Wednesday, April 13, 2011

மாணவர்களுக்கு லேப்டாப் - முதல் படி துவங்கியது

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் கொடுக்கப் பட இருப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதைப் பற்றி பலரும் பலவாறு விவாதம் செய்திருக்கிறார்கள். அதன் முதல் படியாக தமிழகத்தில் பள்ளிப் பாடப்புத்தகங்கள் அனைத்தும் பிடிஎஃப் வடிவத்தில் வெளியிடப் பட்டுள்ளன.
 இந்தச் சுட்டியில் போய் தேவையானவற்றை பார்த்துக்  கொள்ளலாம்.


http://www.textbooksonline.tn.nic.in/
ஏற்கனவே கிராமப் புறப் பள்ளிகளில் டி.வி. , டிவிடி கொடுத்ததன் விளைவாக கிராமப் புறப் பள்ளி மாணவர்கள் ஆங்கில பாடல்கள், தமிழ் பாடல்களை நல்ல ராகத்தோடும் தெளிவான உச்சரிப்போடும் பழகி வருகின்றனர்.  இதில் சந்தேகம் அல்லது மாற்றுக் கருத்து இருப்பவர்கள் அருகிலுள்ள துவக்கப் பள்ளிக்குச் சென்று பார்க்கலாம். பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இதை நன்கு உபயோகப் படுத்தி வருகின்றனர்.

இதே போல விடியோ வடிவில் வகுப்புகளையும், இயற்பியல், வேதியியல், செயல் முறைகளையும் காண்பித்தால் உலகத்திற்கு தமிழ்நாடு வழிகாட்டியாக இருக்கும்.தனியாக ட்யூசன் நிலையங்களுக்குச் செல்லவேண்டிய அவசியம் இருக்காது.



http://www.textbooksonline.tn.nic.in/


டிஸ்கி:-

தமிழக அரசுதான் இதுபோன்ற செயல்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

பல நூறு கோடி ரூபாய்களை உலகவங்கியில் டெபாஸிட் செய்திருப்பதாக கூறும் எந்த ஒரு மாநில அரசாங்கமும் இது போன்ற ஆக்க செயல்களில் ஈடுபடவில்லை. ஒருவேளை அவர்கள் மூளைக்கு இதுபோன்ற செயல்கள் தெரியாமல் போயிருக்கலாம். எனக்கு அது போன்ற ஃபார்வேடு மெயில்கள் அனுப்பும் புண்ணியவான்கள் மேலே உள்ள சுட்டியை அந்த அரசுக்கு அனுப்பினால்  பணத்தை வங்கியில் போடாமல் மக்களின் கல்வியில் போட்டு வளப்படுத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

4 comments:

  1. அண்ணே

    எல்லாரும் படிச்சுப்புட்டா, அப்புறம் அவங்க சொல்லும் புரட்டுக்களையும் பொய்களையும் எப்படி அண்ணே நம்புவாங்க

    பிறகு எப்படி ஒரே நிறுவனத்திற்கு அரசு பணம் 60000 கோடியை தாரை வார்க்க முடியும்

    படிக்க விட்டு விடுவோமா ??

    இப்படித்தான் 60 வருசத்துக்கு முன்னால இருந்த 12000 பள்ளிக்கூடங்களில் 6000 பள்ளிக்கூடங்களை இழுத்து முடினோம்

    இலவசமாக கல்வி அளிப்பதால் மக்கள் சோம்பேறியாகிறார்கள் என்றோம்

    சாலை போட பணம் இல்லை, சாலை போட்டால் வளர்ச்சி, இலவச கல்வி பிச்சை என்று ஏமாற்றினோம்

    காமராசர் வந்து ஆப்பு அடிச்சுட்டாரே அண்ணே !! எல்லாரையும் படிகக் வச்சுட்டாரே

    ReplyDelete
  2. நன்றி நண்பரே.., உங்கள் பெயரில் ஏற்கனவே ஒருவர் இருப்பதால் நீஙக்ள் புதிதாக ஒரு பெயர் வைத்துக்கொள்வது நலம்

    ReplyDelete
  3. கூகிள் அப்ஸ் (google apps)ல் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்

    அதனால் வந்த குழப்பம்

    ReplyDelete
  4. //புருனோ Bruno said...

    கூகிள் அப்ஸ் (google apps)ல் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்

    அதனால் வந்த குழப்பம்//

    அப்படியா தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails