ஊழலை ஒழிப்பது என்பது ஏதோ காலனி ஆதிக்கத்திலிருந்து வெளியே வருவது போன்ற விஷயம் போலவும், அன்னிய தேச ஆதிக்கத்திலிருந்து வெளியே வருவது போலவும் முடிவு கட்டிக்க் கொண்டு அலுவலக டீக் கடைகளிலும், எதற்கும் உதவாத வகையில் எல்லோரும் மோசம் என்று எல்லோரும் திருட்டுப் பசங்க என்றும் பேசிக் கொண்டும் இருப்பதும்தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஒரு வகையில் போய் மாலை நேரத்தில் மெழுவர்த்தி ஏற்றிக் கொண்டாடுவது என்பது ஊழலை ஒழிப்பது என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.( பலருக்கும் கோபம் வரலாம்).
ஊழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது? யாரால் யாருக்காக யார் மூலம் ஊழல் செய்யப் படுகிறது? என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள். ஊழலின் ஊற்றுக் கண் எங்கிருந்து வருகிறது என்பது புலப் படும். அதை அடைப்பது எப்படி என்றும் தெரியும்.
எவர் மூலம் என்ற கேள்விக்கு பதில் அரசியல்வாதிகள் மூலம் என்பதில் எல்லோரும் உறுதியாக இருப்பார்கள். அவர் மாற்றிவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா என்றால் ஒழியாது. எத்தனை கமர்சியல் திரைப்படங்கள் வந்துவிட்டன. அதிலும்கூட யாருக்காக ஊழல் என்பதை தெரிந்தும் தெரியாமலும் மறைத்தே காட்டுகின்றன. யாரும் தன்க்கு தொழில்தரும் வாடிக்கையாளரை குறை சொல்ல விரும்புவதில்லை.
அர்சியலில் நேரடியாக ஈடுபடுபவர்கள் ஒருபுறம், மறைமுகமாக ஈடுபடுபவர்கள் ஒருபுறம். நேரடியாக ஈடுபடுபவர்கள் லஞ்ச ஊழல் விவகாரங்களில் மாட்டிக் கொண்டால் பெரும்பாலும் அவர்களது அரசியல் எதிர்காலம் முடிந்து விடுகிறது . இதற்கு முன் இருந்த அமைச்சர்களின் வாழ்க்கையே அதற்கு உதாரணம். எதிரிக் கட்சியில் டம்மி பீஸாக மாறி வாழ்க்கை ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். நகர, பஞசாய்த்துக்களில் மக்களை எதிர்த்து ஊழல் செய்தவர்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததே கிடையாது.
ஆனால் மிகப் பெரிய தலைகள் எஸ்கேப் ஆனாலும் கூட பெரும்பாலும் தேர்தலில் தோல்வியைத் தழுவுகின்றனர். வலிமையான எதிரிக் கட்சி அமைந்துவிட்டால் அவர்கள் அந்த எதிரிக் கட்சித் தலைவர் மறையும் வரை தலைதூக்க முடியாது. 1967ல் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்ட காங்கிரஸ் கட்சி இன்னும்கூட தமிழ்நாட்டில் தோழமைக் கட்சியாகவேதான் இருக்கிறது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரின் அரசியல் வாழ்க்கைகூட மங்கத் தொடங்கியது இது வரலாறு.
நேரடி அரசியல்வாதிகளின் ஊழலைத் தேர்தல் மூலம் சுலபமாக ஒழித்துவிட முடியும். நம் நாட்டுத் தேர்தல் முறை இதை பல முறை நிரூபித்துக் காட்டி இருக்கிறது.
ஆனால் அந்த அரசியல் வாதிகளையே ஊழலுக்கு தூண்டும் பின்புல அரசியல்வாதிகள் அதாவது அரசியலுக்கு நேரடியாக வராமல் அரசியலில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மனிதர்களை யார் நிர்ணயிக்கிறார்கள்? ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் காரியங்களை மறைமுகமாக சாதிக்க சிலரை வளர்த்துவிடுபவர்கள் யார்?
ஒரு சாதிச் சான்று வாங்குவதற்கு கூட பிறரின் உதவியை நாடுபவர்கள்,
பத்திரப் பதிவு, கடன் உதவி, தொழில் போன்றவைகளில் நேரடியாக நேர்மையாக இல்லாமல் மறைமுக ஆட்களை வளர்த்துவிடுபவர்கள், பலவந்தப் படுத்தி காரியம் சாதிக்க நினைப்பவர்கள், இது போன்று குறுக்குவழிகளில் காரியங்கள் சாதித்து அவர்களுக்கு அவர்களுக்கு ஊதியம் (இதை லஞ்சம் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. இந்த ஊதியம் பெற்று வாழ்பவர்களுக்கு இதுவே வாழ்வாதாரம்) வழங்குபவர்கள் யார்?
உண்மையில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் லஞ்சம் கொடுக்காமல் வாழ்வேன் என்று சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்டால்
ஒவ்வொரு மனிதனும் குறுக்கு வழியை நாட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டால்
ஊழலுக்கு தூண்டல் புரியும் எந்த அலுவலகத்திலும் நான் பணியாற்ற மாட்டேன் என்று முக்கியப் பொறுப்புவகிக்கும் நிர்வாக அதிகாரிகள் ( இந்த வகையினர் எந்த நிறுவனத்திற்குச் சென்றாலும் பெரிய அளவில் ஊதியம் பெற முடியும்). முடிவு செய்தால்,
எனது கடமை செய்வதற்கு எந்த வகையிலும் ஊட்டுத் தொகை பெறமாட்டேன் என்றும் எந்த வகையில் கடமையில் தவறுவதற்கு பணம் பெற மாட்டேன் என்று முடிவு செய்தால் ஊழல் சுலபமாக முடிவுக்கு வந்து விடும்.
உண்மையில் ஊழலை ஒழிக்க நினைக்கபவர்கள் எதிர்த்து போராட வேண்டியது அதிகார வர்க்கத்தை அல்ல, அடங்கி ஒடுங்கி ஊழலுக்கு நெய்யும் பாலும் ஊற்றி வளர்க்கும் அடுத்த வர்க்கமே
==================================================================
நாட்டில் எத்தனையோ உயர் அதிகாரிகள் நேர்மையாக செயல் படுகிறார்கள். அவர்களின் நேர்மையால் சில அப்பாவிகளுக்கு இடைஞ்சல் நேரிட்டால்கூட அதை அவர்களே சரி செய்து கொடுத்துவிடுவார்கள். அதற்கு தேர்தல் நேரத்தில் பணியாற்றும் அதிகாரிகளை பெரும்பாலோனோர் பாராட்டவே செய்கின்றனர். ஆனால் கீழ்மட்ட அலுவலர்களின் நிலை. கொஞ்சம் சிரமமான சூழலே நிலவுகிறது. பணம் கொடுக்காமல் நேரடியாக பணிக்கு வந்த அலுவலர்களில் பெரும்பாலானவர்கள் நேர்மையாகவே இருக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இருக்கும் பாதுகாப்பு இவர்களுக்கு இல்லை. இவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் ஊழல் எதிர்ப்பாளர்களே, பெரும்பாலான மக்கள் நேர்மையாக நடந்து, அலுவலர்களும் நேர்மையாக நடக்க நிர்பந்திக்கும்போது குறுக்கு வழியை தூண்டும் சிலர் தானாகவே ஒதுங்கிப் போய்விடுவார்கள்.
பெரும்பாலானவர்கள் குறுக்கு வழியை நாடினால் அதில் வலிமை வாய்ந்தவன் சொல்வதே வழி என்ற நிலையை அலுவலர் நாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நேரமையான அதே நேரத்தில் உறுதியாக இருந்தால் கண்டிப்பாக நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும். நிர்பந்திக்கும் நபர்களை நேர்மையாளர்களின் உதவியுடன் வெற்றி பெற முடியும். ஆனால் நடப்பது தலைகீழ்.
ஒவ்வொரும் தங்கள் காரியங்கள் நடக்க மட்டும் ஊழலை நாடுவதும். அதே வழியை மற்றவர்கள் பின்பற்றும்போது புலம்புவதும். இவர்களே நேரடியாக ஊழலை தவிர்க்கமுடியும் என்ற நிலையில் அதைவிட்டு விட்டு இன்னொருவர் போராடும்போது மெழுவர்த்தி ஏற்றி கார்த்திகை தீபம் கொண்டாடிவிட்டு புரட்சி வெடித்துவிட்டது என்று சொல்லிக் கொண்டு சுற்றுவதும் காரியத்திற்கு ஆகாதவை.
இதைவிட நேரமையாக இருப்பதும், நேர்மையாக இருப்பவர்களுக்கு நேர்மையில்லாதவர்கள் மூலம் பிரச்சனைகள் வரும்போது நடுநிலமை வகிக்காமல் நேர்மையின் பக்கம் ஆதரித்தலே நேர்மையானவர்களுக்குத் தரும் ஊக்கமும், ஊழலை ஒழிக்கும் வழியுமாக இருக்கும்.
இவ்வாறு இருக்கும் நடுநிலை வாதிகள் நேர்மையின் பக்கம் இருப்பார்களேயானால் கண்டிப்பாக கட்டைப் பஞ்சாயத்து பேர்வழிகளிடமும், மிரட்டல் பேர்வழிகளிடமும் நேர்மையாளர்கள் பயப் படாமல் இருக்க முடியும்.
===================================================================
ஊழல் என்பது தவறு ஊழலை ஒழிக்க முடியும் என்ற எண்ணத்தை மீண்டும் நினைவு படுத்திய அன்னா ஹசாராவுக்கு இந்திய தேசமே கடமைப் பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இதுவே என் எண்ணமும்..
ReplyDeleteதகுதியற்றவனெல்லாம் மெழுவர்த்தி பிடிப்பது அருவருப்பையே தருது..
//எண்ணங்கள் 13189034291840215795 said...
ReplyDeleteஇதுவே என் எண்ணமும்..
தகுதியற்றவனெல்லாம் மெழுவர்த்தி பிடிப்பது அருவருப்பையே தருது..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா