தமிழக அரசியலில் உவமை, உவமானங்கள் எல்லாம் கொடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் நம் ஆட்கள் விளையாடப் போனபோது ஹர்பஜன் சொன்ன இன்வெறி வார்த்தையை ஒரு முன்னாள் முதல்வரைப் பார்த்து முன்னாள் மத்திய அமைச்சர் சொல்லுகிறார். ஒரு வருங்கால முதல்வரைப் பார்த்து இன்னொரு வருங்கால முதல்வர் சொல்லுகிறார். ஆனால் இதெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சாதாரண விஷயமாக ஊடகங்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. விளையாட்டில்கூட சொல்லக் கூடாத வார்த்தையை ஊடகங்கள் முன்னிலையில், ஊர்மக்கள் முன்னிலையில் சொல்வதையும் ஊடகங்கள் ஒளிபரப்பிக் கொண்டே இருக்கின்றன. ஹர்பஜன் மட்டும் ஆமாம் சொன்னேன் என்றிருந்தால் அவருக்கு வாழ்நாள்தடை வந்திருக்கும். இந்திய அணிக்குக் கூட நிறவெறிச் சாயம் பூசப் பட்டிருக்கும்.
============================================================
இந்திய இலங்கை அணியின் இறுதி ஆட்டத்தைப் பற்றி பேசப் படும் ஒரு கருத்து. இலங்கை அணி தன்பாதையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இங்கிலாந்து போன்ற எளிமையான அணிகளைச் சந்தித்து இறுதி ஆட்டத்திற்கு வந்தது. ஆனால் இந்திய அணியோ, இங்கிலாந்து, தெனாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய கடுமையான அணிகளுடன் போராடி வந்திருக்கிறது.
என்ன கொடுமைடா சாமி.
=====================================================
அஃப்ரிதிக்குத் தெரிகிறது. கிரிக்கெட் வெற்றியை அரசியல் ரீதியில் அர்ப்பணம் செய்யக் கூடாது என்று. இத்தனைக்கும் அவர் விளையாட்டில் வெற்றி பெற பற்களை உபயோகப் படுத்தக் கூட தயங்காதவர். விளையாட்டுகளில் அரசியல் பேசும் வீரர்களுக்கு தண்டனைகள் கொண்டுவரச் சர்வதேச சட்டங்கள் போட்டால்தான் என்ன

No comments:
Post a Comment