Friday, April 8, 2011

அன்னா ஹசாரே - ஆதரவு எவ்வளவு தூரம்?

டிஸ்கி :-  உண்ணாவிரதம், காந்திய வாதம் ஆகியவை மிக புனிதமானவை, வலிமைமிக்கவை என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்பதை இங்கு நான் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன்

அன்னா ஹசாரே அவர்கள் ஒரு மாபெரும் கொள்கையை நோக்கி ஒரு உண்ணாவிரதப் போரைத் தொடங்கி இருக்கிறார். அவர் சொல்லும் விஷயங்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படவேண்டியது. ஆனால் அன்னா ஹசாரேக்கு முன்னதாக தமிழகத்திலும் இது போன்று ஒரு இயக்கம் சென்ற தேர்தலில் நடைபெற்றது.  பதிவர் ஒருவரே முன்னிலை வகித்தார். பல பதிவர்களும் அந்த வேட்பாளருக்கு ஆதரவுகளை அள்ளித் தெளித்தனர். அந்த தேர்தலுக்குப் பின்னர் அந்த நடவடிக்கைகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை.


இப்போது அன்னா ஹசாரே அவர்களைப் பற்றியும் இணையத்தில் ஆதரவுகளை வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் ஏதாவது பயன் இருக்கிறதா? இணைய கையெழுத்து இயக்கம் வேறு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  சில இடங்களில் பதிவர்கள் கூட்டங்கள் கூட நடக்க இருக்கின்றன.


எனக்கு சில சந்தேகங்கள்: -
1.இந்த நடவடிக்கைகள் அன்னா ஹசாரேவுக்கு எந்த விதத்தில் உதவப் போகின்றன?

2. இவ்வாறு ஆதரவுக் கூட்டங்கள் போடுவதை விட அவருக்கு ஆதரவாக பத்து, இருபது பேராக ஒவ்வொரு இடத்திலும் உண்ணாவிரதம் இருக்கலாமே. ஏன் அதைச் செய்வதில்லை. டோனிக்கு ஆதரவாக எந்திரனுக்கு ஆதவராக செயல்படும் இயக்கம்போல்தான் செயல் படப் போகிறார்களா?

அப்படி உண்ணாவிரதங்கள் ஆங்காங்கு நடைபெற்றிருந்தால் இன்னேரம் மிகப் பெரிய பேச்சாக மாறியிருக்குமே? 

3.71 ஆண்டுகள் அன்னா ஹசாரே மக்கள் பணியில் எவ்வளவு நாட்கள் ஈடுபட்டு வருகிறார்? அதனால் பொது மக்கள் எந்த அளவு நன்மை பெற்றிருக்கின்றனர் என்பதுபோன்ற  பாஸிட்டிவ் தகவலகளை சொல்லி அவருக்கு ஆதரவு திரட்ட ஏன் அவரது ஆதரவாளர்கள்  தவறுகின்றனர்?

4.அவருடன் இருக்கும் முன்னாள் நீதியரசர்கள்  சட்ட ரீதியாக இந்தச் சூழலை சமாளிக்க முடியவில்லையா?===========================================================================
தமிழக ஊடகங்கள் ஏன் இந்த போராட்டத்திற்கு பெரிய அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று ஒரு நண்பரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில். நாங்கெல்லாம் இதவிட பெரிய பெரிய உண்ணாவிரதமெல்லாம் பாத்திருக்கோம்ல


1 comment:

 1. எனக்குக் கிடைத்த செய்தி

  வாழ்க திருவாளர் அன்ன ஹசாரே அவர்கள் !
  சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.

  இன்று மாலை 5 மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
  சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்

  தமிழக ஊடகங்கள் இதைக் கண்டுக் கொள்ளவில்லை அவ்வளவே. மற்றபடி மாபெரும் இயக்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails