Sunday, May 12, 2013

MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

தமிழ்நாட்டில் தமிழ் மண்ணில் கொண்டாடும் விழாக்கள் பல. அதில் பொங்கல் தனிச் சிறப்பு வாய்ந்தது. அதில் மாட்டுப் பொங்கல் தனித்தன்மை வாய்ந்தது.

விவசாயத்திற்கு பலவிதங்களில் மாடுகளின் பங்கு முக்கியமானது. காளைகள் உழுவதற்கு உதவுகின்றன. வண்டிகளை இழுப்பதன் மூலம் பயணத்திற்கும் சரக்கு இடமாற்றத்திற்கும் மிகவும் உதவுகின்றன. பல எந்திரங்களும் எந்திரங்களின் மூலம் இயங்கும் வாகனங்கள் உபயோகத்தில் இருந்தாலும் காளைகளின் பங்கு முக்கியமானது. பசுக்களும் சளைத்தவை அல்ல. பால் பொருட்கள் இல்லாமல் நம்மால் நமது வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாடுபோல உழைப்பு என்பதே விசுவாததிற்கும் கடின உழைப்புக்கும் கூறப் படும் வார்த்தையாக இருக்கிறது.

அவ்வளவு கடுமையாக உழைக்கும் மாட்டுக்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது. அன்று அதிகாலையிலேயே மாட்டைக் குளிப்பாட்டி விடுவார்கள். அன்றைய தினம் விரும்பிய வண்ணம் மாட்டுக்கு மேய்ச்சல் இருக்கும். விரும்பிய வண்ணம் வண்ணங்கள் தீட்டி, கொம்புகள் அலங்கரித்து சில இடங்களில் துணிகள் கூட அணிவித்து மகிழ்வார்கள்.

மாலைப் பொழுதில் பொங்கல்வைத்து அதனை மாட்டுக்கு ஊட்டி அழகு பார்த்து பின்னரே குடும்பத்தினர் உண்டுமகிழ்வார்கள்.

குறிப்பாக அன்றைய தினம் மாட்டுக்கு எந்த வேலையும் கொடுக்க மாட்டார்கள்.

========================================================================

குடும்பத்திற்காக கடினமாக உழைக்கும் இன்னொரு ஜீவன் உண்டு. அவர்தான் அன்னை. அவர் எவ்வள்வு பெரிய நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் குடும்பத்தின் அடிப்படை வேலைகள் அனைத்தையும் செய்வார். குழந்தை வளர்ப்பில் அவரது பங்கு மிக முக்கியமானது.

வெள்ளையர் கண்டுபிடித்த MOTHER'S DAY அன்று அன்னையருக்கு அனைவரும் மரியாதை செலுத்துவார்களாம்.
அன்றும் கூட இனிப்புகளையும் பலகாரங்களையும் செய்து கொண்டாடினால் அதையும் அன்னைதான் செய்ய வேண்டியிருக்கிறது. தாயாருக்கு மட்டும் புத்தாடை என்பதை அந்த தாயாரே விரும்புவதில்லை.


எனவே அன்னையர் தினத்தை அனுதினமும் கொண்டாடி அன்னையரைப் போற்றுவோம். (அதற்காக இன்று கொண்டாடாமல் இருந்து விடவே வேண்டாம். அவருக்கு ஓய்வு கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம்). அன்னை என்றால் உங்களைப் பெற்ற அன்னையை மட்டுமல்ல.
உங்கள் குழந்தையைப் பெற்ற அன்னையையும் தான்.

=======================================================================
இவரும் கூட அம்மாதான்




=================================================================


சில குடும்பங்களில் அம்மா செய்யும் வேலைகளுக்காகத்தான் வேலைக்காரி வைத்திருக்கிறார்கள். பல குடும்பங்களில் அம்மாதான் அந்த வேலைகளைச் செய்கிறார்.

நாளைய தினம் பதிவர்கள் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய கலந்துரையாடலுக்குச் செல்லப் போவதால் இந்தப் பதிவினை இன்றே வெளியிட்டு உள்ளேன்.

குழந்தைகள் மீதான வன்முறைபற்றி நான் எழுதிய இந்தப் பதிவில்

பின்னூட்டத்தில்

"குழந்தையை வேலைக்காரி மாதிரி நடத்தாதே" என்று சொல்லும்போதே, வேலைக்காரிக்கும், வீட்டில் சின்னச்சின்ன வேலைகள் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் எளிதில் புரிந்துவிடும். இதில் நீங்கள் குழம்பிக்கொள்ள வேண்டியதில்லை.
என்று நண்பர் குறிப்பிட்டிருந்தார்.

எனது பதிலில்



பல நேரங்களில் சின்ன சின்னவேலைகளுக்குக் கூட வேலையாட்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். நம்வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளும் நாம் செய்ய வேண்டிய வேலைகள்தான். இதில் வேலைக்காரி மாதிரி நடத்தாதே. என்ற வாக்கியத்தின் பொருளைக் கூற முடியுமா? வேலைக்காரர்கள் என்பவர்கள் அடிமைகள் அல்ல. உங்கள் வேலையையைச் செய்ய உங்கள் உடலும் நேரமும் இடம் கொடுக்காததால் விலை கொடுத்து வேலையை வாங்குகிறோம். அப்படிப்பார்த்தால் உங்களைவிட வேலைக்காரர்களுக்கு சுயமரியாதை அதிகமாக இருக்கவேண்டும். வேலைக்காரர்களைப் போல் குழந்தையை நடத்தாதே என்ற வாசகம் எழும்போதே வேலைக்காரர்களையும் குழந்தைகளையும் அடிமையாக நடத்துவதாக பொருள்படும் அல்லது உங்கள் வேலையை மற்றவர்கள் மேல் திணிக்கும் கொடூர பழக்கத்திற்கு குழந்தையை அடிமைப் படுத்துவதாகப் பொருள்படாதா......


மேலும் இது தொடர்பான விவாதங்களைப் படிக்க இங்கே செல்லவும்

கலந்துரையாடலுக்குச் செல்லும் முன் இது போல இன்னும் பல கேள்விகளுடன் செல்லுங்கள். தெளிவு படுத்திக் கொண்டுவாருங்கள்

டிஸ்கி;- மீள்பதிவுதான். முதன்முதலில் வெளிவந்த தேதியறிய முதல் பின்னூட்டம் பார்க்கவும்

27 comments:

  1. அன்னையைப்போல் ஒரு தெய்வம் இல்லையே!

    அம்மாவை வணங்காது உயர்வில்லையே! போன்ற திரைப்படப்பாடல்கள் ஞாபகம் வருது :)

    உங்கள் தாய்க்கு என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள் சுரேஷ்!

    ReplyDelete
  2. //வருண் said...

    அன்னையைப்போல் ஒரு தெய்வம் இல்லையே!

    அம்மாவை வணங்காது உயர்வில்லையே! போன்ற திரைப்படப்பாடல்கள் ஞாபகம் வருது :)
    //


    ஞாபகம் வருவது நல்ல விஷயம் தல.., இனிமேல் நான் குறிப்பிட்டுள்ள பாடலையும் நினைவுகூறுங்களேன் தல..,


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  3. //தமிழ்நெஞ்சம் said...

    s u p e r
    //


    நன்றி தல..,

    ReplyDelete
  4. நன்று. வெகு நன்று

    ReplyDelete
  5. //புருனோ Bruno said...

    நன்று. வெகு நன்று
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  6. அண்ணா
    அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
    ஜனனம் = ஜென்மம்

    ReplyDelete
  7. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! ஆயிரந்தான் காரணங்கள் சொன்னாலும், என்னால் 'மாடு மாதிரி குடும்பத்துக்காக உழைக்கும் இன்னொரு ஜீவன், அன்னை" என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை நண்பரே! அதற்காக உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றி கூறவில்லை..!

    என்னைப் பொறுத்தமட்டில், அன்னை எனப்படுபவர் எப்பொழுதும் கடவுளோடு மட்டுமே ஒப்பிடப் படவேண்டியவர். உங்கள் வித்தியாச ஒப்பீடு நன்றாக இருந்தாலும்.. அதைப் படித்ததும் என் மனதில் ஒரு வித நெருடல் ஏற்பட்டதால் இதை எழுதுகிறேன்.

    அன்னை என்பவர் குடும்பம் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று தன்னலமற்ற தன்னிகரில்லாத உழைப்பைத் தருபவர்.

    அன்னையர் தினம் மட்டுமல்ல..தந்தையர் தினம், காதலர் தினம், ஆசிரியர் தினம், இப்படி எல்லா தினங்களையும் அனுதினமும் வாழ்க்கையில் அனுசரித்தால், வாழ்க்கை வளமாகும்!

    இது எனது பணிவான கருத்து. எதிர் வாதமல்ல நண்பரே!

    ReplyDelete
  8. //இது நம்ம ஆளு said...

    அண்ணா
    அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
    ஜனனம் = ஜென்மம்
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    படித்துவிட்டேன்

    ReplyDelete
  9. //கிருஷ்ணா said...

    எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! ஆயிரந்தான் காரணங்கள் சொன்னாலும், என்னால் 'மாடு மாதிரி குடும்பத்துக்காக உழைக்கும் இன்னொரு ஜீவன், அன்னை" என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை நண்பரே! அதற்காக உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றி கூறவில்லை..! //



    நெருடலான வார்த்தையை மாற்றிவிட்டேன் நண்பரே..,

    ReplyDelete
  10. //கிருஷ்ணா said...


    அன்னையர் தினம் மட்டுமல்ல..தந்தையர் தினம், காதலர் தினம், ஆசிரியர் தினம், இப்படி எல்லா தினங்களையும் அனுதினமும் வாழ்க்கையில் அனுசரித்தால், வாழ்க்கை வளமாகும்!

    இது எனது பணிவான கருத்து. எதிர் வாதமல்ல நண்பரே!
    //


    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தல...,


    அன்னையர் தினம் கொண்டாடுவது போல் காதலர்ர் தினத்தை கொண்டாடினால் பிரச்சனை இல்லை.

    வேறுமாதிரி கொண்டாடுவதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

    ReplyDelete
  11. வெள்ளையர் கண்டுபிடித்த MOTHER'S DAY அன்று அன்னையருக்கு அனைவரும் மரியாதை செலுத்துவார்களாம்.
    அன்றும் கூட இனிப்புகளையும் பலகாரங்களையும் செய்து கொண்டாடினால் அதையும் அன்னைதான் செய்ய வேண்டியிருக்கிறது. தாயாருக்கு மட்டும் புத்தாடை என்பதை அந்த தாயாரே விரும்புவதில்லை.
    ///
    ஆஹா! கலக்கீட்டீக!!

    ReplyDelete
  12. கலக்குறீங்க.
    காலத்திற்கேற்ற பதிவு.
    மாட்டிற்கு இன்னொரு பெயர் கோமாதா. பிரித்துப் பார்த்தால் கோ-மாதா, அதாவது அரச மாதா என்று அர்த்தம்.

    ReplyDelete
  13. //thevanmayam said...

    சுரெசு!!!

    அருமை!!
    //

    நன்றி தல..,

    ReplyDelete
  14. //வலசு - வேலணை said...

    கலக்குறீங்க.
    காலத்திற்கேற்ற பதிவு.
    மாட்டிற்கு இன்னொரு பெயர் கோமாதா. பிரித்துப் பார்த்தால் கோ-மாதா, அதாவது அரச மாதா என்று அர்த்தம்.
    //



    வருக்கைக்கும் செறிவுமிக்க கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  15. என்ன சொல்ல வரீங்கன்னு புரியலே. மாட்டையும், அம்மாவையும் எதுக்கு வீனா கலக்கி ஒரு பதிவு?

    ReplyDelete
  16. //Vinitha said...

    எதுக்கு வீனா கலக்கி ஒரு பதிவு?//

    கலக்கவே இல்லை அம்மையார் அவர்களே..

    மீண்டும் பாருங்கள். இரண்டு பகுதிகளுக்கு நடுவில் பெரிய இரட்டைக் கோடுகள் போட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  17. //Vinitha said...

    என்ன சொல்ல வரீங்கன்னு புரியலே//


    உங்களைப் போன்றவர்களுக்கும் புரியும் வகையில் எழுத வேண்டும் என்பதுதான் என் ஆசை. விரைவில் கற்றுக் கொள்வேன், கவலை வேண்டாம் அம்மையார் அவர்களே..

    ReplyDelete
  18. //பிரியமுடன்.........வசந்த் said...

    அருமை...........
    //


    நன்றி தல..,

    ReplyDelete
  19. ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க... நான் முதலிலேயே இந்த பதிவை படித்துவிட்டேன் ஆனால் பின்னூட்டம் பிறகு இடலாம் என்று இருந்து விட்டேன்...

    அருமையான ஒரு பதிவு... சிறந்த விளக்கம் அன்னை பற்றி! :)

    ReplyDelete
  20. //ஆகாய நதி said...

    ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க... நான் முதலிலேயே இந்த பதிவை படித்துவிட்டேன் ஆனால் பின்னூட்டம் பிறகு இடலாம் என்று இருந்து விட்டேன்...

    அருமையான ஒரு பதிவு... சிறந்த விளக்கம் அன்னை பற்றி! :)
    //

    மிகவும் நன்றி தல..

    ReplyDelete
  21. //தமிழ்நெஞ்சம் said...


    Politicians' Drama 2009//

    வருக்கைக்கும் அழைப்புக்கும் நன்றி தல படித்து விட்டேன்.

    ReplyDelete
  22. தாயை பற்றிய நல்ல பதிவு.. மாடுபோல அவர் கசக்கி பிழியப்படுவது உண்மைதான்.. அந்த நிலை மாறினால் சரி..;-) பதிவர் கூட்டம் போயிட்டு வந்து அதைப் பத்தி விரிவாப் போடுங்க தல..

    ReplyDelete
  23. //கார்த்திகைப் பாண்டியன் said...

    தாயை பற்றிய நல்ல பதிவு.. மாடுபோல அவர் கசக்கி பிழியப்படுவது உண்மைதான்.. அந்த நிலை மாறினால் சரி..;-) பதிவர் கூட்டம் போயிட்டு வந்து அதைப் பத்தி விரிவாப் போடுங்க தல..
    //

    வருக்கைக்கும் புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி தல,,

    ஆனால் தாய்க்கு அன்று கூட ஓய்வு கிடையாது.
    ...................
    நான் சென்னையிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் பதிவர் கூட்டத்திற்குச் செல்ல இயலவில்லை.

    ReplyDelete
  24. நண்பரே.. மே 10ல் நடைபெற்ற அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டோம். அருமையாக நடத்தினார்கள் நம் நண்பர்கள். அது பற்றி பதிவும் போட்டாச்சு.
    http://tamiluzhavan.blogspot.com/2009/05/good-touch-bad-touch.html

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails