Sunday, April 5, 2009

மூன்றும் சேர்ந்த கூட்டணி

பேருந்து அமைதியாக கோவையை நோக்கிச் சென்று கொண்டிருந்த்து. நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று மதியம் இருந்தது. ஒருநாள் கழித்து இன்னொரு நண்பனின் திருமணம் இரண்டிலும் கலந்து கொல்வதற்காக முருகன் சென்று கொண்டு இருந்தான். அநேகமாக ராஜுவின் வீட்டில்தான் தங்கலாம் என்ற முடிவில்தான் வந்து கொண்டிருந்தான். ராஜுவும், ராஜுவின் மனைவி பூஜாவும் அவனது வகுப்புத்தோழர்கள்.

ராஜு உள்ளூர்காரன் தான், ஆனால் அவன் பூஜாவைக் காதலிக்க ஆரம்பித்த பின் கல்லூரியின் விடுதியில்தான் தங்கிப் படித்தான். ராஜு எப்போதும் முருகன் கோஷ்டியுடன்தான் இருப்பான். ஆனால் மாலை வேலையில் எல்லா நாட்களுமே பூஜாவுடன்தான் இருப்பான். பூஜா எப்போதும் கலகல வென்று எல்லோருடனும் பேசிக் கொண்டே இருப்பாள்.

150ஏக்கர் பரவியுள்ள கல்லூரி வளாகத்தில் மாலைவேளையில் ஆங்காங்கே மாணவர்கள் அமர்ந்து படிப்பது வழக்கம். பல ஜோடிகள் தனியே அமர்ந்து படித்துக் கொண்டு இருப்பார்கள். 9மணிக்கு மாணவியர் விடுதி மூடிவிடுவதால் அதுவரை இவர்களது படிப்பு தொடரும். பின்னர் எல்லோரும் விடுதிக்குச் சென்று விடுவர்.

முருகன் மாதிரி ஆட்கள் படிக்க சோம்பல் ஏற்படும் நேரங்களில் அப்படியே மயில் வேட்டைக்குச் செல்வார்கள். அந்தக் கல்லூரியில் மயில்கள் நிறையச் சுற்றிக் கொண்டிருக்கும். மயில் பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆங்காங்கே காதலர்கள் படிக்கும் அழகை ரசித்துக் கொண்டு போவார்கள். அதுதான் மயில் வேட்டை. அப்படி செல்லும் போது ராஜு பூஜா ஜோடி கண்ணில் தட்டுப் பட்டால் ராஜுவைவிட பூஜாதான் அதிகமாக முருகன் குழுவினருடன் பேசுவாள். சிப்ஸ், பிஸ்கெட் போன்றவை வாங்கி வருமாறு தொல்லை படுத்திக் கொண்டே இருப்பாள். பூஜாவுக்குப் பயந்தே அவர்கள் இருக்கும் பகுதியை தவிர்த்துவிடுவார்கள். இருந்தாலும் அவர்கல் எந்த மூலையில் அமர்ந்து படிக்கிறார்கள் என்பது தெரியாத சூழலில் அடிக்கடி செலவு வைத்துவிடுவாள்.

ராஜு பூஜாவை விட்டுவிட்டு வந்துவிட்டால் பிறகு முருகன் குழுவினருடன்தான் இருப்பான். கோயமுத்தூரில் உள்ள பலநூறு கல்லூரிகளில் மாதமாதம் எதாவது ஒரு கல்லூரியில் கலைவிழா நடக்கும். அதற்கு முருகன் குழுவினர் போவர்கள். அதற்கான பயிற்சியில் ஈடுபடும்போது கூட மாலை வேலைகளில் பூஜாவைப் பார்க்க போய்விடுவான். பூஜாவே கூட்டி வந்தால்தான் வருவான்.

நேற்றே அலைபேசியில் ராஜுவுடன் பேசியிருந்தான். ராஜுதான் இங்கேயே தங்கியிருந்து இரண்டுதிருமணங்களிலும் கலந்து கொள்ளுமாறு யோசனை கூறியிருந்தான்.

நேராக திருமண வரவேற்பு நடந்த மண்டபத்திற்கு சென்றான் முருகன். அங்கே நண்பர்கள் கூட்டம் ஒன்றும் அதிகமாகத்தென்படவில்லை. இருந்த ஓரிருவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட நினைத்த போதுதான் பூஜ வந்தாள்.

சில ஆண்டுகளில் கொஞ்சம் குண்டாகியிருந்தாள். ஒப்பனைகளும் கூடியிருந்தன.

"ஃபோன் நம்பர் மாத்திட்டயாமே.. எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டாயா"
கொஞ்சம் பயமுறுத்தும் வண்ணம்தான் பேசினாள்.

ராஜு வரலையா?

இல்ல.. அவர் கொஞ்சம் பிஸி. உன்னை வீட்டுக்கு கூட்டிவரச் சொன்னார்.

திருமண வரவேற்பு முடிந்து அவர்கள் வீட்டுக்கு புறப்படும்போது காரின் முன்பக்க கதவுகளை திறந்துவிட்டாள். முருகனுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. கையில் இருந்த குழந்தைகளுக்கு வாங்கிய பரிசுகளை முன் இருக்கையில் வைத்துவிட்டு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாண். கல்லூரி நாட்களில் சிலமுறை இருசக்கர வாகனத்தில் அவளை அழைத்துவந்திருக்கிறான். இன்று கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

படித்து முடித்த சிலகாலங்களில் இருவரும் திருமணம் முடித்துமேல்படிப்பு முடித்து ராஜுவின் தந்தை கட்டி வைத்த மருத்துவ மனையை கவனித்துக் கோண்டிருந்தார்கள். முருகன் அரசுப் பணி கிடைத்து ஒரு கிராமத்தில் வேலை செய்து வந்தான்.

நீ ஏன் ஃபோன் செய்யறதே இல்லை இது பூஜா

இல்ல கொஞ்சம் வேலை அதிகம்.

ஃபோன் நம்பர் மாத்தினதும் சொல்லவே இல்லை. அதினாலதான் உணக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவே முடியவேயில்லை என்றாள் பூஜா..

உண்மைதான் முருகன் அலைபேசி வாங்கிய காலகட்டத்தில் பூஜாவிடம் இருந்து நிறைய குறுஞ்செய்திகள் வரும். புது எண் வாங்கிய பிறகு எல்லோரும் தெரியப் படுத்தவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை விட்டு விட்டான். ராஜுவுடன் அவ்வப்போது பேசுவான்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் கல்லூரிக்கு எதிரே உள்ள ஐஸ்க்ரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டாள். மாறவே இல்லை இந்தப் பூஜா..

பொதுவான விசாரிப்புகளுடனும் மற்ற நண்பர்களைப் பற்றிய விசாரிப்புகளுடன் மகிழ்வுந்து பூஜாவின் வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் பூஜா அழ ஆரம்பித்தாள்.

தொடரும்...... தொடரும்.......... தொடரும்..........

பின் குறிப்பு:- பச்சை நிறத்தில் பூஜா பேசுவதும்
நீல நிறத்தில் முருகன் பேசுவதும் இடம் பெற்றுள்ளன

========================================================

நண்பனின் மனைவி முதல் பாகம் படித்துவிட்டு இரண்டாம் பாகத்தினை தொட்ருங்கள்சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பூஜா மாதிரி ஆட்களுக்கு அழக் கூடத்தெரியுமா.. என்பதே முருகனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. என்னேரமும் பேசிக் கொண்டே இருக்கும் பெண் அவள். இன்று சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவள், காதலித்தவனையே திருமணம் செய்து கொண்டவள், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் நெருங்கிய நண்பனின் மனைவி. இப்போது என்ன செய்வது என்றே முருகனுக்குத் தோன்ற வில்லை. அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.

இப்பொழுதெல்லாம் ராஜு குடிக்கறார். சொல்லிக் கொண்டே அழுதாள். அழுதுகொண்டே சொன்னாள்.

இது அதிபயங்கர அதிர்ச்சியாக முருகனுக்கு அமைந்தது. முருகன் கல்லூரி நாட்களில் தண்ணியடித்திருக்கிறான். கல்லூரி விழாக்கள் முடிந்த பிறகு, நண்பர்களின் பிறந்த நாளில் என்று தேர்ந்தெடுத்த நாட்களில் நண்பர்கள் குடிப்பார்கள். ஆனால் அந்த நாட்கள் வாரா வாரம் வந்திவிடும். அந்த நேரத்தில் எல்லாம் ராஜு குடித்ததில்லை. சிகரெட் கூட உபயோகப் படுத்தியதில்லை. ஆனால் முருகன் உட்பட அவன் நண்பர்கள் யாருமே குடிப்பதில்லை. புகைப்பதில்லை. ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த ராஜு குடிப்பது முருகனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

என்ன ஆச்சு?

தெரியல.. என்னை சந்தேகப் படற மாதிரி தெரியுது. ஆனால் என்கிட்ட ஏதும் கேட்க வில்லை.

எத்தனை நாளா குடிக்கறான்?

ஒரு வருஷமா.. சில நேரங்கள்ல டெய்லி கோட குடிக்கிறார்.

வேலைக்கு ஒழுங்கா போறானா?

அதெல்லாம் போறார். வீட்டுக்கு வரும்போது பெரும்பாலும் குடித்துவிட்டு வருகிறார். குடித்துவிட்டு வந்தாலும் குடிக்காவிட்டாலும் வந்ததும் நெட்டில் உட்கார்ந்துவிடுகிறார்.

அப்புறம் எப்படி சந்தேகப் படுறான்னு சொல்றே..

தோணுது. ஆனால் ஏன்னுதான்னு தெரியல...

கல்லூரித்தோழந்தான். ஆறுஆண்டுகள் ஒன்றாகப் படித்தவர்கள்தான். ஆனாலும் சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அவனின் குடும்ப பிரச்சனையில் தலையிடுவது எப்படி குழம்பிப் போய் நின்றான்.

தொழிலில் ஏதும் பிரச்சனை மாதிரியும் தெரியவில்லை. சந்தேகப் படுவதாக வேறு சொல்கிறாள். அவன் சந்தேகப் படுகிறானா.. இவள் அவனை சந்தேகப் படுகிறாளா...

இந்த நேரத்தில் மகிழ்வுந்து ஒன்று வரும் சத்தம் கேட்டது.

அவர்தான் வருகிறார்.

கண்ணைத்துடைத்துக் கொண்டு பூஜா எழுந்தாள்.

ராஜு உள்ளே வந்தான். இருவரையும் பார்த்தான்.

தொடரும்.............. தொடரும்................... தொடரும்............................
===================================================


ராஜூவிடம் அந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை முருகன். நானும் பூஜாவும் விவாகரத்து வாங்கலாம் ன்னு இருக்கோம்.

முருகனுக்கு பயங்கர அதிர்ச்சி. ஏண்டா...
......................................................
இந்தக் கதையைத் தொடங்கும் முன் நண்பனின் மனைவி பாகம்-1, பாகம்-2 படித்துவிட்டு வாருங்கள்.
....................................................

பிற்பகலில் ராஜு வீட்டுக்கு வந்த போது தன்னை வரவேற்றது கூட அவ்வளவு மகிழ்ச்சியாக தெரியவில்லை என்றுதான் முருகனுக்குத் தோன்றியது. ஊட்டிவரை போய்விட்டு வருவதாகக் கூறினான். இல்லை. இங்கேயே தங்கு. தோட்டங்களைப் பார்க்கலாம் நிறைய பேச வேண்டியுள்ளது என்றுதான் ராஜு முருகனைத தங்க வைத்தான். இப்போது தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டுதான் இதெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர்.
...........................................................

முருகன் கல்லூரிக் காலத்தை நினைத்துப் பார்த்தான். அன்றெல்லாம் முருகன் கூட்டம்தான் உற்சாக பானம் அருந்துவார்கள். ராஜு வெறுமனே ஒரு சிட்ரா பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு மற்றவர்கள் போதை மயக்கத்தில் பேசுவதை ஊக்குவித்துக் கொண்டிருப்பான். கல்லூரி நாட்களில் அவன் ஒரு போதும் குடித்ததே கிடையாது. இன்று தலை கீழாக இருக்கிறது. முருகன் பெப்சி பாட்டிலுடனும் ராஜு உற்சாக பானத்துடனும் இருக்கிறான். உற்சாக பானம் உற்சாகம் கொடுப்பதற்குப் பதிலாக அவனது துக்கத்தின் கரைகளை உடைத்துக் கொண்டு இருந்தது.

காதல் திருமணம் வேஸ்டுடா...

என்னடா பிரச்சனை..

பூஜா சொல்லியிருப்பாளே.. அவள் என்னைவிட நண்பர்கள்ட்டா தானே நல்லா பேசுவா..

போச்சு இனிமெல் வாயத்திறக்கக் கூடாது. இல்லடா ஒன்னும் சொல்லலியே... ஏன் இப்படியெல்லாம் பேசுர....

நீங்க ரெண்டு பேரும் எப்படி நெருங்கிய காதலர்களா சுற்றி வந்தீங்க...


இல்லைடா நாங்க ரெண்டு பேரும் நெருக்கமாவே இல்லை. அவளுக்கு நண்பர்கள்தான் எல்லாம். அவங்களுக்கு குற்ஞ்செய்தி அனுப்புற அளவிற்கோ பேசும் அளவிற்கோ என்னிடம் அவ பேசியதே இல்லை. சாயங்காலம் ஏதாவது ஒரு ஃபிரண்டு வாங்கி தந்ததுன்னு ஒரு கிஃப்டோட வந்து நிக்கறா.. என்கிட்ட கேட்டா வாங்கி தர மாட்டனா...

வீட்டுக்கு வந்தாலும் ஃபோனும் கையும்தான்.

ஏண்டா எங்காவது வெளியே கூட்டிட்டி போகவேண்டியதுதானே..

எங்கடா இப்பதான் ஹாஸ்பிடல் நல்லா போயிட்டு இருக்கு. அப்பாவுக்குன்னு நோயாளிகள் வந்தது போக இப்ப எங்களுக்கும் நோயாளிகள் வந்துட்டு இருக்காங்க...

அப்புறம் எப்படிடா விவாகரத்து வாங்குவீங்க?

விவாகரத்து வாங்கிவிட்டு திரும்பவும் ஒரே இடத்தில் வேளை செய்வீங்களா..

இப்ப என்னை என்னடா பண்ணச் சொல்ற...
.....................................................

பிரச்சனை ஓரளவு தெளிவானது. பூஜா கல்லூரியில் இருந்த மாதிரியே இன்னும் இருக்கிறாள். அன்று அதை ஏற்றுக் கொண்ட முருகனால் இன்று அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் தொடர்ர்சியாக ஏற்படும் வாக்குவாததில் பற்பல பிரச்சனைகள்.

.......................................................

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு முருகன் ராஜுவுக்கு ஒரு ஏற்பாடு சொன்னான். பரவாயில்லை. விடுடா..

ஆளுக்கொரு வண்டி வைத்துக் கொண்டுதான ஒரே மருத்துவமனைக்கு போய்ட்டுவர்ரீங்க. இனிமேல் ஓரே வண்டில போய்ட்டுவாங்க.

பிறகு பாருங்க..

..........................................
..........................................
சில நாட்கள் கழித்து ராஜுவிடம் இருந்து முருகனுக்கு அலைபேசி அழைப்பு. நன்றி மச்சி இப்பெல்லாம் பலவிஷங்கள் நார்மல் ஆயிடிச்சு.
...................................................

இந்தக் கதை இப்போது முடிந்தது

=======================================================

சமீபத்தில் எழுதியத தொடர்கதையின் ஒன்று, இரண்டு மூன்று பாகங்களும் வெளியிட்டுள்ளேன்.

12 comments:

 1. சுரேஷ்!!
  காலையிலேயே பதிவு!!

  ReplyDelete
 2. ஓட்டும் போட்டாச்சு!

  உங்க வேகம் பிரமிப்பா இருக்கு!!

  ReplyDelete
 3. சீக்கிறம் கெவின் டாப் ப்ளாக்ஸ் வாங்க! நான் விலகிக்கொள்கிறேன்!!

  ReplyDelete
 4. ஓட்டும் போட்டாச்சு!

  உங்க வேகம் பிரமிப்பா இருக்கு!! என்க்கு தான் ;-) அருமை தலைவா நல்ல எழுத்துக்கள்

  //ராஜுவிடம் இருந்து முருகனுக்கு அலைபேசி அழைப்பு. நன்றி மச்சி இப்பெல்லாம் பலவிஷங்கள் நார்மல் ஆயிடிச்சு.//

  நல்ல :-) உதவி முருகன் இல்லைனா ஒரு வாழ்கை காலி

  ReplyDelete
 5. வாங்க தேவன்மயம் சார்..

  சுரேஷ் சார்..

  வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி

  ReplyDelete
 6. //இப்பெல்லாம் பலவிஷங்கள் நார்மல் ஆயிடிச்சு.////

  விஷயங்கள் என்றுதான் எழுத நினைத்தேன். ஆனால் விஷங்கல் என்று வந்துவிட்டது. அதுவே நன்றாக இருந்ததால் விட்டுவிட்டேன்

  ReplyDelete
 7. அருமையா இருக்குங்க.. இந்த கதைய வச்சே 300 வாரத்துக்கு ஒரு சீரியல் எடுக்கலாம்.. முயற்சி பண்ணுங்க..


  கொஞ்சம் லேட் ஆய்டுச்சு, ஆனாலும் மறக்காம வோட்டும் போட்டாச்சு..

  ReplyDelete
 8. வாங்க சேரபாலா சார், லோகு சார்..

  ReplyDelete
 9. //லோகு said...

  அருமையா இருக்குங்க.. இந்த கதைய வச்சே 300 வாரத்துக்கு ஒரு சீரியல் எடுக்கலாம்.. //


  நன்றி தல..

  ReplyDelete
 10. ஆனா ஒரு வருத்தம் எனக்கு உண்டு சுரேஷ் அண்ணே...
  அப்ப எல்லாம் கதையில ஒரு கதாப்பாத்திரம் ஆக செவ்வனே செய்து இருப்பார். இப்போது எல்லாம் கதையே இவருக்காக எழுதப் படுகிறது...

  ReplyDelete
 11. //Sriram said...

  ஆனா ஒரு வருத்தம் எனக்கு உண்டு சுரேஷ் அண்ணே...
  அப்ப எல்லாம் கதையில ஒரு கதாப்பாத்திரம் ஆக செவ்வனே செய்து இருப்பார். இப்போது எல்லாம் கதையே இவருக்காக எழுதப் படுகிறது...
  //


  இந்த இடத்தில் போட வேண்டிய பின்னூட்டமா.. தல. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தல

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails