Saturday, March 19, 2011

அக்கா மகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCWmVn4CkOVGq7t2x2yPWIbvV1US1FYlgwCZhfVG-mM_JmXXJjlHFB8m06O_WuT_im4Ky1GnQ06WKwuOs-5y3TVhtQh_UPLHgxhbIBLY5DCwVPRs6OXTXJq1Pj9jk2o9K-Nzq11e80w-7d/s400/Anushka2903_016.jpg
வெண்ணிலாக்கா  உறுதியாக சொல்லியிருந்தாள்.  பிரியாவுக்கு இந்த வருஷத்தோடு படிப்பு முடியுது. மாசில பரிசம் போட்டுடலாம். வைகாசில கல்யாணம். ராஜா வெண்ணிலாவின் கடைசித் தம்பி. 
வெண்ணிலா எல்லாருக்கும் மூத்தவள். அவளுக்கு கல்யாணம் நடக்கும்போது ராஜாவுக்கு ஆறுவயது.  ராஜாவுக்குத்தான் தன்பெண்ணைக் கொடுப்பதாக ஊருக்கு வரும்போதெல்லாம்  சொல்லுவாள். அவள் சொன்னால் வீட்டில் மறுபேச்சே கிடையாது.

எல்லா சீர்வரிசைகளிலும் செய்முறைகளையும் விடாமல் சண்டை போட்டு வாங்கிச் செல்வாள். அவள் இவ்வாறு அடம்பிடித்து செய்முறைகள் வாங்கி விடுவாள் மற்ற சகோதரிகளுக்கு கேட்காமலேயே கிடைத்துவிடும். அதனால் அக்கா சொல்லுவதே வேதவாக்கு. அவளை யாரும் மீற மாட்டார்கள். மூத்த மகளாக இருப்பதால் அப்பாவுக்கு அவள் மேல் பாசம் அதிகம். அவள் கேட்டால் எதையுமே மறுக்க மாட்டார்.

===============================================================

ராஜா  தான் பயந்து பயந்து அந்தப் பிரச்சையை ஆரம்பித்தான். அவன் சில காலங்களாக  அவனுடன் வேலை செய்யும் ராதாவை காதலிப்பதை வீட்டில் சொல்லிவிட்டான். எதிர்பார்த்தது போலவே வீட்டில் பெரிய ரகளை வெடித்தது.

அவன் காதலித்தைவிட  வெண்ணிலாவின் சண்டைக்குத்தான் அனைவரும் பயந்தார்கள். சும்மாவே சாமி வந்ததுபோல் இருப்பாள். இப்போது இதைவேறு சொன்னால் என்ன நடக்குமோ.., அம்மா மட்டுமல்ல அண்ணன்களும் சேர்ந்து புலம்பிக் கொண்டு இருந்தனர்.

அப்பாதான் ஃபோன் போட்டார். வெண்ணிலாவை உடனே வரச் சொன்னார். என்னப்பா என்ன ஆச்சு? அம்மா நல்லா யிருக்கங்கல்ல..,

நல்லாத்தான் இருக்கா. நீ புறப்பட்டு வா

நீங்க அம்மாகிட்ட கொடுங்க..,

அம்மா நல்லாத்தான் இருக்கா நீ புறப்பட்டு வா.

நீங்க முதல்ல அம்மாகிட்ட கொடுங்க,

மிரட்டலுக்கு பயந்து ஃபோனை கொடுத்தார். அம்மாவும் பயந்து கொண்டே உடனே வரச்சொன்னார்.

நீ நல்லாத்தானே இருக்க.., வீட்ல யாருக்காவது ஏதாவது பிரச்சனையா..

என்ன பிரச்சனைன்னு சொல்லு நான் வர்ரேன்.

நீ வா...,

வெண்ணிலாக்கா அவசரம் அவரசமாகப் புறப்பட்டு ஊர் வந்து சேர்ந்தார்.

ஏம்மா என்ன பிரச்சனை?

எல்லோரும் கொஞ்சம் தயங்கிக் கொண்டு இருந்தார்கள்.

ராஜாதான்  பிரச்சனையைச் சொன்னான்.

அம்மா சமாதானப் படுத்தும் நோக்கத்துடன் பேசினார். அதுதான்மா நீ வந்து அவங்கிட்ட பேசலாம்ன்னு கூப்பிட்டோம். நீ சொன்னா தம்பி கேட்பான்.

என்னத்தை கேட்கச் சொல்ற..,

இதற்குள் தன் தெய்வீகக் காதல்பற்றியும் தங்களது உறுதியையும் அக்காவிடம் சொன்னான் ராஜா.

குரல் கொஞ்சம் கடுமையாகத்தான் இருந்தது.


இன்னொருத்தி கூட சுத்தறவனைப் பிடிச்சு எம்பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது.

எம்பொண்ணுகிட்ட கல்யாணப் பேச்சு பத்தி சொல்லாமத்தான் நான் வளர்த்திருக்கேன். எனக்கொண்ணும் பிரச்சனையில்லை. ஆக வேண்டிய பாருங்க..

வெண்ணிலாக்கா இப்போதும் உறுதியாகவே சொன்னார்.

17 comments:

  1. நாந்தான் முதல்லயா ...

    கல்யாண விஷயத்தில் யாரையும் கம்பல் பண்ண முடியாது ...

    ReplyDelete
  2. // எம்பொண்ணுகிட்ட கல்யாணப் பேச்சு பத்தி சொல்லாமத்தான் நான் வளர்த்திருக்கேன். எனக்கொண்ணும் பிரச்சனையில்லை. ஆக வேண்டிய பாருங்க.. //

    என்ன இருந்தாலும் பெரிய அக்கா இல்லையா... அதான் ஆரம்பத்திலேயே ரொம்ப ஜாக்கிரதையாக இருந்திருக்காங்க பாருங்க..

    ReplyDelete
  3. அப்பாடி...தொல்லை விட்டதுன்னு நினைச்சிருப்பா...நம்ம வாயால வராம இவன் வாயாலேயே வந்தது நல்லதுன்னு தோன்றி இருக்கும்.

    ReplyDelete
  4. அக்கா பிடிவாதமா இருந்தாலும் சரியான முடிவுதான் எடுத்திருக்காங்க.

    ReplyDelete
  5. \\எம்பொண்ணுகிட்ட கல்யாணப் பேச்சு பத்தி சொல்லாமத்தான் நான் வளர்த்திருக்கேன்\\

    good approach

    ReplyDelete
  6. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    நாந்தான் முதல்லயா ...

    கல்யாண விஷயத்தில் யாரையும் கம்பல் பண்ண முடியாது ...//

    சில விஷயங்கள் அப்படித்தான் தல..,

    ReplyDelete
  7. // T.V.Radhakrishnan said...

    Present suresh//

    நன்றி ஐயா..,

    ReplyDelete
  8. // இராகவன் நைஜிரியா said...

    // எம்பொண்ணுகிட்ட கல்யாணப் பேச்சு பத்தி சொல்லாமத்தான் நான் வளர்த்திருக்கேன். எனக்கொண்ணும் பிரச்சனையில்லை. ஆக வேண்டிய பாருங்க.. //

    என்ன இருந்தாலும் பெரிய அக்கா இல்லையா... அதான் ஆரம்பத்திலேயே ரொம்ப ஜாக்கிரதையாக இருந்திருக்காங்க பாருங்க..//

    ஒருவேளை சொல்லி வளர்த்திருந்தா இங்கயே பிக்கப் ஆயிருக்குமோ.., என்னமோ

    ReplyDelete
  9. // ஸ்ரீராம். said...

    அப்பாடி...தொல்லை விட்டதுன்னு நினைச்சிருப்பா...நம்ம வாயால வராம இவன் வாயாலேயே வந்தது நல்லதுன்னு தோன்றி இருக்கும்.//

    இருந்தாலும் இருக்கும் தல,,

    ReplyDelete
  10. // அக்பர் said...

    அக்கா பிடிவாதமா இருந்தாலும் சரியான முடிவுதான் எடுத்திருக்காங்க.//

    ஆமாம் தல..,

    ReplyDelete
  11. // முரளிகண்ணன் said...

    \\எம்பொண்ணுகிட்ட கல்யாணப் பேச்சு பத்தி சொல்லாமத்தான் நான் வளர்த்திருக்கேன்\\

    good approach//

    அதனாலதான் தப்பிச்சாங்க..,

    ReplyDelete
  12. //வெண்ணிலாக்கா இப்போதும் உறுதியாகவே சொன்னார். //

    ம்ம்ம்ம் நல்லாயிருக்கு

    ReplyDelete
  13. தல.. இந்த மாதிரி டக்டக்ன்னு முடியுற மாதிர்ரி கதைகள் சுருக்கமா நறுக்குன்னு எழுதுங்க தல..

    ஆனாலும் செம உசாரு நம்ம வெண்ணிலாக்கா... :-)

    ReplyDelete
  14. சரி.. என்னதான் அக்கா சொல்லலன்னாலும்.. அந்த பொண்ணுக்கு அதாவது அக்கா மகளுக்கு தெரியாமய இருக்கும்???

    லாஜிக் உதைக்குதே???

    (கதைய நான் படிச்சுட்டேன்னு நீங்க நம்பனும்ல.. அதான். டோக்கன் டவுட்டு.. :-)

    ReplyDelete
  15. @ஆ.ஞானசேகரன்
    @கடைக்குட்டி
    @புருனோ Bruno


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails