Monday, April 27, 2009

மர்லின் மன்றோவின் முன்னோடி

முன்கதை:-அந்நியனிடம் அடிமைப் பட்டுக் கிடக்கும் தங்கள் சமஸ்தானத்தின் விடுதலைக்காக போராடுகிறார்கள் பெரிய தலயும் சின்ன தலயும்.... தங்கள் நாட்டு மக்களின் நிலை பற்றி ஆங்கிலேய கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்கள். வந்த இடத்தில் தங்கள் பெற்றோர் உயிருடன் இருப்பதை தங்கள் ஆங்கிலேயப் பாட்டிமூலம் தெரிந்து கொள்கின்றனர். இனி...........

.....................................................................................................................................

முதல் பகுதி அசல் படத்தின் கதை.

இரண்டாம் பகுதி அசல்+சுதந்திரம்+காதல் இங்கேயும் உள்ளது.

.......................................................................................................................................

கலெக்டர் அவர்கள் மாடியில் இருந்து இறங்கி வருகிறார். அப்போது கீழிருந்து மேலாக காற்று அடிக்கிறது. அவரது கவுனும் பறக்கிறது. இந்தக் காட்சியை ஓவியமாக வரைகிறார். சின்ன தல.. கீழிறங்கி வந்த உடன் கலெக்டரிடம் அந்த ஓவியத்தைப் பரிசாகக் கொடுக்கிறார். கலெக்டர் மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு சின்னத்தலையின் ஓவியத்திறமையைப் பாராட்டுகிறார். ( சில நூறு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஓவியத்தை அடிப்படையாக வைத்துதான் மர்லின் மன்றோ தனது மாடலிங் போஸ்களை கொடுத்ததாக பேசிக் கொள்கிறார்கள்.)


கப்பலில் இருவரும் வரும்போதே ஓவியம் வரைவது, இதுவும் இவ்வ்ளவு அழகாக ஓவியம் வரைவது தெரிந்திருந்தால் அப்போது டைட்டானிக் போன்று நாமும் பல காலத்தால் அழியாத சித்திரங்களை உருவாக்கி இருக்கலாம் என்று சொல்கிறார்.

.............................................................................................................

பெரிய தல தாங்கள் வந்த காரணத்தைச் சொல்கிறார். தங்கள் நாட்டு மக்களின் வறுமை நிலைகளை நாக்குத் தத்தளிக்க உள்ளம் உருக எடுத்துச் சொல்கிறார். ஏற்கன்வே சின்னத்தலையின் பரிசில் மயங்கி இருக்கும் கலெக்டர் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

சிலமாதங்களுக்கு முன் கூட உங்கள் அமைச்சர் இதற்கு முன் இருந்த கலெக்டரிடம் பேசினார்கள் அல்லவா.. என்றார் கலெக்டர்.

ஆமாங்க அம்மா.., ஆனா... இது பெரிய தல..

உங்க ஆளுங்க தான் நாங்க சொன்ன எந்த தீர்வுக்கும் ஒத்து வரவில்லையே என்ன செய்வது? இது கலெக்டர்.

அம்மா.. பேச்சுவார்த்தையில் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க அப்படி சொல்ல மாட்டீங்க....
.......................கொசுவர்த்தி சுழல........ பழங்காட்சிகள் வருகின்றன............................


தலையின் பிரதிநிதிகள்: ஐயா.. எங்கள் நாட்டில் மக்கள் மிகவும் வறுமையில் இருக்கிறார்கள்

ஆங்கிலேய கலெக்டர்: கேள்விப் பட்டோம். அதற்குத்தான் நாங்கள் பல திட்டங்கள் வைத்திருக்கிறோம். உங்களோட வறுமையை ஒழிப்பதுத்தான் எங்களின் முதல் வேலை.

தலையின் பிரதிநிதிகள்: மழையே இல்லைங்க

கலெக்டர்: ரொம்ப சரி, அதற்காகத்தான நாங்கள் கங்கையிலிருந்து உங்கள் நாட்டிற்கு தண்ணீர் கொண்டு வரப் போகிறோம் அதற்காக நீங்கள் ஆயிரம் பவுன் தங்கம் மட்டும் கொடுத்தால் போதும். உங்கள் பகுதியில் உள்ள தண்ணீர் பஞ்சம் பறந்து போயிடும்

தலயின் பிரதிநிதிகள்: ஆயிரம் பவுன் தங்கமா.. ஐயா நாங்க வரிக்கு வட்டி கூட கட்டமுடியாது அப்படின்னு சொல்ல வந்திருக்கோமுங்க..

கலெக்டர்: எங்களுக்குத்தெரியும். நாங்கள் வட்டியாகக் கேட்கவில்லை. தண்ணீர் கொண்டுவர ஆகும் செலவுகளைக் கேட்கிறோம். அதை மட்டும் கொடுத்தால் போதும்.

பிரதிநிதிகள்: ஐயா, கால்நடைகள் எல்லாம் சரியான உண்வில்லாமல் சக்தி இழந்து இருக்கின்றன. விறகு விற்கக் கூட நாங்கள் கால்நடைகளில் எதையும் எடுத்துச் செல்லமுடியவில்லை.

கலெக்டர்: கவலை வேண்டாம் மக்களே. நாங்கள் ரெயில் பாலம் போடுகிறோம் அதற்கு ஒரு இரண்டாயிரம் பவுன் தங்கம் மட்டும் கொடுத்தால் போதும்... உங்கள் மக்கள் ரயில் மூலம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். என்ன தொழில் வேண்டுமாணாலும் செய்யலாம். உங்கள் நாட்டில் தொழிற்வளர்ச்சி அபாரமாக அமையும்.

பிரதிநிதிகள்: ஐயா எங்கள் மக்கள் விவசாயம் செய்யக் கூட வலிமை குறைந்து காணப் படுகிறார்கள். நாங்கள் எப்படி?

கலெக்டர்: கவலையே வேண்டாம். நாங்கள் அதற்கும் ஆட்கள் அனுப்புகிறோம். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு மூன்று வேளை உணவு தரப் படும். குடியிருக்க குடிசைகள், அதுவும் விவசாய நிலத்தில் இல்லாமல் தனியே குடியிருப்பு அமைத்துக் கொடுக்கப் படும். உங்களுக்கு உண்வு, உறைவிடம் இரண்டும் தருகிறோம். எல்லாமே இலவசம்தான். நாங்கள் அனுப்பும் ஆட்களுக்கு நீங்கள் வேலைப் போட்டு கொடுத்தால் போதும். விவசாய நிலத்திற்கு நீங்கள் வேலை செய்யும் போது வந்தால் போதும். அதில் ஏதும் நஷ்டம் வந்தால் கூட அது உங்களை சேராது.

பிரதிநிதிகள்; ஐயா, அப்ப நிலம் .................

கலெக்டர்:அந்த நிலத்தைப் பற்றிய எந்தக் கவலையும் உங்களுக்கு வேண்டாம். நிலம் கம்பனிக்கு சொந்தம். நீங்கள் கவலையே பட வேண்டியதில்லை

பிரதிநிதிகள்:(என்னசெய்வது என்ன பேசுவதென்றே தெரியாமல்) ( கோபத்துடன்) நாங்கள் வருகிறோம்...

கலெக்டர்: போய் உங்கள் தலைவருடன் கலந்தாலோசித்துவிட்டு நல்ல பதிலாக வந்து சொல்லுங்கள். உங்களுக்கு உதவ நாங்க தயாராக இருக்கிறோம். அது எங்கள் கடமை

....................................................................................................


பெரிய தல: இப்ப சொல்லுங்கம்மா... நாங்கள் எப்படி ஒத்துக் கொள்ளமுடியும் அம்மா...?


பெரிய தலை சொல்லிக் கொண்டிருக்கும் போது...................


.................................................................தொடரும்....................................................

பின் குறிப்பு: இது முழுக்க கற்பனை. சரித்திர ஆதாரங்கள் எதுவும் கிடையாது. எந்த நிகழ்ச்சியுடனும் சேர்த்து குழப்பிக் கொள்ள வேண்டாம்

நான்காம் பகுதி இங்கே உள்ளது

6 comments:

 1. பழமை வீட்டுக்குப் போனேன்.உங்க ஞாபகம் வந்தது.ஜேம்ஸ்பாண்டுகள் நல்லாத்தானே இருந்தாங்க.அப்புறம் ஏன் கட்சி மாறீனீங்க:)

  ReplyDelete
 2. வாங்க ராஜ நடராஜன் சார்.., வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

  மாற்றம் ஒன்றுதானே மாற்றம் இல்லாதது

  ReplyDelete
 3. தல தொடருங்கள்.

  இடுகை நல்லா இருக்கு.

  ReplyDelete
 4. ஷ்......அப்பாடி....படிச்சுட்டு ஓட்டுப் போட்டுட்டேன்...

  ReplyDelete
 5. // அக்பர் said...

  தல தொடருங்கள்.

  இடுகை நல்லா இருக்கு.//

  ஏற்கனவே எழுதி முடித்துவிட்டேனே தல...,

  ReplyDelete
 6. // ஸ்ரீராம். said...

  ஷ்......அப்பாடி....படிச்சுட்டு ஓட்டுப் போட்டுட்டேன்...//

  நன்றி தல,,,

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails