Friday, April 8, 2011

சச்சின் முன் நிற்கும் சவால்.

1. லலித் மோடி இல்லாமல் நடைபெறும் முதல் ஐ.பி.எல் இது.  லலித் மோடி இப்போது தலைமறைவாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கு முந்தைய உலகக் கோப்பைக்கு  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் அவர்.

2.இந்திய அணியின் ஆக்ரோஷமான கேப்டன் கங்குலி இன்று என்ன செய்யப் போகிறார் என்றே தெரியவில்லை. ஃபிளம்பிங் கூட பயிற்சியாளராக வளம் வருகிறார்.

3.வாசிக் அக்ரம் பந்து வீச்சு பயிற்சியாளராக வந்திருக்கிறார், அவரே  கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு சிறந்த உதாரணம். அதை அவர் கற்றுக் கொடுக்க வேண்டும். பாகிஸ்தானில் எதிரணியினரை விளையாட்டு நுட்பங்களால் மட்டுமே பயமுறுத்திய வீரர். அநேகமாக ஒரே பாகிஸ்தானிய வீரர்.

4.சைமண்ட்ஸ், ஹர்பஜன்சிங் ஒரே உறையில் இருக்கும் இரு கத்திகள். சச்சின் சமாளிப்பாரா என்று தெரியவில்லை
http://p.imgci.com/db/PICTURES/CMS/81000/81072.jpg



5. சென்ற ஆண்டு இளையவர்களூக்கு வழிவிட்டு கேப்டன் பதவியிலிருந்து ஒதுங்கிய சேவக், கம்பீர் வேறிடம் சென்றதால் இன்று மீண்டும் கேப்டன் ஆகிவிட்டார்.  இந்திய அணியின் கேப்டன் மேக்கராக சச்சின் மாறியது போல சேவக்கும் யாராவது ஒரு புதியவருக்கு வழிவிட்டு விடலாம்.

6.இந்த ஆண்டு ஐ.பி.எல் லின் அரையிறுதி போட்டி கலந்து கொள்ளுபர்களுக்கு நல்ல வாய்ப்பினைத் தருவதாக இருக்கிறது. எதிர்காலத்தில் அனைவராலும் இந்த முறை பின்பற்றப் பட வாய்ப்பு உள்ளது. இதையே காலிறுதியில் பின்பற்றினால் நினைக்கவே தேனாக இருக்கிறது.

7.உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அனுமதி தந்தவர்கள், வசிம் அக்ரமுக்கு அனுமதி தந்தவர்கள் விளையாட விருப்பம் உள்ளவர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கலாம்.

8.ஆட்டம் முடிந்தவுடன் நடைபெறும் தேநீர் விருந்துக்கு தடை வழங்கப் பட்டுள்ளது. அதே போல் ஆட்டம் முடிந்த உடன் வீரர்கள் தங்குமிடத்தை விட்டு வெளியே செல்வதற்கும் தடை போடலாம். அனைத்து வி.ஐ.பிக்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பது காவல்துறைக்கு கூடுதல் தலைவலியைத் தரும்

9.ஒவ்வொரு போட்டியிலும் நால்வர் மட்டுமே வெளிநாட்டுவீரர்கள் இருக்கலாம் என்பது போல பயிற்சியாளராக வெளிநாட்டு வீரர் இருக்கலாம். ஆனால் தலைவராக உள்நாட்டுவீரர்தான் இருக்கலாம் என்று சொல்லி விடலாம்.  துணைத் தலைவராக சர்வதேச அனுபவம் இல்லாத அல்லது மிகக் குறைந்த சர்வதேச போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள  உள்ளூர் வீரர்தான் இருக்க வேண்டும் என்று உறுதி படச் சொல்லி விடலாம்.

10. போட்டி நடத்துவதில் மட்டுமே மிகச் சிறந்த கட்டுக்கோப்புடன் திட்டமிடுகிறோம். ஆனால் போட்டி அதன் போக்கில்தான் போகிறது என்பதை ஐ.பி. எல் ரசிகர்களிடம் தங்கள் செயல் பாடுகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails