Monday, March 28, 2011

வளர்ச்சிப் பணியா? வைப்பு நிதியா?

சென்ற இடுகையில் நண்பர் ஒருவர் ஒரு மாநில அரசு பணத்தினை டெபாஸிட் செய்து வைத்திருப்பதை சற்று பெருமையாகச் சொன்னார். பலரும் பாராட்டும் அரசுதான் அந்த மாநில அரசு. ஆனால் லட்சம் கோடிகளை டெபாஸிட் செய்து வைத்திருப்பது என்பது கொஞ்சம் நெருடலாகவே உள்ளது.

அன்னிய செலவாணியில் மத்திய அரசு கையிருப்பில் வைத்திருப்பது என்பதும் மாநில அரசு பணத்தினை டெபாஸிட் செய்து வைத்திருப்பது என்பதும் வேறுவேறு என்று நினைக்கிறேன். (மாற்றுக் கருத்து அல்லது உண்மை நிலவரம் தெரிந்தவர்கள் கருத்துச் சொல்ல அழைக்கப் படுகிறார்கள்)

மக்களுக்கு தூய்மையான குடிநீர், பாதுகாப்பான வாழ்க்கை,  தரமான கல்வி, துரிதப் போக்குவரத்து ஆகியவை கொடுக்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு இருக்கின்றன. கண்டிப்பாக இந்தியாவின் எந்த மூலையிலும், ஏன் முக்கிய நகரங்களில் உள்ள மக்களுக்குக் குட இந்த தேவைகள் பூர்த்தி செய்யப் பட்டிருக்குமா என்பது கேள்விக் குறிதான்.  மேலும் மேலும் பள்ளிகள், கல்லூரிகள் அமைக்கலாம்.  மருத்துவமனைகளில் மிக மிக கடினமான சிகிச்சைகள் அளிக்கும் வகையில் விரிவு படுத்தலாம்.  கடைக் கோடி கிராம மக்களுக்கு வந்து செல்ல போக்குவரத்து வசதி சாலைகள் அமைக்கலாம். நாட்டில் பேருந்தே வராத கிராமங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு நாளைக்கு ஓரிரு பேருந்துகள் மட்டும் வரும்  கிராமங்களும் இருக்கத் தான் செய்கின்றன. அவர்களுக்கெல்லாம்  நட்டக் கணக்கு பார்க்காமல் அருகிலுள்ள பெரிய கிராமங்கள், அல்லது நகரங்களை இணைக்கச் செய்யலாம்.

இதையெல்லாம் முடித்துவிட்டு பணத்தை வைப்புநிதியாக வைத்திருந்தால் கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும். அப்படி இல்லாமல் இருந்திருந்தால்  குழந்தைகளுக்கு சாப்பாடு போடாமல் படிக்க வைக்காமல் சொத்துக்களை சேர்க்கும் பெற்றோர்களைப் போல  அவர்களும் பரிதாபத்துக்கு உரியர்களே..,


=====================================================================
//ரம்மி said...
சரியாகச் சொன்னீர்கள்! இவை இலவசங்கள் அல்ல! மக்கள் நலத் திட்டங்கள்! இதுவே உண்மையான கம்யூனிஸ பாதை! என்ன அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து, இப்பவே அரசு கடன் வாங்குகிறது! ஒரு லட்சம் கோடிகள் கடன், தமிழகத்திற்கு! குஜராத்க்கு, ஒரு லட்சம் கோடி டெப்பாசிட் வைத்துள்ளது!// இதற்கான  மறுமொழியே இந்த இடுகை.  கருத்துச் சொன்ன ரம்மி அவர்களுக்கு நன்றி

37 comments:

  1. வரவேற்கதக்க கருத்து அன்பரே!

    1.கடன் வாங்கி, தமிழக அரசு இங்கு எதற்கு செலவு செய்கிறார்கள்? நீங்கள் குறிப்பிட்ட கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கா? ஏற்கெனவே பெற்றுள்ள கடனுக்கு வட்டியே, குறைந்த பட்சம், வருடத்திற்கு சுமார் 6000 கோடிகள் வருமே! ( கால் மணி ரேட்)
    2.ஒரு நபரின், அன்றாட வாழ்க்கைக்கு உரிய அனைத்து வசதிகளையும், அரசாங்கத்திடம், இருந்து எதிர்பார்ப்பது சரியல்ல!
    3.டி.வி, மிக்சி போன்றவற்றை எல்லாம் ஓட்டு சேகரிப்பதற்காக, அரசுப் பணத்திலிருந்து கொடுப்பது, அரசியல்வாதிகளோடு சேர்ந்து , பயனாளிகளும், அரசுப் பணத்தைக் கொள்ளை அடிப்பதற்கு சமம்!


    குஜராத், வணிகமும், விவசாயமும் தழைத்தோங்கும் பூமி! மோடி அரசு மட்டுமல்ல, அதற்கு முன்னர் இருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், இதே நிலை தான்! (கேசுபாய் படேல்) அங்கு அரசாங்கம், நீங்கள் குறிப்பிட்ட கட்டமைப்பு வசதிகளை செவ்வன செய்து வருகிறது! இலவசங்களை , சென்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ், தமிழகத்தைப் போல, கொடுக்க முன் வந்த போது, மக்களால் நிராகரிக்கப்பட்டது!

    ReplyDelete
  2. தற்போது தேர்தல் நடை பெறவிருக்கும், மேற்கு வங்கத்தில்/ கேரளத்தில், இலவச அறிவிப்பு இருப்பதாக செய்திகளில் வரவில்லை! உணவு மான்யத்தைத் தவிர!

    குஜராத்தில், கட்டமைப்பு வசதிகள், நன்றாக உள்ளது! மின்வெட்டு இல்லை! (மன்னிக்க: மின் தட்டுப்பாடு).
    பேருந்து போக்குவரத்து வசதி, தமிழகத்திப் போல எங்கும் இல்லை! பாராட்டுக்கள்! ஆனால் நன்கு யோசித்தால், இருக்கும் இடத்தில் வேலை கிடைக்காமல், மக்கள் தொலை தூரம் செல்வதாலேயே, அதிகப் பேருந்துகளை இயக்கும் அவசியம் வந்துள்ளது! மேலும் ஒரு தகவல்: தமிழகத்தைப் போல தினசரி சாலை விபத்து இழப்புகள், மராட்டியத்தில் மட்டுமே!

    கட்டமைப்பு வசதிகள் மேம்படின், சாலை இழப்புகளைக் குறைக்கலாம்!

    தமிழக தொழில் முனைவோர் எவரையேனும், கேட்டிடின், கொட்டிடுவர்---, கட்டமைப்புக் குறைபாட்டால் ஏற்பட்டுள்ள, 2008 முதல், இந்நாள் வரை தொடரும் மின் வெட்டினால் உண்டான நன்மையையும், இலவசங்களால் உருவாக்கப்பட்ட வேலையாட்கள், பற்றாக்குறையையும் பற்றி!

    இலவசங்கள் வேலை செய்துதான் சம்பாதிக்க கட்டாயத்தை, பயனாளிகளிடம் இருந்து, மெல்ல அகற்றி விடுகிறது! இலவசங்களைப் பெற தொடர்ந்து, ஏழையாக இருக்க வேண்டிய கட்டாயம்! எந்த ஒரு வேலைக்கும், தற்போது ஆட்பற்றாக்குறை, தலை விரித்தாடுகிறது!
    இலவசங்கள் இனி எத்தனை காலத்திற்குத் தொடரும்? கடைசி ஏழை இருக்கும்வரை எனில், இலவசங்களைப் பெற்றால் தான் ஏழ்மைத் தனமை விலகும் என்று அர்த்தமா?

    மீனைக் கொடுக்காதீர்! மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்!

    ReplyDelete
  3. //அங்கு அரசாங்கம், நீங்கள் குறிப்பிட்ட கட்டமைப்பு வசதிகளை செவ்வன செய்து வருகிறது!//

    பணம் கையில் நிறைய இருந்தால் கட்டமைப்பு வசதிகளை அனைத்து குக்கிராமங்களுக்கும் பரவலாக்கலாமே..,

    ReplyDelete
  4. //இருக்கும் இடத்தில் வேலை கிடைக்காமல், மக்கள் தொலை தூரம் செல்வதாலேயே, அதிகப் பேருந்துகளை இயக்கும் அவசியம் வந்துள்ளது!//


    :00

    ReplyDelete
  5. //இலவசங்களால் உருவாக்கப்பட்ட வேலையாட்கள், பற்றாக்குறையையும் பற்றி!//


    வேலையாட்கள் பற்றாக்குறை என்று சொல்லுவதைவிட வேலை ஆட்களுக்கான கூலி உயர்ந்துள்ளது. என்று சொல்லலாம். குறைந்த பட்ச கூலிக்கு ஆள் கிடைக்கவில்லை

    ReplyDelete
  6. //இலவசங்களை , சென்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ், தமிழகத்தைப் போல, கொடுக்க முன் வந்த போது, மக்களால் நிராகரிக்கப்பட்டது!//


    இலவசங்களை விரும்பாத காரணத்தால் அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக் கணி

    ReplyDelete
  7. //மீனைக் கொடுக்காதீர்! மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்!//


    அதனால்தான் கல்விக்கான சுமையைக் குறைக்கவும், குடும்ப தலைவிகளின் சுமையைக் குறைக்கவும் என கவனம் செலுத்தப் பட்டுள்ளன.


    தவிரவும் கால்நடைகளை வழங்குவது என்பது சமைத்து சாப்பிட அல்ல, உழைக்க.., பாதிப் பேர் சமைத்து சாப்பிட்டாலும் மீதிப்பேர் அதை நல்ல முறையில் உபயோகித்து கொள்வார்கள் என்றே நம்புகிறோம்

    ReplyDelete
  8. http://kutchdp.gujarat.gov.in/kutch/english/sakhao/samaj-kalyan-shakha/scheme1.htm

    Gift of cycle under Saraswati Sadhana Yojana
    A scheme to give cycles to scheduled castes girl students studying in stands 8, 9 and 10 since 1998-99.

    ReplyDelete
  9. To the best of my knowledge Noon Meal and Bicycle are TN schemes later copied by other states. Bicycle Scheme copied by Gujarat and Bihar from TN. Noon Meal Copied by most other states

    ReplyDelete
  10. Gujarat Effective Literacy Rate 69.14 % (2001)

    ReplyDelete
  11. http://www.gujaratindia.com/state-profile/demography.htm

    Population Density 258 per Sq. Km.
    Rural Population 62.64(%)
    Urban Population 37.36(%)
    Decadal Growth Rate 22.66% (1991-2001)
    Birth Rate 23.5 (2006)
    Death Rate 7.3 (2006)
    Growth Rate 16.6 (2005)
    Sex Ratio 920 females per 1,000 males (2001)
    Effective Literacy Rate 69.14 % (2001)

    ReplyDelete
  12. The Educated Girl Child Initiative was born out of a painful distress call as Women’s Education in Gujarat in 2001 stood on 20th Position with Literacy rate among Female with 48.1%. Hon’ble CM joined hands with all Government officers – IAS, IPS and other beauracrats, in a massive ‘Kanya Kelavani Rath’ and turned into a massive movement to face the challenge in 2009.

    Government charts out plans to enroll 525,000 girls in the state in Kanya Kelavani drive. It covers 1,865 routes and as a result, 100% enrollment and reduction in the drop out rate from 40% to 2.29% is achieved. It foresees a vision 2010 that, when Gujarat celebrates its golden Jubilee, there should be a zero - ‘0’ percent drop out rate in Gujarat (Literally No Drop Outs).
    Girl Child Education program is initiated in villages across Gujarat. It covers almost 18,000 villages esp. where the literacy rate is below 20 percent and focus on identified suburbs of the urban areas to spread the message of education.

    From : http://www.gujaratindia.com/initiatives/initiatives.htm?enc=TEnmkal8rLd9cWRBUEX85lswwfZZ+o8b+w+YfQPy7dU93tk%2Frntr0H+OnwOK0bubGxn8CTo%2FzrWp+HvkkBe+9jlVHX%2Flscs26LErVpv8pL9RZUhsIylDLEz1HE7iVyLfPbyl5bDZyad%2FOcTg9wXi7g%3D%3D#Schemes Adopted to Enhance Education

    ReplyDelete
  13. From http://www.gujaratindia.com/pdf/ser0708.pdf : The state has recorded revenue surplus of Rs. 1770.09 crore in the year 2006-07

    1770 கோடி மட்டுமே

    இதில் எங்கிருந்து 1 லட்சம் கோடி வந்ததாம்

    ReplyDelete
  14. Now, if this is the result of 10 minute research on one forwarded mail, I have serious doubt about other forwarded mails and SMSes about Gujarat..... Is gujarat developing only in SMSes and Mails .... LOL ... LOL

    ReplyDelete
  15. Gujarat : Primary Health Centres Required : 1172. In Position : 1073 Shortfall : 99
    TN : Primary Health Centres Required : 1173 In position according to http://164.100.52.110/NRHM/State%20Files/tamilnadu.htm is 1215. Today we have 1529 PHCs in TN

    ReplyDelete
  16. And here comes something else . . . 137 Medical Colleges have been opened in the past decade (from the year 2000) Of which 34 alone has been started by government and 103 by Private. . Of the 34 Government Medical Colleges formed after 2000
    AP - 4
    Assam - 1
    Chattisgarh - 2
    Delhi - 1
    Karnataka - 6
    MP - 1
    Maharashtra - 3
    Manipur - 1
    Pondicherry - 1
    Rajasthan - 1
    TN - 7
    Tripura - 1
    UP - 1
    Uttaranchal - 2
    WB - 2


    Yeah, TN is the state that has opened maximum number of Medical Colleges in this century

    More than 20 % of New Government Medical Colleges in 21st Century has been opened by Government of Tamil Nadu

    And Yes Again, Bihar and Gujarat, the most developed states (developing perhaps in SMS and Forwarded Mails only) have not even opened ONE government Medical College :) :)

    --

    This is the data from Health Sector.... Similar Data from other sectors will be eye opener .... Can some one else volunteer

    ReplyDelete
  17. Decadal Growth (Census 2001) (%) in TN is 11.72 http://bit.ly/fOHlml while in Gujarat is http://bit.ly/eZNj7S 22.76. That is The growth rate of Gujarat is almost double that of TN. What happened to FamilyWelfare ?????

    ReplyDelete
  18. NRHM http://bit.ly/fOHlml requires 1215 doctors in PHC in Tamil Nadu. We have sanctioned strength of around 3800

    ReplyDelete
  19. Gujarat : http://bit.ly/eZNj7S : Specialists Required 1092. In Position 81 Short fall 1011. 90 % Shortfall. Yes.... 90 percent Shortfall.

    ReplyDelete
  20. Only 1100 doctors in Gujarat PHCs .. TN PHCs have 3800 Doctors.... Gujarat http://bit.ly/eZNj7S Population 50,596,992 Number of PHCs 1073. TN Population 66,396,000 NUmber of PHCs 1529

    ReplyDelete
  21. உலக வங்கியில் ஒரு மாநில அரசாங்கம் 1 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட் செய்திருப்பதாக நம்பும் “புத்திசாலிகள்” இருந்தால் இந்தியா எப்படி முன்னேறும்

    ReplyDelete
  22. //2.ஒரு நபரின், அன்றாட வாழ்க்கைக்கு உரிய அனைத்து வசதிகளையும், அரசாங்கத்திடம், இருந்து எதிர்பார்ப்பது சரியல்ல!//

    சரியே

    ReplyDelete
  23. //இலவச அறிவிப்பு இருப்பதாக செய்திகளில் வரவில்லை! //

    அது ஊடகங்களில் நேர்மையின்மையை காட்டுகிறது நண்பரே

    ReplyDelete
  24. //மீனைக் கொடுக்காதீர்! மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்!//

    கேட்க நல்லாத்தான் இருக்கும்

    பசி மயக்கத்தில் இருப்பவனுக்கு முதலில் அவன் பசியை போக்க வேண்டியது கட்டாயம்

    அதன் பிற்கு தான் மீன் பிடிக்க கற்றுகொடுத்தால் அவன் மண்டையில் ஏறும்

    ReplyDelete
  25. ////மீனைக் கொடுக்காதீர்! மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்!//

    கேட்க நல்லாத்தான் இருக்கும்

    பசி மயக்கத்தில் இருப்பவனுக்கு முதலில் அவன் பசியை போக்க வேண்டியது கட்டாயம்

    அதன் பிற்கு தான் மீன் பிடிக்க கற்றுகொடுத்தால் அவன் மண்டையில் ஏறும்//
    இது இலவச அரிசிக்கு பொருந்துமே தவிர TV, மிக்சி, கிரைண்டர் போன்றவைகளுக்கு பொருந்தாது.
    Correct?

    ReplyDelete
  26. //வேலையாட்கள் பற்றாக்குறை என்று சொல்லுவதைவிட வேலை ஆட்களுக்கான கூலி உயர்ந்துள்ளது. என்று சொல்லலாம். குறைந்த பட்ச கூலிக்கு ஆள் கிடைக்கவில்லை// அதாவது மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது

    ReplyDelete
  27. //அதன் பிற்கு தான் மீன் பிடிக்க கற்றுகொடுத்தால் அவன் மண்டையில் ஏறும்//
    இது இலவச அரிசிக்கு பொருந்துமே தவிர TV, மிக்சி, கிரைண்டர் போன்றவைகளுக்கு பொருந்தாது.
    Correct?//

    TV, மிக்சி, கிரைண்டர்

    இவை மாதந்தோறும் அல்லது அடிக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் இலவசங்கள் அல்ல. ஒரு முறை ஒரே முறை மட்டும் கொடுக்கப் படுபவை.

    மிக்ஸி, கிரைண்டர் போன்றவை குடும்பத் தலைவிகளின் வேலைப் பளுவை குறைக்க உதவுபவை வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பணிக்குச் செல்லும் குடும்பத் தலைவிக்கு பெரிதும் உதவுபவை. கண்டிப்பாக குடும்பத் தலைவிக்கு கூடுதல் நேரத்தை வழங்குபவை.



    தொலைக்காட்ட்சியின் மூலம் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. அனைவருக்கும் தொலைக்காட்சி என்ற நிலையில் கிடைக்கும் நன்மைகள் பரவலாக்கப் பட்டுள்ளன.

    தீமைகள் என்று எடுத்துக் கொண்டால் அது காசு கொடுத்துவாங்கிய தொலைக்காட்சிக்கும் அதே நிலைதான். எனவே தீமை இலவசத்தினால் அல்ல. மொத்தத்தில் நீங்கள் சொல்லும் நீண்டகால பலன் என்று பார்த்தால் தொலைக்காட்சி வீட்டில் இருப்பதால் நன்மையே மேலோங்கி இருப்பது நன்றாகத் தெரியும்

    ReplyDelete
  28. //From http://www.gujaratindia.com/pdf/ser0708.pdf : The state has recorded revenue surplus of Rs. 1770.09 crore in the year 2006-07

    1770 கோடி மட்டுமே

    இதில் எங்கிருந்து 1 லட்சம் கோடி வந்ததாம் //


    அந்தப் பணம் திடீரென மார்ச் 31 தேதி மிச்சம் ஆகிவிட்டதா? அல்லது அதற்கு முன்பே ஒவ்வொரு திட்டத்திலும் மிச்சம் ஆகி கொண்டே வந்து கொண்டிருப்பது தெரியவில்லையா? தெரிந்திருந்தும் அந்தப் பணத்தை வேறு பணிகளுக்கு திருப்பி விட வில்லையா? அடுத்த ஆண்டு அந்தப் பணத்தை வைத்து ஏதாவது செய்ய உத்தேசமா? அந்த விஷயத்தை அந்த ஆண்டே செய்யத் த்டுத்தது எது?


    மொத்தத்தில் அவ்வளவு பணம் மிச்சம் ஆகி வேறு பணிகளுக்கு திருப்பி விடப் படாமல் இருந்திருந்தால் திட்டமிடல், கண்காணிப்பு, மேலாண்மை ஆகியவை அங்கே படுமோசமாக இருக்கிறது என்று பொருள்

    ReplyDelete
  29. விவரப் புள்ளி(புலி) புருனோ அவர்களுக்கு! என்னை பல்வாறாக புகழ்ந்ததுக்கு, பதில் மருவாத!

    1. அரசு கடன் சுமையை ஏற்றிக் கொண்டே செல்வது, அதற்கு வருடா வருடம், வட்டி கட்டுவது, இதையெல்லாம் பற்றி!

    2. மருத்துவக் கல்லூரி திறந்ததைப் பற்றி, பெருமை தான்! எஞ்சினியரிங் கல்லூரிகள்? அரசியல் வாதிகளுக்கு நேர்ந்து விட்டனரா?

    3. மின் உற்பத்தியில், கட்டமைப்பு வசதிகளை பெருக்க, 5 + 5 வருடங்களாக,மறந்ததைப் பற்றி? 2008 முதல், சுமார் 40 - 55 சத மின் வெட்டை, தமிழகத் தொழிற்சாலைகளுக்கு பரிசாக அளித்து வரும் அற்புதத்தைக் குறித்து? மின் வாரியம், 17000 கோடி, கடனாளியானதற்கு, காரணம் ?

    4. குஜராத்தில், மது வருமானம் இல்லை!

    5. மானியம் - விலையில் கழிவு?

    6. வரி விலக்கு - கட்டும், பல்வகையான வகையினஙகளில்,சிலவற்றில் விலக்கு!?

    7. இன்சென்டிவ் - அரசு விரும்பும் வகையில், தொழில் செய்ய, டிப்ஸ்!?

    8. இலவசம் - எதையோ எதிர் பார்த்து, சுய நலத்திற்காக, அரசுப் பணத்தில் விளையாடுவது?

    ReplyDelete
  30. //பசி மயக்கத்தில் இருப்பவனுக்கு முதலில் அவன் பசியை போக்க வேண்டியது கட்டாயம்

    அதன் பிற்கு தான் மீன் பிடிக்க கற்றுகொடுத்தால் அவன் மண்டையில் ஏறும்//

    வாதத்தின் மறுபக்கம் இதோ!

    தேவையானதையெல்லாம் பிறர், நமது கையிலேயே பறிமாறும் போது, எதையும் தேட அவசியமில்லை! எந்த வேலையையும் செய்ய வேண்டியதில்லை!இது வளர்ச்சிப் பாதைக்கா அழைத்துச் செல்லும்?

    ஏதாவது ஒரு காரணத்தால், ஒரு கால கட்டத்தில், இலவசங்கள் நின்று போனால்? வாங்கியே பழகிய பயனாளிகள் கதி?

    ReplyDelete
  31. ரம்மி அவர்களே

    //1. அரசு கடன் சுமையை ஏற்றிக் கொண்டே செல்வது, அதற்கு வருடா வருடம், வட்டி கட்டுவது, இதையெல்லாம் பற்றி!//

    என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்

    //2. மருத்துவக் கல்லூரி திறந்ததைப் பற்றி, பெருமை தான்! எஞ்சினியரிங் கல்லூரிகள்?// பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்படவில்லை என்று எதை வைத்து கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா

    //அரசியல் வாதிகளுக்கு நேர்ந்து விட்டனரா?//
    நரேந்திர மோடியிடம் கேட்க வேண்டியது தானே

    //3. மின் உற்பத்தியில், கட்டமைப்பு வசதிகளை பெருக்க, 5 + 5 வருடங்களாக,மறந்ததைப் பற்றி? 2008 முதல், சுமார் 40 - 55 சத மின் வெட்டை, தமிழகத் தொழிற்சாலைகளுக்கு பரிசாக அளித்து வரும் அற்புதத்தைக் குறித்து? மின் வாரியம், 17000 கோடி, கடனாளியானதற்கு, காரணம் ?//

    மறந்தது என்பது முழுப்பொய். தரவுகளை பார்த்து கூறவும்

    //4. குஜராத்தில், மது வருமானம் இல்லை!//

    ஆனால் கொலைகள் உண்டு

    //5. மானியம் - விலையில் கழிவு?//
    புரியவில்லை. தெளிவாக கேட்கவும்

    //6. வரி விலக்கு - கட்டும், பல்வகையான வகையினஙகளில்,சிலவற்றில் விலக்கு!?//
    புரியவில்லை. தெளிவாக கேட்கவும்

    //7. இன்சென்டிவ் - அரசு விரும்பும் வகையில், தொழில் செய்ய, டிப்ஸ்!?//புரியவில்லை. தெளிவாக கேட்கவும்

    //8. இலவசம் - எதையோ எதிர் பார்த்து, சுய நலத்திற்காக, அரசுப் பணத்தில் விளையாடுவது?//
    60000 கோடி அரசு பணத்தை டாடா நிறுவனத்திற்கு இலவசமாக அளித்த மோடி யிடம் கேட்க வேண்டிய கேள்வி

    ReplyDelete
  32. //தேவையானதையெல்லாம் பிறர், நமது கையிலேயே பறிமாறும் போது, எதையும் தேட அவசியமில்லை! எந்த வேலையையும் செய்ய வேண்டியதில்லை!//

    பசியை ஆற்றிய பின் மீன் பிடிக்க கற்று கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து

    //இது வளர்ச்சிப் பாதைக்கா அழைத்துச் செல்லும்?//

    புரட்டு குறுஞ்செய்திகளில் மட்டுமே வளரும் பிற மாநிலங்களை விட தமிழகம் நன்றாகவே வளர்ந்துள்ளது என்பது கண்கூடு

    //ஏதாவது ஒரு காரணத்தால், ஒரு கால கட்டத்தில், இலவசங்கள் நின்று போனால்? வாங்கியே பழகிய பயனாளிகள் கதி?/
    தேவைப்பட்டால் பழகிக்கொள்வார்கள்

    ReplyDelete
  33. //
    TV, மிக்சி, கிரைண்டர்

    இவை மாதந்தோறும் அல்லது அடிக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் இலவசங்கள் அல்ல. ஒரு முறை ஒரே முறை மட்டும் கொடுக்கப் படுபவை.

    மிக்ஸி, கிரைண்டர் போன்றவை குடும்பத் தலைவிகளின் வேலைப் பளுவை குறைக்க உதவுபவை வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பணிக்குச் செல்லும் குடும்பத் தலைவிக்கு பெரிதும் உதவுபவை. கண்டிப்பாக குடும்பத் தலைவிக்கு கூடுதல் நேரத்தை வழங்குபவை.



    தொலைக்காட்ட்சியின் மூலம் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. அனைவருக்கும் தொலைக்காட்சி என்ற நிலையில் கிடைக்கும் நன்மைகள் பரவலாக்கப் பட்டுள்ளன.

    தீமைகள் என்று எடுத்துக் கொண்டால் அது காசு கொடுத்துவாங்கிய தொலைக்காட்சிக்கும் அதே நிலைதான். எனவே தீமை இலவசத்தினால் அல்ல. மொத்தத்தில் நீங்கள் சொல்லும் நீண்டகால பலன் என்று பார்த்தால் தொலைக்காட்சி வீட்டில் இருப்பதால் நன்மையே மேலோங்கி இருப்பது நன்றாகத் தெரியும்//
    இதே வரிசையில், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கார் போன்ற எல்லாமே வந்து விடும். எல்லாமே இலவசமாக கிடைத்துவிட்டால் எதற்கு உழைக்க வேண்டும்? அதே போல், இவை எல்லாம் ஒரு முறை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. மிஞ்சி போனால், மூன்று வருடங்களில் மிக்சி , கிரைண்டர் பல் இளித்துவிடும். அதன் பிறகு?
    தொலை காட்சியில் நன்மை எப்போது என்றால் சானேல்களில் நல்ல நிகழ்சிகள் வரும்போது. தமிழில் தற்போதுள்ள எந்த சானேல்களிலும் அது போன்ற நிகழ்சிகள் வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை (I accept that it is subjective)
    தொலைகாட்சியில் நன்மை என்பதை ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. சுத்த டைம் வேஸ்ட் என்று தான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  34. //தொலைகாட்சியில் நன்மை என்பதை ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. சுத்த டைம் வேஸ்ட் என்று தான் நினைக்கிறேன். //

    உங்களிடம் தொலைக்காட்சி உள்ளதா

    ReplyDelete
  35. //ஏதாவது ஒரு காரணத்தால், ஒரு கால கட்டத்தில், இலவசங்கள் நின்று போனால்? வாங்கியே பழகிய பயனாளிகள் கதி?//

    நீங்கள் தினமும் மழையங்கி (ரெயின்கோட்) அணிபவரா அல்லது மழை வரும் போது மட்டும் அணிபவரா

    ReplyDelete
  36. //
    //தொலைகாட்சியில் நன்மை என்பதை ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. சுத்த டைம் வேஸ்ட் என்று தான் நினைக்கிறேன். //

    உங்களிடம் தொலைக்காட்சி உள்ளதா//
    கடந்த நான்கு மாதங்களாக இணைப்பை துண்டித்து விட்டோம், வெறுத்துப்போய்!

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails