Sunday, March 1, 2009

படையப்பா- ஒரு அலசல்

சூப்பர் ஸ்டார் படம் என்றாலே எல்லாருக்கும் கொண்டாட்டம்தான். ஒரு படம் பார்த்தாலே நூறு படம் பார்த்த திருப்தியைக் கொடுப்பவை சூப்பர் ஸ்டாரின் படங்கள். அதிலும் படையப்பா இதுவரை வந்த சூப்பர் ஸ்டாரின் படங்களுக்குள் மிகவும் சிறப்பாக அமைந்த படம். அந்த திரைக் காவியத்தில் எத்தனை எத்தனை சரித்திரங்கள் அடங்கியுள்ளன என்பதைக் காண்லாம்.
http://mail-bag.com/Images/Padayappa_small_t.gifhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVUvazSTU_CD2BbzeKFNTO_fYjXqnyaMySrF-QV3aHokB2Z2ckm3Y0FSNseHgKhMUijjRUddkJdICIrr-o80xMRt20KVY3cVwUklrS3qPmwp2tXausQ13zhSEMvJF1SELu8ih6ZcXUY2I/s400/Padayappa.JPG


துவக்கத்திலேயே நீதி தவறாத தந்தையாக வருகிறார் நடிகர் திலகம் அவர்கள். ஆனால் சின்னக் கவுண்டர், எஜமான், நாட்டாமை போன்ற படங்கள் பார்க்காதவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்த காட்சிகள் அவை. ஒரு அழகான மேடை அமைத்து அதன் மேல் கையில் வேலுடன் சிம்மாசனத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி பல சரித்திரங்களை நமக்கு கண்முன்னே கொண்டுவரும்.
http://www.indiadirect.com/superstar/special/rajni/0012.jpg


அடுத்ததாக எதிலும் முதன்மையாக வரத்துடிக்கும் நாயகியாக பழைய குமரிக்கோட்டம் வகைப் படங்களை பார்க்காதவர்களுக்கு கண்முன்னே காட்சியளிக்க வைத்த படம்.
Kumari Kottam


இளவரசியை விட்டுவிட்டு இளவரசியின் வேலைக் காரியைக் காதலித்து நாயகன் திருமணம் செய்து கொள்ளும் காட்சி அமைப்பு பழைய தங்க மலை ரகசியம் படம் (சிவாஜி, ஜமுனாராணி நடித்த டார்ஜான் வகை ராஜா கால மந்திர தந்திர படம்) பார்க்காதவர்களுக்கு ஒரு வரம் என்றே சொல்லலாம்.
Thangamalai Ragasiyam ரம்யாவின் வேலைக்காரியாக வரும் சௌந்தர்யாவைத் திருமணம் செய்து கொள்வது போல, டி.ஆர்.ராஜகுமாரியை பெண் பார்க்க வந்து அவரது பணிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதால் ராஜகுமாரியின் பழிவாங்கும் படலமே அதன் கதை.


தவிரவும் மன்னன் படம் பார்த்துவிட்டு விஜய சாந்திக்கு பதிலாக குஷ்பூவுடன் தலைவரை ஜோடி சேர்த்து பார்க்க ஆசைப் பட்டவர்களின் பதினேழு ஆண்டுகால கனவையும் நிறைவேற்றி வைத்த படம் படையப்பா..
http://www.harsamay.com/ShowPicture/m/6618/Mannan.aspx



என் வழி தனி வழி வசனத்தின் வீரியத்தை நாளை நமதே படம் பார்க்காதவர்களையும் உணரவைத்த படம் படையப்பா..

அண்ணனை தம்பி ஒட்டு மொத்தமாக ஏமாற்றி சொத்துக்களை மாற்றிக் கொள்ளும் காட்சிகள், தர்மதுரை, முத்து போன்ற படங்கள் பார்க்காதவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தங்கைக்கு மாப்பிள்ளை பார்ப்பது, ஓரே பாட்டில் தலைவர் மிக பெரிய பணக்காரனாக மாறுவது போன்றவை இதுவரை ரஜினி படமே பார்க்காதர்களுக்கும் ரஜினி பட இலக்கண இலக்கியங்களை சொல்லிக் கொடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும்.

padayaipa2.jpg


வளர்ந்த இரு பெண்களுக்கு தந்தையாக வந்து அவர்களின் திருமணம் செய்ய முற்படும்போது பார் மகளே பார் சிவாஜி கணேசனே மீண்டும் வந்தது போல் இருந்தது. அவரளவுக்கு இவரும் கஷ்டப்படுவார். ஏற்பாடு செய்த திருமணத்தை ஒரு மகள் மறுப்பார்.

அப்பாஸுடன் சேர்ந்து கடைசி சண்டைக் காட்சிகளில் ஒட்டு மொத்த தெலுங்கு பட உலகையே கண் முன் கொண்டுவந்து what a man? சொல்ல வைத்து இருப்பார்.

படத்தின் இறுதியில் சபதத்தில் வெல்ல முடியாமல் குத்துப் பட்டு சாகும் காட்சியில் நீலாம்பரி, மகாதேவி வீரப்பாவையும், தூரல் நின்னு போச்சு வில்லன் செந்தாமரையையும்(உண்மையில் அவர் நாயகியின் தந்தை- நல்லவர்) நினைவு படுத்துவார்கள்.


http://pleasantvazanth.blog.co.in/files/2008/12/ps-veerappa.jpghttp://www.behindwoods.com/features/column/images/Senthamarai.jpg

சிவப்பு புடவையைப் பார்த்து மிரளும் மாடு, பாம்பு புற்றுக்குள் கையை விடுவது போன்ற காட்சிகள் ராம நாராயணன் படங்கள் சுவை மாறியதைக் கண்டு வருத்தத்தில் இருந்த ரசிகர்களையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய படம் என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் ஒரு படம் பார்த்தால் நூறு படம் பார்த்த மாதிரி....

இது ஒரு மேம்படுத்தப் பட்ட மீள்பதிவு

12 comments:

  1. ஆஹா கலக்கீட்டிங்க (தயாரா இருந்துக்குங்க, கும்மாங் குத்துக்கு)

    ReplyDelete
  2. உங்கள் கருத்து சரியே..

    ஆனால அவர் நடிப்பதை நிறுத்தி அல்லது நிறுத்தி வைக்கப்பட்டு ஆண்டு பலவாயிற்று.

    ஜானியில் எத்தனை இயலபான நடிப்பு.பத்து முறையேனும் பார்த்திருப்பேன்.

    பிரியாவில் அலட்டாத ஸ்டைல். எத்தனை அழகு.

    தில்லு முல்லுவில் வயிறு புண்ணாகும் நகைச்சுவை நடிப்பு. அந்த Interview சீனுக்காக எத்தனை முறை பார்த்தேன் என எண்ண முடியாது.

    கண்களாலேயே நடித்த முள்ளும் மலரும். கண்டிப்பாக அழுது விடுவேன்.

    உண்ர்ச்சிகளை கொட்டி வந்த எங்கேயோ கேட்ட குரல்.. அமைதியாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

    நெற்றிக்கண், ராகவேந்திரர் என Different dimmensions and Contradiction confront characters என நீளும் பட்டியல்.

    ஏன் இவையெல்லாம் யாராலும் மறக்க இயலவில்லை.??

    அத்தனை இயல்பான நடிப்பு திறமை உள்ளது அவரிடம். அதை வெளிகொணர்ந்த திறைமையான இயக்குநர்கள்.

    கை காலை அசைத்தால் சத்தம் வரும் ரஜினியே பார்க்க முடிகிறது.


    சிவாஜி படத்திலும் ஷங்கர் ஏதாவது செய்வார் என நினைத்து ஏமாற்றமே.
    அதைவிட சிவாஜியில் நகைச்சுவை என்ற பெயரில் கோமாளித்தனமாக சித்தரிக்கப்பட்டது கண்டு நொந்து போனேன்.

    இயக்குநர் பற்றாகுறையா..??? ஒரளவு இருக்கலாம். ஆனால் அவரை வைத்து பணம் பண்ணலாம் என்ற எண்ணமே எல்லோரிடமும் மேலோங்கிவிட்டது கண்கூடாக தெரிகிறது.


    அவரும் தெரிந்தே விட்டுவிட்டார் போலும்.

    ReplyDelete
  3. ஒரு படம் பாத்தா நூறு படம் பாத்தா மாதிரியில்ல.

    ஒரு படம் பாத்தா எல்லா படமும் பாத்தா மாதிரி.

    ReplyDelete
  4. ஆஹா...

    என்ன ஆச்சூ உங்களுக்கு??

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி

    முரளிகண்ணன்

    சரவணகுமரன்

    வண்ணத்துபூச்சியார்

    உருப்புடாதது_அணிமா அவர்களே........

    ILAYAPALLAVAN

    ReplyDelete
  6. நண்பா என்ன இது.. தலைவரை ஏதோ பயங்கரமா பாராட்டி இருப்பீங்கன்னு பார்த்தா.. இந்த ஓட்டு ஓட்டி இருக்கீங்க..? கலக்கல் பதிவு..

    ReplyDelete
  7. ILAYAPALLAVAN சொன்னது…
    ஒரு படம் பாத்தா நூறு படம் பாத்தா மாதிரியில்ல.

    ஒரு படம் பாத்தா எல்லா படமும் பாத்தா மாதிரி.

    ReplyDelete
  8. கார்த்திகைப் பாண்டியன்,

    இளைய பல்லவன்,

    வாங்க நண்பர்களே வாங்க..

    ReplyDelete
  9. urkarrey ninga thalivar fana...

    ReplyDelete
  10. படையப்பா படம் தமிழ் படமா ..... ஆங்கில படமா....??

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails