப வெளியிட்டாலும் வசூல்தானாம். இந்தப் படம் தமிழ்ல வந்துச்சா என்ன?

    ReplyDelete
  5. ஓரளவுதான் புரிகிறது. யு டியுப் வேற ஸ்லோ. எனக்கு ஒரு தெலுங்குப் படத்தில் "மா தெலுகுத் தல்லிகி மல்லே பூ தண்டா " என்ற Folk Song SPB பாடியிருப்பார். சுஹாசினி கூட அதில் நடித்திருப்பார் என்று ஞாபகம். அந்தப் பாடல் இடம் பெற்ற படம் அல்லது அந்தப் பாடலே (தனிப் பாடல் வேண்டாம் படப் பாடல்தான் வேண்டும்) தரவிறக்கத்துக்குக் கிடைக்குமா?

    ReplyDelete
  6. //G.Ragavan said...

    இந்தப் படம் தமிழ்ல வந்துச்சா என்ன?//

    கர்ணன்னு பேர் நண்பரே.., அதில் துரியோதனனாக அசோகன் நடித்திருப்பார். அவருக்கு தகுந்த வகையில் இந்தக் காட்சி அமைந்திருக்கும். முக்கியமாக இந்த வசனமும் ஆக்ரோஷமும் சுத்தமாக மிஸ்ஸிங்

    ReplyDelete
  7. // ஸ்ரீராம். said...

    ஓரளவுதான் புரிகிறது. யு டியுப் வேற ஸ்லோ. எனக்கு ஒரு தெலுங்குப் படத்தில் "மா தெலுகுத் தல்லிகி மல்லே பூ தண்டா " என்ற Folk Song SPB பாடியிருப்பார். //

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.., தேடிப் பார்க்கிறேன்..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails