அகில உலக கிரிக்கெட் கோப்பை நிர்வாகிகளுக்கு,
ஐயா,
எங்கள் நாட்டில் நாங்களும் கிரிக்கெட் சங்கம் வைத்து இருக்கிறோம். நீங்கள் சில பல ஆண்டுகளாக உலக்கோப்பை போட்டிகளை நடத்திவருவதைக்கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் நாட்டில் நாங்களும் கிரிக்கெட் போட்டிகளை வளர்த்த விரும்புகிறோம். தரத்தினையும் வெகுவாக உயர்த்திட விரும்புகிறோம்.
உங்களுக்கு மகிழ்ச்சித் தரக்கூடிய செய்தி எங்கள் நாட்டில் சென்ற ஆண்டு மட்டும் 23 கிரிக்கெட் மட்டைகளும் 86 கிரிக்கெட் பந்துகளும் விற்பனை ஆகி உள்ளன. சென்ற ஆண்டைவிட இது மிக மிக அதிகம்.
நீங்கள் மனதுவைத்தால் எங்கள் நாட்டில் வளர்ந்து வரும் கிரிக்கெடை இன்னும் அதிகரித்துவிடலாம். எங்களுக்கும் எங்களைப் போன்ற வளரும் நாடுகளுக்கும் உலக் கோப்பை போட்டிகளில் வாய்ப்புத்தாருங்கள்.
நாங்கள் உள்ளே வந்தால் கிரிக்கெட்டில் மேலும் மேலும் பல சாதனைகள் புரிய உதவியாக இருப்போம். இந்த உலகக் கோப்பையையே எடுத்துக் கொள்ளுங்கள். மிக வேகமான சதம். அதிக ரன் குவிப்பு, குறைந்த ரன்களில் அவுட் ஆக்குதல் போன்ற பல பல பல சாதனைகள் எங்களைப் போல வளரும் நாடுகளுக்கு இடையேயான போட்டிகளில்தானே நடைபெறுகின்றன.
ரசிகர் எல்லோருக்குமே நாங்கள் விளையாடும் போட்டிகள்தான் பிடிக்கின்றன
அதைவிடுத்து ஏற்கனவே விளையாடிய நாடுகளிடையேயான போட்டிகளைப் பார்ப்பதற்கே வெறுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் களம் இறங்கினாலே எதிர் அணியினரின் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் வாந்தி பேதி வருகிறதாம் .அந்த அளவிற்கு பயப் படுகிறார்கள்.
முக்கியமான செய்தி ஒன்று. எங்கள் நாட்டில் வீட்டிற்கு வீடு டி.வி. உள்ளது. எங்கள் கருத்தையும் மனதில் வைத்து. அடுத்த உலகக் கோப்பையின் போது பதினாறு குழுக்களாகப் பிரியுங்கள். அதில் முதலிடம் பெறும் அணியை வைட்த்து ஒரு ஸ்வீட்16 நடத்துங்கள். பின்னர் வளக்கம்போல் போட்டிகளை நடத்திக் கொள்ளுங்கள். குழுவில் முதலிடம் பெற ஒவ்வொரு அணியும் கடுமையாக உழைப்பார்கள். எங்களோடு மோதும் போட்டியில் தோற்றால் எல்லாம் முடிந்து என்பதால் ஆட்டமும் நன்றாக இருக்கும். எங்கள் நாட்டுக் கிரிக்கெட்டும் வளர்ந்துவிடும்

நன்றி
இப்படிக்கு
சப்ளிங் நாட்டு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள்
( தேசிய அளவிளான தனியார் அமைப்பு)
No comments:
Post a Comment