Tuesday, March 8, 2011

இது ஒரு கற்புக்கரசியின் கதை

Mahabharat
பாரதத்தில் நடைப் பெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள்தான் இவை....

பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் செல்லுங்கள். இல்லையேல் சில வருடங்களுக்கு முன் உங்கள் தாத்தா பாட்டியின் சொற்களை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் போதாதென்றால் நீங்கள் படித்த அம்புலிமாமா, சிறுவர் மலர் எதையாவது ரெஃபரன்ஸ் புத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கதைக்கு வருவோம்.

.....................................................................................................................

அந்த மாபெரும் நாட்டின் இளவரசனுக்கு பெண் தேடுகிறார்கள். அண்ணன், தம்பி இருவருமே பலசாலிகள்..

முதலில் அண்ணனுக்குப் பெண் தேடுகிறார்கள்.

தம்பிக்கு பெண் கொடுக்க பலரும் தயாராக இருக்கிறார்கள். அண்ணனுக்கு எல்லோரும் தயங்குகிறார்கள்.

இந்தியத்துணைக்கண்டத்திலே ஏற்க்குறைய மேற்காசிய நாடுகளுக்குச் செல்கிறார்கள். பெண் கேட்கிறார்கள். மூத்த இளவரசனுக்கு பெண் கொடுக்க தயங்கி நிற்கிறார்கள். பெண்கேட்கச் சென்ற குடும்பப் பெரியவர், போருக்கு அழைக்கிறார். அந்நாட்டு இளவரசியின் அனைத்து அண்ணன்களையும் கொள்கிறார்கள். அந்நாட்டின் மன்னனையும் கொல்கிறார்கள். அந்த நாட்டையே அழித்து விட்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் அந்த நாட்டு இளவரசி வருகிறாள். நாட்டின் சண்டையை முடிவுக்கு கொண்டுவரவும், தனது சின்னத்தம்பியைக் காப்பாற்றவும் திருமணத்திற்குச் சம்மதிக்கிறார்.

ஆனால் இந்த கொடிய உலகத்தைக் காண சகிக்காமல் தனது கண்ணைக் கட்டிக் கொள்கிறார்.

அந்த இளவரசிதான் பாரதப் போரின் மகாராணி காந்தாரி அவர்கள்.

அவர் கண்ணைக் கட்டிக் கொண்டது பீஷ்மர் முதலானவர்களை பார்க்க விரும்பாமையா? இல்லை திருதிராஷ்டிரன் பார்க்காத உலகத்தை தானும் பார்க்க விரும்பாத ஒரு பாசத்தின் காரணமாகவா...............

..................................................................................................................

காந்தார தேசத்திலிருந்து தப்பி வரும் குட்டி இளவரன் சகுனி ஒரு சபதம் செய்கிறார். தனது நாட்டை சின்னா பின்னப் படுத்திய பீஷ்மரின் நாட்டையும் வம்சத்தையும் அழிப்பதாக சபதம் செய்கிறார். பின்னர் படிப்படியாக காய் நகர்த்தி பாரதப் போருக்கு காரணமாக அமைந்து கௌரவர்களையும் பாண்டவர்களின் மகன்களையும், ஏராளமான போர்வீரர்களையும் அழிக்கிறார். ஏறக்குறைய தனது சபதத்தில் வெல்கிறார்.

எதிர்மறை நாயகனாக பெருவாரியான வெற்றிகளைக் குவித்த சகுனி .. மகாபாரத்தின் நாயகனா? வில்லனா?

...........................................................................................................
மற்றுமொரு சுவாரசியமான ஒரு ஒற்றுமை... பாண்டவர்களுக்கு தந்தை ஐவர். ஐவருக்கும் மனைவியாக திரவுபதி...




.............................................................................................

18 comments:

  1. இப்பத்தான் உப பாண்டவம் படிச்சுக்கிட்டு இருக்கேன். புனைவுகளுக்குள் புகுந்து புறப்பட்டுக்கிட்டே வந்து தலை திருகிக்கிடக்கு. இதுலே நீங்க வேற...இப்படிக் கிளப்பி விடுறீங்க!!!!

    ReplyDelete
    Replies
    1. எல்லா காலங்களில் நல்ல தீயவை யும் இருக்கத்தான் செய்கிறது அதை நாம் எவ்வாறு எடுத்து கெள்கிறோம் என்பதில் தான்உள்ளது

      Delete
  2. வாங்க துளசி கோபால் மேடம், உபபாண்டவத்திற்கு லின்க் இருந்தால் கொடுங்களேன்.

    ReplyDelete
  3. //மற்றுமொரு சுவாரசியமான ஒரு ஒற்றுமை... பாண்டவர்களுக்கு தந்தை ஐவர்.//
    நான்கு பேரா, ஐந்து பேரா

    ReplyDelete
  4. // பாண்டவர்களுக்கு தந்தை ஐவர்.//?

    தாய் -குந்தி

    தகப்பன் - மகன் பெயர் இதோ

    இந்திரன் -அர்ச்சுனன் -3
    வாயு -பீமன் -2
    எமன் -தருமன் -1

    பாண்டுவின் இரண்டாவது மனைவி பெயர் -மாத்திரி -இவருக்கு பிறந்தவர்கள்

    நகுலன் -4

    சகாதேவன் -5 --தந்தை பாண்டுவா? வேரு யாரா?தெரியவில்லை

    பாண்டுவை குந்தி மணக்கும் முன் சூரியன் மூலம் பிறந்தவன் கர்ணன்.

    என்ன சார் அரசி மெகாதொடர் போல் இருக்கிறதா?

    ஆபாசத்தில் விஞ்சி நிற்பது இராமாயனத்தை விட இந்த மகாபாரதம் தான்.

    அதற்கு உதாரனம் தான் பாஞ்சாலி. 5 பேர் பத்தாது என்று 6 வதா கர்ணன் மீதும் ஆசைப்பட்டாளாம்.

    அசிங்கம் சார்.
    இயலுமானால் "மகாபாரத ஆராய்ச்சி" என்னும் ஆய்வு நூலைப் படிக்க வேண்டுகிரேன்.

    நன்றி சார்

    ReplyDelete
  5. // பாண்டவர்களுக்கு தந்தை ஐவர்.//? எப்படி?

    தாய் -குந்தி

    தகப்பன் - மகன் பெயர் இதோ

    இந்திரன் -அர்ச்சுனன் -3
    வாயு -பீமன் -2
    எமன் -தருமன் -1

    பாண்டுவின் இரண்டாவது மனைவி பெயர் -மாத்திரி -இவருக்கு பிறந்தவர்கள்

    நகுலன் -4

    சகாதேவன் -5 --தந்தை பாண்டுவா? வேறு யாரா?தெரியவில்லையா அசுவினி தேவர்கள் என்ற இருவராம் எப்படி இருக்கிறது கதை("" இந்த பகுதி முன்பு இட்ட பின்னூட்டத்தில் தட்ட்ச்சு செய்யும் போது "அசுவினி தேவர்கள் என்ற இருவராம் எப்படி இருக்கிறது கதை "விடுபட்டு விட்டது- மன்னிக்கவும் )

    பாண்டுவை குந்தி மணக்கும் முன் சூரியன் மூலம் பிறந்தவன் கர்ணன்.

    என்ன சார் அரசி மெகாதொடர் போல் இருக்கிறதா?

    ஆபாசத்தில் விஞ்சி நிற்பது இராமாயனத்தை விட இந்த மகாபாரதம் தான்.

    அதற்கு உதாரனம் தான் பாஞ்சாலி. 5 பேர் பத்தாது என்று 6 வதா கர்ணன் மீதும் ஆசைப்பட்டாளாம்.

    அசிங்கம் சார்.
    இயலுமானால் "மகாபாரத ஆராய்ச்சி" என்னும் ஆய்வு நூலைப் படிக்க வேண்டுகிரேன்.

    நன்றி சார்

    ReplyDelete
  6. http://thamizhoviya.blogspot.com/2009/04/blog-post_6959.html இந்த சுட்டியையை படிக்க வேண்டுகிறேன்
    நன்றி சார்

    ReplyDelete
  7. ஹ்ம்ம் ஒரே காரசாரம் மாண டாப்பிக் ;) சொ செலைன்ஸ்

    ReplyDelete
  8. வாங்க புருனோ சார், தமிழ் ஓவியா சார், தமிழினி சார், சுரேஷ் சார், மற்றும் சேரபாலா சார்...

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...

    ReplyDelete
  9. காந்தாரி, சகுனி மேட்டர்களையும் கொஞ்சம் அலசுங்களேன்..

    ReplyDelete
  10. நன்றி சுரேஷ்

    காந்தாரி விஷயம் இப்பதான் கேள்விபடறேன்.

    யோசிக்க வேண்டிய விஷயம்......

    ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  11. //ரிஷி (கடைசி பக்கம்) said...

    நன்றி சுரேஷ்

    காந்தாரி விஷயம் இப்பதான் கேள்விபடறேன்.

    யோசிக்க வேண்டிய விஷயம்......
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    ReplyDelete
  12. மகா பாரதத்தை படித்து போட்டு கருத்து சொல்ல வாரேன்..ங்க.

    ReplyDelete
  13. ஹும்ம் அன்னிக்கே வெஸ்ட்டர்ன் ஸ்டைல்ல இருந்திருக்காங்க! சானியா மிர்சா போட்டோவில நீங்க போட்டதையே நானும் சொல்லிக்கிறேன்!

    ReplyDelete
  14. லிங்கு இல்லையே:(

    புத்தகம் வாசித்தேன்.

    ReplyDelete
  15. ராமாயணத்துல ஹீரோ தன் மனைவியை சந்தேகித்த ராமனா?மாற்றான் மனைவியை கற்புடன் திருப்பி அனுப்பிய ராவணனா?

    ReplyDelete
  16. என்னை பொறுத்தவரைக்கும் ராவணன் தான் ்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails