தங்கள் சமஸ்தானத்தில் வரி அதிகமாக இருப்பதால் அதைக் குறைப்பதற்காக கலெக்டர் அம்மாவைப் பார்ப்பதற்காக பெரிய தல, சின்ன தல இருவரும் கோட்டைக்கு வருகிறார்கள். இதன் முன்கதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
.....................................................................................................................................................
பெண் கலெக்டராக ஒரு ஹாலிவுட் நடிகை நடிக்கிறார். அவர் அதிகாலை நேரத்தில் எழுந்து ஜாக்கிங் போகிறார். ஸ்கிப்பிங் மற்றும் இன்னபிற உடற்பயிற்கிகள் எல்லாம் செய்து கடைசியில் குளிக்கிறார். படத்தில் அன்றைய வெள்ளைக் கார கலெக்டர்களின் அதிகாலை வாழ்க்கைமுறை பற்றி அழகாகப் பதிவு செய்யும் முயற்சியாக இந்தக் காட்சிகள் இடம் பெறுகின்றன. அதனால் யாரும் இவற்றை ஆபாசமாகக் கொள்ள வேண்டாம்.
..................................................................................................................
கோட்டைக்கு புறப்படும் பெரிய தல, சின்ன தல இருவரையும் பாராட்டி மக்கள் பாட்டுப் பாடுகிறார்கள்
எங்கள் மன்னன் நீ......
நாட்டின் மன்னன் நீ......
அரியணையின் மன்னன் நீ....
மக்கள் மன்னன் நீ.....
அமைச்சருக்கும் மன்னன் நீ...
தளபதிக்கும் மன்னன் நீ....
..................................... இளைய
.....(ஒரு இடைவெளி).......
தலைமுறைக்கும் மன்னன்நீ......
இமய மலையையும் ஆளப் பிறந்தவன் நீ.......
.................................................. பாடல் முடியும் போது குதிரையில் ஏறி கலெக்டரைப் புறப்படுகிறார்கள்.
மக்களுக்குள் பேச்சு
ஒருவர்:- நம்ம பெரிய தல, சின்னத்தலைய ரொம்ப செல்லமா வளர்த்திருக்கார், பார்த்தியா.. கப்பல்ல போயி வெளிநாட்டில் படிக்க வெச்சிருக்காரே....
மற்றொருவர்:- பெரிய தல அவரோடு பத்து வயசிலயே ஆட்சிக்கு வந்திட்டாரு. வெள்ளைக் காரங்க கிட்ட நம்ம நாடு அடிமையா இருக்கறத பார்த்து நமக்கு விடிவு காலம் வரணும்தான் வெளி நாட்டுக்கு தன்னோட தம்பிய அனுப்பி படிக்க வச்சிருக்காரு..
வயதில் முதிர்ந்த ஒருவர்:- அவங்க வாழ்க்கையிலும் ஒரு சோகம் இருக்குப்பா...
பாவம் அவங்களுக்கு ரெண்டு அம்மா..., ரெண்டு அப்பா...........
மக்கள் அதிர்ச்சியுடன்..........
ஐயோ....
என்ன ரெண்டு அப்பா, ரெண்டு அம்மாவா...............
அசிங்கமா பேசாதீங்கப்பா...
பெரிய தல பெரியராஜாவுக்கும் பெரிய ராணிக்கும் பிறந்தவர்...
சின்ன தல சின்னராஜாவுக்கும் சின்ன ராணிக்கும் பிறந்தவர்...
............................
அப்ப அவுங்கெல்லாம் எங்கேப்பா.......
வெள்ளைக் காரங்க முதன் முதலா நம்ம நாட்டுக்கு படையெடுத்து வந்தப்ப.. நம்ம பெரிய ராஜாவும் சின்னராஜாவும் எதிர்த்தாங்க.....
அவுங்களும் நம்ம தலைங்க மாதிரியே ரொம்ப அழகா சிவப்பா இருப்பாங்க ........
அவங்க ரெண்டு பேரும் ஒட்டி பிறந்தவங்க அப்படிங்கறதால பெரிய தலைக்கு வலது பக்கமும் சின்ன தலைக்கும் இடது பக்கமும் தலும்பு இருக்கும் அதை வெச்சுத்தான் கண்டு பிடிப்பாங்க யார் பெரியவங்க அப்படின்னு...
......................................................
அந்த வெள்ளைக்கார துரைக்கு ஒரு பொண்ணு
அந்தப் பொண்ணுக்கு நம்ம சின்னராஜா மேல ஒரு கண்ணு
ஒரு நாள் அந்தப் பொண்ணு சின்னராஜா வ பார்க்க வந்தப்போ
வெளிநாட்டுக் காரங்க சதின்னு பெரிய ராஜா நினைச்சு அந்தப் பொண்ணு திட்டிட்டார்..
அப்ப அந்தப் பொண்ணுக்கு யார் அசல்ன்னு தெரியாததால கோவிச்சிக்கிட்டு இங்கிலாந்துக்கே போயிரிச்சு.....
கொஞ்ச நாள் கழிச்சு திரும்பி வந்து
இந்தா உங்கொழந்தைன்னு சின்ன ராஜாவ தேடி வந்து கொடுத்தப்போ...
காதல்பிரிவுல சின்னராஜா செத்து போயிருந்தாரு......
உண்மையான காதலர்களப் பிரிச்சிட்டோமேன்னு பெரிய ராஜாவும் தேசாந்திரம் போயிட்டாரு. அப்ப இருந்து நம்ம பெரிய தலதான் நமக்கெல்லாம் மன்னரா இருந்து ஆட்சி செய்துட்டு இருக்காங்க.....................
இப்ப நம்ம சின்னதலயும் வந்து விட்டதால் வெள்ளைக்காரங்கல திரும்பவும் எதிர்க்க ஆரம்பிச்சிட்டாங்க...
..........................................................................................
வெள்ளையர்களின் கோட்டைக்குள் பெரிய தலயும் சின்னதலயும் நுழைகிறார்கள்.
கப்பம் கட்டும் மன்னர்கள் என்பதால் அவர்களை வெள்ளையர்கள் உள்ளே விடுகிறார்கள்.
காத்திருக்கும் அறையில் அமர்ந்திருக்கும் போது ஒரு வெள்ளைக்கார கிழவி வருகிறார்..
நீங்கதான் பெரிய தலயும் சின்னத்தலயுமா........... என்று கேட்கிறார்...
பெரிய தலயும் சின்னதலயும் புரியாமல் ஆமாமென்று தலையை ஆட்டுகிறார்கள்.
நாந்தாப்பா உங்க வெள்ளைக்கார பாட்டி.
உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்லத்தான் நான் உயிரோட இருக்கேன்..
உங்க அப்பா பெரிய ராஜா துறவறம் போகவில்லை. சின்ன ராஜா சாகவும் இல்லை.. இருவரையும் கைது செய்து சிறையில்தான் வைத்து இருக்கிறார்கள்..
உயிருடன் இருக்கிறார்களா...........................
கைது செய்தவர்கள் யார்?
பெரிய தலயும் சின்ன தலயும் பொங்கி எழுகிறார்கள்.
என் மகன் தான்.. அவன் தான் இப்போதைய கலெக்டரின் தந்தை........ என்று சொல்லிவிட்டு மேலே பார்க்கிறார். வெள்ளைக்கார பாட்டி.
மேலிருந்து கலெக்டர் இறங்கி வந்து கொண்டிருக்கிறார்.
.........................தொடரும்.................. தொடரும்...............தொடரும்.........................
மூன்றாம் பாகத்திற்கு இங்கே செல்லவும்
பின் குறிப்பு:-இது அசலாகவே என்னுடைய கற்பனைதான்
தல,
ReplyDelete//பின் குறிப்பு:-இது அசலாகவே என்னுடைய கற்பனைதான்//
இத போட வேண்டிய அவசியமே இல்ல. வேற யாராலையும் இப்படி யோசிக்கவே முடியாது.
பிளீஸ் கண்டினியு தல, அட் லீஸ்ட் தல பொறந்த நாள் வரைக்கும் ஆவது.
கிங் விஸ்வா
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
சுரேஷ் பதிவு டெம்ப்ளேட் சீக்கிரம் லோட் ஆகிடுச்சு.. கலர் தான் பளிச்சுன்னு ( அடிக்கிறாப்ல :) ) இருக்கு.. மேல படம் அழகு..
ReplyDeleteஹா ஹா...தல என்னது இது காமெடியா இருக்கு ..
ReplyDeleteதொடருங்கள்..
//King Viswa said... இத போட வேண்டிய அவசியமே இல்ல. வேற யாராலையும் இப்படி யோசிக்கவே முடியாது.
ReplyDelete//
நன்றி தல.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ReplyDeleteசுரேஷ் பதிவு டெம்ப்ளேட் சீக்கிரம் லோட் ஆகிடுச்சு.. கலர் தான் பளிச்சுன்னு ( அடிக்கிறாப்ல :) ) இருக்கு.. மேல படம் அழகு..
//
நன்றி அம்மா..,
//vinoth gowtham said...
ReplyDeleteஹா ஹா...தல என்னது இது காமெடியா இருக்கு ..
தொடருங்கள்..
//
நன்றி மற்றும் ஓ.கே. பாஸ்
ஜேம்ஸ்பாண்டுகளைக் காணாமல் தவறான கதவைத் தட்டிவிட்டோமேன்னு சந்தேகம் வந்துருச்சு.
ReplyDeleteநான் எதுக்கும் இன்னொரு நாள் வந்து சரியான கதவு எண்தானான்னு சரிபார்த்துக்குறேன்:)
வாங்க ராஜராஜன் சார்,
ReplyDeleteகொஞ்சம் வித்தியாசப் படுத்தினால் மறந்து விடுகிறீர்களே,,,,,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
அடிக்கடி வாருங்கள்
வாங்க ராஜ நடராஜன் சார்...
ReplyDeleteதலைவரே சும்மா சொல்ல கூடாது அசத்திடிங்க போங்க.
ReplyDeleteஅடுத்த பாகத்துக்கு காத்துக்கொண்டு இருக்கறேன்.
நன்றி ஜெட்லி அவர்களே...
ReplyDeleteenna mo ponga
ReplyDeleteonnum solraapla illa
"thala"ya urutta aarampichiteenga enga poi mudiya pogutho "asalukke " veliccham