ஒரு போட்டியில் ஒருவர்தான் வெல்ல முடியும் என்ற போட்டிவிதிகளுக்கு அடங்க இந்த உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியிருக்கிறது. வாழ்த்துக்கள். அணியின் மூத்த வீரர் சச்சினுக்கு அனைவரும் அதை சமர்ப்பணம் செய்கிறார்கள். சச்சின் பல வீரர்கள் கிரிக்கெட் மட்டையை தொட்டுப் பார்க்கும்முன்பே சர்வதேச களம் கண்டவர். இன்னும் விளையாடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிவிடுவோம்.
இந்த உலகக் கோப்பையைப் பற்றி யோசித்ததில் சில விஷயங்கள் தோன்றின அதை பகிர்ந்துகொள்ளவே இந்த இடுகை
1. சச்சினுக்காக உலக் கோப்பையை வென்றிருக்கிறோம். ஆனால் இதற்கு முன் சச்சின் தலைகீழாக நின்றபோதெல்லாம் கிடைக்காத கோப்பை. இன்று அவருக்கு சமர்பிக்கப் பட்டிருக்கிறது. அணியினர் அவருக்காக வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இந்திய அணி முழுக்க சச்சினை நம்பி இல்லை என்ற சூழல் வந்திருக்கிறது. (முன்பெல்லாம் சச்சின் சதம் அடித்துக் கொடுத்தால்கூட வெற்றிபெரும்வரை களத்தில் இருக்கவேண்டும். இல்லையென்றால் ஊத்திவிடும்)
2. பாகிஸ்தானிலிருந்து வந்த அஃப்ரிதி நல்லவர் அஃப்ரிதியாக திரும்பி யிருக்கிறார். கிரிக்கெட்டில் வெற்றிக்காக எதையும் செய்யக்கூடியவர் அவர். அவரே இந்தியாவுடன் நடக்கும் ஆட்டத்தை இயல்பாக பாருங்கள் என்று அங்குள்ள ஊடகங்களின் முன்னர் கூறும் அளவிற்கு நல்லவராகவும் தைரியமானவராகவும் இருக்கிறார். அவரிடமிருந்து நம்மவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
3.சென்ற முறை அணிகள் இலங்கைக்கு சென்று ஆட மறுத்த போது இலங்கைக்கு சாதகமாக புள்ளிகள் வழங்கின. ஆனால் இந்த முறை பாகிஸ்தானை கழட்டிவிட்டுவிட்டது. இது ஒரு எல்லா அணிகளுக்குமே எச்சரிக்கைதான்.
4. பாகிஸ்தான், இலங்கை அதிபர்கள் இந்தியத் தலைமை கூப்பிட்டால் உடனே வரத்தயாராக இருக்கிறார்கள். ஒரு நாள் முழுவதும் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம் பேசி பல பிரச்ச்னைகளைத் தீர்க்க இந்திய அரசாங்கம் முயலலாம். கிரிக்கெட் போட்டி முடிந்தால் என்ன? ஏதாவது கலைநிகழ்ச்சிகள் கூட நடத்தி உலக அமைதியை நிலைநாட்டலாம்.
5. வெற்றியின்போது நம் ஆட்கள் அழுகிறார்கள். கண்கள் பனிக்க இதயம் கணக்கத்தான் ஆடுகிறார்களோ?
6. பூணம் பாண்டே மாதிரி உள்ளூர் கபடி போட்டிகளிலும் அறிவிப்பு வந்தால் நல்லாயிருக்குமோ?
7.இனிவரும் ஆட்டங்களில் முதல் சுற்றில் ஏதாவது ஒரு போட்டி டை ஆனால்தான் கோப்பை வாங்குவார்களா?
8.ஒருவேளை இந்த ஆட்டத்தில் டோனி வெற்றி இன்னிங்க்ஸ் கொடுக்கவில்லையென்றால் சென்ற உலகக் கோப்பை நிகழ்வுகள் திரும்பி இருக்குமோ?
9.சச்சின் மேல் எந்த ஒரு நெருக்குதலும் இல்லை. மற்ற வீரர்களை விட நன்றாகத்தான் விளையாடுகிறார். அவர் இருப்பதே சகவீரர்களுக்கு உற்சாகமும், எதிர் அணியினருக்கு கிலியையும் கொடுப்பதால் அவர் ஏன் ஓய்வு பெற வேண்டும்?
10. எல்.பி.டபிள்யூ கூட மேல் முறையீடு செய்வதற்கு பதிலாக எல்லா முடிவுகளையும் மூன்றாம் நடுவருக்கு கொடுத்து விடலாமோ?
11.ரிக்கி பாண்டிங் மாதிரி வலிமையான அணியை கையில் வாங்கி அதை குட்டிச் சுவராக்கிய அணித்தலைவர் வேறெங்காவது இருப்பார்களா? நடுவர் அவுட் கொடுத்தால் மட்டுமே வெளியேறுவேன் எறும் தரையில் பந்து பட்டது நன்றாக தெரிந்தும் நடுவர் ஏமாந்து சாதகமாக தீர்ப்பு கொடுக்கமாட்டாரா என்று எதிர்பார்க்கும் தலைவர் எந்த தேசிய அணியிலாவது இருப்பார்களா?
12. பேசாமல் பிசிசிஐ ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன? நல்ல நட்சத்திர அந்தஸ்து உள்ள ஆட்கள் இருக்கிறார்கள். பணமும் நிறைய இருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் சரமாறியாக செலவு செய்ய ஆட்களும் இருக்கிறார்கள். கண்டிப்பாக ஆட்சி அவர்களுத்தான் உலக அளவில் இருந்தெல்லாம் வந்து பிரச்சாரம் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள்.

அந்த கடைசி தகவலை படித்து விட்டு பயந்து போய் இருக்கிறேன்.
ReplyDelete//King Viswa said...
ReplyDeleteஅந்த கடைசி தகவலை படித்து விட்டு பயந்து போய் இருக்கிறேன்.
//
நடக்காது என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது
//ஊரான் said...
ReplyDeleteதுன்பக் கடலில் துவளும் இந்தியா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்….
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html
//
நிறைய எழுதுங்கள் தல
//பேசாமல் பிசிசிஐ ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன?//
ReplyDeleteசரத்பவாரை பிரதமாராக்கி விடுவீர்கள் போல் உள்ளதே