Wednesday, March 11, 2009

இந்திய அணி பலவீனமான இரண்டாம்தர அணிதான்

தற்போது விளையாடிக் கொண்டுவரும் இந்திய அணியினை ஒரு இரண்டாம் தர அணி என்று சொன்னால் பலரும் திகைக்கக் கூடும். கல்கத்தா பாஷா (அவர்கள் மொழியில் தாதா) இந்த அணியை சிறந்த அணி அல்ல என்று சொன்ன போது பலரும் விமர்சிக்கத்தொடங்கி பிரித்து மேய்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதுதான் உண்மை.

இந்திய கிரிக்கெட் அணிகளில் மிகச் சிறந்த அணி என்று கூறினால் 1992ல் ஆஸ்திரேலிய உலகக் கோப்பைக்குச் சென்ற அணியினைக் கூறலாம்.
உடனே சிலருக்குக் கோபம் வரலாம். சி.கே. நாயுடு தலைமையினாலான இந்திய அணியே சிறந்து எனச் சொல்லலாம். சுதந்திர இந்தியாவின் முதல் கேப்டன் லாலா அமர்நாத் தலைமையினால் ஆன அணியே சிறந்த அணி என்று கூறலாம். நாம் 1983 உலகக் கோப்பைக்கு பிந்தைய கிரிக்கெட் அணிகளை மட்டும் பார்ப்போம்.

1992 அணியில்
உலகின் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் தலைசிறந்த ஆல்ரவுண்டர் கபில்தேவ் இருந்த அணி அது. அதுமட்டும் அல்லாமல் முதல் ஓவரிலேயே அடித்தாடும் பாணியை துவக்கி வைத்த ஸ்ரீகாந்த் அந்த அணியில் இருந்தார். முழுமையான ஆல்ரவுண்டர்கள் என்று சொல்லக் கூடிய ரவிசாஸ்திரி, மனோஜ் பிரபாகர் போன்றோரும் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர். இன்னொரு பெருமைக்குரிய அறிமுகமும் (உலகக் கோப்பைக்கு)அந்த அணியில் இடம் பெற்றிருந்தார். அவர் சச்சின். அவர் மட்டுமில்லாமல் கங்கூலி, மஞ்ரேகர், காம்ப்ளி போன்றோரெல்லாம் அந்த அணியில் இருந்தனர். பந்து வீச்சில் கபில், பிரபாகர், சாஸ்திரி, ஸ்ரீநாத் போன்றோரும் அணியில் இருந்தனர். கடைசி ஆளாக இறங்கி சிக்ஸர் அடிக்கும் வல்லமை வாய்ந்த பானர்ஜி கூட இருந்தார். சிறந்த கீப்பராகவும் கபில் சிறந்த தோழமை மட்டை பிடிப்பவராகவும் விளங்கிய கிரன் மூரே கூட அந்த அணீயில் இருந்தனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அந்த அணி சுற்றுப் போட்டிகளைக் கூட தாண்டவில்லை. அதற்குக் காரணமாக ஸ்ரீலங்கா (அப்போதைய பங்களாதேஷ்வகை அணி) உடன் நடந்த ஆட்டம் மழையால் பாதிக்கப் பட்டதுதான் காரணம் என்று கூறிக் கொண்டிருந்தனர்.

அவ்ருக்குப் பின் அசாருதீன் வந்தார். அந்த அணியில் யார் இருந்தார்கள் என்றே நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

அதற்கடுத்து டெண்டுல்கர் தலைமை, தலைமை நன்றாகத்தான் இருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றார். அந்த அணியில் ஹர்விந்தர் என்றொருவர் அவர்தான் பெரிய பந்து வீச்சாளர். குருவில்லா போன்றவர்கள் எல்லாம் அந்த அணியில் இருந்தனர். பின்னர் மீண்டும் அசாருதீன்.

இந்த அணி கூட மிகவும் பலம் வாய்ந்த அணிதான். மும்மூர்த்திகள் மட்டை, பந்து வீச்சில் உருவானார்கள். அவர்களது சாதனைகள் மிக அதிகம். ஆனால் அதன் காரணமாக அணிவெற்றி பெற்றதா என்றெல்லாம் கேட்க கூடாது. ஃபீல்டிங்கில் கூட ஜடேஜா, அசாருதீன், சச்சின் போன்றோர் மிகச் சிறப்பாக செயல் பட்டார்கள். இந்த கால கட்டத்தில் கிரிக்கெட் அணியில் ஐந்து மட்டையாளர்கள் நிரந்தர ( சச்சின், கங்கூலி, டிராவிட்,அசார், ஜடேஜா) இடம் பிடித்தனர். அவர்களுக்கு ஐம்பத்தெட்டு வயதில்தான் ஓய்வு. அதற்குப் பின்னர்தான் மற்றவீரர்களுக்கு வாய்ப்பு என்று கூட கல்லூரியில் பேசிக் கொள்வார்கள்.




எப்படியோ ஒரு சுபயோக சுபதினத்தில் அசாரும் ஜடேஜாவும் ஓய்வு பெற மற்ற வீரர்கள் அவ்வப்போது தலைகாட்ட ஆரம்பத்தினர். கும்ப்ளே பந்து வீச்சில் முண்ணனியில் திகழ்ந்தார். இவரது பந்து வீச்சைப் பற்றி கல்லூரியில் பேச்சு உண்டு. சுழல்பந்து மாதிரி வேகப் பந்து வீசுவதாகக் கூறிக் கொள்வார்கள். அவரது பந்து திரும்பும் என எதிர்பார்க்கும் போது திரும்பாமல் நேராக வந்து காலில் பட்டு எல்.பி.டபுள்யூ. முறையில் ஆட்டம் இழக்க வைப்பார். பிரசாத் கூட இவரைவிட கொஞ்சூண்டு வேகம்தான் அதிகம் காட்டுவார்.

கங்கூலி, டிராவிட் போன்றோரெல்லாம் ஓய்வெடுக்கும் வயதில் ஒருவர் அணிக்கு வந்தார். அவர்தான் ராபின்சிங்.

இவர்களை போல தனித்தன்மை வாய்ந்த கிரிக்கெட் வீரர் யாரேனும் இந்த அணியில் இருக்கிறார்களா.. சச்சினைத்தவிர, அவர்கூட அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்கிறார்.

சேவக், யுவராஜ் போன்றோர் அவ்வப்போது நல்ல ஸ்கோர்களைக் குவிப்பார்கள். அவ்வளவுதான். கங்கூலி, டிராவிட், அசார் போன்ற நீண்ட நெடிய பயணங்கள் கிடையாது. இன்னுமே அணியில் நிறந்தர இடம் உண்டா என்ற பயத்துடனே இருக்கிறார்கள். சேவக், யுவராஜ் நிலைமையே அப்படி என்றால் மற்ற மட்டையாளர்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

பந்துவீச்சில் கூட நிறந்தர பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு உண்டா. என்றால் இல்லை. எந்த பந்து வீச்சாளர் அணியில் இடம் பிடிப்பார் என்றே யாரும் யூகிக்க முடியாது. அப்படியே அணியில் இடம்பிடித்தாலும் தசைப் பிடிப்பு வந்து உட்கார்ந்து கொள்வார். வேறு யாராவது பந்து வீச்சாளராக இடம்பிடிப்பார். முதலில் எல்லாம் ஸ்ரீநாத் தசைப் பிடிப்பு வந்தால் கங்கூலி, சச்சின் போன்றோர்தான் பந்து வீச வர வேண்டும். இப்போது ஓரே த்ரத்தில் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் பிரட்லீ, அக்ரம் போல யாரும் கிடையாது. அதனாலேயே இந்தைய் அணியின் பந்து வீச்சினை எதிர் கொள்ள மற்ற அணியினரால் திட்டம் தீட்ட முடியவில்லை என்றே கூறலாம்.


இப்படி இந்திய அணி கடந்த கால்ங்களில் இருந்த பல இந்திய  அணிகளை விட பலம் குறைந்த அணியாகவே விளங்குகிறது. இருந்தாலும் தங்கள் பலத்திற்கு தகுந்தாற்போல ஒவ்வொருவரும் அணிக்காக உழைக்கிறார்கள். அணில்களைப் போல இருக்கும் ஒவ்வொருவரிடமும் எதை எடுக்க முடியும், எப்படி உபயோகிக்க முடியும் எனத்தெரிந்த அணித்தலைவர் டோனி இருக்கிறார்.
முன்னெல்லாம் சச்சின் அவுட் ஆனால் பின்னால் வருபவர்கள் தாக்குபிடித்தல் சிரமம். ஆனால் அணி தள்ளாடும் போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் மட்டையாளராகவும் டோனி விளங்குகிறார். அவரது தனிப் பட்ட சாத்னைகள் எதுவும் சென்ற ஆண்டு பேசப் படவில்லை. ஆனால் மட்டை பிடிப்பில் அவர்தான் ஐ.சி.சி. தரம் ஒன்று.
மட்டை பிடிப்பாளருக்குப் பின் நிற்பதால் மட்டையாளருக்குத் தெரியாமல் யுக்திகளை அமைக்க முடிகிறது. எனவே அணியின் பலம் என்று பார்த்தால் இந்திய அணி இரண்டாம் தர அணிதான். ஆனால் அணியின் பலவீனத்தை பலமாக மாற்றும் கேப்டன் இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறுகிறது.
டோனி கூட நாணல்போல வளைந்து கொடுக்கும் கேப்டன் போலத்தான் தோன்றுகிறார். கங்கூலி அதில் ஒரு சக்கரவர்த்தியாகவும் சர்வாதிகாரியாகவும் அல்லவா தோன்றுவார்.




ஏற்கனவே இதுபற்றி ஒரு இடுகையும் எழுதியிருக்கிறேன்.

ஆட்டக் காரர்களைப் பற்றி மாட்டும் பார்த்தால் இது இரண்டாம்தர அணிதான். ஒரு குழு என்று பார்த்தால் இதுதான் முழு முதல் அணி என்பது கூட புலப் படும்.

மீள்பதிவுதான் என்றாலும் ஓட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன

11 comments:

  1. allroundar gal ravi shastri, manoj prabhakar...siripputhan varuthu, ethavathu ezhuthanunnu ezhuthathiga sir please.

    Kavida

    ReplyDelete
  2. Banerjee oru england match thavira vera endha matchla sixer adicharnu sonna nalla irrukum. srikanth adicha '0' ku alave illa.. most number ducks in world cup. Indha teama edha vachu no.1 nu solrenga.. Andha teamoda winning %um ippo irrukura teamoda winning %um eduthu parunga.. Not even close.

    ReplyDelete
  3. சுரேஷ்

    நீங்கள் கூறியதில் பாதி சரி - ஒருநாள் போட்டிகளில் 1992க்கு பிறகு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இந்திய அணி மட்டையடி மூலமாகவே போட்டிகளை வென்று வந்துள்ளது. அதில் 95 சதவித வெற்றிகளை பெற்று தந்தவர்கள் சச்சின், சேவாக், கங்குலி

    ஒரிரண்டு வெற்றிகளை பெற்று தந்தது என்றால் டோனி, திராவிட், யுவராஜ்.

    ReplyDelete
  4. இந்த இடைப்பட்ட காலகட்டதில் பந்து வீச்சின் மூலம் பெற்ற வெற்றி என்றால் என் நினைவுக்கு சட்டென்று வருவது

    1. இலங்கைக்கு எதிராக ஸ்ரீநாத்தின் ஒரு ஆட்டம்
    2. இலங்கைக்கு எதிராக 1998ல் சார்ஜாவில் நடந்த
    ஒரு ஆட்டம் http://content.cricinfo.com/statsguru/engine/match/65883.html
    3. 2003 உலக கோப்பையில் இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டம்

    இது தவிர ஒரு நாள் போட்டிகளில் இந்திய பந்து வீச்சாளர்கள் எதிர் அணியினரை பெரிதாகபயமுறுத்த வில்லை.

    ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அதுவும் இந்தியாவிற்குள் நடக்கும் போட்டிகளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிதும் பங்களித்தனர்.

    ReplyDelete
  5. அந்த நிலை மாறியது சென்ற வருடம் தான்.

    முக்கியமாக இசாந்த் பந்தில் பாண்டிங் நடனாமடியது ஒரு திருப்பு முனையே

    அதன் பிறகு சென்ற வ்ருடம் ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றி பந்து வீச்சின் மூலமே

    இது குறித்த என் இடுகை “இந்திய அணி பந்து வீச்சின் மூலம் பெற்ற அரிய வெற்றி”

    ReplyDelete
  6. எனவே 1992 காலகட்டத்தில் இருந்த அணியை, பந்து வீச்சு, அதுவும் ஒரு நாள் போட்டியில் பந்து வீச்சு என்ற அளவில் வேண்டுமானால் சிறந்த குழுவாக கருத முடியுமே தவிர ஓட்டு மொத்தமாக சிறந்த அணியாக கருத முடியாது. ஏனென்றால் மட்டையர்களின் பங்களிப்பு அவ்வளவு இல்லை

    என்னைப்பொருத்த வரையில் சிறந்த அணி என்றால் அது 2002-2003ல் விளையாடிய அணி என்றே நினைக்கிறேன்.

    ஆனால் இன்று வரை சச்சின் விளையாடினால் மட்டுமே இறுதிப்போட்டியில் வெல்ல முடியும் என்ற நிலை இருப்பதுதான் வருத்தம்

    ReplyDelete
  7. சச்சின் சிறந்த ஃபீல்டர் அல்ல, ஜடேஜா ஒய்வு பெற வில்லை நீக்கப்பட்டார், மனேர்ஜ் பிராபகர் சிறந்த ஆட்டக்காரர் இல்லைனு அவரே சொன்னார். பவுலிங் இப்போ தான் சிறப்பாக இருக்கு. ஜாகீர் கான், இஸாந்த் சர்மா, ஓரளவுள்ள ஹர்பஜன் சிங், நாலு, அஞ்சு வேக பந்து வீச்சாள்ர்கள். பாட்டிங்ல கன்ஷிஷ்டன்ஷி இல்லை என்பது உண்மை தான்

    ReplyDelete
  8. //சச்சின் சிறந்த ஃபீல்டர் அல்ல//

    அவர் ராபின் சிங், கைப், யுவராஜ், அசார், திராவிட் அளவிற்கு பீல்டிங் செய்பவர் அல்ல என்பது உண்மை என்றாலும்

    இத்தனை சர்வதேச ஆட்டங்களில் அவர் கீழே போட்ட காட்ச்கள் டோனி கீழே விட்டதை விட குறைவா அதிகமா

    இத்தனை சர்வதேச ஆட்டங்களில் அவர் எத்தனை பவுண்டிரிகளை தவற விட்டுள்ளார் என்றும் பார்க்க வேண்டும்

    --

    ReplyDelete
  9. கண்டிப்பாக, நிகழ்காலங்களில் டோனியின் கீப்பிங் படு மோசமாக இருக்கிறது தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 4 வது ஒரு நாள் போட்டியில் கூட மிக எளிதாக செய்ய வேண்டிய ஸ்டம்பிங்(மெக்கல்லத்துக்கு எதிரான)ஐ தவற விட்டார். மேலும் ரைடருக்கு எதிரான கேட்ச்களை விட்டார். கேப்டன் பதவி, பேட்டிங் ஆகிய அலங்காரங்களைக் கொண்டு மோசமான கீப்பிங்கை மறைத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கு டெண்டுல்கரின் ஃபீல்டிங் ஒன்றும் மோசமானதல்ல. மேலும் ஸ்டெம்ப் குறி வைத்து த்ரோ துல்லியமாக எறியும் வீரர்களில் சச்சினும் ஒருவர்

    ReplyDelete
  10. வாருங்கள் நண்பர்களே.... வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்கள்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails