Tuesday, March 22, 2011

இதுவும் ஒரு கனவு கிரிக்கெட் அணிதான்

ஒரு கிரிக்கெட் எவ்வளவு ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் எதிர் அணியினரை அவர்களைவிட குறைவான ஓட்டங்களில் முடித்தால்தான் வெற்றிபெற முடியும்.  அதற்கு மிகச் சிறப்பான பந்துவீச்சாளர்கள் அவசியம் தேவை.
http://img.indiaglitz.com/tamil/news/star280108_1.jpg








பொதுவாக வேகப் பந்துவீச்சாளர்கள்தான் பந்துவீச்சினைத் தொடர்வார்கள். இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர்கள் எவ்வளவுதான் சிறப்பாக பந்து வீசினாலும் அவர்களை உலக வேகப் பந்து வீச்சாளர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதுதான் நமது மரபு. அத்தோடு வெளிநாட்டு பந்துவீச்சாளர்களோடு ஒப்பிட்டுபார்க்கவேண்டும். வெளிநாட்டு பந்துவீச்சாளர்களைப் போலவே பந்துவீசுபவர்களுக்கு என்றுமே நம் நாட்டில் மரியாதை உண்டு.
http://www.behindwoods.com/hindi-tamil-galleries/star-cricket/bwoods_star-cricket-20.jpg1.ரஜினிகாந்த்

இவர் களத்தில் இருந்தாலே மற்றவர்கள் களமிறங்க பயப்படுவார்கள். எனவே துவக்கப் பந்துவீச்சாளராக ரஜினிகாந்த்தான் பொறுத்தமாகப் படுகிறார்.

2.சிலம்பரசன்

இவரை சாதரணமாக நினைத்து இவரோடு போட்டியிட்டால் இவரைப் போலவே போல்ட் ஆகிவிடும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.  இவரது பாணியை அகர்கர் பந்துவீச்சோடு ஒப்பிடலாம். நிறைய ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் விக்கெட் எடுப்பது போல எவ்வளவு செலவு செய்தாலும் இவரோடு போட்டிபோடுபவர்களை தோல்வியடையச் செய்துவிட்யுவார்.

3.ஜே.கே.ரித்தீஷ். அணியின் வெற்றிக்கு மிக அவசியமான ஆல்ரவுண்டர் எந்த இடத்திலிருந்தும் மட்டை பிடிக்கலாம்,. பந்துவீசலாம்.  கீப்பிங் செய்யலாம். தேவைப் பட்டால் கோச்சாக கூட மாறும் திறமை உடையவர்.

அடுத்ததாக மித வேகம் அல்லது சுழல்

இந்த இடத்தில் பொதுவாக இருவர் அல்லது மூவர் இருப்பார்கள். மற்ற அணிகளில் இருப்பதுபோல மிரட்டும் தன்மை நமது அணிக்கு கிடையாது.

இவர்களை நம்பி களத்தில் இறங்கி அடித்து ஆடினால் ஆட்டம் இழப்பது நிச்சயம்.  இதுபோன்று நம்பி இறங்குபவர்களை ஆட்டம் இழக்கச் செய்யும் வேலையை செய்ய நம்மிடம் விக்கிரமன், கதிர் போன்றவர்கள் இருக்கிறார்கள். 

கந்த சாமி குழுவினரும்  இதில் முக்கிய போட்டியாளர்கள். கந்தசாமியால் ஆட்டம் இழந்தவர்கள் எண்ணிக்கை அவர்களுக்கே தெரியாது.

(இந்தப் பதிவு மீள்பதிவாக இருப்பதால் இன்றைய சூழலில் யாரை இந்த இடத்துக்குப் போடலாம் என்று நீங்களே சொல்லுங்கள )

விவேக்,வடிவேலு போன்றவர்கள் கூட இந்த இடத்திற்கு போட்டி போடுகிறார்கள். இவர்கள் இருவரும் பல நேரங்களில் கூக்லி போடுவதுண்டு. இவர்களது பந்து எந்தப் பக்கம் திரும்பும் என்பது இவர்களாலேயே கணிக்க முடியாதது கூடுதல் தகுதிகள்.


அடுத்து விக்கெட் கீப்பர். பொதுவாக விக்கெட் கீப்பர் வேலைக்காரருக்கு எல்லாமே தெரிந்திருக்க வேண்டும். பந்துவீச்சாளருக்கு அவ்வப்போது மட்டையாளருக்கு தெரியாமல் யோசனைகளை பறக்கச் செய்ய வேண்டும்.  அவரே ஒரு மட்டை பிடிப்பாளராக இருந்தால் கூடுதலாக மகிழ்ச்சி தரும்.  சக களத் தடுப்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்கும் வல்லமை இருந்தால் சிறப்பாக இருக்கும். முதல் சிலிப், இரண்டாம் சிலிப் வரை இவரே சமாளிப்பாரானால் இவருக்கு கோவில் கட்டி கொண்டாடுவார்கள்.

இது போன்ற திறமைகளை ஒருங்கே படைத்தவர் கமலஹாசன். இவரால் இயக்குநரானவர்கள் பலர்.  நாசர், நாகேஷ், காகா ராதாகிருஷ்ணன் போன்ற பல களத்தடுப்பாளர்களை இவர் சிறப்பாக உபயோகப் படுத்திக் கொள்வார். முதல் சிலிப், இரண்டாம் சிலிப் போன்ற இடங்களில் இவரே  பல வேடமிட்டு சமாளித்துக் கொள்வார்.

இவர்கள் என்னதான் அணிக்காக கடுமையாக உழைத்தாலும்  அணிக்கு பெருமளவு வெற்றியைத் தேடித் தருபவர்களும்  மட்டையாளர்களே..,  இவர்களில் பலரும் பல முட்டைகள் வாங்கினாலும் இவர்களது சாதனைகளால் என்றுமே மக்கள் மத்தியில் புகழோடு உலவுவார்கள்.

துவக்க மட்டை என்பது மிக முக்கியமான ஒன்று. அணித்துவக்கத்திற்கு நம் கண்முன் நிற்பவர்கள் இருவர்.

1.விஜய டி.ஆர்.
எதிராளியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மட்டையை சுழற்றுபவர். தன்னம்ப்பிக்கையின் மொத்த உருவம். எல்லா வகையான மைதானத்திலும் எந்த வகையான பந்து வீச்சையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவர் இவர்.

2.விஜய்
இவர் பெரிய அளவில் ஸ்கோர் செய்வாரா என்பதை விட இவரது துவக்கம் மிக அதிரடியானது. இவர் களத்தில் இறங்குவதே மற்றவர்கள் வயிற்றில் புளியை கரைக்கும். அப்போது இவரது ரசிகர்கள் கொடுக்கும் ஓசை மிக அற்புதமாக ஒலிக்கும். இவரது சமீபத்திய ஸ்பான்ஸர்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்கள்.

முதல் விக்கெட்டுக்கு களம் இறங்க சரியான நபர் அஜித்தான். முந்தைய விக்கெட் இழந்ததைப் ப்ற்றிய கவலை இல்லாமல் மட்டையைச் சுழற்றுபவர்.
இவர் களம் இறங்கும்போதும்  ரசிகர்களின் அதிரடி சொல்லி மாளாது.

இரண்டாம் விக்கெட்டுக்கு களம் இறங்க பொறுத்தமான நபர் ரஜினிகாந்த்.
தனி நபராக ஒரு அணியை ஜெயிக்கும் திறமை உள்ளவர். இவர்மேல் அதீத தன்னம்பிக்கை வைத்து தேர்வாளர்கள் அணியின் மற்றவீரர்கள் தேர்வில் பலமுறை கவனக்குறைவாக இருந்ததுண்டு.  இவர் களம் இறங்குவார் என்பதே இவருக்கு முன்னால் மட்டை பிடிப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கும்.  இவர் இன்னும் களத்திற்கு வரவில்லை என்பதே எதிரணியினருக்கு ஒரு கிலியை ஏற்படுத்தும்.

மூன்றாம் விக்கெட்டுக்கு களம் காண்பவர் ஓரளவிற்கு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்பவராக இருக்க வேண்டும். கிடைக்கும் வாய்ப்பை நன்கு உபயோகப் படுத்திக் கொள்பவராக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் நம்பிக்கை நட்சத்திறமாக உருவாகும் திறமை படைத்திருக்க வேண்டும். இந்த இடத்திற்கு சூர்யா பொறுத்தமானவராக இருப்பார்.


நான்காம் விக்கெட்டுக்கு களம் இறங்க விஜய காந்த் பொறுத்தமானவராக இருப்பார். வாய்ப்புக்கிடைக்கும்போது ரன் எடுக்க வேண்டும்.  இவரால் அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடைவார்கள். அல்லது அவர் எடுத்த ரன்களுக்காக மகிழ்ச்சி அடைவார்கள்.

இவர் சீக்கிரமே அவுட் ஆனால் எல்லோரையும் போல் சீக்கிரம் அவுட் ஆகிவிட்டார் என்று சொல்லிவிடுவார்கள்.


ஐந்தாம் விக்கெட்டுக்கு ஏற்கனவே பார்த்தபடி கமலஹாசனை வரச் சொல்லலாம்.இவரது ஆட்டம் வெற்றிகரமாகவும் அமையும். சில நேரங்களில் சோதனை முயற்சியாகவும் அமையும். சில நேரங்களில் பந்துவீச்சாளர்களை மட்டுமன்றி பார்வையாளர்களையும் கூட சோதித்து விடுவார்.  பின்னர் மற்ற பந்து வீச்சாளர்களை களமிறங்கச் சொல்லலாம்.


ஏதாவது மாற்றம் வேண்டுமென்றால் நீங்கள் சொல்லுங்களேன்.

14 comments:

  1. கலக்கல் டீம் தலைவரே...

    ReplyDelete
  2. சு.சாமிய விட்டுடீங்களே டாக்டர், இவரு போடுற சுழல்பந்துல, இவரே கூட சில சமயம் பறந்து போயிடுவாரே

    ReplyDelete
  3. டாக்டர் பின்னீட்டீங்க

    ReplyDelete
  4. @அன்புடன்-மணிகண்டன்
    @சங்கர்
    @முரளிகண்ணன்
    @அக்பர்

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  5. அசத்தல்............................

    அதுவும் கமலுக்கு கொடுத்த விளக்கங்கள் அற்புதம்....

    ReplyDelete
  6. // கனககோபி said...

    அசத்தல்............................

    அதுவும் கமலுக்கு கொடுத்த விளக்கங்கள் அற்புதம்....//

    நன்றி தல..,

    ReplyDelete
  7. கலக்கல் .
    வாழ்த்துக்கள் !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  8. Boss,I don't know much about cricket.... :)
    Appa escape.....

    ReplyDelete
  9. Boss,I don't know much about cricket.... :)
    Appa escape.....

    ReplyDelete
  10. //♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

    கலக்கல் .
    வாழ்த்துக்கள் !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .
    //

    நன்றி தல

    ReplyDelete
  11. ///ILLUMINATI said...

    Boss,I don't know much about cricket.... :)
    Appa escape.....
    //
    ஆனாலும் விடமாட்டம்ல்ல

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails